Monday, December 16, 2013

வேலியைக் காத்துக்கொள், வழியைக் காவல்பண்ணு 

 - எம். ஜியோ பிரகாஷ்

(இக்கட்டுரை ஆதவன் அக்டோபர் 2013 இதழில் பிரசுரமானது)

இப்பொழுது நகரமாக மாறிவிட்ட எங்கள் ஊர் முன்பு அழகிய கிராமமாக இருந்தது.  ஊரைசுற்றிலும் புன்னை மரங்கள் அதிக அளவில் வளர்த்திருந்தன. தவிர, முந்திரி, மா மரங்களும் வளர்ந்து சோலையாக காட்சியளித்தது

நாங்கள் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான் ஒரு தோட்டம் மட்டும் சிறப்பாகச் செழிப்புடன் இருந்தது. அதனுள் பல்வேறு பழ மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. காரணம்   அந்தத் தோட்டம் வேலியடைக்கபட்டிருந்தது. எனவே அங்குள்ள மரங்கள் மற்ற மரங்களைவிட விதியசமான   செழிப்புடன் காணப்பட்டன.

நன்கு அடி மண் சுவரல் அடைக்கப்படிருந்தது அந்தத் தோட்டம். ஒருமுறை பெரிய மழை பெய்தபோது அந்தத் தோட்டத்தின் மண் வெளியின் ஒரு பகுதி  இடிந்து விழுந்துவிட்டது. அப்போது பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அந்தத் திறப்பின் வழியே  உள்ளே  சென்று மரங்களிலுள்ள பலன்களை பறிக்கத் துவங்கினர். மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு மாடுகள் உள்ளேசென்று மரங்களை  மேய்ந்தன.  தோட்டம் தன்  அழகையும்  செழிப்பையும் இழந்தது.

ஒருசில நாட்களில் பெரிய மீசை, முண்டா பனியனுடன் கையில் தடியுடன் அந்தத் தோட்டத்தின் உரிமையாளர் அங்கு காவலுக்கு வந்து விட்டார்.  இப்பொழுது அந்தத் திறப்பு அடைகப்படாவிட்டலும் திறப்புக்கு காவல் இருந்தது. அவருக்கு பயந்து மாணவர்களும் ஆடு மாடுகளும் தோட்டத்தினுள்  செல்வதைத் தவிர்த்தன. மேலும் ஒருசில நாட்களில் அந்த வெளியின் திறப்பு மீண்டும் அடைக்கப்பட்டது. தோட்டம் முன்பு போல பாதுகாப்புப் பெற்றது.

பிரியமானவர்களே, வேதத்தில் கூறப்பட்டுள்ள யோபுவின் சரித்திரம் தெரியுமல்லவா ? நான் மேலே குறிப்பிட்டுள்ள தோட்டத்தை யோபுவின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்!

"உத்தமனும், சன்மார்கனும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்த  யோபுவின் (யோபு -1:1) உடமைகளை தேவன் வெளியடைத்துக் காத்துவந்தார்.  (யோபு -1:10)   எனவே யோபுவின் வாழ்க்கைச் செழிப்பாக இருந்தது. அனால் தேவ சித்தத்தின்படி அந்த வெளியில் திறப்பு உண்டானபோது சாத்தான் உள்ளே புகுந்து யோபுவின்  உடைமைகளை நாசம் பண்ணினான். அனால் தேவனையே சார்ந்து நின்ற யோபு அந்தத் திறந்த வெளியை தனது பிரயாசத்தால் மீண்டும் அடைத்தார், செழிப்படைந்தார்.

பழைய ஏற்பாட்டுச் சம்பவங்கள் நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு    ஒரு முன்னோட்டமாக இருக்கின்றன. அவர்கள் தரிசித்து நடந்தார்கள்; நாமோ விசுவசித்து நடக்கிறோம். 

எகிப்து தேசத்தில் அடிமையாக இருந்த தனது ஜனமாகிய இஸ்ரவேல் மக்களை தேவன் கானான் தேசத்திற்குக் கொண்டு வந்தார். பல்வேறு ஜாதிகளை துரத்திவிட்டு அங்கு தனது மக்களை குடியமர்த்தினார். அதனை சங்கீதம் பின்வருமாறு வர்ணிக்கிறது:

"நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக் கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளை துரத்திவிட்டு அதை நாடினீர். அதற்க்கு இடத்தை ஆயதப்படுதிநீர்; அது வேரூன்றி தேசமெங்கும் படர்ந்தது" (சங்கீதம் 80:8,9)

ஆனால் இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு ஏற்பில்லாத செயல்பாடுகளில் ஈடுபட்டதால் தேவன் அவர்களது பாதுகாப்பு வேலியைத் தகர்துப்போட்டார். அந்நிய தேவர்களை செவித அவர்களை எதிரி ராஜாக்கள் அடிமைபடுத்தி அடக்கினட். ஆம், தேவனுடைய தோட்டமாகிய இஸ்ரவேலின் திராட்சைத் தோட்டவே லி அழிவுற்றது.

"இப்பொழுது வழி நடக்கிற யாரும் அதைப் பறிக்கும்படியாக அதன் அடைப்புகளை ஏன் தகர்த்துப் போட்டீர்? காட்டுப் பன்றி அதை உழுது போடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்து போடுகின்றன"  (சங்கீதம் 80:12,13)

ஆம் வேலியில்லாத தோட்டத்தைக காட்டுப் பன்றிகளும் மிருகங்களும் அழிக்கும்.

ஆவிக்குரிய வாழ்வு இதற்க்கு ஒத்துள்ளது. தேவன் வேலியடைத்த தோட்டமாக நாம் பலன் தரவேண்டுமென்று விரும்புகிறார். தேவனுக்கு ஏற்பில்லாத செயல்பாடுகளில் ஈடுபடும்போது தேவ பாதுகாப்பு எனும் வேலி தகர்ந்துவிடுகிறது. காடுப்பன்றிகளும் மிருகங்களும் தோட்டத்தை  அழிப்பதுபோல நமது  வாழ்வை சாத்தான் அழிக்கிறான்.

இஸ்ரவேலராகிய திராட் சைத்தோட்டம் நல்ல இனிப்பான கனியைத் தருமென்று தேவன் எதிர்பார்த்தார்.. " ஆனால் அதுவோ கசப்பான பழங்களை தந்தது" (ஏசாயா - 5:2). எனவேதான் தேவன் "அதன் வேலியை எடுதுப்போடுவேன், அது   மேய்ந்து போடப்படும், அதன் அடைப்பைத்  தகர்ப்பேன், அது   மிதியுண்டுபோம்"  . (ஏசாயா - 5:5) என்கிறார்.

இன்று நாமும் நல்ல கனியுள்ள வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுக்காவிட்டால் தேவன் நமது பாதுகாப்பு வேலியைத . தகர்த்திடுவார்.

இன்று "திறப்பின் வாசல் ஜெபம்" என்றும் "திறப்பிலே நிற்றல்" என்றும் கூறப்படுவதன் பொருள் இதுவே. பாதுகாப்பு வேலி தகர்ந்து திறப்பகிப்  போன தோட்டத்தைப் பாதுகாத்திட திறப்பிலே நின்று சத்துரு உள்ளே நுழைந்து ஆதுமாகளை அழிதிடாமல் காத்திட வேண்டுவதே நாம் செய்யவேண்டியது.

தனது திராட்சைத்தோட் டமாகிய இஸ்ரவேல் ஜனங்களை காத்திட (ஏசாயா - 5:7) திறப்பிலே நின்று ஜெபிக்கவும் திறந்த வேலியை அடைக்கவும் ஏற்ற ஒரு ஆள்  கிடைக்காதா  என்று தேவன் ஏங்கினார். ஆனால் அப்படி ஒரு ஆள் அவருக்குக் கிடைக்கவில்லை.

"நான் தேசத்தை அழிக்கதபடிக்கு திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவும் தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்"  (எசேக்கி யேல்  - 22:30) 

காரணம், தேசத்து மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து அவர்களைத் தேவனுக்கு நேராக திருப்ப வேண்டிய தீர்க்கதரிசிகள் அந்தப் பணியைச் செய்யவில்லை.

"இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பயிருக்கிரார்கள். நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிற்கும்படிக்கு திறப்புகளில் எரினதுமில்லை, இஸ்ரவேல் வம்சதினருக்காகச் சுவரை அடைததுமில்லை" (எசேக்கியேல் - 13:4, 5)

வனாந்தரத்து நரிகளுக்கு ஒத்த இஸ்ரவேலின் தீர்கதரிசிகள் மனம்திரும்புதளுக்கான வழியை மக்களுக்கு எடுத்துச் சொல்லாமல்,  திறப்பினை அடைக்காமல் உலக ஆசீர்வாததையே  பிரசங்கிக்கும் தற்காலத்திலுள்ள பல ஊழியர்களைபபோல ஆசீர்வாத உபதேசத்தையே கூறி மக்களைக் கெடுத்தனர். தேவனுடைய வார்த்தையில் கூறவேண்டுமானால் "சாரமற்ற சந்தினைக் கொண்டு வேலியின் திறப்பை அடைத்தனர்:.

"சமாதானமில்லாதிருந்தும் சமாதன்மென்று சொல்லி அவர்கள் ஏன் ஜனத்தை  மோசம் போக்குகிறர்கள். ஒருவன் மண் சுவரை வைக்கிறான்; இதோ மற்றவர்கள் சாரமில்லாத சந்தை அதற்குப் பூசுகிறார்கள். சாரமில்லாத சந்தைப்  பூசுகிறவர்களை நோக்கி அது இடிந்து விழுமென்று சொல்". (எசேக்கியேல் - 13:10, 11)

தேவன் விரும்பும் மனம்திரும்புதலுக்கு ஏற்ற சுவிசேஷத்தை அறிவிக்காமல் மக்களைத் திருப்திப் படுத்தும் தீர்கதரிசனமும், தங்களையே மேன்மைபடுத்தும் பொய்த் தரிசனமும் சாரமற்ற சந்துதான். "அதன் தீர்கதரி சிகள் .அபத்தமானதைத் தரிசித்துப் பொய் சாஸ்திரத்தை அவர்களுக்குசொல்லி கர்த்தர் உரைக்காதிருந்தும், கர்த்தராகிய ஆண்டவர் உரைத்தார் என்று சொல்லி அவர்களுக்குச் சாரமற்ற சாந்தைப் பூசுகிறார்கள்..(எசேக்கியேல் - 22:28)

பிரியமானவர்களே ! ஆவிக்குரிய வாழ்வு எனும் தோட்டத்தின் மதில் கட்டப்படவேண்டும், திறப்பு அடைக்கபடவேண்டும். சாரமில்லாத சாந்தினால் அல்ல, நல்ல உறுதியான சாந்தினால் கட்டி அடைக்கபடவேண்டும்.

தேவனுக்கு ஏற்பில்லாத செயல்பாடுகளே சாரமில்லாத சாந்து, உண்மை மனம்திரும்புதல் இல்லாமல் பாசாங்கு மனம்திரும்புதல் சாரமில்லாத சாந்து. உலக ஆசீர்வாதங்களையே வேண்டி ஜெபிப்பது சாரமற்ற சாந்து பூசுதலே.

"நீங்கள் சாரமில்லாத சந்தைப் பூசின சுவரை நான் இடித்து அதன் அஸ்திபாரம் திறந்து கிடக்கும்படி அதைத் தரையிலே விழப்பண்ணுவேன்........இப்படி சுவரிலும் அதற்க்குச் சாரமில்லாத சாந்து பூசினவர்களிலும் நான் ஏன் உக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டு, சுவருமில்லை அதற்க்குச் சாந்து பூசினவர்க்களுமில்லை"  .(எசேக்கியேல் - 13: 14, 15) என்று ஆகுவேன் என்கிறார் தேவன்.

ஆவிக்குரிய தோட்டம்  காக்கப்படவேண்டும். எனவே அர்த்தமற்ற உலக ஆசிர்வாததைக் கூறி சாரமற்ற சாந்தை பூசும் கபட ஊழியர்களை விட்டி விலகி திறப்பிலே நின்று கண்காணிக்கவும் அதனைச் சாரமுள்ள சாந்தினால் அடைக்க வேண்டியதும் நமது கடமை என வுணர்ந்து செயல்படுவோம். ஏனெனில் நம்மைச சிதறடிக்கிற "எதிரியான பிசாசானவன் கெர்ஜிக்கிற சிங்கம்போல எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச சுற்றித் திரிகிறான் (1 பேதுரு - 5:8). வேலி திறந்திருந்தால் அவன் உள்ளே புகுந்திடுவான்.

மேலும் ஒருவர் தோட்டத்தை வேலியடைத்துப் பத்திரமாகப் பாதுகாத்தாலும், தொடர்ந்து அவரே அதனைப் பராமரிக்கவேண்டும். குத்தகைக்கு விட்டுவிடக்கூடாது. அப்போது வேலியடைதத் தோட்டம் நமது தோட்டமாக இருந்தாலும் குத்தகைக்காரன் அதனை அபகரித்துக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. 

ஆவிக்குரிய வாழ்வை இன்று பலரும் துவக்கத்தில் பத்திரமாக வேலியடை த்துக் காதாலும் பிற்பாடு குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கோ, சபைப் பிரிவுகளுக்கோ குத்தகைக்கு விட்டுவிடுகின்றன்ர். இயேசு கிறிஸ்துவை முன்னிலைப்படுத்தாமல் வேறு எவரையும் முன்னிளைபடுதுவது குதகைக்குவிடுதலே!

மத்தேயு 21- ம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து இதனை உணர்த்தினார் .

"வீட்டெஜனமானாகிய    ஒரு மனுஷன் இருந்தான். அவன் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி அதற்க்கு வேலியடைத்து, அதில் ஆலையை நாட்டி   கோபுரத்தையும் கட்டி தோட்டக்கரருக்கு அதனை குத்தகைக்கு விட்டு புற தேசத்துக்குப் போயிருந்தான் (மத்தேயு 21:33)

இப்படி குத்தகைக்கு விட்டவனது இழப்பு அதிகமாயிருந்தது. ஆவிக்குரிய வாழ்வையும் இதுபோல கிறிஸ்துவைச் சாராமல் ஊழியர்களை மையப்படுத்தி குத்தகைக்கு விட்டோமானால் எவ்வளவு சிறப்பான வேலியடைதாலும் இழப்புதான் ஏற்படும்.

நம்மை தேவனுக்கு ஒப்புவித்து தேவ சித்தத்துக்கு ஏற்ற ஒரு வாழ்வு வாழ்வோமெனில் திறக்கப்பட்ட வேலி அடைக்கப்படும். தேவ பாதுகாப்பு நம்மை சூழ்ந்துகொள்ளும்.

தேவனே ! உமக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ   எனக்கு உதவும், உமது மகனாக, மகளாக வாழும் வரம் தாரும். எனது ஆவிக்குரிய வாழ்வின் திறப்பினை சாரமுள்ள சாந்தினால் நான் அடைத்திட எனக்கு உதவும் என நம்மையே தாழ்த்தி ஜெபிப்போம்; நமது செயல்பாடுகளை தேவன் விரும்பும் செயல்பாடுகளாக மாற்றுவோம். வேதம் கூறும் பின்வரும் எச்சரிப்பு எப்போதும் நமக்கு முன் இருக்கவேண்டும்:

"சிதறடிக்கிறவன் (பிசாசு)  உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக்  காத்துக்கொள்; வழியைக் காவல்பண்ணு" (நாகூம் - 2:1)    


No comments: