DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, May 10, 2026

🦋 Meditation verse - எபிரெயர் 10 : 22 / Hebrews 10:22

 💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1920

📆2026 மே 11, திங்கள்     


"துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்." ( எபிரெயர் 10 : 22 )

தேவனுடைய பரிசுத்த சன்னிதானத்தில் நாம் சேரவேண்டுமானால் நமக்கு இருக்கவேண்டிய தகுதியைக்குறித்து இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

முதலாவது, நமது இருதயம் இயேசு கிறித்துவின் இரத்தத்தால் தெளித்து துப்புரவாக்கப்பட்ட சுத்த இருதயமாக இருக்கவேண்டியது அவசியம். "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத்தேயு 5:8) என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளாரே? இருதயத்தில் சுத்தமில்லாமல் நாம் செய்யும் வழிபாடுகளோ, ஆராதனைகளோ, நாம் செலுத்தும் காணிக்கைகளோ நம்மைத் தேவனிடம் சேர்க்காது.  

இரண்டாவது, நமது உடலானது பாவ பழுதற்றதாக இருக்கவேண்டியது அவசியம். அதனையே சுத்த ஜாலத்தால் கழுவப்பட்ட சரீரம் என்று வசனம் கூறுகின்றது. இதனையே  அப்போஸ்தலரான பவுல் அடிகள்"நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12 : 1 ) என்று எழுதுகின்றார்

பழைய ஏற்பாட்டு முறைமையின்படி ஆசாரியன் மட்டுமே மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் பிரவேசிக்கமுடியும். ஆனால் இன்று புதிய ஏற்பாட்டின் முறைமையில் நாம் எல்லோருமே ஆசாரியர்கள்தான். எனவே நாம் அனைவருமே  பரலோக மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்திட கிறிஸ்துவே தனது இரத்தத்தால் வழி உண்டாக்கியுள்ளார்.  

இதனையே இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனங்கள் பின்வருமாறு கூறுகின்றன:-  "ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்," ( எபிரெயர் 10 : 19, 20 ) என்று

தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினால்  ( எபிரெயர் 10 : 21 ) நாம் பரலோக மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைய உரிமை பெற்றுள்ளோம். ஆனால் அப்படி நுழைந்திட இன்றைய தியான வசனம் மேற்கூறிய இரண்டு நிபந்தனைகளை கூறுகின்றது. ஆம், அவைதான் :- 

1. துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயம் 

2. சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரம் 

உடலால் பாவச் சேற்றில் வாழ்ந்துவிட்டு அதனைப்பற்றி எந்தக்  குற்ற உணர்வும்  இல்லாமல் நாம் செய்யும் ஆராதனைகள் தேவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை. நமது உடலை தேவனுக்கு ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும்.  ஆடு மாடுகளைப் பலியிடுவதில்கூட பழுதற்றவைகளையே பலியிடவேண்டுமென்று  பழைய ஏற்பாட்டு முறைமையில் கூறப்பட்டுள்ளது. அதுபோல நமது உடலை தேவனுக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கும்போது அது பரிசுத்தமானதாக, பாவமில்லாததாக இருக்கவேண்டியது அவசியம்

அன்பானவர்களே, நமக்கு ஏற்கெனவே மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைந்திட  நமது பிரதான ஆசாரியனாகிய இயேசு கிறிஸ்து தனது சொந்த இரத்ததால் வழியமைத்துக் கொடுத்துள்ளார். அவரது இரத்ததால் உண்டாக்கப்பட்ட மீட்பினை நாம் விசுவாசிக்கவேண்டும்.  அவரது இரத்தத்தால் நாம் கழுவப்பட நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். அவர் நம்மைத் தூய்மையாக்கி மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் நுழையத் தகுதிப்படுத்துவார்

அப்போதுதான்  நாம்  இயேசுவின் இரத்தம் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் பரலோகத்தில் சேரமுடியும்

மேலும் இன்றைய தியான வசனம் உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம் என்று கூறுகின்றது. அதாவது நாம் உண்மையுள்ளவர்களாகவும் விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். 

உள்ளத்திலும் உடலிலும் தூய்மை, வாழ்க்கையில் உண்மை, தேவன்மேல் உறுதியான விசுவாசம்  இவைகள் இல்லாமல் நாம் செய்யும் எந்த ஆராதனையும், சடங்குகளும், காணிக்கைகளும் நம்மைப்  பரலோகம் கொண்டு செல்ல உதவாது. 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

💥 "AATHAVAN" Meditation – No. 1920

📆 May 11, 2026, Monday

"Let us draw near with a sincere heart in full assurance of faith, having our hearts sprinkled clean from an evil conscience and our bodies washed with pure water." (Hebrews 10:22)

Today's meditation verse speaks about the qualifications we must possess if we are to enter into the holy presence of God.

First, it is essential that our hearts are purified, having been sprinkled by the blood of Jesus Christ. Did not Jesus Christ say, "Blessed are the pure in heart, for they shall see God" (Matthew 5:8)? Without purity of heart, the worship we perform, the services we attend, or the offerings we give will not bring us closer to God.

Second, it is necessary for our bodies to be free from the blemish of sin. This is what the verse refers to as "bodies washed with pure water." Regarding this, the Apostle Paul writes:

"Therefore, I urge you, brethren, by the mercies of God, to present your bodies a living and holy sacrifice, acceptable to God, which is your spiritual service of worship." (Romans 12:1)

According to the Old Testament system, only the priest could enter the Most Holy Place. However, today, under the New Testament system, we are all priests. Therefore, Christ has made a way through His own blood for all of us to enter the Heavenly Most Holy Place.

The verses preceding today’s meditation verse explain it as follows:

"Therefore, brethren, since we have confidence to enter the holy place by the blood of Jesus, by a new and living way which He inaugurated for us through the veil, that is, His flesh," (Hebrews 10:19-20)

Since we have a Great Priest over the house of God (Hebrews 10:21), we have gained the right to enter the Heavenly Most Holy Place. But to enter in such a way, today's meditation verse provides two conditions:

A heart sprinkled clean from an evil conscience.

A body washed with pure water.

Worship offered while living in the mire of physical sin—without any sense of guilt—is not accepted by God. We must surrender our bodies to God as a living sacrifice. Even in the Old Testament system of sacrificing goats and bulls, it was commanded that only those without blemish be sacrificed. Similarly, when we offer our bodies as a sacrifice to God, it is essential that they be holy and free from sin.

Beloved, our High Priest, Jesus Christ, has already paved the way for us to enter the Most Holy Place through His own blood. We must believe in the redemption wrought by His blood. We must surrender ourselves to be washed by His blood. He will cleanse us and qualify us to enter the Most Holy Place.

Only then can we enter Heaven as those with hearts sprinkled by the blood of Jesus, bodies washed with pure water, and with a sincere heart in full assurance of faith.

Furthermore, today's verse urges us to "draw near with a sincere heart in full assurance of faith." This means it is vital for us to be TRUTHFUL and STEADFAST in our faith.

Purity in soul and body, truthfulness in life, and firm faith in God—without these, no amount of worship, rituals, or offerings will help carry us to Heaven.

✍️ Bro. M. Geo Prakash                                                                                          

                                                 

Saturday, May 09, 2026

🦋 Meditation verse - ஆதியாகமம் 50 : 20 / Genesis 50:20

💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1919

📆2026 மே 10, ஞாயிறு    


"நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்." ( ஆதியாகமம் 50 : 20 )

தேவ பிள்ளைகளுக்கு எதிராக ஒருவர் செயல்படும் செயல்பாடுகள் அந்தக் குறிப்பிட்ட நேரம் துன்பமாகத் தெரிந்தாலும் அது நிரந்தரமல்ல. காரணம் தேவன் தனது பிள்ளைகளோடு இருந்து அவர்களை நடத்துவதுதான். மட்டுமல்ல, இப்படிச்  சிலர் நமக்கு எதிராகச் செயல்பட்டாலும் இறுதியில் அதனை தேவன் நமக்குச் சாதகமாக; நன்மையாகவே முடியப்பண்ணுவார். 

இன்றைய தியான வசனம் யோசேப்புத் தனது சகோதரர்களைப் பார்த்துக் கூறியதாகும். யோசேப்பின் சகோதரர்கள் பொறாமையால் அவனை வெறுத்து ஒதுக்கினார்கள். முதலில் அவனைக் கொலைசெய்ய எண்ணிய அவர்கள் பின்னர் அவனை இருபது வெள்ளிக்காசுக்கு அடிமையாக விற்பனை செய்தனர். இப்படி அவர்கள் அவனுக்கு எதிராகத் தீமை செய்ய எண்ணியிருந்தாலும் தேவன் இறுதியில் அதனை நன்மையாக முடியப்பண்ணினார். ஆம், அப்படி அவர்கள் அவனை அடிமையாக விற்பனை செய்ததால்தான் அவன் பிற்காலத்தில் எகிப்தின் பார்வோனுக்கு இணையானவனாக மாறமுடிந்தது.  

இதுவே யோசேப்பைக் குறித்தத் தேவ திட்டமாக இருந்தது. இதனால்தான் அவன் பஞ்சகாலத்தில் மக்கள் பட்டினியால் மடிந்துபோகாமலிருக்கும்படி ஞானமாய் நடந்து மக்களை பஞ்சகாலத்திலும் பாதுகாத்தான். இதனையே யோசேப்பு இன்றைய தியான வசனத்தில், "இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்" என்கின்றான். யோசேப்புக்கு எதிரான தீமையான காரியம் இப்படி நன்மையாக முடிவடைந்தது. 

ஆம், அன்பானவர்களே, "உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்."( உபாகமம் 28 : 7 ) என்று வேத வசனம் கூறுகின்றபடி நமக்கு எதிராகச் செயல்படுபவர்கள் தோல்வியடைந்து ஓடுவார்கள் அல்லது யோசேப்பின் சகோதர்களைப்போல நம்மிடமே வந்து சரணடைவார்கள்.  

இதனையே அப்போஸ்தலரான பவுல், "இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?"  ( ரோமர் 8 : 31 ) என்று கேள்வி எழுப்புகின்றார். நமக்கு ஆதரவாக தேவன் இருக்கும்போது நமக்கு விரோதமாக யாரும் இருக்க முடியாது; நம்மை யாரும் குற்றம்சாட்ட முடியாது. "தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்." ( ரோமர் 8 : 33 )

இதுபோலவே, தானியேலுக்கு எதிராக எழும்பி அவனை அழித்துவிட திட்டமிட்ட எதிரிகள் அதில் வெற்றிபெற முடியவில்லை. தேவன் தானியேலிடம் பட்சமாக இருந்ததால் சிங்கக்கெபியிலிருந்தும் காப்பாற்றப்பட்டான். ஆனால் தானியேல் மீது குற்றம் சாட்டி அவனை அழிக்க நினைத்த எதிரிகள் அதே சிங்கங்களுக்கு உணவானார்கள் (தானியேல் - 6).  மொர்தெகாயை தூக்கிலிட எண்ணிய ஆமான் அதற்காக அவன் உண்டாக்கிய அதே தூக்குமேடையில் தூக்கிடப்பட்டான்.  அதனால் பல ஆயிரம் யூதர்கள் காப்பாற்றப்பட்டனர் (எஸ்தர்)

இன்றும் இதுபோல நமக்கு எதிராக யாராவது செயல்படும்போது நாம் பொறுமையாக இருப்போமானால் அவர்கள் நினைத்தத்  தீமை செயல்படாமல் போகும். மட்டுமல்ல, தேவன் அந்தத் தீமையை நமக்குச் சாதகமாக மாற்றி நமதுமூலம் பலரும் நன்மை அடையச் செய்வார். நாம் மனித அறிவால் எல்லாவற்றையும் எடைபோடுகின்றோம். ஆனால் தேவ ஞானமும் அறிவும் அளவிடமுடியாதவை. "ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!" ( ரோமர் 11 : 33 )

எனவே அன்பானவர்களே, நமக்கு எதிரான செயல்பாடுகளை பொறுமையாகச்  சகித்து தேவனிடம் விசுவாசமாக இருப்போம். தேவன் அதனை நன்மையாக முடியப்பண்ணுவார். மட்டுமல்ல, நமதுமூலம் பல மக்கள் நன்மை அடையவும் தேவன் வகைசெய்வார். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்               

💥 "AADHAVAN" 🌳 Meditation – No. 1919

📆 Sunday, May 10, 2026

"As for you, you meant evil against me, but God meant it for good in order to bring about this present result, to preserve many people alive." (Genesis 50:20)

The actions taken against the children of God by others may seem like suffering at that specific moment, but they are not permanent. This is because God is with His children and leads them. Even if some act against us, God will ultimately cause those situations to work in our favour and conclude them for our good.

Today’s meditation verse is what Joseph spoke to his brothers. Out of jealousy, Joseph’s brothers hated and rejected him. Initially, they intended to kill him, but later they sold him as a slave for twenty pieces of silver. Although they intended to do evil against him, God ultimately brought it to a good end. Indeed, it was because they sold him as a slave that he was later able to become second only to Pharaoh in Egypt.

This was God’s divine plan for Joseph. Because of this, he was able to act wisely during the famine, preventing the people from perishing of hunger and preserving them. This is why Joseph says in today's verse, "to bring about this present result, to preserve many people alive." Thus, the evil intended against Joseph ended in great good.

Yes, dear ones, the Scripture says:

"The Lord will cause your enemies who rise up against you to be defeated before you; they will come out against you one way and will flee before you seven ways." (Deuteronomy 28:7)

Accordingly, those who act against us will either be defeated and flee, or, like Joseph’s brothers, they will eventually come to find peace with us.

Regarding this, the Apostle Paul asks: "What then shall we say to these things? If God is for us, who is against us?" (Romans 8:31)

When God is on our side, no one can successfully stand against us; no one can bring a valid accusation.

"Who will bring a charge against God’s elect? God is the one who justifies." (Romans 8:33)

The enemies who rose against Daniel and planned to destroy him could not succeed. Because God was with Daniel, he was saved even from the lions' den. However, the enemies who accused him and sought his destruction became food for those very lions (Daniel 6).

Haman intended to hang Mordecai on gallows he had specifically prepared. Instead, Haman himself was hanged on those same gallows, and thousands of Jews were saved as a result (Esther).

Even today, when someone acts against us, if we remain patient, the evil they intended will fail to manifest. Not only that, but God will turn that evil to our advantage and allow many others to benefit through us. We often weigh everything with human intellect, but God's wisdom and knowledge are immeasurable.

"Oh, the depth of the riches both of the wisdom and knowledge of God! How unsearchable are His judgments and unfathomable His ways!" (Romans 11:33)

Therefore, dear ones, let us patiently endure the actions taken against us and remain faithful to God. He will bring it to a good end. Moreover, God will make a way for many people to be blessed through our lives.

✍️ Bro. M. Geo Prakash                                                                                                                      

Friday, May 08, 2026

🦋 Meditation verse - ஏசாயா 38 : 12 / Isaiah 38:12

 💥"ஆதவன்" 🌳தியானம் - எண் 1918

📆2026 மே 09, சனி   


"என் ஆயுசு மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்து போகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர்." ( ஏசாயா 38 : 12 )

எசேக்கியா ராஜா பிளவை நோயால் பாதிக்கப்பட்டு மரணத்துக்கு ஏதுவாக இருந்தார். அப்போது ஏசாயா தீர்க்கத்தரிசிமூலம் தேவன் அவரது இறப்பின் செய்தியை அறிவித்தார். அப்போது ஏசாக்கியா தேவனை நோக்கிக் கதறி கண்ணீரோடு ஜெபித்தார். அப்போது அவர் ஜெபித்ததைத்தான் தனது நோயிலிருந்து சுகமானபின்னர் எழுதிவைத்துள்ளார்.  அதன் ஒரு பகுதிதான் இன்றைய தியான வசனம். 

ஆடுமேய்க்கும் மேய்ப்பர்கள் கூடாரங்கள் போட்டுக் குறிப்பிட்டச் சில இடங்களில்  தங்குவார்கள். ஆனால் அது நிரந்தரமல்ல, மாறாகச் சில நாட்களுக்குப்பின்  அந்தக் கூடாரத்தை  பெயர்த்துக்கொண்டு இன்னொரு இடத்துக்குக் கடந்து செல்வார்கள். இதுபோலவே ஆடை நெய்கிறவர்கள் குறிப்பிட்ட புடவையோ வேஷ்டியோ நெய்து முடிந்ததும் தறியிலிருந்து நூலை அறுத்து விடுவார்கள்.  மனிதர்களது வாழ்க்கையும் இதுபோலவே இருக்கின்றது. மேய்ப்பர்கள் கூடாரத்தைப் பெயர்த்து வேறு இடத்துக்குச் செல்வதுபோல இந்த உடம்பாகிய கூடாரத்தை விட்டு நாம் கடந்து செல்லவேண்டும்; நமது உயிர் நெய்கிறவன் தறியிலிருந்து நூலை அறுத்துவிடுவதுபோல தேவனால் எப்போது வேண்டுமானாலும் அறுத்துவிடப்படலாம்.  

தனது வாழ்க்கை இப்படித்தான் இருக்கின்றது என்பதனை எசேக்கியா ராஜா உணர்ந்திருந்தார். "இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர்" என்று தனது மரணம் இந்த இரவிலேயே ஏற்படலாம் என்று எண்ணினார்.  எனவே, ஏசாயா தீர்க்கத்தரிசி அவரது மரணத்தைக்குறித்து தீர்க்கத்தரிசனம் கூறியதும்,  "நமுட்டைப்போலும்,       தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்." ( ஏசாயா 38 : 14 ) என்று தேவனை நோக்கித்  தான் ஜெபித்ததாகக் கூறுகின்றார்.

ஆம் அன்பானவர்களே, எசேக்கியாவின் இந்த விண்ணப்பத்தைக்  கேட்டு தேவன் அவரது ஆயுள் நாட்களை மேலும் பதினைந்து ஆண்டுகள் நீட்டித்துக்கொடுத்தார். அதனை அவர் "கர்த்தர் என்னை இரட்சிக்க வந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்." ( ஏசாயா 38 : 20 ) என்று கூறப்பட்டுள்ளது. 

எசேக்கியாவின் வாழ்க்கை, அவர் தேவனுக்காகச் செய்த வைராக்கியமான செயல்பாடுகள், அவரது உருக்கமான வேண்டுதல்கள் போல நாம் வாழும் வாழ்க்கை, தேவனுக்காக நாம் செய்யும் செயல்பாடுகள், நமது இருதய பூர்வமான வேண்டுதல்கள் இவை அனைத்தையும் தேவன் பார்க்கின்றார்; கேட்கின்றார். அப்படிச் செய்யும்போது நமது மனக் கசப்புகளை நீக்குகின்றார். எல்லாவற்றுக்கும் மேலாக நமது பாவங்களை மன்னிக்கின்றார். அப்போது நாமும் எசேக்கியாவைப் போல "இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்." ( ஏசாயா 38 : 17 ) என்று நாமும் மகிழ்வுடன் கூறமுடியும். 

✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                              

💥 "AATHAVAN" 🌳 Meditation – No. 1918

📆 Saturday, May 09, 2026

"Like a shepherd’s tent my dwelling is pulled up and removed from me; as a weaver I rolled up my life. He cuts me off from the loom; from day until night You make an end of me." (Isaiah 38:12)

King Hezekiah was suffering from a life-threatening boil and was at the point of death. At that time, God sent a message through the prophet Isaiah announcing his impending death. Upon hearing this, Hezekiah cried out to God and prayed with bitter tears. The verse we meditate on today is part of the writing he composed after he was healed from his illness, reflecting on his experience.

Shepherds pitch tents to stay in specific places for a time. However, these are not permanent dwellings; after a few days, they uproot the tent and move to another location. Similarly, when a weaver finishes weaving a specific garment or cloth, they cut the threads from the loom. Human life is much the same. Just as shepherds uproot their tents to move on, we must eventually depart from this "tent" of a body. Our life can be cut short by God at any moment, just as a weaver cuts the thread from the loom.

King Hezekiah deeply realized the fragile nature of his existence. He felt his end was so near that he thought, "From day until night You make an end of me," believing his death could occur that very night. Therefore, when Isaiah prophesied about his death, Hezekiah describes his prayer to God:

"Like a swallow, like a crane, so I twitter; I moan like a dove; my eyes look wistfully to the heights; O Lord, I am oppressed, be my security." (Isaiah 38:14)

Beloved, God heard Hezekiah’s humble petition and extended his life by fifteen years. Regarding this deliverance, it is written:

"The Lord will surely save me; so we will play my songs on stringed instruments all the days of our life at the house of the Lord." (Isaiah 38:20)

God sees the way we live, the zealous works we do for Him, and our heartfelt, soul-stirring prayers—just as He saw Hezekiah's. When we approach Him with sincerity, He removes our bitterness. Above all, He forgives our sins. When that happens, we too can say with joy, as Hezekiah did:

"Lo, for my own welfare I had great bitterness; it is You who has kept my soul from the pit of nothingness, for You have cast all my sins behind Your back." (Isaiah 38:17)

✍️ Bro. M. Geo Prakash                                                                                                                                       

Thursday, May 07, 2026

🦋 Meditation verse - நியாயாதிபதிகள் 6: 12 / Judges 6:12

 💥"ஆதவன்🌳தியானம் - எண் 1917

📆2026 மே 08, வெள்ளி  


"கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." ( நியாயாதிபதிகள் 6: 12)

ஒருவர் எத்தனை பலவீனமானவராக இருந்தாலும், இந்தச் சமூகத்தில்  அற்பமானவராகக் கருதப்பட்டாலும் அவரைக்  கர்த்தர் பயன்படுத்த முடியும். அறிவு குறைவாக இருப்பது, பொருளாதாரக் குறைவு, உடல் பலவீனம், படிப்புக் குறைவு இவை எதுவும் தேவன் ஒருவரைப் பயன்படுத்தத் தடையாக இருப்பதில்லை. மாறாக அற்பமானவைகளையும் இழிவானவைகளையுமே தேவன் தனக்காகத் தெரிந்து  கொள்கின்றார். கிறிஸ்துவின் சீடர்கள் அனைவருமே பெரிய மேதைகளல்ல, சாதாரண மீனவர்கள். ஆனால் அவர்களால்தான் தேவனுடைய இராஜ்ஜியம் உலகத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. 

இதனையே, "உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." (1 கொரிந்தியர் 1: 28) என்று நாம் வாசிக்கின்றோம். 

இதற்குக் கிதியோனின் வாழ்க்கை நமக்கு ஒரு உதாரணமாக உள்ளதைப் பார்க்கின்றோம். மீதியானியர் கைகள் இஸ்ரவேலர்மேல் பலத்திருந்த காலம் அது. மீதியானியர்கள் இஸ்ரவேலர்களது உடைமைகளையும் அவர்களது விளைச்சல்களையும் கொள்ளையிட்டனர். இஸ்ரவேலர் தங்களுக்கு ஒரு இரட்சகன் கிடைக்கமாட்டானா என்று ஏங்கிக்கொண்டிருந்தனர். அப்போது கிதியோன் தனது கோதுமைப் பயிரை அறுவடைசெய்து, மீதியானியர்கள் வந்து அதனைக் கொள்ளையடித்துவிடக்கூடாது என்பதற்காக தனது ஆலையின் அருகிலேயே வைத்துப் போரடித்துக்கொண்டிருந்தான். அப்போதுதான் கர்த்தருடைய தூதன் வந்து நின்று அவனைப் பார்த்து, "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்."

அன்பானவர்களே, கிதியோன்போல நாமும் நம்மைப் பலவீனர்கள் என எண்ணி இதுபோல தேவையில்லா காரியங்களுக்காக பயந்துகொண்டிருக்கலாம். ஆனால் கர்த்தர் நம்மைப் பராக்கிரமசாலிகளாகப் பார்க்கின்றார். ஆம், கர்த்தர் நம்மோடு இருப்பதால், நமக்கு இருக்கின்ற பலமே நமது எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்கப் போதுமானது. 

எனவேதான் மீதியானியருக்குப் பயந்து வாழ்ந்த  கிதியோனைப்பார்த்துக் கர்த்தர், "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்." ( நியாயாதிபதிகள் 6: 14) "என் கிருபை உனக்குப் போதும் பலவீனத்தில் என் பலம் பூரணமாய் விளங்கும்" என்று அப்போஸ்தலரான பவுலுக்கு தேவன் இதுபோல தைரியம் கூறியுள்ளாரே?

ஆனாலும் கிதியோன், "ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்" ( நியாயாதிபதிகள் 6: 15). கிதியோன்  தனது அற்ப நிலைமையைக் கர்த்தரிடம் எடுத்துக் கூறியதுபோல நாமும் ஒருவேளை,  "ஆண்டவரே, நான் பலவீனமல்லவா? எனது குடும்பம், எனது தொழில், எனது வருமானம், எனது உடல்நிலை எல்லாமே மோசமானதாக அல்லவா இருக்கின்றது? நான் எப்படி இந்தப் பிரச்சனைகளைச்  சமாளிப்பேன்?" என்று எண்ணலாம்; கூறலாம். ஆனால் கர்த்தர் கிதியோனிடம் கூறியதுபோல நம்மிடமும், "எதனையும் பார்க்காதே. நான் உன்னோடு இருக்கின்றேன்"  என்கின்றார். 

ஆம், இப்படித்தான் அவர் கிதியோனிடம் கூறினார். "அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்." ( நியாயாதிபதிகள் 6: 16) என்று வாசிக்கின்றோம். 

அன்பானவர்களே, எத்தனைப் பெரிய பிரச்சனைகள், துன்பங்கள் வந்தாலும் நாம் அவற்றை மேற்கொள்ள முடியும். காரணம் கர்த்தர் நம்மைப் பராக்கிரமசாலிகளாகப் பார்க்கின்றார்;  "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்" என்று சொல்கின்றார். எனவே, கிதியோன் மீதியானியரை முறியடித்ததுபோல நம்மாலும் பிரச்சனைகளையும் பாவங்களையும் மேற்கொண்டு ஆவிக்குரிய வெற்றி வாழ்க்கை வாழ முடியும். 


✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்

💥 "AATHAVAN" Meditation – No. 1917

📖 May 08, 2026, Friday

"The angel of the Lord appeared to him and said to him, 'The Lord is with you, O valiant warrior.'" (Judges 6:12)

No matter how weak a person may be or how insignificant they are considered by society, the Lord can use them. A lack of knowledge, financial struggle, physical weakness, or lack of education are never obstacles to God using someone. On the contrary, God chooses the insignificant and the despised for His purposes. Christ’s disciples were not great geniuses; they were ordinary fishermen. Yet, it was through them that the Kingdom of God was built across the world.

Regarding this, we read:

"...and the base things of the world and the despised God has chosen, the things that are not, so that He may nullify the things that are."(1 Corinthians 1:28)

We see the life of Gideon as a perfect example of this. It was a time when the hand of Midian prevailed against Israel. The Midianites plundered the possessions and the crops of the Israelites. While the people of Israel were yearning for a saviour, Gideon was beating out wheat in the winepress to save it from the Midianites. It was at that moment the Angel of the Lord stood before him and said, "The Lord is with you, O valiant warrior."

Beloved, like Gideon, we may consider ourselves weak and live in fear of unnecessary things. But the Lord sees us as valiant warriors. Yes, because the Lord is with us, the strength we possess is sufficient to handle all our problems.

This is why the Lord looked at Gideon, who was living in fear of the Midianites, and said:

"Go in this your strength and deliver Israel from the hand of Midian. Have I not sent you?" (Judges 6:14)

Did not God encourage the Apostle Paul in a similar way, saying, "My grace is sufficient for you, for power is perfected in weakness"?

However, Gideon replied:

"O Lord, how shall I deliver Israel? Behold, my family is the least in Manasseh, and I am the youngest in my father’s house." (Judges 6:15)

Just as Gideon presented his lowly state to the Lord, we too might think or say: "Lord, am I not weak? My family, my business, my income, and my health—aren't they all in a poor state? How can I manage these problems?" But just as He told Gideon, He says to us: "Do not look at anything else. I am with you."

Indeed, this is what He told Gideon:

"The Lord said to him, 'Surely I will be with you, and you shall defeat Midian as one man.'" (Judges 6:16)

Beloved, no matter how great the problems or afflictions are, we can overcome them. The reason is that the Lord sees us as valiant warriors; He says, "The Lord is with you, O valiant warrior." Therefore, just as Gideon defeated the Midianites, we too can overcome our problems and sins and live a life of spiritual victory.

✍️ Bro. M. Geo Prakash