இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Sunday, October 30, 2022

பகலுக்குரியவர்களாக வாழ்வோம்.

 ஆதவன் 🖋️ 642 ⛪ அக்டோபர் 31,  2022 திங்கள்கிழமை 

"தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்."  ( 1 தெசலோனிக்கேயர் 5 : 7, 8 )

கிறிஸ்துவை அறிந்து அவருக்கு ஏற்புடையவர்களாக வாழும் ஆவிக்குரிய நாம் பகலுக்குரியவர்கள். மட்டுமல்ல, நீதியின் சூரியனான நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒளி நம்மில் இருப்பதால் நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாயிருக்கிறோம்.  "நானே உலகின் ஒளி" என்று வாக்களித்த இயேசு கிறிஸ்துவினால் நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாயிருக்கின்றோம்.

கிறிஸ்துவை அறியாதவர்கள் இருளில் இருந்து இருளின் செயல்பாடுகளைச் செய்கிறார்கள். அவர்கள் ஆவிக்குரிய தூக்க மயக்கத்தில் இருந்துகொண்டிருப்பார்கள். அல்லது பாவத்தில்மூழ்கி பாவ வெறிகொண்டிருப்பார்கள்; பாவத்திலேயே இன்பம் அனுபவித்துக்கொண்டிருப்பார்கள்.

கிறிஸ்துவை அறியாதபோது நாம் எல்லோரும் இப்படித்தான் இருந்தோம். இப்படித் தூக்கத்திலும் பாவ வெற்றியிலும் இருந்த நம்மேல் கிறிஸ்துவாகிய ஒளி பிரகாசித்தது. கிறிஸ்துவாகிய இந்த ஒளியை ஏசாயா தீர்க்கத்தரிசி ஆவியில் கண்டுணர்ந்து,  "இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது." ( ஏசாயா 9 : 2 ) என்று எழுதுகின்றார். 

இயேசு கிறிஸ்துவும் தன்னைக்குறித்துக் கூறும்போது, "இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்." ( யோவான் 12 : 35 ) என்றார். 

இன்றைய வசனத்தில் ஆவிக்குரிய நம்மைப் பகலுக்குரியவர்கள் என்று குறிப்பிடுகின்றார் பவுல் அடிகள்.  "பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்." என்கின்றார். 

ஆனால் தூங்குகின்றவர்களுக்கும் வெறிகொண்டவர்களுக்கும் ஒளியைப் பிடிக்காது. இருளில் இருப்பதே அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. "பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்." ( யோவான் 3 : 20 )

ஆனால் அவர்கள் ஆக்கினைத் தீர்ப்புக்குள்ளாவார்கள். "ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது."( யோவான் 3 : 19 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

அன்பானவர்களே, மெய் ஒளியான கிறிஸ்துவை அறிந்துகொண்ட நாம் தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம். ஆம், கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசமும் அன்பும் தான் மார்புக்கவசம். இரட்சிப்பு அனுபவம்தான் தலைக்கவசம். எக்காலத்திலும் இவைகளை இழந்திடாமல் பாதுகாத்துக்கொள்வோம். 

ஆவிக்குரிய தூக்கத்தையும் பாவ வெறிகளையும் விட்டு பகலுக்குரியவர்களாக வாழ்வோம்.  

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Live like people of the day light.

 AATHAVAN 642 ⛪ October 31, 2022 Monday

"For they that sleep, sleep in the night; and they that be drunken are drunken in the night. But let us, who are of the day, be sober, putting on the breastplate of faith and love; and for an helmet, the hope of salvation." ( 1 Thessalonians‍ 5 : 7,8 )

We who are spiritual and knew Christ and live according to him belong to day light. Moreover, we are children of light because the light of our Lord Jesus Christ, the sun of righteousness, is in us. We are children of light because of Jesus Christ who promised "I am the light of the world".

Those who do not know Christ are in darkness and they do deeds of darkness. They will be in a spiritual slumber. Or they are drowning in sin and are obsessed with sin; They are enjoying themselves in sin.

We were all like this when we did not know Christ. The light of Christ shone upon us, who were thus asleep and now victorious over sin. This light, which is Christ, was seen by the prophet Isaiah, who wrote, "The people that walked in darkness have seen a great light: they that dwell in the land of the shadow of death, upon them hath the light shined." ( Isaiah 9 : 2 )

Jesus Christ said about himself, "...Yet a little while is the light with you. Walk while ye have the light, lest darkness come upon you: for he that walketh in darkness knoweth not whither he goeth." ( John 12 : 35 ) 

In today's verse Paul refers to us who are spiritual as those of the day light. "let us, who are of the day, be sober, putting on the breastplate of faith and love; and for an helmet, the hope of salvation."

But spiritual sleepers and sinners hate light. They will be happy to be in the dark. "For every one that doeth evil hateth the light, neither cometh to the light, lest his deeds should be reproved." ( John 3 : 20 )

But they will be under judgment. Jesus Christ said, "And this is the condemnation, that light is come into the world, and men loved darkness rather than light, because their deeds were evil." ( John 3 : 19 ).

Beloved, let us be enlightened, having known Christ, the true light, and clothe ourselves with the breastplate of faith, love, and the hope of salvation. Yes, faith and love in Christ is the breastplate. The helmet is the experience of salvation. Let us protect them from loss at all times.

Let us leave spiritual sleep and sinful passions and live like people of the day light.

Message :- Bro. M. Geo Prakash Contact- 96889 33712

Saturday, October 29, 2022

"இலக்கை நோக்கித் தொடருகிறேன்"

 ஆதவன் 🖋️ 641 ⛪ அக்டோபர் 30,  2022 ஞாயிற்றுக்கிழமை  

"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3 : 14 )

ஆவிக்குரிய வாழ்க்கையை அப்போஸ்தலரான பவுல் அடிகள் தனது நிரூபங்களில் ஓட்டப்பந்தயம், மல்யுத்தம் இவற்றுக்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். எந்தவித பந்தயமாயிருந்தாலும் அதற்குப் பரிசுப்பொருள் உண்டு. இன்று உலக வாழ்க்கையில் விளையாட்டுப்போட்டிகளில் மிக உயர்ந்த பரிசாகக் கருதப்படுவது ஒலிம்பிக்தான். ஒலிம்பிக்கில் வெற்றிவாகை சூடவேண்டுமென்பது விளையாட்டு வீரர்களின் கனவு. அதற்காக அவர்கள் பல தியாகங்களைச் செய்கின்றனர். உணவு கட்டுப்பாடு, உறக்கக் கட்டுப்பாடு, இவைதவிர கடுமையான பயிற்சிகள் என உடலை வருத்துகின்றனர்.  

அழிவுள்ள கிரீடத்தைப் பெறுவதற்கு அவர்கள் அப்படிச் செய்வார்களென்றால் அழிவில்லாத ஆவிக்குரிய வெற்றி கிரீடத்தைப் பெறவேண்டுமானால்  நாம் எவ்வளவு அதிகமாக முயற்சிக்கவேண்டும்? இதனையே, "பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்." ( 1 கொரிந்தியர் 9 : 25 ) என்கின்றார் பவுல் அடிகள். 

"ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்." ( பிலிப்பியர் 3 : 15 ) அதாவது நாம் ஆவிக்குரிய வாழ்வில் தேறினவர்கள் என்று கூறப்படவேண்டுமானால் நாம் இந்த எண்ணமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.  

உலக ஓட்டப்பந்தயத்தில் ஒருவருக்கே பரிசு கிடைக்கும். ஆனால் நமது தேவனுக்குரிய ஆவிக்குரிய ஓட்டப்பந்தயத்தில் சரியாக ஓடி முடிக்கும் அனைவருக்குமே தேவன் பரிசளிப்பார்.  "பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்." ( 1 கொரிந்தியர் 9 : 24 ) ஆம், ஆவிக்குரிய ஓட்டத்தை நாம் பரிசுபெற்றுக்கொள்ளும் விதமாக ஓடவேண்டும்.

மேலும், இன்றைய வசனத்தில் பவுல் அடிகள் "இலக்கை நோக்கித் தொடருகிறேன்" என்று ஒரு வார்த்தையினைக் கூறுகின்றார். அதாவது நாம் போட்டியில் பங்குபெறும்போது நாம் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மனதில்கொண்டு செயல்படவேண்டும். நமது இலக்கு கிறிஸ்துவே; கிறிஸ்துவைப் பிரியப்படுத்துவதே.

நாம் ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது பந்தயத்தின் இறுதி இலக்கை நோக்கி மட்டுமே ஓடவேண்டும். அப்படியில்லாமல் ஓடும்போது நமக்கு வலதுபுறமும் இடதுபுறமும் ஓடுபவர்களைப் பார்த்துக்கொண்டு ஓடினால் வெற்றிபெறமுடியாது. இன்று ஆவிக்குரிய வாழ்வில் பலரும் செய்யும் தவறு இதுதான். மற்றவர்களது செயல்பாடுகளைப்  பார்த்து அவர்களைக் குறைகூறிப் பலரும் தவறுகின்றனர்.   

மட்டுமல்ல, ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிக்கும் விதிமுறைகள் உண்டு. அந்த விதிமுறைகளை மீறாமல் செயல்படுபவர்களுக்கு மட்டுமே பரிசு கிடைக்கும். இதனையே, "மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்." ( 2 தீமோத்தேயு 2 : 5 ) என்கின்றார் பவுல் அடிகள். 

அன்பானவர்களே, நமது ஆவிக்குரிய ஓட்டத்தை இறுதி இலக்கான கிறிஸ்துவை நோக்கி, பொறுமையாக, கிறிஸ்துவின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு ஓடி வெற்றிபெறவேண்டும். இந்த எண்ணத்துடன் நமது ஆவிக்குரிய ஓட்டத்தைத் தொடர்வோம்.  அத்தகைய ஓட்டத்தை ஓடி வெற்றிபெற பரிசுத்த ஆவியானவருக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்; வாழ்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

"I press toward the mark"

 AATHAVAN 🖋️ 641 ⛪ October 30, 2022 Sunday

"I press toward the mark for the prize of the high calling of God in Christ Jesus". ( Philippians 3 : 14 )"

In his epistles, the apostle Paul compared the spiritual life to running race and wrestling competition. Any race has a prize. Getting prize in Olympic contest is considered the highest prize in sports competitions. It is the dream of athletes to win the Olympics. They make many sacrifices for it. By practicing diet restriction, sleep restriction, and other rigorous exercises they are making their body fit for it. 

If they do that to receive a perishable crown, how much more should we strive to receive an imperishable spiritual crown of victory? That is why Paul saying, "And every man that striveth for the mastery is temperate in all things. Now they do it to obtain a corruptible crown; but we an incorruptible." ( 1 Corinthians 9 : 25 )

" Let us therefore, as many as be perfect, be thus minded" ( Philippians 3 : 15 ) That is, if we are to be said to be chosen in the spiritual life, we must be of this mind.

Further, only one gets the prize in the World Race. But God will reward all those who run properly in the spiritual race. "Know ye not that they which run in a race run all, but one receiveth the prize? So run, that ye may obtain." ( 1 Corinthians 9 : 24 ). Yes, we must run the spiritual race in such a way as to win the prize.

Also, in today's verse Paul says a word that means "pressing on toward the goal." That is, when we participate in the competition, we should act with the goal set for us in mind. Our goal is Christ; To please Christ.

When we run a race we should run only towards the final goal of the race. Otherwise, if you run looking at the runners on your right and left, you will not be successful. This is the mistake many Christians make in spiritual life today. Many people make the mistake of looking at other people's activities and criticizing them.

Moreover, every sports competition has rules. Only those who do not violate those rules will get the prize. "And if a man also strive for masteries, yet is he not crowned, except he strive lawfully." ( 2 Timothy 2 : 5 ) Paul says.

Beloved, let us run our spiritual race toward Christ - the ultimate goal, patiently, according to the laws of Christ, and win. Let us continue our spiritual flow with this thought in mind. Let us pray and surrender ourselves completely to the Holy Spirit to run such a race and win; let's live.

Message :- Bro. M. Geo Prakash Contact- 96889 33712

Friday, October 28, 2022

The Way, Truth and LIfe

 AATHAVAN 🖋️ 640 ⛪ October 29, 2022 Saturday

"O send out thy light and thy truth: let them lead me; let them bring me unto thy holy hill, and to thy tabernacles." ( Psalms 43 : 3 )

Even in the Old Testament people prayed to God as light and truth. We see the same in today's verse, "Send your light and your truth". These are the things that are needed to bring man to heaven, which is the holy mountain.

Although the people of the Old Testament prayed to God, they did not have a clear understanding of God like us New Testament people. They thought that God was a powerful force who could embrace the good and punish the evil. They looked at the Lord with some fear. That means they do not have a clear understanding of God. But they loved and prayed to God.

It was Jesus Christ who taught us to call God as Father. That is, the Lord is not a stranger somewhere; It was Jesus Christ who gave us the understanding that He is our Father.

That is why Jesus Christ said to the Samaritan woman, "Ye worship ye know not what: we know what we worship. ( John 4 : 22 ) Even today there are people who unknowingly worship light. They worship lights and the sun. They worship light because they think that God is light. But the truth is that even though God is light, all lights are not God.

Yes, the Lord Jesus Christ was the light, the way and the truth that the Jews of the Old Testament unknowingly prayed for. He made this clear to them when he was in the world.

He said, "I am the light of the world: he that followeth me shall not walk in darkness, but shall have the light of life." ( John 8 : 12 )

"I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me." ( John 14 : 6 )

In todays verse the prayer was, "O send out thy light and thy truth: let them lead me; let them bring me unto thy holy hill, and to thy tabernacles." God the Father has sent the Lord Jesus Christ as an answer to this needs of the devotees of the Old Testament. So, He alone can lead us straight to the Holy Mountain.

The Lord Jesus Christ has promised us the Holy Spirit to guide us, the people of this age. Only the Spirit can illuminate our darkness and His words can show the way. Let us surrender ourselves to the rule of the Spirit. He will lead us straight to the Holy Mountain.

God Message :- Bro. M. Geo Prakash Contact- 96889 33712

வழியும் சத்தியமும் ஜீவனும்

 ஆதவன் 🖋️ 640 ⛪ அக்டோபர் 29,  2022 சனிக்கிழமை 

"உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக." ( சங்கீதம் 43 : 3 )

பழைய ஏற்பாட்டுக்காலத்திலும் மக்கள் தேவனை வெளிச்சமாகவும் சத்தியமாகவும் (உண்மை) எண்ணி வேண்டுதல் செய்தனர்.  அதனையே, "உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்' என்று இன்றைய வசனத்தில் நாம் பார்க்கின்றோம்.  பரிசுத்த பர்வதமாகிய பரலோகத்தில் மனிதனைக் கொண்டு சேர்க்க இவைதான் தேவையாக இருக்கின்றன. 

பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் கர்த்தரை வேண்டினாலும், புதிய ஏற்பாட்டுக்கால மக்களாகிய நம்மைப்போல அவர்களுக்கு கர்த்தரைப் பற்றி ஒரு தெளிவு இல்லை. கர்த்தர் என்பவர் நன்மை  செய்பவர்களை அரவணைக்கவும் தீமை செய்பவர்களைத்  தண்டிக்கவும்கூடிய ஒரு வல்லமையான சக்தி என்று எண்ணிக்கொண்டனர். ஒருவித அச்சத்துடனேயே கர்த்தரைப் பார்த்தனர். அதாவது தேவனைப்பற்றிய தெளிவான புரிதல் அவர்களுக்கு இல்லை. ஆனால் அவர்கள் தேவனை அன்பு செய்தனர், வேண்டுதல் செய்தனர். 

இயேசு கிறிஸ்துதான் கர்த்தரை அப்பா என்று அழைக்கக் கற்றுக்கொடுத்தார். அதாவது,  கர்த்தர் என்பவர் எங்கோ  இருக்கும் அந்நியர் அல்ல; அவர் நமது தகப்பன் எனும் புரிதலைக் கொடுத்தவர் இயேசு கிறிஸ்துதான். 

அதனால்தான் இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணிடம் கூறினார்,  "நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்."  ( யோவான் 4 : 22 ) என்று கூறினார். இன்றும் இதுபோல அறியாமல்  ஒளியை வணங்கக்கூடிய மக்கள் இருக்கின்றனர். விளக்குகளையும், சூரியனையும் அவர்கள் வணங்குகின்றனர். காரணம் கடவுள் ஒளியாக இருப்பதாக எண்ணுவதால் ஒளியை வணங்குகின்றனர். ஆனால், தேவன் ஒளியாய் இருந்தாலும் எல்லா ஒளியும் தேவனல்ல என்பதே உண்மை.  

ஆம், அன்று பழைய ஏற்பாட்டுக்கால  யூதர்கள் அறியாமலேயே வேண்டுதல்செய்த ஒளி, வழி, சத்தியம் எல்லாமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். இதனை அவர் உலகத்தில் இருக்கையில் அவர்களுக்குத் திட்டமும் தெளிவுமாகக் கூறினார். 

"நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்." ( யோவான் 8 : 12 )

"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான் 14 : 6 ) என்றார். 

உமது ஒளியையும் சத்தியத்தையும் அனுப்பியருளும் அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக. என்று பழைய ஏற்பாட்டுக்கால பக்தன் வேண்டியதற்கு பதிலளிப்பதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பிதாவாகிய தேவன் அனுப்பியுள்ளார். அவரே நம்மை பரிசுத்த பர்வதத்துக்கு நேராக வழிநடத்திட முடியும். 

இக்கால மக்களாகிய நம்மை வழிநடத்திட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரை வாக்களித்து நமக்கு அருளியுள்ளார். இருளான நமது இருந்ததில் ஒளியேற்றவும், சத்தியமான வசனத்தின்மூலம் நம்மை வழிநடத்திடவும் ஆவியானவரால் மட்டுமே முடியும். ஆவியானவரின் ஆளுகைக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழ்வோம். அவர் நம்மை பரிசுத்த பர்வதத்துக்கு நேராக வழி நடத்துவார். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Thursday, October 27, 2022

We will remember the name of the Lord our God

 AATHAVAN🖋️ 639 ⛪ October 28, 2022 Friday

"Some trust in chariots, and some in horses; but we will remember the name of the Lord our God" (Psalms 20:7) 

For many, boasting is as pleasurable as eating Halva. People boast about their wealth, position, beauty status etc. People having none of these find pride in narrating their ancestorial glory saying, "Our grandfather had a hundred acres of land, well with water lifting motor, car, goats, cows and servants and lived like a little king". Even if half of what they say is a lie, it is a pleasure for them to say so.

At that time when the Bible was written there were no vehicles like there are now. They depended on animals for transportation. The poor used donkeys. The less wealthy used camels and horses. Nobles and royalty used chariots. Many wealthy people owned horses and chariots as people own cars today. Some of the wealthy had more than one horse and chariot. It was a matter of pride for them.

King David, who had a close relationship with God, said today's verse of meditation because he heard the boasting of such people. He says, you may be proud of your riches, and we will be proud of our knowledge of knowing God.

Yes, the experience of knowing God is the most sublime experience. It cannot be obtained by mere prayer, reading the scriptures, visiting temples regularly, or attending prayer meetings. A person who has studied for many years in a Bible college and has become a pastor or reverend father cannot acquire the knowledge of God. They can learn about God, that is all. 

If you read the entire Bible, the words "Knowledge of knowing God" are used everywhere, "knowledge of knowing about God" is not mentioned.

Beloved! We may be in a state of lack of comfort opportunities today. But if we have the certainty that our sins are forgiven and we have experienced redemption, the knowledge of knowing God will bring us greater happiness than the happiness that riches bring. That is why David says, "You have put gladness in  given my heart more than in the seasons that grain and wine increased" (Psalm 4:7)

Yes, those who have experienced redemption will live happily even with less worldly goods. But those who become proud because they have more material things  and live disobedient to God's words are pitiable. That is why Isaiah the prophet, says:-

"Woe to those who go down to Egypt for help, who relay on horses, who trust in the multitude of their chariots and in the great strength of their horsemen, but do not look to the Holy one of Israel, or seek help from the Lord." (Isaiah 31:1)

Let's not count wealth, property and all our proud things as pride, but let us count the knowledge of knowing the Lord, the Holy One of Israel, as superior. Those without that knowledge are nothing, no matter how much worldly wealth they have.

God Message :- Bro. M. Geo Prakash Contact- 96889 33712

தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.

 ஆதவன் 🖋️ 639 ⛪ அக்டோபர் 28,  2022 வெள்ளிக்கிழமை

"சிலர் இரதங்களைக்குறித்தும்சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்." (  சங்கீதம் 20 : 7 )

பெருமை பாராட்டுவது பலருக்கு அல்வா சாப்பிடுவதுபோல அவ்வளவு இன்பமாய் இருக்கின்றது. தங்களது சொத்து, பதவி, அழகு அந்தஸ்து இவைகளைக்குறித்து பெருமைகளைப் பேசுவதும் இவை எதுவும்  தற்போது இல்லாதவர்கள் தங்களது பூர்வீக பெருமைகளைப்  பேசி  "எங்க தாத்தா நூறு ஏக்கர் நிலம் வைத்திருந்தார், மோட்டார் கிணறு, கார், ஆடு, மாடு, வேலைக்காரர்கள்  இவைகளுடன் குட்டி ராஜா போல வாழ்ந்தார்"  என்று கூறுவதிலும் அற்ப பெருமை காண்கின்றனர். இவர்கள் பேசுவதில் பாதியும் பொய்யாக இருந்தாலும் அப்படிப் பேசுவதில் அவர்களுக்கு ஒரு இன்பம்.

வேதாகமம் எழுதப்பட்டக் காலங்களில் இப்போதுள்ளதுபோல வாகனங்கள் கிடையாதுபோக்குவரத்துக்கு  மிருகங்களையே அவர்கள் நம்பி இருந்தனர்ஏழைகள் வசதி குறைந்தவர்கள் கழுதைகளைப் பயன்படுத்தினர்கொஞ்சம் வசதி படைத்தவர்கள் ஒட்டகங்களையும்குதிரைகளையும் பயன்படுத்தினர்பிரபுக்களும் அரச குடும்பத்தினரும் ரதங்களைப் பயன்படுத்தினர்இப்போது சொந்தக் கார் வைத்திருப்பவர்களைப்  போல குதிரைகளையும் ரதங்களையும் வைத்திருப்பவர்கள் இருந்தனர்வசதி படைத்தவர்கள் சிலரிடம் ஒன்றுக்கு மேற்பட்டக் குதிரைகளும் ரதங்களும் இருந்தனஅது அவர்களுக்குப் பெருமைக்குரிய காரியமாக இருந்தது.

தேவனோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த தாவீது ராஜா இத்தகைய மனிதர்களது பெருமைப் பேச்சுக்களைக் கேட்டுள்ளதால் இப்படிக் கூறுகின்றார்நீங்கள் உங்களது செல்வச் சிறப்புகளை எண்ணிப் பெருமை பாராட்டுங்கள்நாங்களோ தேவனை அறிந்திருப்பதை நினைத்தே பெருமைப்படுவோம்.

ஆம், தேவனை அறியும் அனுபவம் மிக உன்னதமான அனுபவம்அது வெறும் ஜெபத்தினாலோவேதம் படிப்பதாலோஆலயங்களுக்குத் தவறாமல் செல்வதாலோஜெபக் கூட்டங்களில் கலந்து கொள்வதாலேயோ கிடைத்திடாதுஒருவர் வேதாகமக் கல்லூரியில் பல ஆண்டுகள் படித்துக் குருவாக ஆகிவிட்டதால் அவர் தேவனை அறியும் அறிவினைப் பெற முடியாதுஅவர்கள் தேவனைப் பற்றி வேண்டுமானால் அறியலாம்.

வேதாகமம் முழுவதும் படித்துப் பார்த்தால் அனைத்து இடங்களிலுமே "தேவனை அறியும் அறிவுஎனும் வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டிருக்குமே தவிர "தேவனைப் பற்றி அறியும் அறிவுஎன்று குறிப்பிடப்பட்டிருக்காது.

அன்பானவர்களே ! நாம் ஒருவேளை இன்று வசதி வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் இருக்கலாம்ஆனால்நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயம் உடையவர்களாகி ,  மீட்பின் அனுபவம் பெற்றிருந்தோமானால் அந்தத் தேவனை அறியும் அறிவு,  செல்வங்கள் தரும் மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை நமக்குக் கொண்டு வரும்எனவேதான் தாவீது கூறுகிறார், " அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும்அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்."( சங்கீதம்4:7)

ஆம்மீட்பு அனுபவத்தைப் பெற்றிருப்பவர்கள் உலக செல்வதில் குறைவாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்ஆனால் தங்களிடம் அதிக பொருள் இருப்பதால் பெருமை அடைந்து தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமல் வாழ்வோர் பரிதபிக்கத்தக்கவர்கள்.  எனவேதான் ஏசாயா தீர்க்கதரிசி,

"
சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும்கர்த்தரைத் தேடாமலும்எகிப்துக்குப்போய்குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்துஇரதங்கள் அநேமாயிருப்பதினால் அவைகளை நாடிகுதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!" ( ஏசாயா31:1) என்று குறிப்பிடுகிறார்

செல்வங்கள், சொத்துக்கள் நமது பெருமைக்குரிய காரியங்கள் அனைத்தையும் பெருமையாக எண்ணாமல் இஸ்ரவேலின் பரிசுத்தரான கர்த்தரை அறியும் அறிவையே மேன்மையாகப் எண்ணுவோம். அந்த அறிவு இல்லாதவர்கள் எவ்வளவு உலகச் செல்வங்களைப் பெற்றிருந்தாலும் ஒன்றுமில்லாதவர்களே. 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712