"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் எண் - 1760 🔆 ஆதவன் 02.12.2025 செவ்வாய்
"துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை." ( சங்கீதம் 119: 61)
தேவனுடைய வார்த்தைகள் நமது உள்ளத்தில் பதிந்து ஏற்ற செயல்புரியவேண்டுமானால் நமது இருதயம் பண்பட்டதாக மாறவேண்டியது அவசியம். இல்லையானால் நெருக்கடிகள், துன்பங்கள், இழப்புகள் ஏற்படும்போது நாம் தேவனை விட்டுப் பின்மாறிபோய்விடுவோம்.
இன்றைய தியான வசனத்தில் சங்கீத ஆசிரியர், "துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை" என்கின்றார். அதாவது, நான் உமது வேதத்தில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன், எனவே எனக்குத் துன்மார்க்கர்கள் மூலம் இழப்புக்கள் ஏற்பட்டபோதும்; பல்வேறு எதிர்மறையான சம்பவங்கள் வாழ்வில் ஏற்பட்டபோதும், நான் உமது வேதத்தை மறக்கவில்லை. அதனை நான் அசட்டைபண்ணவில்லை என்கின்றார்.
இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் வேத வார்த்தைகள் நமது உள்ளத்தில் பதிந்து பலன்தரவேண்டியது அவசியம் என்பதனை வலியுறுத்த விதைக்கிறவன் உவமை வழியாக நமக்கு அறிவுறுத்தினார்.
"கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதைகள் வழியருகே விழுந்தன; ஆகாயத்துப் பறவைகள் வந்து அவற்றை பட்சித்துப்போட்டன. சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தன; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தன. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயின. சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன; முட்கள் வளர்ந்து, அவை பலன் கொடாதபடி, அவற்றை நெருக்கிப்போட்டன. (மாற்கு 4:3-7)
நமது இருதயம் வழியருகே விதைக்கப்பட்ட விதைகளை ஏற்றுக்கொண்டதுபோல தேவ வசனங்களை ஏற்றுக்கொள்கின்றதா? இல்லை, மண்ணில்லாத கற்பாறை போன்றதாக இருக்கின்றதா?, இல்லையானால் பிரச்னையெனும் முட்கள் நெருக்கும்போது நெருக்கமடைந்து பலன்தராத நிலத்தைப்போல இருக்கின்றதா? என்று சிந்தித்துப்பார்ப்போம். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகள், "ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தன." (மாற்கு 4:8) அதுபோல நாம் பலன்தரவேண்டுமானால் இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, வேதத்தை நாம் மறக்கக்கூடாது.
ஆம் அன்பானவர்களே, நமது இதயமானது வேத வசனங்களை தேவ வார்த்தைகளாக ஏற்றுக்கொள்ளவேண்டியது அவசியம். இதனையே அப்போஸ்தலராகிய பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய நிரூபத்தில், "ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது." (1 தெசலோனிக்கேயர் 2:13)
வேத வசனங்களை தேவ வசனமாகவே ஏற்றுக்கொள்வோமானால் நமக்குள் அது பெலன் செய்யும். துன்மார்க்கரின் கூட்டங்கள் போல பிரச்சனைகள் நம்மைக் கொள்ளையிட்டாலும் நாம் அவருடைய வேதத்தை மறக்கமாட்டோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
“Inside the Seeds” 🌳
📖 Bible
Meditation No. 1760
🔆 AATHAVAN –
Tuesday, 02.12.2025
“The cords of the wicked
have encircled me, But I have not forgotten Your Law.” (Psalm 119:61)
For the Word of God to take
root within us and work effectively, our hearts must be cultivated and made
tender. Otherwise, when pressures, sufferings, and losses arise, we may drift
away from God.
In today’s meditation verse,
the Psalmist declares: “The cords of the wicked have encircled me, but I
have not forgotten Your Law.”
He means this: “My trust in Your Word is firm. Even when I suffered loss
through wicked people, even when negative situations overwhelmed my life, I did
not forget Your Word, nor did I treat it lightly.”
The Lord Jesus Christ also
emphasized the necessity of God’s Word settling deep within us and bearing
fruit. He taught this truth through the Parable of the Sower:
“Listen to this! Behold, the
Sower went out to sow; and as he was sowing, some seed fell beside the road,
and the birds came and ate it up. Other seed fell on the rocky ground where it
did not have much soil; and immediately it sprang up because it had no depth of
soil. And after the sun had risen, it was scorched; and because it had no root,
it withered away. Other seed fell among the thorns, and the thorns came up and
choked it, and it did not produce a crop.” (Mark 4:3–7)
Let us examine our hearts
today: Are we like the roadside soil that easily loses the seed of the Word? Are
we like the rocky ground where the Word has no depth? Or are we like the thorny
ground where problems choke out the Word, preventing growth?
But the Lord says of the good soil:
“Other seeds fell into the
good soil, and as they grew up and increased, they yielded a crop and produced
thirty, sixty, and a hundredfold.” (Mark 4:8)
If we are to bear fruit, we
must hold firmly to the Word of God, just as today’s meditation verse teaches
us—not forgetting it under any circumstances.
Dearly beloved, our hearts
must receive the Scriptures as the very Word of God. The apostle Paul affirms
this in his letter to the Thessalonians:
“For this reason, we also
constantly thank God that when you received the word of God which you heard
from us, you accepted it not as the word of men, but for what it really is, the
word of God, which also performs its work in you who believe.” (1 Thessalonians
2:13)
If we receive the Scriptures
as God’s Word, it will certainly work powerfully within us. Even when problems
surround us like the cords of the wicked, we will not forget His Word.
God’s Message by: Bro. M.
Geo Prakash
No comments:
Post a Comment