பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலாவில் சுந்தர் சிங் 1889 ல் பிறந்தார்.
அன்னாரின் குடும்பம் ஒரு இந்து குடும்பத்தை சார்ந்திருந்ததால் இந்து மத
பக்தனாகவே வளர்க்கப்பட்டார். அவர் தன்னுடைய 7ம் வயதில் பகவத் கீதையை
மனப்பாடம் செய்தார். அதேபோல தன்னுடைய 16 ம் வயதில் இந்து வேதத்திலும்,
திருக்குரானிலும் நன்றாக கற்றுத் தேர்ந்தார். தன்னுடைய பள்ளிப்படிப்பை
கிறிஸ்தவ சுவிஷேசக குழுவினால் நடத்தப் பட்ட பள்ளியில் படித்தார். ஏனோ!
அவருக்கு கிறிஸ்துவத்தின் மேல் அவ்வளவு ஈடுபாடு இல்லாமல், அதற்கு எதிராகவே
இருந்தார்.
தனது 14ம் வயதில் அவரது தாயார் திடீர் என இந்த உலகை எய்தினார். இந்த இழப்பை தன்னால் ஈடுகட்டமுடியாமல் மிகவும் சமாதானமின்றி தவித்து இந்த உலகத்தில் எது தான் உண்மை அல்லது சத்தியம் என்று தெரியாமல் குழம்பி தன்னை மாய்த்துக் கொள்ளவும் நினைக்கலானார்.
கிறிஸ்தவ உபதேசங்களோ அல்லது இயேசவையோ அவர் தன்னுடைய இருதயத்தில் அங்கீகரிக்க முடியாமல் அது தவறு என்ற ஒரு கொள்கையை தன் மனதில் வைத்திருந்தார். ஆகவே பரிசுத்த வேதாகமத்தை கிழித்தும் இயேசுவை பிரசங்கிப்பவரை கல்லால் எறிந்தும் தன் கோபங்களை நிவர்த்தி செய்துக் கொண்டார்.
ஒரு நாள் அந்த இரவில் அவருடைய எல்லாவற்றையும் மாற்றியது.
மெய்யான சமாதானத்தை காணமுடியாமல் தவித்த அவர் 1903 ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடுங்குளிரில் லூதியானா அதி விரைவு புகைவண்டி அவருடைய வீட்டை கடந்து செல்லும் பொழுது ரயில் தண்டவாளத்தில் படுத்து புகைவண்டியில் தன்னை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினார். ஆகவே அவருக்கு தூக்கம் வராமல் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தவர், தன்னையும் அறியாமல் அந்தநாள் இராத்திரி ஓ! கடவுளே, கடவுள் ஒருவர் இருப்பாரானால் எனக்கு உம்மை வெளிக்காட்டும் என்று கண்ணீரோடு மன்றாடினார். அவர் தன்னை தானே மாய்த்துக் கொள்ள வேண்டிய அந்த கடைசி மணித் துளிகளில் அதாவது அந்த புகை வண்டி வரவேண்டிய சமயத்தில் அவர் அறை முழுவதும் ஒரு வெளிச்சம். ம்ம்…. கதவை திறந்து பார்த்தார். சூரியன் இன்னும் உதிக்கவில்லை. அங்கே இருள் மாத்திரமே பார்க்க நேரிட்டது. கதவை மூடினார். மீண்டும் வெளிச்சம் பிரகாசித்தது. அதை பார்த்துக்கொண்டிருந்த அன்னாரின் ஞானத்திற்கு எட்டாத ஒருவர் அவருக்கு முன்பாக தோன்றினார்.
ஒரு தேவ சத்தம். எத்தனை நாட்கள் என்னை மறுதலிப்பாய்.?
உனக்காக நான் மரித்தேனே…! என் ஜீவனை உனக்காக தந்தேனே..!
சுந்தர் சிங் அவரை பார்க்கும் போது அவருடைய கரங்களில் ஆணி கடாவப்பட்டிருந்தது.
ஆனால் அவருடைய மன்றாட்டும் அவருடைய எதிர்பார்ப்பும்; அவர் வணங்குpற குல தெய்வங்களில் ஒருவர் தவிர இயேசு இல்லை. ஆனால் இவர் இயேசு தான் வேறுயாரும் இல்லை என்பதை கண்டு கொண்டார். அவர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என்று கண்டு காலம் தாழ்த்தாமல் அவரின் பாதத்தில் விழுந்த அந்த ஷணமே, தன் உள்ளத்தில் இதுவரை உணராத ஒருவித எல்லையில்லா சந்தோஷம் சமாதானத்தை அனுபவித்தார். ஆம் அந்த தரிசனம் விலகியது. ஆனாலும் விலகாத அந்த சந்தோஷம் சமாதானத்தை தொடர்ந்து அனுபவித்தார். அவருடைய வாழ்க்கை மாறியது.
1905 ம் ஆண்டு, அவருடைய பிறந்த நாளில் சிம்லாவிலுள்ள ஆங்கில சபையில் ஞானஸ்நானம் பெற்று தன்னுடைய வாழ்க்கையை நம்முடைய ஆண்டவராகிய. இயேசுகிறிஸ்துவுக்கு தன்னை கிறிஸ்தவ சாதுவாக அர்ப்பணித்தார். அன்று முதல் அவர் சாது சுந்தர் சிங் என்று அழைக்கப்பட்டார். அனேக நாடுகளுக்கும் தேசங்களுக்கும் சுவிஷேசத்தினிமித்தம் தேவன் கொண்டு போனார்.
இவர் எழுதின புத்தகங்கள்.
He At the masters feet (1922)
Reality and religion (1923)
Search after Reality (1924)
Spiritual Life (1925)
Spiritual World (1926)
Real Life (1927)
With and Without Christ (1928)
கடைசியாக 1929 ல் வியாபாரக்காரர்களோட திபெத்துக்கு பல மைல்கள் ஏற்றமும் இறக்கமும் கூடிய பனி மலைகளுக்குள்ளாக நடந்து போனார். என்ன நடந்தது என்று தெரியாது. அனேகர் அவரை தேடிப் போனார்கள். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படியே தேவன் அவரை எடுத்துக்கொண்டார். அவரை ““Apostle with bleeding feet” என்று அழைப்பார்கள்.
The Life of Sundar Singh
1889 Born at Rampur, Punjab
1903 Conversion
1904 Cast out from home
1905 Baptized in Simla; begins life as a sadhu
1907 Works in leprosy hospital at Sabathu
1908 First visit to Tibet
1909 Enters Divinity College, Lahore, to train for the ministry
1911 Hands back his preacher's license; returns to the sadhu's life
1912 Tours through North India and the Buddhist states of the Himalayas
1918 to 1922 Travels worldwide
1923 Turned back from Tibet
1925 to 1927 Quietly spends time writing
1927 Sets out for Tibet but returns due to illness
1929 Attempts to reach Tibet and disappears
கர்த்தருக்கே மகிமை. ஆமென்.

No comments:
Post a Comment