இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Thursday, August 17, 2017

பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்

பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையிலான வித்தியாசங்கள்


சகோ . பி . சாலமோன் செல்வராஜ்,
திருமறை ஆராச்சியாளர், 
கிறிஸ்துவின் சபை, நாகர்கோவில்   

ன்றய உலகில் கிறிஸ்தவ மார்க்கத்தைப் போல மாறுபட்ட பல்வேறு பிரிவினைகள், கோட்பாடுகள் கொண்ட வேறு மார்க்கங்கள் எதுவும் இல்லை என்றே சொல்லவேண்டும். ஆயிரக்கணக்கான பிரிவினைகள் தவிர,  வீட்டுக்கு வீடு தனி நபர் ஊழியங்கள் நடைபெறுகின்றன. மட்டுமல்ல இந்த ஊழியங்கள் பலவற்றிலும் வேதாகமத்தை வெவ்வேறு  விதங்களில் பொருள் விளக்கி தாங்கள் சொல்பவைகளே சரி, மற்றவர்கள் எல்லாம் தவறான வழிகாட்டிகள் என்று குறைகூறும் போக்கும் காணப்படுகிறது.

மண் சட்டிகளையோ பிளாஸ்டிக்கையோ  யாரும் போலியாகத் தயாரிப்பதில்லை. ஆனால் விலை உயர்ந்த தங்க நகைகளுக்குப் போலிகள் உண்டு. ரூபாய் நோட்டுகளுக்குப் போலிகள் உண்டு. ஆம், விலைமதிக்க முடியாத பொருள்களுக்குத்தான் போலிகள் உருவாகும்.  விலைமதிப்பில்லாததும்  தேவன் தானே சாட்சி கொடுத்ததுமாஇருக்கிற  பெரிதான இரட்சிப்பை (எபிரேயர் - 2:4) பிரசித்திப் படுத்தும் கிறிஸ்தவ மார்க்கத்திலும் எனவே போலிகள் அதிகரித்திருப்பது ஆச்சரியமான விசயமல்ல.

ஆனால் இந்த வேறுபாடுகள் மற்றும் முரண்பாடான போதனைகளுக்கு அடிப்படை காரணம் எது என்று ஆராய்ந்து பார்ப்போமானால் அது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடுகளுக்கிடையிலான வேறுபாடு மற்றும் அவற்றின் அடிப்படை நோக்கம் பற்றி அறியாதிருப்பதே என்பது விளங்கும்.

இன்று எலியாவைப் போல தேவன்மேல் பக்தி வைராக்கியமாக இருக்கவேண்டியது அவசியமே தவிர எலியாவைப்போல் இரக்கமற்ற கொலைகாரனாக ஒருவன் இருக்கக் கூடாது. தாவீதைப்போல தேவன்மேல் அன்பு கொண்டவனாக இருக்கவேண்டியது அவசியமே தவிர அவரைப்போல இரத்தக்கறை  படிந்த கரத்தினனாக நாம் வாழ முடியாது; வாழக் கூடாது. இப்படி பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கும் பழைய ஏற்பாட்டுக்கால சம்பவங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இவற்றைப் புரிந்துகொண்டால்தான் கிறிஸ்தவத்தை சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "பரலோக ராஜ்யத்துக்காடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும்   எடுத்துக் கொடுக்கிற வீட்டு எஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாய் இருக்கிறான் " (மத்தேயு - 3:52)

பழைய ஏற்பாடு 

தேவன் உலகினைப் படைத்த விதம், மனிதனுக்கும் தேவனுக்கும் இருந்த உறவு, அந்த உறவில் ஏற்பட்டப் பிரிவு மற்றும் அந்தப் பிரிவினை சரி செய்ய  தேவன் ஏற்படுத்திய திட்டம். இந்த திட்டத்தைச் செயல்படுத்த தேவன் குறிப்பிட்ட மக்கள் இனத்தை தெரிந்துகொண்டு  எப்படி தனது வல்லமையான கரத்தால் அதனைச் செய்தார். அந்தக் குறிப்பிட்ட மக்களுக்கு தனிப்பட்ட சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்து வழிநடத்தினார். அந்தத் திட்டத்தின் இறுதி செயல்பாடாக அவர் தனது ஒரே குமாரனை இயேசு கிறிஸ்துவாக பூமியில் பிறக்கவைக்க இருப்பதை தனது தீர்க்கத்தரிசிகள் மூலம்  வெளிப்படுத்தினார் என்பவற்றை பழைய ஏற்பாடு விளக்குகிறது. குறிப்பாக பழைய ஏற்பாடு தேவனது பலம் வல்லமை இவற்றை அடிப்படையாகக் கொண்டது. 

புதிய ஏற்பாடு 

தேவனது ஒரே குமாரனான இயேசு கிறிஸ்து பூமியில் எப்படி பிதாவின் திட்டத்தினைச் செயல்படுத்தினார், முறிந்துபோன தேவ மனித உறவை எப்படி சரி செய்தார். விலைமதிப்பிடமுடியாத தனது பரிசுத்த இரத்ததால் பாவ மன்னிப்பை ஏற்படுத்தி பிதாவோடு நம்மை எப்படி ஒப்புரவாகினார் என்பதை புதிய ஏற்பாடு விளக்குகிறது.

புதிய ஏற்பாடு தேவனது கிருபையை  அடிப்படையாகக் கொண்டது 

பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இடையிலான வித்தியாசங்கள் 

பழைய ஏற்பாடு 
புதிய ஏற்பாடு 

யூத மார்க்கம் என அழைக்கப்பட்டது (கலா-1:13,14)
கிறிஸ்தவ மார்க்கம் என அழைக்கப்படுகிறது (அப்.9:2)
மோசே எனும் மத்தியஸ்தர் மூலம் அருளப்பட்டது (உபா - 5:5)
இயேசு கிறிஸ்து எனும் மத்தியஸ்தர் மூலம் அருளப்பட்டது (1 திமோ -2:5)
முதலாம் உடன்படிக்கை (எபிரே - 9:1)
இரண்டாம் உடன்படிக்கை (எபிரே - 8:7)
தற்காலிக உடன்படிக்கை (எபிரே - 8:13)
நித்திய உடன்படிக்கை (எபிரே - 13:20)
மோசேயின் பிரமாணம் (1கொரி -9:9)
கிறிஸ்துவின் பிரமாணம் (கலா-6:2)
அடிமைத்தனத்தின் நுகம் (கலா-6:2)
விடுதலை அளிக்கக்கூடிய சட்டம் (யாக் -1:25)
பிழையுள்ள பலவீனமான பிரமாணம் (எபிரே - 8:7)
பிழையற்ற பூரண ராஜரீக பிரமாணம் (யாக் -1:25)
ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை  (எபிரே - 7:19)
மனிதனைப் பூரணப்படுத்தும் சட்டம் (எபிரே - 7:19)
பாரமான சுமையாய் இருந்தது (அப் - 7:19) 
 பாரமற்றது, எளிதானது (மத்  - 11:30)
பழமையான எழுத்தின் பிரமாணம் (ரோமர் - 7:6)
புதுமையான ஆவியின் பிரமாணம் (ரோமர் - 7:6)
வரப்போகும் நன்மைகளின் நிழல் (எபிரே - 10:1)
வந்துவிட்ட உண்மையின் சட்டம் (எபிரே - 10:1)
 நிழலும் சாயலுமானது (எபிரே - 8:5)
கிறிஸ்துவைப்பற்றிய நிஜ உருவம் (கொலோ - 2:17)
விசுவாசத்துக்குரிய ஒன்றல்ல (கலா-3:12)
விசுவாசத்துக்குரிய பிரமாணம்  (கலா-3:11)
கிரியையின் பிரமாணம் (ரோமர் - 3:27)
விசுவாசப்  பிரமாணம்  (ரோமர் - 3:27)
மனிதனை நீதிமானாக்குவதில்லை (கலா-2:16)
மனிதனை நீதிமானாக்கும்   (கலா-2:16)
இடித்துப்போடப்பட்ட  பிரமாணம்  (கலா-2:16)
நிலை நிறுத்தப்பட்டப்  பிரமாணம் (எபிரே - 10:9)
பாவத்தின் கீழ் மனிதனை அடைத்துப்போட்டது (கலா-3:32)
பாவ மன்னிப்பினை அளிக்கிறது (எபிரே - 1:7)
கோப ஆக்கினையை உண்டாக்குகிறது  (ரோமர் - 4:15)
தேவ சமாதானத்தைத் தருகிறது (ரோமர் - 5:1)
சாபத்துக்கு உட்படுத்துகிறது (கலா-3:10)
சாபத்திலிருந்து மனிதனை மீட்கிறது  (கலா-3:13)
மீறுதல் பெருகும்படி வந்தது (ரோமர் - 5:20)
கிருபை பெருகும்படி வந்தது (ரோமர் - 5:20)
பாவங்கள் உண்டு என ஞாபகப்படுத்தும் பிரமாணம் (எபிரே - 10:2)
பாவங்கள் இனி நினைக்கப்படுவதில்லை (எபிரே - 8:12)
கொல்லும் பிரமாணம் (2 கொரி - 3:6)
உயிர்ப்பிக்கும் பிரமாணம் (2 கொரி - 3:6)
கிறிஸ்துவினால் நீக்கப்பட்டது (2 கொரி - 3:14)
கிறிஸ்துவினால் நிலைநிறுத்தப்பட்டது (எபிரே - 10:9, 30)
ஒழிந்துபோகும் மகிமையின் ஊழியம் (2 கொரி - 3:8)
நிலைத்திருக்கும் மகிமையின் ஊழியம்  (2 கொரி - 3:10,11)
இஸ்ரவேலர் எகிப்தை விட்டு புறப்பட்டபோது இது அமுலுக்கு வந்தது (1 ராஜா 8:9)
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது இது அமுலுக்கு வந்தது (எபிரே - 9:16,17)
வளமான கானான் தேசம் இவ்வுலக செழிப்பான ஆசீர்வாதங்கள் அடங்கியிருந்தன (உபா 5:33) 
இந்த வாழ்விலும் இனி வரும் வாழ்விலும் தேவனது பராமரிப்பு இதில் அடங்கியிருக்கிறது (1 பேதுரு - 1:4,5)
மாம்ச ஜென்மத்தினால் ஆபிரகாமின் பிள்ளைகளாய் இருந்தனர் (ரோமர் - 9:3,4)
ஆவிக்குரிய பிறப்பால் தேவனுடைய பிள்ளைகளாகின்றனர்  (யோவான் - 1:13)
விருத்தசேதனம் என்பது சரீர அடையாளமாய் இருந்தது (ஆதி  - 17:11) 
பரிசுத்த ஆவியானவரின் வரமே முத்திரையாய்  இருக்கிறது (எபே  - 1:13)
மாம்ச சமந்தமான கட்டளை (எபிரே - 7:16)
ஜீவனைத் தரும் ஆவியின் பிரமாணம் (ரோமர் - 8:2)
மரணத்துக்கேதுவான ஊழியம் (2 கொரி - 3:7)
நீதியைக் கொடுக்கும் ஊழியம் (2 கொரி - 3:8,9)

No comments: