Friday, October 27, 2017

சத்திய ஆவியாகிய தேற்றரவாளன்

சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் 

சகோ . எம் . ஜியோ பிரகாஷ்

(இக்கட்டுரை சகோதரரால் எழுதப்பட்டு 'ஆதவன்' செப்டம்பர் 2013 இதழில் பிரசுரமானது. ஒருசில புதிய கருத்துச்  சேர்க்கையுடன் இணைய தளத்தில் தற்போது வெளியிடப்படுகிறது )



ந்த உலகத்தில் கிறிஸ்தவ பெற்றோருக்கு குழந்தையாகப் பிறந்தவர்களும், கிறிஸ்தவப் பெயரைக் கொண்டவர்களும், இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களும், அவரைத் தேவ குமாரன் என ஏற்றுக்கொண்டவர்களும் பொதுவாகக் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டாலும் வேதம் அதற்கு வேறொரு அளவுகோலைக் குறித்துள்ளது. ஆம், தேவனுடைய பரிசுத்த ஆவி உள்ளவனே கிறிஸ்தவன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவேதான் பவுல் அடிகள், " கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவனல்ல" (ரோமர்-8:9) என்று கூறுகிறார்.

கிறிஸ்துவின் ஆவியாகிய பரிசுத்த ஆவி ஒரு மனிதனுக்குள் இருந்தால் மட்டுமே அவன் ஒரு சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்து கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்தமுடியும். கிறிஸ்துவைப் பிரதிபலிப்பவனே கிறிஸ்தவன். "கிறிஸ்து அவன் " எனச் சொல்லும்படி வாழ்பவனே கிறிஸ்தவன். முதன் முதலில் கிறிஸ்துவைப்போல ஒரு வாழ்வு - ஒரு சீடத்துவ வாழ்வு - வாழ்ந்த ஒரு கூட்டம் மக்களுக்கே கிறிஸ்தவர்கள் எனும் பெயர் வந்தது என வேதம் கூறுகிறது. "முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்கிற பெயர் வழங்கிற்று" (அப்போஸ்தலர் - 11:26)

இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்து விண்ணகம் செல்லுமுன் இதனைத்தான் தனது சீடர்களுக்கு அறிவித்தார். "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயாவிலும், சமாரியாவிலும் பூமியின் கடைசிபரியந்தம் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்".  (அப்போஸ்தலர் - 1:8)

அதாவது ஒருவர் கிறிஸ்துவுக்குச் சாட்சியாக விளங்கவேண்டுமென்றால் அவர் பரிசுத்த ஆவியினால் பெலனடைய வேண்டியது அவசியமாய் இருக்கிறது.

மனிதர்களது வாழ்வு "இம்மை" எனும் இவ்வுலக ஆசைகள் நிறைந்த "மாம்ச வாழ்வு" எனவும்  "மறுமை " நிலை சார்ந்த "ஆவிக்குரிய வாழ்வு" எனும் இரண்டு நிலைகளில் உள்ளது. அதாவது , மாம்சம் சார்ந்த "ஊனியல்புக்குட்பட்ட வாழ்க்கை", "ஆவிக்குரிய வாழ்க்கை" எனும் இரண்டு நிலைகளை உடையது மனித வாழ்க்கை.  

இவற்றில் ஊனியல்புக்குட்பட்ட வாழ்க்கை தேவனுக்கு உகந்த வாழ்க்கையல்ல. மாறாக ஆவிக்குரிய வாழ்க்கை எனும் வாழ்வே தேவனுக்குரிய வாழ்க்கை. அப்படியொரு ஆவிக்குரிய வாழ்க்கை வாழவே தேவன் நம்மை அழைத்துள்ளார். 

எனவேதான் வேதம் கூறுகிறது, " மாம்ச சிந்தை மரணம், ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்" (ரோமர்-8:6). மேலும், "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால் நீங்கள்   மாம்சத்துக்குட்பட்டவர்களாய் இராமல் ஆவிக்குரியவர்களாய் இருப்பீர்கள்"  (ரோமர்-8:9) என்று கூறப்பட்டுள்ளது.

பரிசுத்த ஆவி என்பது கிறிஸ்துவின் ஆவி (ரோமர்-8:9). இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது அதனை அவரது சீடர்களுக்கு அளித்தார். "அவர்கள்மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார். (யோவான் - 20:22)

தேவனுடைய பரிசுத்த ஆவியானவருக்கு வேதத்தில் பல்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

"எங்கும் நிறைந்தவர் " (சங்கீதம் - 139:7-10

"சத்திய ஆவி"  (யோவான் - 15;26)

"தேற்றரவாளன் "   (யோவான் - 15;26)

"இரட்சிக்கும் ஆவி" (தீத்து  - 15;26)

"ஜீவத் தண்ணீர் " (யோவான் - 4;13,14)

"மீட்கப்படும் நாளுக்கான முத்திரை" (எபேசியர் - 4:30)

"பெலன் அளிப்பவர் " ( அப்போஸ்தலர் - 1:8)

"பெலவீனங்களில் உதவுபவர்" (ரோமர்-8:26,27)

"நமக்காக வேண்டுதல் செய்பவர் "   (ரோமர்-8:26,27)

"விடுதலை அளிப்பவர்" (2 கொரிந்தியர் - 3:17)

"ஞானத்தை அளிப்பவர்" (எபேசியர் - 1:17)

வேதம் பரிசுத்த ஆவியானவரைப் பற்றி இப்படிக் கூறினாலும் இன்னும் பல கிறிஸ்தவர்கள் இதுபற்றிய ஒரு தெளிவோ அல்லது பரிசுத்த ஆவியானவரின் அனுபவமோ இல்லாமல் ஆவிக்குரிய சபை எனக் கூறப்படும் ஏதோ ஒரு சபையில் அமர்ந்துகொண்டு துள்ளுபவர்களாக, அல்லது சாதாரண ஒரு கிறிஸ்தவ சபையில் ஞாயிறு ஆராதனையில் கடமைக்காகக் கலந்துகொண்டு பரிசுத்த ஆவியானவரைப் பற்றியோ வேறு எதைப்பற்றியுமோ கவலை இல்லாமல் வாழும் ஒரு நிலைதான் இன்று இருக்கிறது.

ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் பல சபைகளில் பரிசுத்த ஆவியைப் பற்றி தவறான கருத்தே பரப்பப்பட்டு, ஒருவர் "லப ..லப ..சபாலா ...லப் ..லப் " என ஏதோ உளறிவிட்டால் அவர் பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டார் எனக் கூறி மற்றவர்களையும் அப்படிப் பேசத் தூண்டும் ஒரு நிலை இருக்கிறது. எப்படி அந்நிய பாஷை பேசுவது எனப் போதகர்கள் விசுவாசிகளுக்கு வகுப்பெடுக்கின்றனர். இதனால் தாங்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளோம் என மற்றவர்கள் நினைக்கவேண்டும் என்பதற்காக சுயமாக அந்நிய பாஷை பேச்சும் விசுவாசிகளும் பல சபைகளில் நிறைந்துள்ளனர்.

அந்நிய பாஷை பேசுவதுதான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதற்கு அடையாளம் என ஒரு தவறுதலான போதனையை போதகர்கள் கொடுத்துள்ளனர். ஆனால் வேதம் அப்படிக் கூறவில்லை. ஆவியின் பல்வேறு ஒன்பது வாரங்களில் அந்நிய பாஷையும் ஒன்று என்றுதான் கூறுகிறது. ஒருவர் அந்நிய பாஷை பேசுவதால் மட்டுமே பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளார் என்றோ  பேசாததால் அவர் பரிசுத்த ஆவியைப் பெறவில்லை என்றோ கூறிட முடியாது.

"எல்லோரும் அப்போஸ்தலர்களா? எல்லோரும் தீர்க்கதரிசிகளா? எல்லோரும் போதகர்களா? எல்லோரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லோரும் குணமாகும் வரங்களுடையவர்களா? எல்லோரும் அந்நிய பாஷைகளைப் பேசுகிறார்களா? ....." (1 கொரிந்தியர் - 12:29,30) எனப் பவுல் அடிகள் எழுதுவதிலிருந்து  இதனை அறிந்துகொள்ளலாம். எனவே பரிசுத்த ஆவியின் நிறைவுக்கு அந்நியபாஷை அடையாளமல்ல என்பது தெளிவு.

இன்று பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளேன் எனக் கூறும் பலரும் ஆராதனை வேளைகளில் பரலோக இன்பத்தை அடைந்துவிட்டதைப்போல துள்ளிக் குதித்தாலும் ஆராதனை வேளைக்குப் பின் இவர்களிடம் எந்த நல்லக்  குணங்களும் இருப்பதில்லை. உலகவாழ்கையில் உண்மையோ நீதியோ நேர்மையோ இவர்களிடம் இருப்பதில்லை. இப்படிப்பட்ட மனிதர்களால்தான் சத்திய மார்க்கம் தூஷிக்கப்பட்டு பிற மக்கள் கிறிஸ்தவத்தைப் பற்றி தவறாக நினைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

"எவனாகிலும் மனுஷ குமாரனுக்கு விரோதமான விஷேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும் ; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் தூஷணஞ்சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை " (லூக்கா-12:10) பரிசுத்த ஆவியைப் பெறாமல் பெற்றதாகக் கூறுவதும் அவருக்கு விரோதமாகத் தூஷணம் சொல்வதுதான். இத்தகைய தவறுகள் நம்மிடம் இருந்தால் திருத்திக்கொண்டு வேதம் கூறும் பரிசுத்த ஆவியானவரைப் பெற  வேண்டுதல் செய்யவேண்டும்.

ஒருவர் தனது பாவங்களை உணர்ந்து  மெய்யான மனஸ்தாபப்பட்டு தேவனிடம் வேண்டுதல் செய்யும்போது  தேவன் அவரை இரட்சிப்பின் ஆவியால் நிரப்புகிறார். இரட்சிப்பின் ஆவி என்பதும் பரிசுத்த ஆவிதான். ஒருவர் இரட்சிக்கப்படுவதற்கு முத்திரை அடையாளமாக தேவன் பரிசுத்த ஆவியை அளிக்கிறார். எனவேதான், "நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவி  ....".(எபேசியர் - 4:30) என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவர் இரட்சிக்கப்படும்போது பரிசுத்த  ஆவியைப் பெற்றாலும் மேலான ஒரு நிறைவின் அடையாளம் ஒருவரது ஆவிக்குரிய வளர்ச்சி நிலையையும் அவரது தனிப்பட்ட தாகத்தையும் பொறுத்து ஒருவர்க்கு கிடைக்கிறது. இதனையே "பரிசுத்த ஆவியின்  நிறைவு" என்கிறோம். இதனை பலப்படுத்தல் அல்லது திடப்படுத்தல் என்று கூறலாம். ஆவிக்குரிய வாழ்க்கையில் நடக்க நாம் திடப்படுகிறோம்.

ஆனால் ஆவிக்குரிய காத்திருப்புக் கூட்டங்கள், ஆவியைப் பெற உபவாச ஜெபம் என ஊழியர்களால் வழிநடத்தப்படும் பல விசுவாசிகள் வெறும் மனக் கிளர்ச்சியை பரிசுத்த ஆவியென எண்ணிக்கொண்டு துள்ளிக் குதிக்கின்றனர். ஆவியின் நிறைவு வெறும் உடல் சார்ந்த குதூகலம் அல்ல. அது ஆத்துமா சார்ந்தது. ஒருவர் பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்படும்போது அவரது மனது மறு  ரூபமாகிறது. அது உள்ளான மனிதனில் மிகப் பெரிய மாறுதலைக் கொண்டு வருகிறது.

ஆவியின் நிறைவை மதுவால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு மனிதனுக்கு உவமைப்படுத்திக் கூறலாம். மதுவின் மயக்கத்தால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு மனிதனிடம் பல மாறுதல்களை நாம் காணலாம். அவனது நடை, பேச்சு, செயல் அனைத்தும் மதுவுக்கு அடிமையாகி அதனை வெளிப்படுத்தும். அவன் முற்றிலும் மதுவின் கட்டுப்பாட்டில் இருப்பான்.

இதுபோலவே தேவனது ஆவியால்  நிறையும்போது ஒருவன் ஆவியானவரின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பான். உலகில் அவனது நடை, பேச்சு, செயல்பாடுகள் அனைத்தும் ஆவிக்குட்பட்டதாக இருக்கும். சாதாரண மக்களைவிட வித்தியாசமானதாக இருக்கும். இதுவே ஆவியில் நிரம்புதல். அதாவது பரிசுத்த ஆவியானவரின் முழுக் கட்டுப்பாட்டில் இருத்தல்.  பவுல் அடிகள் இதனை, "துன்மார்க்கத்துக்கு ஏதுவான மதுபான வெறி கொள்ளாமல் ஆவியினால் நிறைந்து" (எபேசியர்- 5:18) என்று கூறுகிறார். இப்படி ஆவியால் நிரம்பி ஆவியானவரின் கட்டுப்பாட்டில் இருப்பவர்களே தேவனுடைய மக்கள் என்கிறது வேதம்.

"எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்" (ரோமர்-8:14)

இப்படி ஒருவர் ஆவியினால் நிறையும்போது மட்டுமே அவரில் ஆவியின் கனிகள் வெளிப்படும், அதாவது ஆவிக்குரிய குணங்கள் வெளிப்படும். "ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ......"(கலாத்தியர் -  5:22,23) இத்தகைய ஆவியின் கனிகள் எனும் குணங்களுள்ளவனே ஆவியில் நிறைந்தவன். அத்தகையவனே  கிறிஸ்துவின் சீடன்.

இயேசு கிறிஸ்து எனவேதான் கூறினார், " நீங்கள் மிகுந்த கனிகள் கொடுப்பதினால் என் பிதா  மகிமைப் படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்"  (யோவான் - 15;8)

இப்படி ஒரு கனி கொடுக்கும் வாழ்வு வாழவே கிறிஸ்து நம்மை அழைத்திருக்கிறார். "நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும் நான் உங்களை ஏற்படுத்தினேன் " (யோவான் - 15;16) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா?

மேலும், தேவனுடைய பரிசுத்த ஆவியில் வலுப்படும்போது இயேசு கிறிஸ்து நமக்குத் பெரியவராகத் தோன்றுவார். கிறிஸ்துவில் நமது விசுவாசம் வலுப்பெறும். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவைக் குறித்தே சாட்சியளித்துப் பேசுகிறார்.

"பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிறவரும்  பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமான சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் வரும்போது அவர் என்னைக் குறித்துச் சாட்சி கொடுப்பார்" (யோவான் - 15;26)

எனவே இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறியவேண்டுமானால் கூட நாம்  பரிசுத்த ஆவியானவரையே அதிகம் தேடவேண்டும். ஏனெனில், "பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தர் என்று எவனும் சொல்ல முடியாது என்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்" (1 கொரிந்தியர் - 12:3) என எழுதுகிறார் பவுல் அடிகள்.

அன்பானவர்களே, பரிசுத்த ஆவியினால் நிறைந்து துள்ளிக் குதிப்பதற்கல்ல, கிறிஸ்துவை இன்னும் அதிகம் அதிகம் அறிந்து கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக் கொடுப்போம்; அதன்  மூலம் கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்துவோம் , ஆமென்.  

Tuesday, October 24, 2017

கிறிஸ்து இடதுசாரி புரட்சியாளரா ?

கிறிஸ்து இடதுசாரி புரட்சியாளரா ?  

சகோ . எம் . ஜியோ பிரகாஷ் 

ன்றைய கிறிஸ்தவத் தலைவர்கள் மற்றும் போதகர்கள் பலரும், சமூக சேவையாளர்கள் பலரும் கிறிஸ்துவை இந்த உலக ஆசீர்வாதத்தை அளிக்க வந்தவராகவே படம்பிடித்துக் காட்டுகின்றனர். வேதாகம வசனங்களை அவற்றின் உண்மையானபொருள் விளங்காமல் போதிக்கின்றனர். இவற்றின் விளைவே தவறான ஆசீர்வாத உபதேசங்களும் விடுதலை இறையியல் எனும் இடதுசாரி சிந்தனை போதனைகளும். 

கிறிஸ்து மக்களுக்கு விடுதலை வாழ்வு அளிக்க வந்தார் என்பதை இவர்கள் உலக கண்ணோட்டத்துடனேயே பார்த்து அதற்கேற்ப பொருள் விளக்கமளித்து மக்களைக் குழப்பி கிறிஸ்து கூறிய  தேவனுடைய ராஜ்யத்திற்குள் தாங்களும் நுழையாமல்  மற்றவர்களையும் நுழைய விடாமல் தடுத்து மிகப் பெரிய தடைக்கற்களாக இருக்கின்றனர். பல ஆண்டுகளாக வேதாகமக் கல்லூரிகளில் இறையியல் படித்த இந்த போதகர்கள் தேவனை படிப்பின் மூலம் மட்டும் ஒருவன் அறிய முடியாது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கின்றனர்.

இயேசு கிறிஸ்து தனது ஊழியத்தின் ஆரம்பத்தில் ஏசாயா நூலின் 61 ம் அதிகாரத்தின் முதல் இரு வசனத்தைக் கூறி தனது ஊழிய நோக்கத்தினை வெளிப்படுத்தினார்.

"கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார், தரித்திரருக்குச் சுவிசேஷத்தை பிரசிங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார். இருதயம் நறுங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்திப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும் கர்த்தருடைய அனுகிரக வருஷத்தைப் பிரச்சித்தப்படுத்தவும் என்னை அனுப்பினார்" (லூக்கா - 4:18,19 & ஏசாயா - 61:1,2)

இந்த வசனத்துக்கு உலகப் பொருள்கொண்டு இயேசு கிறிஸ்து ஒரு இடது சாரி சிந்தனையுள்ள மனிதன் (கவனிக்க, மனிதன்) என்று எண்ணி அதற்கேற்ப சம்பவங்களை வேதாகமத்திலிருந்து எடுத்துக் காட்டி விளக்குகின்றனர். இதற்கு ஆதாரமாக அவர்கள் இயேசு கிறிஸ்து அப்பம் பலுக்கச் செய்த சம்பவத்தையும் கோவிலில் வியாபாரம் செய்தவர்களை சாட்டையால் அடித்துத் துரத்தியதையும் தங்களுக்கேற்ப பொருள்விளக்கமளித்து மக்களைக் குழப்புகின்றனர்.

இந்த ஊழியக்காரர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள்களின் கணக்குப்படி இன்று சமூக சேவை செய்யும் பலரும்  கிறிஸ்துவின் அடிச்சுவட்டைப் பின்பற்றுபவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வெறும் ஜெபம் ஆராதனையைவிட இத்தகைய இரக்கச் செயல்பாடுகளே போதும் எனப் போதனைவேறு  செய்கின்றனர்.

வேதம் என்ன கூறுகிறது என்பதைக் குறித்து ஒரு தெளிவான பார்வை இருந்தாலே இத்தகைய வேதப்  புரட்டர்களுக்குப்  பதில் கூற முடியும். நம் நீதிச் செயல்களால் மட்டும் நாம் நீதிமானாக முடியாது என வேதம் கூறுகிறது.

இன்று சமூக சேவை செய்கிறோம் என்று கூறிக்கொள்பவர்களில் எத்தனைபேர் அதனை ஒரு சேவையாகச் செய்கின்றனர்? சமூக சேவை மற்றும் மக்களுக்கான விடுதலைச் சேவைகளில் ஈடுபடும் சேவை நிறுவனத் தலைவர்கள் எதற்காக அந்தச் சேவையில் ஈடுபடுகின்றனர் என்று பார்த்தால்:-

1. வெளிநாட்டிலிருந்து அல்லது உள் நாட்டிலிருந்து பண உதவி கிடைப்பதால் அப்படிச் செய்கின்றனர்

2. அப்படிச் செய்வதால் தங்களது பெயர் பிரிசித்தமடைகிறது , அதனால் செய்கின்றனர்

3. ஏழை மக்களை முன்னிறுத்தி சேவை செய்வதால் தங்களது பிழைப்பு நடக்கிறது, எனவே சேவை செய்கின்றனர்.

உண்மையான மக்கள் அன்புள்ளவன் இவை எதனையும் எதிர்பார்க்காமல் செய்வான். ஆனால் அப்படி ஒருவனால் செய்யமுடியாது எனும்போது அவன் அதிக அதிக பாவத்தில்தான் விழுவான். இன்று சமூக சேவை எனும் பெயரில் வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று தங்களது குடும்பத்தை வளர்த்துக்கொள்ளும் பலரை நாம் பார்க்கிறோமே? சுனாமி இந்தியாவைத் தாக்கியபோது மக்களுக்காக வந்த பணத்தைச் சுருட்டி கார் பங்களா என வாங்கி குவித்த தொண்டு நிறுவனங்கள் எத்தனை எத்தனை?

ஆம் கிறிஸ்து ஒருவனுக்குள்  உருவாக்காவிட்டால் அவன் இப்படிக் கொள்ளைக்காரனாகத்தான் இருப்பான். நமது நல்லச் செயல்களல்ல, செயல் செய்யப்படும் நோக்கத்தை தேவன் பார்க்கிறார்.  "அவர் தன்  கண் கண்டபடி நியாயம் தீர்க்காமலும் தனது காது கேட்டபடி தீர்ப்புச்  செய்யாமலும் நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து யாதார்த்தத்தின்படி சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்   செய்து......." (ஏசாயா - 11:3,4)

கிறிஸ்து நமக்குள் இல்லாவிட்டால் நல்ல நோக்கம் ஒருவனுக்கும் வருவதில்லை. "எத்தியோப்பியன்  தனது தோலையும் சிவிங்கி தனது புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால் தீமை செய்யப் பழகின நீங்களும் நன்மை செய்யக்கூடும்" (எரேமியா - 13:23). ஆம் மனிதனது நினைவுகள் அவன் சிறு வயது துவங்கி  பொல்லாதவைகளாகவே இருக்கின்றன. கிறிஸ்துவின் ஒளி ஒரு மனிதனுக்குள் வரும்போது மட்டுமே அவன் தனது சுய ஆளுகையிலிருந்து விடுபட முடியும்.

எனவேதான் பரிசுத்த பவுல் அடிகள், "மனுஷன் நியாயப் பிரமாணத்தின்  கிரியைகளினால்  அல்லாமல் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுகிறான் " (ரோமர்- 3:28) என்று கூறுகிறார். நியாயப்  பிரமாணம் உன்னிடத்தில் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூரு என்று கூறுகிறது.  அன்பினால் நான் ஏழைக்குச் செய்கிறேன் என்று ஒருவன் கூறினாலும் அது அவன் கிறிஸ்துவின்மேல் விசுவாசமுள்ளவனாக மாறினால் மட்டுமே பூரணமாகும்.

அன்னைத் தெரேசா அவர்கள் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவார். ஒருமுறை அன்னைக் கலந்துகொண்ட கூட்டத்திற்கு மத்திய சமூக நலத்துறை அமைச்சர் ஒருவர் தலைமை தாங்கினார். அவர் அன்னையின் சேவைகளையும் அவரது நிறுவனத்தையும் பார்த்துவிட்டு பின்வருமாறுக் கூறினாராம், " மதர் நாங்களும் (அரசாங்க அதிகாரிகளும்) நீங்களும் ஒரே பணியைத்தான் செய்கிறோம். ஆனால் நாம் இருவருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் ஒன்று உள்ளது.  நாங்கள் இந்தப் பணியை ஏதோ ஒன்றிற்காகச் (பணத்துக்காக) செய்கிறோம் , நீங்கள் யாரோ ஒருவருக்காகச்  (கிறிஸ்துவுக்காக)  செய்கிறீர்கள். ஆம் கிறிஸ்து ஒருவற்காகவே செய்த பணியாக எண்ணி அன்னை தெரெசா  சேவை செய்ததால்தான் அவர் புனிதையாகக் கருத்தப்படுகிறார்.

சேவை செய்வது என்பது ஏழைகளுக்கு கொடுப்பது, உதவுவதுதான் என்றாலும் ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினால் ஆட்கொள்ளப் பட்டால்தான் அது பூரணப்படும். எனவேதான் பவுல் அடிகள் கூறுகிறார், " நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால் அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது" (ரோமர்-5:5) நம்முடைய இருதயத்தில் தேவனுடைய அன்பின் ஆவியானவர் ஊற்றப்படவேண்டும்.

கிறிஸ்துவை உலக ஆசீர்வாதத்துக்கான ஒருவராக, ஒரு விடுதலை வீரராக சுருக்கமாக ஒரு கம்யூனிசவாதியாக  எண்ணிக்கொள்பவர்கள் ஒன்றினை கருத்தில் கொள்ளவேண்டும். கிறிஸ்து அப்படி ஒரு உலக சம தர்ம சமத்துவத்தை உருவாக்க எண்ணி பூமியில் தோன்றியிருந்தால் அவர் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்திருக்கவேண்டிய அவசியமே இல்லை. ஒரு அரசனுடைய மகனாகப் பிறந்து அரசாட்சியைக்கைப்பற்றி அத்தகைய சமத்துவ சமுதாயத்தைத் தோற்றுவித்திருக்க முடியும்.   எனவே இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தது அதற்காக அல்ல என்பது தெளிவு.

பின் எதற்காக வந்தார்? கிறிஸ்து மக்களை தேவனுடைய ராஜ்யத்துக்கு ஏற்புடையவர்களாக மாற்றிட வழி காட்டிடவும் அதற்காக தனது இரத்தத்தைச் சிந்தி மறுபிறப்பு எனும் இரட்சிப்பின்  வாசலைத் திறந்திடவும் வந்தார். நிக்கொதேமு எனும் யூத போதகர் ஒருவரிடம் இயேசு கிறித்து கூறினார், " ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்" (யோவான் - 3:3) பல வருடங்களாக மக்களுக்கு தேவனைப் பற்றி போதித்த ஒரு மிகப் பெரிய யூத போதகருக்கே மறுபடி பிறக்கவேண்டியது அவசியமானதாக இருக்குமானால் நமக்கு அது எவ்வளவு அதிகம் தேவை?

கிறிஸ்துவின் மறுபிறப்பு எனும் இரட்சிப்பை ஒருவன் பெற்றால் மட்டுமே அவன் கிறிஸ்துவுக்கு ஏற்ற ஊழியனாக  இருக்க முடியும். அத்தகையவனே கிறிஸ்துவின் அன்புடன் சேவை செய்ய முடியும்.

நமது பலவீனங்களை நாம் ஒத்துக்கொள்ளவேண்டும். ஆண்டவரே எனது பலவீனங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது மீறுதல்கள் மற்றும் பாவங்களை அறிக்கையிடுகிறேன். உமது இரத்தத்தால் என்னைக் கழுவி  உமது இரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்குத் தாரும் என வேண்டுவோம். இதை வாசிக்கும் நீங்கள் சமூக சேவை செய்பவரானால் உங்களையே நீங்கள் பரிசோதித்தறியுங்கள். இதுவரை நீங்கள் எதற்காக சேவைசெய்தீர்கள்? பணத்துக்காகவா ? பெருமைக்காகவா? சேவை செய்வதில் உண்மையாக இருந்தீர்களா?  மெய்யாகவே நீங்கள் உங்களை ஆய்வு செய்து தேவனிடத்தில் உங்களைத் தாழ்த்தினால் தேவன் உங்களுக்கு வெளிப்படுவார். உங்கள் சேவை வித்தியாசமானதாக இருக்கும். "என்னைப் பலப்படுத்திக்கின்ற    கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர் -4:13) என்று கூறி சேவைசெய்வீர்கள். அப்போது, பவுல் கூறுவதுபோல, "அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்"   (பிலிப்பியர் -3:11) எனும் எண்ணம் உங்களை ஆட்கொள்ளும். ஏமாற்று, திருட்டு, கபடம், மாய்மாலம் இல்லாததாக உங்கள் சேவை இருக்கும்.  கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
  

Friday, October 20, 2017

"அன்பு" - கிறிஸ்தவத்தின் அச்சாணி



- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

கிறிஸ்தவர்கள் என்றால் யார்? என்பதற்கு இந்த உலகம் தரும் விளக்கம் குறுகியது. ஏதாவது ஒரு கிறிஸ்தவ சபைப் பிரிவில் உறுப்பினர்களாக இருப்பவர்களும், கிறிஸ்தவப் பெயர்களைக் கொண்டவர்களையும் கிறிஸ்தவர்கள் என உலகம் கணிக்கின்றது. இத்தகைய மக்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிறவியிலேயே கிறிஸ்தவர்கள் எனப் பெயர் பெற்றுவிடுகின்றனர். அரசாங்கமும், நாட்டின் சட்டமும் இத்தகையவர்களைக் கிறிஸ்தவர்கள் எனக் கூறுகின்றது. 

பொதுவாக அனைவருமே இயேசு கிறிஸ்துவை ஒரு மதத்தை உருவாக்க வந்த தலைவராகவே பார்க்கின்றனர். எனவே அந்தத் தலைவரை முன்னிறுத்தி பேச்சுபவர்களைக். கிறிஸ்தவர்கள் எனக் கூறுகின்றர். ஆம் , தேசத்தின் பார்வைக்கும் உலகத்தின் பார்வைக்கும் இது சரியே. ஆனால் வேதம் இப்படிக் கூறவில்லை. 

ஆள் எணிக்கையோ   பெரிய திரள் கூட்டமோ தேவனுக்குத் தேவையில்லை. கிறிஸ்துவின் மனநிலை உள்ள அல்லது கிறிஸ்துவின் சிந்தையுள்ள ஒரு சிலர் இருந்தாலே அது தேவனுக்குப் பெரிதாக இருக்கிறது. ஆம் வேதம் கூறுகிறது,  "கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவனல்ல" (ரோமர் - 8:9) அதாவது ஒருவன் கிறிஸ்தவன் என்று கூறப்படவேண்டுமானால் அவனுக்குள் கிறிஸ்துவின் ஆவி இருக்கவேண்டும். அதாவது அவன் கிறிஸ்துவின் சிந்தை உள்ளவனாக மாறவேண்டும். இப்படி கிறிஸ்துவின் ஆவியால் நடத்தப்படுகிறவர்களே தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். "எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்" (ரோமர் - 8:14)   

ஆதி அப்போஸ்தலர்கள் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. அவர்கள் இயேசு கிறிஸ்துவின் ஆவியினால் நிரம்பியவர்களாக வாழ்ந்தனர். அவர்களது வித்தியாசமான வாழ்க்கை முறை மற்றவர்களை அவர்களைத் திரும்பிப் பார்க்கச்செய்தது.  இப்படிக் கிறிஸ்துவின் ஆவியினால் நடத்தப்பட்ட சீடர்களை பார்த்து மற்றவர்கள்தான் கிறிஸ்தவர்கள் என அவர்களை அழைத்தனர். இப்படி "முதன் முதலில் அந்தியோகியாவிலே சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்கிற  பெயர் வழங்கிற்று" (அப்போஸ்தலர் - 11:26) என வாசிக்கின்றோம்.

ஆனால் இன்றய நிலை என்ன? கிறிஸ்துவின் ஆவியினால் நடத்தப்படுகிற வாழ்க்கை இன்று எத்தனை கிறிஸ்தவர்களிடம்  உள்ளது?  இன்றய நிலை மிகவும் வருந்தத்தக்கதாக இருக்கிறது . இன்றய பெரும்பாலான கிறிஸ்தவர்கள்  தாங்கள் சார்ந்திருக்கும் சபைப் பிரிவால் நடத்தப்படுகிறவர்களாக இருக்கின்றனர். தாங்கள் சார்ந்திருக்கும் சபையின் தலைவர் கூறுகிறபடி நடக்கிறவர்களாக  இருக்கின்றனர். தங்களது மனதுக்குப் பிடித்த பாஸ்டர்களால் நடத்தப்படுகிறவர்களாக இருக்கின்றனர். அல்லது பிரபல பிரசங்கியால் நடத்தப்படுகிறவர்களாக இருக்கின்றனர். 

இத்தகைய கிறிஸ்தவர்கள் எனவே எதைச்  செய்தாலும் வேதத்தின் அடிப்படையை விட்டு தாங்கள் விரும்புகின்ற அந்தத் தலைவர் கூறுகிறபடி செய்கிறவர்களாக இருக்கின்றனர். ஜெபம் செய்வது, வேதம் வாசிப்பது, காணிக்கை அளிப்பது, வழிபாடு செய்வது எல்லாமே  தாங்கள் சார்ந்திருக்கும் சபைப் பிரிவின்படியும் தாங்கள் சார்ந்திருக்கும் சபையின் தலைவர் கூறுகிறபடியும்  தங்களது மனதுக்குப் பிடித்த பாஸ்டர்கள்  கூறுகிறபடியும் அல்லது பிரபல பிரசங்கியின் அறிவுரையின் படியும்  தானே தவிர ஆவியின் வழி நடந்தாலோ வேதத்தின் அடிப்படையின்படியோ பெரும்பாலும் இருப்பதில்லை. சரி அதைத்தான் விட்டுவிடுவோம், இவர்களை நடத்தக் கூடிய தலைவர்களுக்காவது தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிற அனுபவம் இருக்கிறதா என்று பார்த்தால்  அதுவும் பெரும்பாலும் இல்லை என்றே கூறவேண்டும். (இல்லை என்பதற்குச் சாட்சி அவர்களது செயல்பாடுகளே)

கிறிஸ்தவ ஆவிக்குரிய சபை என தங்கள் சபைகளைக் கூறிக்கொள்ளும்  ஊழியர்கள் பலரும் கூட தங்கள் சபை விசுவாசிகளால் வழிநடத்தப்படுகிறவர்களாக இருக்கின்றனர். அதாவது தங்களது சபை விசுவாசிகளைத் திருப்திப்படுத்தும் விதத்தில் கிறிஸ்துவின் போதனைகளைத் திரித்து தங்களது பிழைப்பைத் தேடுபவர்களாக இருக்கின்றனர். அவர்களது முக்கிய குறிக்கோள் அதிக காணிக்கை பெறுவது மட்டுமே. அதற்கேற்ப போதித்து சத்தியத்தை மறுதலித்து எப்படி போதித்தால்  விசுவாசிகளை தக்கவைத்துக்கொள்ளலாம், அதிக காணிக்கைகளை பெறலாம் என்பதே அவர்களது எண்ணமாய்   இருக்கிறது. இத்தகைய போதகர்கள் "இன்னொரு கிறிஸ்துவை "  அல்லது "வேறொரு கிறிஸ்துவை" அறிவிக்கிறவர்களாக இருக்கின்றனர்.

இத்தகைய தலைவர்களால் வழிநடத்தப்படுகிற கிறிஸ்தவர்கள் எனவே தேவனை தங்களது தகப்பனாக அல்ல, ஒரு கண்டிப்பான அதிகாரியாக எண்ணி அவரைத் திருப்திப்படுத்த ஆவிக்குரிய செயல்கள்   என்று சில செயல்களை செய்து  தங்களுக்குத் தாங்களே திருப்தியடைந்துகொள்கின்றனர். தங்களைக் கிறிஸ்தவர்கள் என்றும் கூறிக்கொள்கின்றனர்.

திரைப்படம் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த அடால்ப் ஹிட்லர் ஒரு திரைப் படத்தில் நடித்தார். ஒருமுறை அவர் தான் நடித்த படத்தை மக்கள் எப்படி ரசித்துப் பார்க்கிறார்கள் என்பதை நேரடியாக பார்த்து அறிய விரும்பினார். அவர் ஒரு திரை அரங்கினுள் மாறு வேடத்தில் நுழைந்து படம் பார்த்தார். மக்கள் திரையில் ஹிட்லரைக் கண்டவுடன் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். திரையில் ஹிட்லர் எதைச் செய்தாலும் பாராட்டினர். இதை பார்த்துக் கொண்டிருந்த ஹிட்லருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் தனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவரிடம், "என்ன பெரியவரே, இந்த ஹிட்லர் எங்கே பெரிதாய் நடிக்கிறான்? கேணப் பயல்போல அவன் செய்கை இருக்கிறது,.....மக்கள் இதையெல்லாம் பாராட்டுகிறார்களே ?" என்றார்.

அதற்கு அந்த நபர், "ஐயா, நீங்கள் வெளி நாட்டவர் என எண்ணுகிறேன். இங்கே ஜெர்மனியில் ஹிட்லர் எதைச் செய்தாலும் அதை நாம்  பாராட்டவேண்டும். இல்லையென்றால் அவன் நம்மை கொலை செய்துவிடுவான்" என்றார்.   

அன்று ஹிட்லருக்குப் பயந்து எப்படி மக்கள் கைதட்டி ரசித்தனரோ அதுபோலவே இன்றய ஆவிக்குரிய மக்கள் எனது தங்களைக் கூறிக்கொள்ளும் பல விசுவாசிகள் இருக்கின்றனர். தேவனை கண்டிப்பான ஒரு அதிகாரியாகவே அவர்கள் பார்க்கின்றனர். வேதம் வாசிக்கவில்லை என்றால் தேவன் தங்களைத் தண்டித்துவிடுவார் என பயந்து வேதம் வாசிக்கின்றனர். ஞாயிறு ஆராதனைக்குச் செல்லவில்லை என்றால் தங்களைத் தேவன் தண்டித்துவிடுவார், காணிக்கை அளிக்காவிட்டால் தங்களை வறுமை அடையச்செய்துவிடுவார் என பயந்து பயந்து எல்லாச்  செயல்களையும் செய்கின்றனர். இத்தகைய உலக போதனைகளை நிறைவேற்றுவதே ஆவிக்குரிய வாழ்க்கை என எண்ணிக் கொள்கின்றனர். 

வேதம் கூறுகின்றது, "உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது" (1 கொரிந்தியர் - 16:14) தேவனுக்கென்று எதைச் செய்தாலும் தேவன் மேலுள்ள பூரண அன்போடு செய்யவேண்டும். பயத்துடனோ, நமக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் எனும் எண்ணத்திலோ செய்யக்கூடாது. "அன்பிலே பயமில்லை. பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும், பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பிலே பூரணப்பட்டவனல்ல" (1 யோவான் 4:18)     

தேவனுக்கென்று எதனைச் செய்தாலும் தேவன்மேலுள்ள பூரண அன்புடன் செய்ய வேண்டும். கட்டளை கூறியுள்ளதால் செய்கிறேன் என்பது  மெய் அன்பல்ல. தேவன்மேலுள்ள அன்பினால் நான் தேவனுக்கு இப்படிச் செய்கிறேன் என்று ஒரு காரியத்தைச் செய்வதே அன்பு. அதாவது ஒரு அதிகாரிக்குப் பயந்து ஊழியம் செய்யும் பணியாளனாயல்ல,   ஒரு தந்தைக்கு அன்பால் ஏவப்பட்டு ஊழியம் செய்யும் மகனைப்போல பணிசெய்வதையே தேவன் விரும்புகிறார். 

இப்படி தேவனை உண்மை அன்புடன் ஏற்றுக்கொண்டு செயல்படும்போது மட்டுமே கிறிஸ்துவின் அன்பை நாம் உலகுக்குப் பிரதிபலிக்க முடியும். அப்படிப் பிரதிபலிக்கும்போதுதான் பவுல் அடிகள் கூறியதைப்போல, "எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது" (1 கொரிந்தியர் - 2;16) என்று கூறிட முடியும். தேவனிடத்தில் மெய்  அன்புகொண்டு வாழும்போதுதான் தேவன் தம்மில் அன்பு கூறுகிறவர்களுக்கு ஏற்படுத்தினவைகளை  நாம் காண முடியும்; உணர முடியும். 

"தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளை கண் காணவுமில்லை, காது  கேட்கவுமில்லை, அவைகள் மனிதருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. நமக்கோ தேவன் அவைகளை தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்" (1 கொரிந்தியர் - 2: 9,10)

இயேசு கிறிஸ்து இரண்டே இரண்டு கட்டளைகளைத்தான் கொடுத்தார். தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் முழு பலத்தோடும் அன்பு கூறுவது ; உன்னிடத்தில் அன்பு கூருவதுபோல பிறரிடத்தில் அன்பு கூருவது (மத்தேயு - 22:37-40). இந்த அன்பின் கட்டளைகளைக் கடைபிடித்து கிறிஸ்துவுக்குள் வாழ்பவர்களே கிறிஸ்தவர்கள். இவர்கள், "கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்" (ரோமர்-15:7) என்பதற்கிணங்க பிறரை ஏற்றுக்கொள்ளும் மனமுடையவர்களாக   மாறிடுவர், இதுவே கிறிஸ்தவ அன்பு.

இப்படி ஒரு அன்பு வாழ்க்கை வாழும்போது பலவீனர்களது பலவீனங்களை நாம் தங்கிடுவோம். கிறிஸ்துவை விசுவாசியாதவர்களையும் அன்பு செய்வோம். கிறிஸ்தவர்கள் எனும் ஒரே காரணத்தால் நம்மை ஒதுக்கிப் புறக்கணிப்பவர்களையும் அன்பு கூருவோம். அப்படிச் செய்யும்போது மட்டுமே கிறிஸ்து மகிமைப்படுவார். இன்று நடப்பதென்ன? ஆவிக்குரிய சபையினர் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும் இந்து சகோதரர்களையும் , ரோமன் கத்தோலிக்கர்களையும், சி.எஸ்.ஐ சபைப் பிரிவினரையும் தீண்டத்  தகாதவர்களாக  அல்லவா பார்க்கின்றனர்? இவர்கள் எப்படித் தாங்கள் அறிந்துள்ளதாகக் கூறிக்கொள்ளும்   கிறிஸ்துவை அவர்களுக்கு அறிவிக்க முடியும்?

மேலும், சில கிறிஸ்தவ சபைகளுக்குள் வெறுப்பும் போட்டி மனப்பான்மைகளும் அடிமட்டம் துவங்கி மேல்மட்டம் வரைக்கும் பரவியுள்ளதை மறுக்க முடியாது. சபைத் தேர்தல் அரசியல் தேர்தலைவிட   மோசமானதாக மாறி நீதிமன்றத்தை நாடும் அலங்கோலங்கள் , கொலைகள் எனத் தொடர்கின்றன. வேதம் எல்லா விதத்திலும் கிறிஸ்துவைப் பின்பற்றி வாழ அல்லவா அறிவியுறுத்துகின்றது?

"நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன். கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல் உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தன என்று எழுதியிருக்கிறபடி நடந்தார்" (ரோமர் - 15:2,3)

மேலும்,  பல ஊழியர்கள் கிறிஸ்துவை அறிவிப்பதனால் ஏதாவது பிரச்சனைகளோ துன்பங்களோ ஏற்படும்போது சாதாரண உலக மனிதர்களைப்போல பேசுவதும் வரட்டுத்தனமாகச் செயல்படுவதும், யாராவது அவர்களுக்கு மறுப்பாக பேசிவிட்டால் அவர்களை  ஆள்வைத்து அடிப்பதும் , தங்கள் செய்கையை நியாயப்படுத்தி பத்திரிகைகளில் பேட்டி அளிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்தச் செயல்பாடுகளில் கிறிஸ்துவின் தெய்வீக அன்பையோ பொறுமையையோ நாம் காண  முடிவதில்லை.

"நாம் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்க வேண்டும்" (ரோமர் - 16:19) என வேதம் கூறுகிறது. அதாவது நமக்கு எதிரான தீமைகளை பேதைத்தனத்துடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். இது கிறிஸ்துவின் அன்பு நம்மில் வெளிப்படும்போதே   முடியும்.

"வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ அங்கே கலகமும் சகல துர்  செய்கைகளும் உண்டு" (யாக்கோபு - 3:16)

நமக்கு எதிரான செயல்பாடுகளை இப்படி தெய்வீக அன்புடன் எதிர்கொள்ளும்போதுதான் நமக்கு எதிரானவர்கள் நமக்கு சாதகமாக மாறுவார்கள்.  அல்லது தேவன்தாமே நமக்காக யுத்தம் செய்து நமக்குப்  பிரச்சனைகளிலிருந்து விடுதலையும் வெற்றியும் தருவார். வேதம் கூறும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அடிப்படை இதுவே. இப்படிச் செய்யும்போது "சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்.  (1 கொரிந்தியர் - 16:20) எனும் வசனம் நமது  வாழ்க்கையில் உண்மையாவதைக் காணலாம். ஆம், தெய்வீக  அன்பினால் அகிலத்தையே ஆட்கொள்ளலாம்.

"ஏனெனில், அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது, அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்" (1 யோவான் - 4:7,8)

Tuesday, October 17, 2017

நம்மை விசாரிக்கிற தேவன் !

நம்மை விசாரிக்கிற தேவன் !

                                                  சகோ. எம். ஜியோ பிரகாஷ் 



மது தேவன் நம்மை விசாரிக்கிறவர் என வேதம் கூறுகிறது. நாம் ஒருவரை விசாரிக்கிறோம் என்றால் அவரைப்பற்றி  நமக்குத் தனிப்பட்ட அக்கறை இருக்கிறது என்று பொருள். அப்படி நாம் அக்கறை செலுத்தும் ஒருவரை ஏதாவது ஒரு முறையில் தொடர்புகொண்டு அவரது நலம் பற்றி நாம் விசாரிக்காமல் இருக்கமாட்டோம்.

" அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்" (1 பேதுரு -5:7)  

மருத்துவ கல்லூரியில் படிக்க ஆசைப்பட்ட ஒரு மாணவிக்கு நல்ல மதிப்பெண்கள் இருந்தும் பணம் இல்லாததால் அவள் விரும்பிய மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. அவளைப் பற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளியானபோது ஒரு மிகப் பெரிய தொழில் அதிபர் அவளுக்கான படிப்பு செலவு அனைத்தையும் தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்து உதவ முன்வந்தார். இப்போது அந்த மாணவி எந்தக் கவலையுமில்லாமல் கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். அந்த மாணவியின் பணக்  கவலைகளையெல்லாம்  தொழிலதிபர் எடுத்துக்கொண்டார்.

இதுபோலவே தேவன் நம்மை விசாரிக்கிறவரானபடியால் நமது கவலைகளையெல்லாம் எடுத்துக்கொள்வார். நமது நம்பிக்கையை விசுவாசத்துடன் அவர்மேல் வைத்துவிடவேண்டியதுதான் நாம் செய்யவேண்டியது. இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு அவரையே பற்றிக்கொண்டால் நிச்சயம் அவர் நம்மைக் கைவிடமாட்டார்.

மேலே குறிப்பிட்டுள்ளது ஒரு உதாரணம் மட்டுமே. ஆனால் தேவன் நாம் மனிதர்கள்மேல் நம்பிக்கை வைப்பதை விரும்புவதில்லை. வேதம் கூறுகிறது, "மனுஷனை நம்புவதை பார்க்கிலும் கர்த்தர் மேல் பற்றுதலாய் இருப்பதே நலம் " (சங்கீதம் - 118:8) மனிதர்க்கள் மாறக்கூடியவர்கள். அல்லது ஒரு எதிர்பாரா சூழல் எற்பட்டு நமக்கு உதவுவதாக வாக்களித்தவர்கள் உதவ முடியாமல் போகலாம்.

தேவ பக்தியுள்ள ஒரு பொறியாளரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை நான் படித்திருக்கிறேன். ஒரு முறை நெடுஞ்சாலைத்துறை சாலையை அகலப்படுத்தியபோது சாலையோர மரங்களை வெட்டி அகற்றவேண்டிய பொறுப்பை அவரிடம் விட்டது. அவர் தலைமையில் மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. ஒரு குறிப்பிட்ட மரத்தினருகே வந்தபோது அந்த மரத்தின் கிளைகளில் ஒரு குருவிக் கூடு இருப்பதை அவர் கண்டார். மரத்தில் ஒரு மனிதனை ஏறச் சொல்லி கூட்டினுள் பார்க்கச் சொன்னார். அங்கு சில குருவிக் குஞ்சுகள் இருந்தன.

அவற்றின்மீது பரிவுகொண்ட அந்தப் பொறியாளர் தனது உதவியாளர்களிடம் நாம் இப்போது இந்த மரத்தை வெட்ட வேண்டாம். மற்ற மரங்களை வெட்டிவிட்டு பிற்பாடு இதை வெட்டலாம். இன்னும் பத்து அல்லது   பதினைந்து தினங்களுக்குள் குருவி குஞ்சுகள் பறந்து சென்றுவிடும்  அதன்பின்பு வந்து இதனை வெட்டலாம் என்றார்.  

அப்படியே அந்த மரத்தை விட்டுவிட்டு மற்ற மரங்களை வெட்டினர். பத்து   பதினைந்து தினங்களுக்குப் பிறகு அந்த மரத்தை வெட்ட வந்தனர். அன்று அந்தப் பொறியாளர் மிகுந்த மனச் சோர்வுடன் இருந்தார். ஆவிக்குரிய வாழ்வில் நமக்கு ஒரு பலனும் ஏற்படவில்லையே... பல பிரச்சனைகள் தொடரத்தானே  செய்கின்றன எனும்  சோர்வு அவருள் இருந்தது. மரத்தில் ஏறிப் பார்த்தபோது கூட்டினுள் குருவிக் குஞ்சுகள் இல்லை.  எனவே மரத்தை வெட்டிவிடுமாறு கூறினார். மரம் வெட்டப்பட்டு கீழே விழுந்தபோது அவர் ஏதோ ஆவலில்  சென்று அந்தக்  குருவிக் கூட்டினை எடுத்துப் பார்த்தார்.

அங்கு அவர் முதலில் கண்டது ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு வேத வசனம். அது :-  " அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்" (1 பேதுரு -5:7)  ஞாயிறு மறைக்கல்வி வகுப்புக் குழந்தைகள் எழுதிய வசனம் அது. கூடு கட்டிய குருவி அந்தத் தாளையும் எடுத்துவந்து கூடு காட்டியுள்ளது. அது அவரது ஆவிக்குரிய வாழ்வில் மிகப் பெரிய மாறுதலைக் கொண்டு வந்தது. எழுதப்பட்ட வேத வசனமோ அதன் அர்த்தமோ தெரியாமல் கூடுகட்டிய குருவியை அந்த வசனத்தின்படி பாதுகாத்த தேவன் நமது துன்பங்களை போக்கி நம்மைப் பாதுகாக்க மாட்டாரா? எனும் எண்ணம்  அவருக்குள் வந்தது . அவரது ஆவிக்குரிய வாழ்வு மேம்பட்டது.

தாவீது ராஜா,  "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் , அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை"  (சங்கீதம் - 16:8) என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். நாமும் கர்த்தரை முன்னிறுத்தி செயல்படுவோமெனில்,  நமது நம்பிக்கையையும்  கவலைகளையும் அவர்மேல் வைத்து நிம்மதியாக இருக்க முடியும். ஏனெனில், "தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்"   (சங்கீதம் - 18:30)

இன்று நாம் பல காரியங்களை பற்றி கவலை கொண்டவர்களாக இருக்கிறோம். காரணம், நாம் தேவனை நோக்கிப் பார்ப்பதைவிட  சூழ்நிலைகளையே அதிகம் பார்க்கிறோம். தேவன் எந்தச் சூழ்நிலையையும் மாற்ற வல்லவர் என்பதை நாம் சிந்திக்கத்  தவறி விடுகிறோம்.

இயேசு கிறிஸ்துக் கூறினார், "கவலைப்படுகிறதனால் உங்களில் எவன் தன்  சரீர அளவோடு ஒரு முழத்தைக்  கூட்டுவான்? (மத்தேயு - 6:27) ஆம் கவலைப் படுவது என்பது நமது வாழ்க்கையில் எந்த மாறுதலையும் கொண்டுவராது. கவலைத்தீர என்ன வழி என்று சிந்தித்துச் செயல்படுவதே சிறப்பு.

உதிரப்போக்கு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றி லூக்கா 8 வது அதிகாரத்தில் படிக்கிறோம். அந்தப் பெண் நோயால் கவலைகொண்டவளாக அதற்கு குணம் தேடி தனது சொத்துக்களையெல்லாம் வைத்திய செலவுக்குச் செலவழித்து கவலை கொண்டவளாக இருந்தாள். ஆனால் என்று அவள் தனது சுய முயற்சியோ அல்லது வைத்தியர்களது முயற்சியோ இனி பலன் தராது என்று முடிவெடுத்து இயேசு கிறிஸ்துவிடம் வந்தாளோ அன்றே அவளுக்கு விடுதலைக் கிடைத்தது.

இதனைப் படித்துவிட்டு நோய்க்கு மருத்துவம் பார்ப்பது தவறு என்று நான் கூறுவதாக எண்ணிவிடக்  கூடாது. நோய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும். இயேசு கிறிஸ்துவே "நோயுற்றோருக்கு வைத்தியன் வேண்டும் " எனக் கூறியுள்ளார். மேலும், மேற்படி உதிரப்போக்கு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய சம்பவத்தை குறிப்பிட்டு எழுதிய லூக்கா ஒரு மருத்துவரே. இங்கு நான் குறிப்பிட்டுச் சொல்வது என்னவென்றால், மருத்துவரிடம் மருத்துவம் பார்த்தாலும் நமது நோய்க்கு சுகம் தருவது தேவனே.

வேதத்தில் ஒரு நல்ல வசனம் உண்டு, " குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும், ஜெயமோ கர்த்தரால் வரும்" (நீதிமொழிகள்-21:31) குதிரையை யுத்தத்துக்கு ஆயத்தப்படுத்தவேண்டியது கடமை. ஆனால் வெற்றி என்பது கர்த்தரது கரத்தில்தான் உள்ளது. எந்த ஒரு காரியத்திலும் மனித முயற்சியும் தேவனது காரமும் இணைந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதுபோல நமது உடலை நல்லபடி பேண மருத்துவமும் உடற் பயிற்சியும் தேவை. ஆனால் அது மட்டுமே உடல் சுகத்தை தராது. தேவனது கிருபை நமக்கு அவசியம். அவர் நம்மை விசாரிக்கிறவரான படியால் நமது  கவலைகளை , நம்பிக்கைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடவேண்டும்.

பொதுவாக மனிதர்கள் தாங்கள் பெலத்துடன் இருக்கும்போது எதனையும் நம்புவதில்லை. அவர்கள் தங்கள் உடல் பெலத்தையும் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் மட்டுமே நம்பி வாழ்கின்றனர். ஆனால் ஒரு நோய் அல்லது தீர்க்க முடியாத பிரச்னை வரும்போது மட்டுமே அதற்கு எப்படியாவது தீர்வு காண தேவனை அணுகுகின்றனர். ஆம் பெலவீனத்தில் தான் தேவனையும் அவரது வல்லமையையும் உணர முடியும். எனவேதான் தேவன் பரிசுத்த பவுலிடம் கூறினார், "என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" (2 கொரிந்தியர் -12:9)

நீங்கள் பலவீனமாய் இருக்கிறீர்களா? நோய் , கடன் தொல்லை, பிரச்சனைகள், அல்லது உங்களால் இது முடியாது என எதையாவது எண்ணிக் கலங்குகிறீர்களா? உங்கள் பலவீனத்தை ஒத்துக்கொள்ளுங்கள். தேவனிடம் அறிக்கையிடுங்கள். உங்கள் பலவீனத்தில்  தான் தேவனது பலத்தை நீங்கள் அறிய முடியும்.

அன்பானவர்களே, வேத வசனங்கள் பொய் அல்ல. அவற்றை ஒரு சிறு குழந்தையைப்போல ஏற்றுகொள்வோமெனில் நமது வாழ்வில் அற்புதங்களைக் காணலாம். நாம் செய்யவேண்டியது நமது வழியையும் நமது வாழ்க்கையையும் அவரிடம் ஒப்புவித்து அவர் செயல்பாட காத்திருக்கவேண்டியதுதான்.

வேதம் கூறுகிறது, "உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்"   (சங்கீதம் - 37:5)

Thursday, October 12, 2017

"என்னை நோக்கிப் பாருங்கள்"

"என்னை நோக்கிப் பாருங்கள்" 

- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


"பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப் பாருங்கள் , அப்போது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை." (ஏசாயா - 45:22)   

என்னை நோக்கிப் பாருங்கள் என்று பரிசுத்தர் சொல்கிறார். 

நோக்கிப் பார்த்தல் என்பது உறவை வளர்க்கும். ஒருவரை முகத்துக்கு முகம் பார்க்கும்போது உறவு வலுப்பெறுகிறது. முகத்துக்கு முகம் பார்க்கும்போதுஒருவர் செய்த தவறு  அவரை குற்றப்படுத்துகிறது. திருந்துவதற்கு தூண்டுகிறது.

உதாரணமாக, ஒரு ஆசிரியர் மாணவனை நோக்கிப் பார்க்கும்போது மாணவன் அந்தப் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்துகொள்கிறான்.  மனைவியிடம் பொய் சொல்லும் கணவன் அவளது முறைத்தல் பார்வை பட்டவுடன் தனது பொய்யை ஒத்துக்கொள்கிறான். நவீன யுகத்தில் செல் போன் , பேஸ் புக் , வாட்ஸ் அப் , டுவிட்டர் என எத்தனையோ கண்டுபிடிப்புகள் வந்துவிட்டபோதும் இவை அனைத்தையும் விட அதிக அர்த்தத்தை காதலர்களது கண்களின் கணைகள் மற்றவர்களுக்குத் தெரியாமலே பரிமாறிக்கொள்கின்றன.  ஆம் நோக்கிப் பார்த்தல் என்பது அர்த்தமுள்ளது.

திருடர்கள் முகம் பார்த்துப் பேசுவதில்லை. அவர்கள் செய்த தவறு அவர்களை நிமிர்ந்து பார்த்து பேசுவதை தடைசெய்கின்றது.  என்னை நோக்கிப் பாருங்கள் என்று பரிசுத்தர் சொல்கிறார். அப்படிப் பார்க்கவேண்டுமென்றால் எனவே நமக்கு குற்றமற்ற மனச்சாட்சி வேண்டியதாயிருக்கிறது. 

தேவன் மனிதரிடம் உறவு கொள்ள விரும்புவதால் அவரும் மனிதர்களை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இதனை பல்வேறு வசனங்கள்  உறுதிப்படுத்துகின்றன. "தேவனைத் தேடும் உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரை கண்ணோக்கினார்" (சங்கீதம் - 53:2)

"கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்தும் நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்க்கிறது" (நீதிமொழிகள் - 15:3)

"கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கின்றன; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கின்றன" (சங்கீதம் - 34:15)

"கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கின்றன; அவருடைய செவிகள் அவர்கள்  வேண்டுதலுக்குக்  காவனமாயிருக்கின்றன , தீமை செய்பவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது " (1 பேதுரு - 3:12)

எனவே நமது பக்கம் குறை இல்லாதிருக்குமானால், தேவனது கண்களும் நமது கண்களும் நோக்கிப் பார்க்கும்போது சந்தித்து நமது வாழ்க்கையில் மிகப் பெரிய மாறுதல் ஏற்படும்.  

ஒரு உதாரணமாக நாம் தாவீது ராஜாவைப் பார்க்கலாம். தாவீது தேவனை தனக்கு உதவும் மலையாக அவரை நோக்கிப் பார்த்தார்.  "எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்" (சங்கீதம் - 121:1) என்றார் அவர்.

இன்று உலகில் நாம் பலரும் கூட  பல வேளைகளில் சிலரை மலையாக நம்பியிருப்போம். " சார் உங்களைத் தான்  நான் மலையாக நம்பியிருக்கிறேன் ... என நாம் அவர்களை பார்த்துக் கூறுவோம். ஆனால் அப்படி மலையாக நம்பியிருக்கும் பலர்  சில வேளைகளில் தங்களது வாக்குறுதியை தவறவிட்டு நம்மை தவிக்கவிடுவதுண்டு. ஆனால் தேவன் அப்படிக் கை  விடுபவரல்ல.

எனவே தான் தாவீது, " கர்த்தரை எப்போதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிற படியால் நான் அசைக்கப்படுவதில்லை(சங்கீதம் - 16:18) என்று கூறுகிறார்.

பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் அனைவருமே இப்படிக்கர்த்தரை நேருக்கு நேராக நோக்கிப் பார்த்தவர்கள்தான். ஆபிரகாம், மோசே, யோசேப்பு, தானியேல்..  என ஒவ்வொருவராக எண்ணிப்பாருங்கள். எல்லோருமே கர்த்தரை நோக்கிப் பார்த்துத் திடனடைந்து சாதித்தவர்கள்தான்.

"என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன்  கர்த்தாவே....." (சங்கீதம் -  27:8) என்று தாவீது கூறுவதைப்போல அவர்கள் தேவனது முகத்தையே நோக்கிப்பார்த்தவர்கள்.

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து கூறினார், " நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது எல்லோரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்வேன்" (யோவான் - 12:32)

மேலும் தன்னை மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்ட வெண்கல பாம்புக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து இப்படிக் கூறினார்:- " சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்தி உயர்த்தப்பட்டதுபோல மனுஷ குமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்படவேண்டும்"  (யோவான் - 3:14,15)

கொள்ளிவாய் சர்ப்பதால் கடி பட்டவர்கள் எப்படி மோசேயால் உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பதை நோக்கிப்பார்த்து இரட்சிக்கப்பட்டார்களோ அப்படியே பாவத்தால் பிடிபட்டவர்கள்  சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்த்து மீட்படைவார்கள். அவர் எவரையுமே புறம்பே தள்ளுவதில்லை. " என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை."  (யோவான் - 6:37) என அவர் வாக்களித்துள்ளனர்.

நோக்கிப் பார்த்தல் என்ன நடக்கும் என பார்ப்போம் :-

எம். ஜி . ஆர். அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைப் படித்திருக்கிறேன். எம். ஜி . ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அலுவலகத்துக்குப் போகும்போது தினசரி ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றபடி அவரையே நோக்கிப் பார்த்து கொண்டு நிற்பானாம். அவன் யார் என்றோ எதற்க்காக அப்படி நிற்கிறான் என்றோ  தெரியாது. பல நாட்கள் இப்படிக் கடந்தது. ஒருநாள் எம். ஜி . ஆர். அவர்கள் தனது காரை நிறுத்தி அந்த மனிதனிடம் , "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அந்த ஏழை மனிதன், "ஐயா உங்களை தினசரி பார்ப்பதால் எனக்கு ஒரு மகிழ்ச்சி .... வேறொன்றுமில்லை " என்றானாம். அவனது குடும்ப நிலைமையை அறிந்த எம். ஜி . ஆர். தனது அதிகாரிகளிடம் அவனுக்கு வேண்டிய உதவியைச் செய்யும்படி கூறினாராம்.

ஒரு மாநிலத்தின் முதல்வரை நோக்கிப் பார்த்ததால் ஒரு மனிதன் இப்படி உதவி பெற்றானென்றால் தேவாதி தேவனை நோக்கிப் பார்க்கிறவர்களுக்கு எவ்வளவு பெரிய உதவி கிடைக்கும் !

தேவனை நோக்கிப் பார்ப்பதால் என்னைக் கிடைக்கும் என வேதத்திலிருந்து மூன்று சம்பவங்கள் மூலம்  பார்ப்போம்:

பாவத்திலிருந்து விடுதலை அடைகிறோம்

இயேசுவை நோக்கிப்பார்த்த சகேயு எனும் மனிதனைப் பற்றி வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அவன் வரி வசூலிப்பவர்களது தலைவனாக  இருந்தான். அநியாயமாக வரி வசூலித்து பொருள் சேர்த்தான். ஆனால் அவனுக்கு இயேசு கிறிஸ்துவைப் பார்க்க வேண்டுமெனும் ஆவல் வந்தபோது அவன் குள்ளனாக இருந்தபடியால் மக்கள் கூட்டத்தில் இயேசுவை பார்க்க முடியாது என எண்ணி ஓடி முன்னிருந்த காட்டு அத்தி மரத்தின்மேல் ஏறி அவரை நோக்கிப் பார்த்தான். இயேசு கிறிஸ்து அவனது ஏக்கத்தைப் புரிந்துகொண்டு, "சகேயுவே இறங்கிவா, இன்று நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்றார்" 

அவர் அவனோடு செல்லும்போதே அவன் அவரிடம், " ஆண்டவரே என் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்கு கொடுத்து விடுகிறேன், நான் எவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கியதுண்டானால்  நாலத்தனையாய்  திரும்பச் செலுத்துகிறேன் " என்றான் (லூக்கா - 19:8)

ஆம், தேவனை நோக்கிப் பார்க்கும்போது நமது பாவங்களிலிருந்து விடுதலை அடைகிறோம். பரிசுத்தமான வாழ்க்கை வாழ வழி காண்கிறோம்.

தடுமாற்றமில்லாத வாழ்க்கை 

ஒருமுறை இயேசு கிறிஸ்து கடல் மீது  நடந்து சீடர்கள் இருந்த படகின் அருகே வந்தார். அப்போது சீடர்கள் ஒரு ஆவியைக் காண்பதாக எண்ணி அலறினார்கள். இயேசு கிறிஸ்து பயப்படாதீர்கள் நான்தான் என்றார். அப்போது பேதுரு ஆண்டவரே நீர்தான் என்றால் நானும் நீரின்மேல் நடந்து உம்மிடம் வரக்  கட்டளை இடும் என்று கூறினார். இயேசு வா என்றார்.

பேதுரு இயேசுவையே நோக்கியபடி நீரின்மேல் நடந்து அவரிடம் சென்றார். "காற்று பலமாய் இருந்தபடியால் பயந்து அமிழ்ந்துபோகையில் ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூப்பிட்டார். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து அற்ப விசுவாசியே ஏன் சந்தேகப்பட்டாய்?  என்றார் (மத்தேயு - 14:30,31)

ஆம், இயேசுவை நோக்கிப் பார்த்து நடக்கும்போது தடுமாற்றமில்லாமல் நடக்க முடியும். சூழ் நிலைகள் நம்மை மேற்கொள்ளாது.

தேவனது அதிசயமான வழிநடத்தல்கள் கிடைக்கும்  

இயேசு கிறிஸ்து செய்த முதலாவது அற்புதத்தை பாருங்கள். அந்தத் திருமண வீட்டார் ரசம் குறைவு பட்டபோது முதல் முதலாக இயேசு கிறிஸ்துவைதான் நோக்கிப் பார்த்தார்கள்.  அங்கு இயேசு தனது முதலாவது அற்புதத்தைச் செய்தார். ஆம், நமது வாழ்க்கையிலும் எல்லா சமயங்களிலும் இயேசுவை நோக்கிப் பார்த்தோமானால் தேவனது அற்புதத்தை ருசிக்கலாம்.

"அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை" (சங்கீதம் - 34:5)

நோக்கிப் பார்க்காவிட்டால் என்ன நடக்கும்?

தேவனை நோக்கிப் பார்க்காமல் இருப்போமானால் என்ன நடக்கும் என்பதற்கு இரண்டு வேத சம்பவங்களைக் கொண்டு விளங்கிக்கொள்ளலாம்

தாவீது தேவனை எப்போதும் தனக்கு முன்பாக வைத்திருந்தாலும் ஒரு நிமிட தவறுதல் மிகப் பெரிய வீழ்ச்சியில் கொண்டு போனதை நாம் வேதத்தின் மூலம் அறியலாம்.

தேவனை நோக்கிய அவனது கண்கள் மாடியிலிருந்து கீழ் நோக்கிப் பார்த்தன. அங்கு குளித்துக் கொண்டிருந்த உரியாவின் மனைவி பத்சேபாளின்  அழகு அவனைத் தடுமாறச் செய்தது. அவளோடு விபச்சாரம் செய்தான். மட்டுமல்ல அவளை அடைய வேண்டும் எனும் ஆவலில் அவளது கணவன் உரியாவைக் கொலை செய்தான். இப்படி தேவனை விட்டு விலகிய அவனது பார்வையால் மிகப் பெரிய பாவங்களில் வீழ்ந்தான்.

ஆனால் இதே போன்ற நிலை யோசேப்புக்கும்  வந்தது. போத்திபாரின் மனைவி அவனது அழகில் மயங்கி அவனை தன்னோடு பாவம் செய்ய அழைத்தாள். ஆனால் அவன் தேவனை விட்டுத் தனது பார்வையை மாற்ற வில்லை. " நான் இவ்வளவு பெரிய பொல்லாங்குக்கு உட்பட்டு தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி?" (ஆதியாகமம் - 39:9) எனக் கூறி தன்னைக் காத்துக் கொண்டான்.

ஆம் அன்பானவர்களே, நாம் நோக்கிப் பார்க்க வேண்டியது சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து இயேசுவை மட்டுமே. அப்படி நோக்கிப் பார்க்கும்போது, "பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே என்னை நோக்கிப் பாருங்கள் , அப்போது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை." (ஏசாயா - 45:22)   எனும் ஏசாயா தீர்க்க தரிசியின் வசனத்தின்படி நாமும் இரட்சிப்பின் சந்தோஷத்தை நமது வாழ்க்கையில்  அனுபவிக்கமுடியும். கிறிஸ்து இயேசுவையே நோக்கிப் பாருங்கள் ! 

Wednesday, October 11, 2017

இந்தியாவில் கிறிஸ்தவம் இன்னும் சரியாக அறிவிக்கப்படவில்லை

இந்தியாவில் கிறிஸ்தவம் இன்னும் சரியாக அறிவிக்கப்படவில்லை


- சகோ .எம் . ஜியோ பிரகாஷ் 


கிறிஸ்தவ ஊழியர்களது வேலை,  கிறிஸ்துவை மக்களுக்கு அறிவிப்பதன் மூலம் அவர்களை ஒரு சிறந்த ஆவிக்குரிய மனிதனாக மாற்றுவதே. தேவன் தனது இரட்சிப்பின் பணியை மனிதர்களைக்கொண்டே செய்கிறார்.  எனவே,  தேவனது திட்டத்துக்கு ஏற்ப சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியது சுவிஷேஷகர்களது கடமையாகும். 

ஆனால் இன்று கிறிஸ்துவை ஒரு ஆத்தும இரட்சகர் என்று அறிவிப்பதைவிட அவர் ஒரு அற்புதர் என்றே அறிவிக்கப்படுகிறது. கிறிஸ்து ஒரு ஆத்தும இரட்சகர் என்று அறிவிப்பதை பல சுவிஷேஷகர்கள் விரும்புவதில்லை. காரணம் அப்படி போதித்தால் மக்கள் கூட்டம் சேராது. அற்புதம் என்றால் தான் கூட்டம் சேரும். இப்படி கிறிஸ்துவை ஒரு அதிசயம் செய்யும் மந்திரவாதியாகவே பல ஊழியர்களும் அறிவிக்கின்றனர். இதனால் கிறிஸ்துவை அறியாத மக்களும் பிற மத மக்களும் கிறிஸ்தவத்தை சரியாக புரிந்துகொள்ள முடியாமலும் தாங்கள் நம்பியிருக்கும் மத கோட்பாடுகளுடன் ஒப்பிடுகையில் கிறிஸ்தவத்தில் ஆன்மிகம் ஒன்றுமில்லை என்றுமே கருத்துகின்றனர் . 

ஒருமுறை வங்கி ஒன்றில் உயர் பதவி வகிக்கும் ஒரு பிராமண சகோதரர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கிறிஸ்தவத்தைப்பற்றி பல விசயங்களை கேட்டார். அவர் பல கிறிஸ்தவ பத்திரிகைகளையும் பல ஊழியர்களது பிரசங்கங்களையும்  கேட்டவர். அவர் என்னிடம் பேச்சு வாக்கில் சொன்னார், "இந்து மத போதனைகளில் உள்ளான மனித மாற்றத்தைப் பற்றி நிறைய கூறப்பட்டுள்ளன. ஆன்மிகம் என்பது உலக விசயங்களுக்கு அப்பாற்பட்டது. ஆனால் உங்கள் கிறிஸ்தவத்தில் அதுபோல எதுவும் இல்லையே. வெறும் அற்புதம் அதிசயம் பற்றித்தானே கூறுகிறார்கள், எழுதுகிறார்கள் " என்றார் அவர். 

அவரிடம் நான் மெய்யான கிறிஸ்தவ போதனைகளை பற்றி சொன்னபோது இதுவரை நான் இவைகளை அறியவில்லை. எனக்கு இவைகள் அறிவிக்கப்படவும் இல்லை என்றார். இதுதான் உண்மை. ஆம், இந்தியாவில் கிறிஸ்தவம் இன்னும் சரியாக அறிவிக்கப்படவில்லை. கிறிஸ்தவர்களில் பெரும்பான்மை யோர்கூட சரியான சுவிசேஷ அறிவைப் பெறவில்லை. 

"எந்த மனுஷனையும் கிறிஸ்து  இயேசுவுக்குள் தேறினவனாக  நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து , எந்த மனுஷனுக்கும்  புத்திசொல்லி , எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம் " (கொலோசெயர் - 1:28)  என எழுகிறார் பவுல் அடிகள். ஒரு மனிதனை கிறிஸ்து இயேசுவுக்குள்ளான மனிதனாக மாற்ற வேண்டுமானால் அவனுக்கு கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும். அவர் செய்த அற்புதத்தையல்ல.

இன்று பல போதகர்கள் ஏதாவது செய்து மக்களை ஆதாயப்படுத்த விரும்புகிறார்கள். இப்படி மக்களை ஆதாயப்படுத்தினால் அவர்கள் வெறும் அரசியல் தலைவனை ஏற்றுக்கொள்வதைப்போல கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்களே தவிர  அவரை ஆத்தும இரட்சகராக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது இன்று அல்ல தொடக்க காலத்திலும் இருந்தது . எனவே தான் பவுல் அடிகள், " யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள் , கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம். அவர் யூதருக்கு இடறலாகவும் கிரேக்கருக்குப் பைத்தியமாகவும் இருக்கிறார்." (1 கொரிந்தியர் - 1:22,23) 

மேலும் பவுல் அடிகள் கூறும்போது, " என் பேச்சும் பிரசங்கமும் மனுஷ ஞானத்துக்குரிய நய வசனமுள்ளதாயிராமல் ஆவியினாலும்  பெலத்தினாலும்  உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது. "   (1 கொரிந்தியர் - 2:5) என்று கூறுகிறார். நய வசனமும் அதிசயமும் தேவையற்றவை. ஒரு ஊழியரிடம் தேவனுடைய பரிசுத்த ஆவியின் பெலன் இருக்குமானால் அவனது சுவிசேஷ அறிவிப்பே வித்தியாசமானதாக இருக்கும். ஆனால் துரதிருஷ்ட வசமாக இன்று ஊழியம் செய்யும் பிரபல ஊழியர்கள் அனைவருமே நய வசனிப்பில் நிறைந்தவர்களாக இருக்கிறார்களே தவிர தேவ ஆவியின் பெலன் அற்றவர்களாகவே பெரும்பாலும் இருக்கின்றனர். 

இன்று சுவிசேஷ அறிவிப்பு என்பது பத்தில்  ஒரு பங்கு காணிக்கை கொடுத்தால் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் என்பதும் , கர்த்தர் உங்களை மென்மேலும் உயர்த்துவார் என்பதும், ஆசீர்வதிப்பார் என்று கூறுவதும் தானேதவிர மெய்யான ஆசீர்வாதம் என்பது என்ன  என்பதோ கர்த்தர் அந்த மெய் ஆசீர்வாதத்தை யாருக்கு அளிப்பர் என்பதோ, தேவ ஆசீர்வாதத்தை பெற கூறப்பட்டுள்ள ஆசீர்வாத வாக்குத்தத்தங்களுக்கு முன் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளோ,    தேவனுக்கு ஏற்புடையோராய் வாழாவிட்டால் என்ன நேரும் என வேதத்தில் கூறப்பட்டுள்ள சாபங்களோ  பெரும்பாலான ஊழியர்களால் கூறப்படுவதில்லை. கூறினால் அவர்களுக்கு கூடும் அந்தப் பெரிய கூட்டத்தின் பெரும்பகுதி இடத்தைக் காலிசெய்துவிட்டு ஓடிவிடும்.

கிறிஸ்துவை இதுவரை அறியாதவர்களை அப்படி அறியாமையிலேயே வைத்திருக்கிற முதல் எதிரியும் சாத்தானும்  பிரபல ஊழியர்கள் நடந்தும்   கிறிஸ்தவ  டி .வி . நிகழ்ச்சிகளே. இவற்றைப் பார்த்து எவரும் கிறிஸ்துவை அறிய முடியாது. அவர்கள் அறிவிப்பது " இன்னொரு கிறிஸ்துவை" அல்லது "வேறொரு கிறிஸ்துவை ". எனவே கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை தேர்தெடுத்துப் பாருங்கள். டி .வி . நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு முன் சுவிசேஷத்தைக்  கவனமாக படியுங்கள். நீங்கள் படித்த சுவிஷேஷத்துக்கு விரோதமாக போதிக்கும் போதகர்களது நிகழ்ச்சிகளை புறக்கணியுங்கள்.

அன்பானவர்களே நீங்கள் இன்னும் அற்புதங்கள் வழியாகவே கிறிஸ்துவைத் தேடுகிறவர்களாக இருந்தால் மிகவும் பரிதபிக்கத்தக்கவர்களாகவே இருப்பீர்கள். அப்போஸ்த்தலாரான பேதுரு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்டவராகவே பிரசங்கித்தார். "நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசு வையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாகினார் என்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவீர்கள்". (அப்.பணி - 2;36)  என்று பேதுரு பிரசங்கித்தபோது மூவாயிரம் பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். ஆம் , அவர்கள் அற்புதத்துக்காக கிறிஸ்துவிடம் வரவில்லை.

கிறிஸ்து சிலுவையின் வழியைத்தான் மீட்பின் வழியாக கொடுத்தாரே தவிர ஆசீர்வாத வழியையல்ல. ஒருவன் தன் சிலுவையை அனுதினமும் சுமந்துகொண்டு  தன்னைப் பின்பற்றவேண்டும் என்றார் அவர். சிலுவை சுமப்பவனே கிறிஸ்தவன்.

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அனுதினமும் தேவாலயத்தில் கூடினார்கள். எதற்கு? வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்க்கிறதற்காகவும் , கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளரவும், ஜெபிக்கும்படியும், ஐக்கியத்தில் வளரும்படியும் கூடினார்கள். இன்று கிறிஸ்தவ கூட்டங்களில் மக்கள் எதற்க்காக கூடுகிறார்கள்? உலக ஆசீர்வாதத்திற்காகவும், தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் நடக்கவேண்டுமென்பதற்காகவும், நோய் குணமாகவும், தொழில் விருத்தியடைய வேண்டுமென ஊழியரை ஜெபிக்கச் சொல்வதற்கும் மட்டுமே. இங்கு கிறிஸ்து எங்கு இருக்கிறார்?

இரண்டு மூன்று ஆண்டுகளுக்குமுன் இங்கிலாந்து தேசத்தைச் சார்ந்த ஒரு சுவிசேஷக குழுவினர் இந்தியாவில் கிறிஸ்துவின் சுவிசேஷம் எப்படி அறிவிக்கப்பட்டுள்ளது என ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் அவர்கள் கண்டு கூறிய உண்மை, " இந்தியாவில் இன்னும் சரியான சுவிசேஷம் அறிவிக்கப்படவில்லை. ஆவிக்குரிய சபை என தங்களைக் கூறிக்கொள்ளும் சபை விசுவாசிகளுக்குக் கூட கிறிஸ்தவத்தின்  அடிப்படை சத்தியங்கள் தெரியவில்லை". 

குருடருக்கு வழி காட்டும் குருடர்களால் வழிநடத்தப்படும் கிறிஸ்தவ விசுவாசிகள் ஊழியர்களிடமும் பாஸ்டர்களிடமும் வைக்கும் நம்பிக்கையை கிறிஸ்துவின்மேல் என்று வைக்கிறார்களோ அப்போதுதான் சரியான சத்தியத்தை அறிய முடியும் பிறருக்கும் அறிவிக்க முடியும்.

"கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திராமல்  மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல ; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனே பிதாவையும் குமாரனையும் உடையவன். ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தை கொண்டு வராமலிருந்தால் அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும் , அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர் கிரியைகளுக்கு பங்குள்ளவனாயிருக்கிறான் " (2யோவான் 9-11) அப்போஸ்தலரான யோவான் கூறுவது இதுவே , தவறான போதகர்கள் என்பது இன்று டி .வி . நிகழ்ச்சிகளையும் குறிக்கும். அந்த நிகழ்ச்சிகளுக்கு பொருளுதவி செய்வது அவர்களது துர் உபதேசத்துக்கு துணைபோவதாகும். ஏனெனில் கிறிஸ்துவின் போதனையை கொண்டு வராதவன் கிறிஸ்துவினு டையவனல்ல.

"சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது , இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது (1 கொரிந்தியர் -1:18)

ஆசீர்வாத செய்திகள் சிலுவை உபதேசத்தை மறுதலிக்கின்றன. அவற்றைக்கேட்பவர்கள் கெட்டுப்போவார்கள். இரட்சிக்கப்படு கிறவர்களுக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது. அவர்கள் பெலத்தின்மேல் பெலனடைவார்கள்.  





   


St. Paul - Pillar of Christianity


St. Paul - Pillar of Christianity 


The great Apostle Paul, named Saul at his circumcision, was born in Tarsus, the capital of Cilicia, and was by that privilege a Roman citizen, to which quality a great distinction and several exemptions were granted by the laws of the Empire. He was early instructed in the strict observance of the Mosaic law, and lived up to it in the most scrupulous manner. In his zeal for the Jewish law, which he believed to be the divine Cause of God, he became a violent persecutor of the Christians. He was one of those who combined to murder Saint Stephen, and then he presided in the violent persecution of the faithful which followed the holy deacon's martyrdom. By virtue of the power he had received from the high priest, he dragged the Christians out of their houses, loaded them with chains, and thrust them into prison. In the fury of his zeal he applied for a commission to seize in Damascus all Jews who confessed Jesus Christ, and to bring them in bonds to Jerusalem, that they might serve as examples for the others.
But God was pleased to manifest in him His patience and mercy. While Saul was journeying to Damascus, he and his party were surrounded by a light from heaven, brighter than the sun, and suddenly the chief was struck to the ground. And then a voice was heard saying, Saul, Saul, why do you persecute Me? And Saul answered, Who art Thou, Lord? and the voice replied, I am Jesus, whom you persecute. This mild admonition of Our Redeemer, accompanied with a powerful interior grace, cured Saul's pride, assuaged his rage, and wrought at once a total change in him. Therefore, trembling and astonished, he cried out, Lord, what wilt Thou have me do? Our Lord ordered him to proceed on his way to the city of Damascus, where he would be informed of what was expected of him. Saul, arising from the ground, found that although his eyes were open, he saw nothing.
He was led into the city, where he was lodged in the house of a Christian named Judas. To this house came by divine appointment a holy man named Ananias, who, laying his hands on Saul, said, Brother Saul, the Lord Jesus, who appeared to you on your journey, has sent me that you may receive your sight and be filled with the Holy Ghost. Immediately something like scales fell from Saul's eyes, and he recovered his sight; then he arose and was baptized. He stayed a few days with the disciples at Damascus, and began immediately to preach in the synagogues that Jesus was the Son of God. Thus a blasphemer and a persecutor was made an Apostle, and chosen as one of God's principal instruments in the conversion of the world.
Some Questions about St. Paul


Was Paul one of the 12 apostles?

No, he was not. However, the New Testament records that Paul did interact with many of the original disciples, especially in Jerusalem.

Was Paul Jewish?

Most scholars believe so, though they have argued about his commitment to Judaism both before and after his conversion to Christianity. Pauline writings indicate that he was raised Jewish and became a Pharisee (Romans 11:1, Phil 3:5). Acts says that in his younger days, Saul was involved in persecuting Jewish followers of Jesus because he believed they were heretics (Acts 22:4-5).

What made him stop?

According to Acts 9, 22 and 26, a conversion experience. Saul was traveling to the city of Damascus when he saw a bright light and heard Jesus' voice saying "Saul, Saul, why do you persecute me?" He fell from his horse, blinded. Days later, after a visit from the Christian disciple Ananias, he recovered his eyesight and began to preach Jesus' gospel.

Where did he go as he preached?

At the start of his ministry, Paul spent much of his time in Jerusalem. Later, he traveled through Asia Minor, to Greece, and Rome.

What made him different from other early disciples?

When Paul started preaching, Jesus' followers were Jews who believed that Jesus had revealed himself as God's promised Messiah to his chosen people. They focused their ministry on sharing this remarkable news with other Jews. Paul made the radical departure of preaching to non-Jews (Gentiles), saying that, through Jesus, God had extended salvation to Gentiles.

Paul's Writings

How much of the New Testament did Paul write?

Thirteen letters, or epistles, of the New Testament begin with a formula like "Paul, servant of God, to [recipient's name]." However, some liberal scholars believe that as many as half of these letters might not have been written by Paul. Many, like 2 Thessalonians, may have been from the "School of Paul"--either dictated by Paul or written by people who came after him and shared his theology.

Which letters are we sure he wrote?

Of the 13 epistles originally attributed to him, liberal scholars believe that at least seven were definitely written by Paul: 1 Thessalonians, Galatians, 1 & 2 Corinthians, Philippians, Philemon, and Romans. Few liberal scholars believe Paul wrote 1 & 2 Timothy, Ephesians, and Titus. There is no consensus on who wrote Colossians and 2 Thessalonians.


What are Paul's most important contributions to Christian theology?

One is justification by faith, the concept that humans are saved from sin by believing in Jesus. Jewish tradition focused on ritual observations and living according to Jewish law. Paul created a theological framework for understanding that Jesus' death and resurrection triggered a fundamental change in humanity's relationship with God--a relationship in which faith, rather than behavior, was the central element.

This idea is sometimes described as "faith alone"--in Latin, "Sola fides." Justification by faith was one of the main points of difference raised by Martin Luther and other reformers that led to the Protestant break with the Roman Catholic Church.
What is justification?

The means by which humans are justified, or cleansed from sin and saved, by God.

What are "works"?

In the first century, "works" often referred to fulfilling Jewish ritual obligations. Paul felt that Jesus' coming made such "works" unnecessary for Gentiles, though they still had value for early Jewish Christians.

By the time the debate reignited in Martin Luther's day, "works" referred in part to purchasing indulgences-a kind of certified forgiveness for sins. Initially, indulgences were earned through meritorious behavior, but over time it became possible to earn them through monetary contributions to the church, like funding church construction. Eventually, buying and selling of indulgences became corrupted. Luther's attacks on "works" were in large part motivated by his opposition to this corrupt system.
The contemporary debate over the importance of "works" is about neither Jewish ritual observance nor indulgences. When theologians use the term "works" today, they mean good deeds, like helping the poor. The question active today is what the relationship between good works and faith is.
Are Protestants and Catholics on opposing sides in the "faith vs. works" debate?

They used to be, to some extent. In 1999, a committee of theologians hammered out a joint Lutheran-Catholic declaration on the subject, reconciling what had previously seemed to be opposing views. However, the questions debated still have relevance in the lives of Christians today.

·       


சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

Meditation Verse - 1 கொரிந்தியர் 16: 13 / 1 Corinthians 16:13

  வேதாகமத் தியானம் - எண்:- 1,435 'ஆதவன்' 💚ஜனவரி 12 , 2025. 💚ஞாயிற்றுக்கிழமை "விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், ...