"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் எண் - 1771 🔆 ஆதவன் 13.12.2025 சனி
"தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" ( ரோமர் 8: 32)
பொதுவாக நாம் பிதாவாகிய தேவனை அன்புக்கும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை கிருபைக்கும் உதாரணங்களாக வேதத்தில் பல இடங்களில் வாசிக்கின்றோம். அப்போஸ்தலரான பவுல், "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக." (2 கொரிந்தியர் 13: 14) என்று பல நிரூபங்களில் ஆசீர்வதிக்கின்றார்.
பிதாவாகிய தேவனின் அன்பு நாம் எண்ணிப்பார்க்க முடியாதது. அதனை நாம் உணர்ந்துகொள்ளும்போதுதான் தேவ அன்பை நாம் ருசிக்கமுடியும். "தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்". (1 யோவான் 4;16) என்றும் நாம் வாசிக்கின்றோம்.
நாம் நமது பிள்ளைகள் எந்தத் துன்பமும் அடைந்திடாமல் மகிழ்ச்சியாக வாழ என்னென்ன செய்யமுடியுமோ அத்தகைய காரியங்களையும் அவர்களுக்குச் செய்கின்றோம். எந்தத் தாயும் தகப்பனும் தனது பிள்ளைகள் துன்பப்பட்டுச் சாகவேண்டுமென்று விருப்புவதில்லை. ஆனால் நம்மேல் கொண்ட அன்பினால் பிதாவாகிய தேவன் அப்படி விரும்பினார். சொந்த மகனா? தான் உருவாக்கிய மக்களா? எனும் கேள்விக்கு அவர் தான் உருவாக்கிய மக்களே முக்கியம் என்று தனது செயலால் உறுதிப்படுத்தினார்.
இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. "நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது." (எபிரெயர் 9:22) எனவே, மனுக்குலத்தின் பாவங்கள் மன்னிக்கப்பட பாவமில்லாத இரத்தம் சிந்தப்பட்டாகவேண்டும். பிதாவாகிய தேவன் இதற்குக் கழுவாயாகத் தனது சொந்த மகனையே பூமிக்கு அனுப்பி பாடுபட்டு மரிக்கும்படிச் செய்தார். இதனையே இன்றைய தியான வசனத்தில், "தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர்" என்று கூறப்பட்டுள்ளது.
இப்படித் தனது மகனையே நமக்காகக் கொடுத்தவர், "மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" என்று இன்றைய தியான வசனம் நமக்குக் கேள்வியெழுப்பி நம்மைத் திடப்படுத்துகின்றது. அதாவது, நமக்காகத் தனது சொந்த மகனையே தந்தாரே அப்படிப்பட்டவர் நமக்கு மற்ற ஆசீர்வாதங்களை எப்படித் தராமல் நம்மைக் கைவிடுவார்?
ஆம் அன்பானவர்களே, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இதனால்தான், "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6: 33) என்று நமக்குக் கற்பித்தார். பிதாவாகிய தேவனின் நாம்மேலுள்ள இந்த அன்பினைப் புரிந்துக்கொண்டோமானால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகளில் நமக்கு நம்பிக்கை ஏற்படும்.
இதனால்தான் இயேசு கிறிஸ்துவின் அன்புத் சீடர் யோவான், "நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்." (1 யோவான் 5:14) என்று கூறுகின்றார்.
நம் எல்லோருடைய மீட்புக்காகவும் தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் கிறிஸ்துவை நமக்கு ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு எப்படித் தராமல் இருப்பார்? நிச்சயமாக நமது வேண்டுதல்களை அவர் கேட்காமல் இருக்கமாட்டார். நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டுள்ள தைரியம்.
எனவே, இந்த விசுவாசம் நம்மில் குறைந்திடாமல் வாழ்வோம். நம்மில் விசுவாசக் குறைவு ஏற்படும்போது பிதாவாகிய தேவனின் இந்த அன்பினை எண்ணிப்பார்ப்போம். நிச்சயம் நமக்கு நம்பிக்கை ஏற்படும். ஆம், நமக்காகத் தனது மகனையே பலியாக்கியவர் நமது வேண்டுதல்களை புறக்கணிக்கமாட்டார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
“Inside the Seeds” 🌳
Bible Meditation No. 1771
AATHAVAN – Saturday, 13.12.2025
“He who did not spare His
own Son, but delivered Him over for us all, how will He not also with Him
freely give us all things?” (Romans 8:32)
In many places throughout
Scripture, we read about God the Father as the example of love and our Lord
Jesus Christ as the example of grace. The Apostle Paul blesses the believers in
several of his letters, saying:
“The grace of the Lord Jesus Christ, and the love of God, and the fellowship of
the Holy Spirit, be with you all.” (2 Corinthians 13:14)
The love of God the Father
is beyond anything we can comprehend. Only when we begin to understand His love
do we truly taste and experience it. Scripture says: “We have come to know and
have believed the love which God has for us. God is love, and the one who
remains in love remains in God, and God remains in him.” (1 John 4:16)
Just as we do everything
possible to ensure that our children live happily without suffering, no father
or mother desires to see their children suffer or die. Yet, because of His
great love for us, God the Father willed the unthinkable. When the question
arose—His own Son or the people He created? —He proved through His
action that His created people mattered greatly to Him.
Scripture teaches that without
the shedding of blood, there is no forgiveness of sins: “According to the Law,
one may almost say, all things are cleansed with blood, and without shedding of
blood there is no forgiveness.” (Hebrews 9:22)
For the sins of mankind to
be forgiven, sinless blood had to be shed. God the Father made His own Son the
sacrifice— sending Him to earth to suffer and die. This is why today's
meditation verse says: “He who did not spare His own Son, but delivered Him
over for us all…”
The verse continues by
strengthening our faith with a remarkable question: “…how will He not also with
Him freely give us all things?” The One who gave His own Son for us—how will He
ever withhold any other blessing from us? How could He abandon us?
Dearly beloved, this is why
our Lord Jesus Christ taught us: “But seek first His kingdom and His
righteousness, and all these things will be provided to you.” (Matthew 6:33)
When we understand the depth
of the Father’s love for us, the words of our Lord Jesus Christ become a strong
foundation for our faith.
This is why John, the
beloved disciple of Jesus, confidently declares:
“This is the confidence which we have before Him, that, if we ask anything
according to His will, He hears us.” (1 John 5:14)
The One who did not spare
His own Son but gave Him up for our salvation—will He not graciously give us
all things along with Him? Surely, He will not refuse to hear our prayers. When
we ask according to His will, He hears us—this is the confidence we have
in Him.
Therefore, let us live
without diminishing this faith. Whenever we feel our faith weakening, let us
remember the immeasurable love of God the Father. Surely, our confidence will
be renewed. Yes, the One who gave His Son as a sacrifice for us will never
ignore our prayers.
God’s Message by: Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment