Thursday, November 12, 2026

🍒 Do Not Become So Busy That You Forget God - Luke 17:26–30 / கடவுளை மறக்குமளவுக்கு வாழ்க்கையில் மூழ்கிவிடாதீர்கள் - லூக்கா 17:26–30

                        - Sr. Amutha, ICM

Do Not Become So Busy That You Forget God (Luke 17:26–30)

In today's Gospel, Jesus recalls the days of Noah and Lot. People were eating, drinking, marrying, buying, selling, planting and building. These were ordinary activities, not necessarily sinful things. But their deeper problem was that they became so absorbed in their everyday lives that they failed to recognize God's presence and listen to His warnings.

The danger of being busy but spiritually empty

Our lives can also become filled with responsibilities, ministries, institutions, plans and daily activities. We may be doing many things, even good things, but gradually lose our inner connection with God. *We can be busy doing God's work and yet forget to spend time with God.* The danger is not merely doing wrong things but allowing even good things to take God's place in our hearts.

The danger of postponing conversion

The people in Noah's and Lot's times continued their ordinary lives without recognising the urgency of conversion. We too often postpone prayer, reconciliation and personal change, thinking there will always be another opportunity. But God's invitation comes to us today. Tomorrow is not in our hands.

The grace of spiritual awareness

Jesus does not ask us to abandon our daily responsibilities but to live them with God at the centre. Being ready for the Lord means having an awake heart, a listening spirit and rooted in love.

The real question is not how much we accomplish each day, but whether we are growing closer to God through what we do.

Lord, awaken our hearts from spiritual sleep. May our activities never distance us from You. Give us the wisdom to recognise Your presence, the courage to change and the grace to live each day ready to meet You. Amen.

கடவுளை மறக்குமளவுக்கு வாழ்க்கையில் மூழ்கிவிடாதீர்கள் (லூக்கா 17:26–30) 

இன்றைய நற்செய்தியில், நோவாவின் காலத்தையும் லோத்தின் காலத்தையும் இயேசு நினைவு படுத்துகிறார். அந்தக் காலத்து மக்கள் சாப்பிட்டார்கள், குடித்தார்கள், திருமணம் செய்தார்கள், வாங்கினார்கள், விற்றார்கள், பயிரிட்டார்கள், வீடுகளைக் கட்டினார்கள். இவையெல்லாம் அன்றாட வாழ்க்கையின் இயல்பான செயல்கள்தான். ஆனால், அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் மூழ்கிப்போய், கடவுளின் பிரசன்னத்தையும் அவரது எச்சரிக்கையையும் உணரத் தவறிவிட்டார்கள்.

செயல்கள் நிறைந்த வாழ்க்கை, ஆனால் கடவுளுக்கு இடமில்லாத இதயம்

நம்முடைய வாழ்க்கையிலும் பொறுப்புகள், பணிகள், திட்டங்கள், பல்வேறு அலுவல்கள் என்று ஏராளமாக இருக்கின்றன. நல்ல காரியங்களைச் செய்வதில்கூட நாம் கடவுளை மறந்து விடலாம். கடவுளுக்காகப் பல காரியங்களைச் செய்து கொண்டு இருக்கலாம்; ஆனால் கடவுளோடு நேரம் செலவிட மறந்துவிடலாம். இதுதான் நாம் கவனிக்க வேண்டிய ஆபத்து.

மனமாற்றத்தைத் தள்ளிப்போடும் ஆபத்து

நாளை ஜெபிக்கலாம், பிறகு மன்னிக்கலாம், இன்னொரு நாளில் உறவைச் சரிசெய்யலாம், பின்னர் நம்மை மாற்றிக்கொள்ளலாம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், கடவுளின் அருள் அழைப்பு நமக்கு இன்று கொடுக்கப் படுகிறது. நாளை நம் கையில் இல்லை.

விழிப்புள்ள இதயத்தோடு வாழ்வோம்

நம்முடைய அன்றாடப் பொறுப்புகளை விட்டுவிட வேண்டும் என்று இயேசு சொல்லவில்லை. அவற்றின் நடுவிலும் கடவுளை மையமாக வைத்து வாழ வேண்டும் என்பதையே நினைவூட்டுகிறார்.

ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு காரியங்களைச் செய்கிறோம் என்பது முக்கியமல்ல; அந்தக் காரியங்களின் வழியாக நாம் கடவுளுக்கு எவ்வளவு நெருக்கமாக வளர்கிறோம் என்பதே முக்கியம்.

ஆண்டவரே, எங்கள் உள்ளங்களை ஆன்மீக விழிப்போடு வைத்தருளும். எங்கள் அன்றாடப் பணிகளும் பொறுப்புகளும் உம்மிடமிருந்து எங்களைப் பிரித்துவிடாமல் காத்தருளும். உமது பிரசன்னத்தை உணரவும், எங்கள் வாழ்வை மாற்றிக்கொள்ளவும், உம்மைச் சந்திக்க எப்போதும் தயாராக வாழவும் அருள்தாரும். ஆமென்.

Sr. அமுதா ICM

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Mediation verse - மத்தேயு 8 : 34 / Matthew 8:34

ஆதவன் தியானம்                                                                      எண் :- 2106 - நாள் :- 14.11.2026 "அப்பொழுது, அந்தப் ...