'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,141 💚 மார்ச் 25, 2024 💚 திங்கள்கிழமை 💚
"நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப் பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை." ( ரோமர் 3 : 21, 22 )
இஸ்ரவேல் மக்கள் கடைபிடிக்கவேண்டிய கட்டளைகளை தேவன் மோசே மூலம் கொடுத்தார். பத்துக் கட்டளைகளைத் தவிர மேலும் பல கட்டளைகளாக 613 கட்டளைகள் அடங்கியதுதான் நியாயப்பிரமாணம். மனிதர்கள் நீதியாக வாழ்வதற்காக இவை கொடுக்கப்பட்டன. ஆனால் அப்போஸ்தலரான பவுல், இந்த நியாயப்பிராமாணக் கட்டளைகள் இல்லாமலேயே தேவ நீதி கிறிஸ்துவினால் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகின்றார்.
அதாவது, பத்துக்கட்டளைகள் முதலான கட்டளைகள் இல்லாமலேயே கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொள்ளும் ஒருவன் இவைகளைக் கடைபிடிப்பான் என்று கூறுகின்றார். அதனையே, "நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப் பட்டிருக்கிறது" என்கின்றார். "அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை." என்கின்றார்.
அதாவது, கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு ஒருவன் பாவ மன்னிப்பினைப் பெறும்போது அவனுக்குள் கிறிஸ்துவின் ஆவியானவர் வந்துவிடுகின்றார். அந்த ஆவியானவரே அவனை தேவனுடைய நீதிப்பாதையில் நடத்துவார். அந்த மனிதனுக்கு கட்டளைகள் தேவையில்லை. ஆம், கட்டளைகள் இல்லாமலேயே அவன் கட்டளைக்குட்பட்டு நடப்பான்.
"ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்." ( ரோமர் 3 : 28 ) என்கின்றார்.
கிறிஸ்துவின் நீதிப்பிரமாணம் நியாயப்பிரமாண கட்டளைகளைவிட மேலானது. அதனை கிறிஸ்து பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். "........என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டுள்ளதே, நான் உங்களுக்குத் சொல்கின்றேன்" என்று குறிப்பிட்டு அவர் பல பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளுக்குப் புது மெருகேற்றினார். (காண்க;- மத்தேயு 5 : 21, 28, 32, 34, 39, 44. முதலானவைகள்)
எனவே யூதர்கள் அவர் நியாயப்பிரமாண கட்டளைகளுக்கு எதிரி என்று எண்ணினார்கள். அவர்களுக்கு இதனைத் தெளிவுபடுத்தவே இயேசு கிறிஸ்து, தனது மலைப் பிரசங்கத்தில், "நியாயப்பிரமாணத்தையாகிலும் தீர்க்கதரிசனங்களையாகிலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்." ( மத்தேயு 5 : 17 ) என்று குறிப்பிடுகின்றார்.
ஆம் அன்பானவர்களே, நியாயப்பிரமாண கட்டளைகளை வரட்டுத்தனமாகக் கடைபிடிப்பதால் மட்டும் நாம் கிறிஸ்துவுக்கு ஏற்றவர்கள் ஆகமுடியாது. கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் நமது உள்ளங்கள் மறுபிறப்படையும்போது மட்டுமே நாம் நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழ முடியும். இப்படிக் கூறுவதால் நியாயப்பிரமாண கட்டளைகளை நாம் அற்பமாக எண்ணுகின்றோம் என்று பொருளல்ல; மாறாக கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொள்ளும்போதுதான் அவைகளை நாம் நிலை நிறுத்துகின்றோம்.
இதனையே, "அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே." ( ரோமர் 3 : 31 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். கிறிஸ்துவுக்கேற்ற மக்களாக வாழ்வதற்கு கட்டளைகளல்ல, அவர்மேல்கொள்ளும் விசுவாசமே முக்கியமாக இருக்கின்றது. இல்லாவிட்டால் கிறிஸ்தவமும் உலகிலுள்ள பிற மதங்களைப்போல தனிக் கட்டளைகளைக்கொண்ட ஒரு சாதாரண மதமாகவே இருக்கும். ஆனால், கிறிஸ்தவம் மதமல்ல; கிறிஸ்து காட்டிய ஒரு மார்க்கம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
CHRISTIANITY IS NOT RELIGION
'AATHAVAN'
📖✝ BIBLE MEDITATION No:- 1,141 💚 March 25, 2024 💚 Monday 💚
"Now the righteousness of God without the law is
manifested, being witnessed by the law and the prophets. Even the righteousness
of God, which is by faith of Jesus Christ unto all and upon all them that
believe, for there is no difference" (Romans 3:21–22)
God
gave the commandments to the people of Israel through Moses. The law consists
of 613 commandments in addition to the Ten Commandments. These were given so
that men might live righteously. But the apostle Paul points out that God's
righteousness has been created by Christ without these commandments.
That
is, it says that a person who believes in Christ will keep the Ten Commandments
without the commandments. He says, "Now the righteousness of God without
the law is manifested. The righteousness of God, which is by faith of Jesus
Christ unto all and upon all those that believe," it is said. It works for
everyone who believes there is no difference.
That
is, when a person receives forgiveness for sins through faith in Christ, the
Spirit of Christ comes into him. That Spirit will guide him in the path of
God's righteousness. That man doesn't need orders. Yes, he will follow orders
without orders.
"Therefore,
we conclude that a man is justified by faith without the deeds of the
law." (Romans 3:28)
The
law of Christ is greater than the commandments of the law. Christ has mentioned
it in many places. He added a new twist to many Old Testament commandments by
noting, "You have heard that it was said to them of old times, but I say
unto you." (See Matthew 5:21, 28, 32, 34, 39, 44, etc.)
So,
the Jews considered him to be an enemy of the commandments of the law. That is
why Jesus Christ, in his Sermon on the Mount, said, "Think not that I am
come to destroy the law or the prophets; I am not come to destroy, but to
fulfil." (Matthew 5:17)
Yes,
beloved, we cannot become Christlike just by obsessing over the commandments of
the law. We can live a righteous life only when our souls are regenerated by
faith in Christ. This does not mean that we take the commandments of the law
lightly. Rather, it is only when we believe in Christ that we can follow them.
That
is why the apostle Paul said, "Do we then make void the law through faith?
God forbid: Yes, we establish the law." (Romans 3:31) It is not
commandments but faith in Christ that is important to living as Christ-like
people. Otherwise, Christianity would be an ordinary religion with its own
precepts, like other religions in the world. But Christianity is not a
religion; it is a way taught by Christ.
God’s Message :- Bro. M. Geo Prakash