"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் எண் - 1773 🔆 ஆதவன் 15.12.2025 திங்கள்
"அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்." (1 நாளாகமம் 10: 13)
இஸ்ரவேலின் முதல் ராஜாவான சவுலின் வீழ்ச்சியைக்குறித்து இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. சவுலின் வாழ்கையினைப்போல நமது வாழ்க்கை ஆகிவிடாதபடிக்கு நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.
சவுலை தேவன்தான் தெரிந்துகொண்டார். உண்மையில் அரசனாகவேண்டும் எனும் ஆசையோ அதற்கான முயற்சியோ சவுலுக்கு இல்லாமல்தான் இருந்தது. தனது தகப்பனின் காணாமல்போன கழுதைகளைத்தேடித் தான் அவன் சென்றான். ஆனால் கழுதையைத்தேடிச் சென்றவனுக்கு ராஜமேன்மை கிடைத்தது. ஆனாலும் அவன் தனக்குத் தேவன் கொடுத்த இந்த உயரிய வாழ்வை தேவனுக்கு ஏற்புடையதாக வாழவில்லை.
இதுபோலவே நம்மில் பலரும் பலவேளைகளில் வாழ்கின்றோம். தேவன் நமது தகுதிக்கு மேலாக நம்மை உயர்த்தும்போது தேவனுக்குக் கொடுக்கவேண்டிய மகிமையைக் கொடுக்காமல் மறுதலித்துப் போகின்றோம். சவுலிடம் தாவீதுக்கு எதிராக பொறாமை, வஞ்சகம், முரட்டாட்டமான செயல்கள் அதிகம் இருந்தன. மட்டுமல்ல, தாவீதைக் கொலை செய்ய பலமுறை அவன் முயன்றான். மேலும் தேவனுக்கு உரிய மகிமையைச் செலுத்தாமல் தனது மனம் எடுத்தத் தீர்மானத்தின்படி பலிசெலுத்தினான்.
எனவேதான் சாமுவேல் தீர்க்கதரிசி அவனைப் பார்த்து, "இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்." (1 சாமுவேல் 15: 23)
இன்று பலர் தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தேவனுக்குக் காணிக்கைகளையும் பொருத்தனைகளையும் செய்வது போலத்தான் அன்று சவுல் செய்துகொண்டிருந்தான். ஆம், தேவனுக்குக் கீழ்ப்படியும் வாழ்க்கைதான் அனைத்துக்கும் மேலான தேவன் விரும்புகின்ற செயல் என்பதனை அவன் மறந்துபோனான். எனவே, சாமுவேல் அவனைப்பார்த்து, "கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்". (1 சாமுவேல் 15: 22) என்று கூறுகின்றார்.
இவை அனைத்துக்கும் மேலாக, சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தரைத் தேடாமல், குறிசொல்பவர்களைத் தேடி அலைந்தான். இப்படி அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.
ஆம் அன்பானவர்களே, சிலவேளைகளில் தேவன் தனது கிருபையால் நமக்கு நாம் கேட்காத செல்வத்தையும், பதவியையும் தரலாம். ஆனால் அப்படிப்பட்டச் சூழ்நிலைகளில் நாம் தேவனை மறந்தவர்களாக, எல்லாம் எனது பலத்தினால் கிடைத்தது என்று பெருமைகொண்டு இறுமாப்படையாமல் வாழவேண்டியது அவசியம். சவுலின் வீழ்ச்சி நமக்கு ஒரு எச்சரிப்பாகும். எந்த உயர்விலும், செலவச் செழிப்பிலும் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யாமல், தேவனை மட்டும் மகிமைப்படுத்தி அவருக்கு நன்றியறிதலுள்ள வாழ்க்கை வாழ்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
“Within the Seeds” 🌳
📖 Scripture
Meditation No. 1773
🔆 AATHAVAN –
Monday, 15.12.2025
“So, Saul died for his
unfaithfulness which he committed against the LORD, because he did not keep the
word of the LORD, and also because he consulted a medium for guidance, and did
not inquire of the LORD.” (1 Chronicles 10:13)
Today’s meditation verse
explains the downfall of Saul, the first king of Israel. We must be cautious
lest our own lives resemble the life of Saul.
It was God Himself who chose
Saul. In fact, Saul neither had the ambition nor made any effort to become a
king. He went out only to search for his father’s lost donkeys. Yet, the one
who went in search of donkeys received a kingdom. However, he did not live the
noble life God had given him in a manner pleasing to the Lord.
In the same way, many of us
live our lives. When God exalts us beyond our own worthiness, instead of giving
Him the glory He deserves, we often withhold it. Saul was filled with jealousy,
deceit, and violent behaviour toward David. Not only that, he made repeated
attempts to kill David. Furthermore, instead of giving glory to God, Saul
offered sacrifices according to the decisions of his own mind.
That is why the prophet Samuel said to him:
“For rebellion is as the sin
of divination, and insubordination is as iniquity and idolatry. Because you
have rejected the word of the LORD, He has also rejected you from being king.” (1
Samuel 15:23)
Even today, many live
disorderly lives while still offering gifts and vows to God—just as Saul did in
those days. Yes, he forgot that a life of obedience to God is what the Lord
desires above all else. Therefore, Samuel declared to him:
“Has the LORD as much
delight in burnt offerings and sacrifices as in obeying the voice of the LORD? Behold, to obey is better than sacrifice, and to pay attention than the fat of rams.” (1 Samuel 15:22)
Above all this, Saul did not
keep the word of the Lord. He did not seek the Lord but instead wandered in
search of those who practiced divination. Because he did not inquire of the
Lord and consulted a medium, today’s meditation verse says that he died because
of this unfaithfulness.
Yes, beloved, at times God,
by His grace, may give us wealth, position, and honor that we never asked for.
But in such situations, we must be careful not to forget God or become proud,
saying, “All this came by my own strength.” The downfall of Saul stands as a
warning to us. In every position of elevation and prosperity, let us not harm
others, but live a life that glorifies God alone, with gratitude and
thankfulness to Him.
God’s Message: Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment