இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Tuesday, February 27, 2024

பறந்து காக்கிற பட்சிகளைப்போல / LIKE THE BIRDS THAT FLY AND GUARD

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,115       💚 பிப்ரவரி 28, 2024 💚 புதன்கிழமை 💚  

"சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்." ( ஏசாயா 31 : 4 )

கர்த்தருடைய பரிசுத்த சீயோனுக்கு ஏற்ற  மக்களாக நாம் வாழும்போது கர்த்தரது கரம் நமக்கு எத்தகைய பாதுகாப்பினைத் தரும் என்பதனை இன்றைய வசனம் விளக்குகின்றது. 

மேய்ப்பர்கள் மந்தையினை மேய்த்துக்கொண்டிருக்கும்போது சிலவேளைகளில் சிங்கம் போன்ற கொடிய விலங்குகள் வந்து ஆடுகளைக் கவர்ந்துசெல்வதுண்டு. அப்படித் தனது குட்டிகளுடன் சிங்கம் வந்து ஆடுகளைப் பிடிக்கும்போது மேய்ப்பர்கள் ஒன்றுசேர்ந்து குரலெழுப்பி அதனைத் துரத்துவார்கள். ஆனால் அந்தக் கூக்குரலுக்குச் சிங்கம் பயப்படாது. தான் பிடித்த ஆட்டை விடவும் செய்யாது. இப்படியே தேவனும் பிடிவாத வைராக்கியமாகத் தனது மக்களுக்காகச் செயல்படுவேன் என்கின்றார். 

மேலும் அடுத்த வசனத்தில் ஏசாயா கூறுகின்றார், "பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்." ( ஏசாயா 31 : 5 )

வீட்டில் கோழி வளர்பவர்கள் தாய்க்கோழித் தனது குஞ்சுகளை காகம் பருந்து போன்றவற்றிடமிருந்து காப்பாற்ற போராடுவதைப் பார்த்திருக்கலாம்.  தன்னால் அவைகளுக்கு ஒப்பாகப் பறக்க முடியாவிட்டாலும் தாய்க்கோழியானது முயன்றவரை பறந்து தனது குஞ்சுகளைப் பாதுகாக்கும். சிலவேளைகளில் காகத்தைக் கொத்திக் கொன்றுவிடுவதுமுண்டு. அதுபோல தேவன் நமக்கு ஆதரவாக இருப்பார் என்று இந்த வசனம் கூறுகின்றது. 

அன்பானவர்களே, நாம் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வோமென்றால் நமக்குத் தேவனிடமிருந்து இத்தகைய பாதுகாப்புக் கிடைக்கும். பிரச்சனைகள் நம்மை நெருக்கலாம், அல்லது நமக்கு எதிராகச் சிலர் செயல்பட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்குத் தாங்கள்  யூத ராஜ சிங்கத்தோடு மோதுகின்றோம் என்பது தெரியாது. துணித்து நமக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டே இருப்பார்களென்றால் அவர்களது வாழ்க்கைப் பரிதாபகரமானதாகவே இருக்கும்.

கர்த்தரது  இத்தகைய பாதுகாப்பையும் உடனிருப்பையும் அனுபவத்தில் உணர்ந்த தாவீது கூறுகின்றார், "கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம்புகும் என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்." ( சங்கீதம் 18 : 2 )

கர்த்தரது  உடனிருப்பை நாம் உறுதி செய்துகொள்வோமானால் நாம் எந்த பிரச்சனை, துன்பம் வந்தாலும் உறுதியுடன் நிற்க முடியும்.  "அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்." ( சங்கீதம் 144 : 2 ) என்று தாவீதைப்போல நம்பிக்கையுடன் கூறமுடியும். 

ஆம் அன்பானவர்களே, பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் நமக்கு ஆதரவாக இருப்பார்; அவர் நம்மைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து நம்மை விடுவிப்பார். கலங்காமல் உறுதியுடன் இருப்போம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

LIKE THE BIRDS  THAT FLY AND GUARD

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,115 💚 February 28, 2024 💚 Wednesday 💚

"Like the lion and the young lion roaring on his prey, when a multitude of shepherds is called forth against him, he will not be afraid of their voice nor abase himself for the noise of them; so shall the LORD of hosts come down to fight for mount Zion and for the hill thereof." (Isaiah 31:4)

Today's verse explains what kind of protection the Lord's hand will give us when we live as people suitable for God's holy Zion.

While the shepherds are tending the flock, sometimes deadly animals like lions come and prey on the sheep. Thus, when a lion comes with its cubs and catches the sheep, the shepherds gather together and chase it away. But the lion is not afraid of that cry. He will not let go of his favourite goat. In the same way, God says that He will work for His people with stubborn zeal.

And in the next verse, Isaiah says, "As birds flying, so will the LORD of hosts defend Jerusalem; defending also he will deliver it; and passing over he will preserve it." (Isaiah 31:5)

Chicken keepers at home may have probably seen a mother hen struggle to protect her chicks from crows and hawks. Although she cannot fly like them, the mother hen will fly to protect her chicks when she tries. Sometimes the crow is killed. This verse also says that God will support us.

Beloved, if we live a godly life, we will have such protection from God. Troubles may overwhelm us, or some may be working against us. But they did not know that they were facing the King Lion of the Jews. If they dare to continue working against us, their lives will be miserable.

David, who experienced such protection and presence of the Lord, says, "The LORD is my rock, and my fortress, and my deliverer; my God, my strength, in whom I will trust; my buckler, and the horn of my salvation, and my high tower." (Psalms 18:2)

If we make sure of God's presence, we can stand firm no matter what problem or suffering comes. "My goodness, and my fortress; my high tower, and my deliverer; my shield, and he in whom I trust; who subdueth my people under me." (Psalms 144:2), we can say with confidence, like David.

Yea, beloved, like birds that fly and guard, the Lord of hosts will support us; He will keep us safe; He will come through and set us free. Let us not be dismayed but be determined.

God’s Message :- Bro. M. Geo Prakash

Sunday, February 25, 2024

கர்த்தருடைய கண்கள் / EYES OF THE LORD

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,114      💚 பிப்ரவரி 27, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚  

"தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண்கள்  அவர்கள்மேல் நோக்கமாயிருக்கின்றன." ( சங்கீதம் 33 : 18, 19 )

கர்த்தரது கிருபையினைப் பெறவேண்டும் என எண்ணி கர்த்தருக்குப் பயந்து வாழும் மனிதர்களது வாழ்வில் கர்த்தர் என்னச் செய்வார் என்பது இன்றைய வசனத்தில் விளக்கப்பட்டுள்ளது. 

முதலாவது அப்படிக் கர்த்தருக்குப் பயந்து வாழும் மனிதனது ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காக்கின்றார். அதாவது உலக மரணமல்ல, மாறாக ஆத்தும மரணம். ஆம், அத்தகைய மனிதர்களை இரண்டாம் மரணமாகிய நரக  அக்கினி பற்றிக்கொள்ளாது. மேலும் வறட்சியான பஞ்சகாலத்தில் அவர்கள் உயிரோடு காக்கப்படுவார்கள். இந்த உலகத் துன்பங்கள் பிரச்சனைகள் அவர்களை மேற்கொள்ளாது. மூன்றாவதாக, கர்த்தரது  கண்கள் அவர்கள்மேல் எப்போதும் நோக்கமாயிருக்கும். 

இதனை உணர்ந்திருந்தால் தாவீது ராஜா கூறுகின்றார், "என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்." ( சங்கீதம் 59 : 10 ) ஆம், தாவீது ராஜா பாவம் செய்தாலும் அவர் தேவனது கிருபையினை அதிகமாகச் சார்ந்திருந்ததால் தேவன் அவரை மரணக் கண்ணிகளிலிருந்து பலமுறை தப்புவித்தார்.  அவருக்கு எதிர்த்து வந்தவர்களை அழித்து ஒழித்தார். 

கர்த்தருடைய கண்கள்  அவர்கள்மேல் நோக்கமாயிருக்கின்றன எனும் இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார்,  "கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கின்றன, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கின்றன; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது." (1பேதுரு 3 : 12) நீதியுள்ள வாழ்க்கையினை வாழ நாம் நம்மை ஒப்புக்கொடுத்தாலே போதும் கர்த்தரது  கிருபையினை நாம் பெற்றுக்கொள்ளலாம். 

மேலும் அப்போஸ்தலரான பேதுரு கூறியுள்ளபடி, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கின்றன. அன்பானவர்களே, நாம் நமது சுய பலத்தால் அல்ல; மாறாக, கர்த்தரது கிருபையினால்தான் நிலைநிற்கின்றோம். சிலர் தாங்கள் ஜெபிப்பதால்தான் எல்லாம் நடந்தது என எண்ணி  "நான் ஜெபித்ததால்தான் கர்த்தரது கிருபையினையும் எனது வேண்டுதல்களையும் பெற்றுக்கொண்டேன்" என்று கூறுவார்கள். அன்பானவர்களே, ஜெபம் நமது வாழ்வில் முக்கியமானது எனினும் நாம் நமது ஜெபத்தால்தான் ஒன்றை பெற்றுக்கொண்டோம் என எண்ணினால் கர்த்தரது கிருபையினை அவமதிக்கின்றோம் என்று பொருள். 

"நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்." ( யாக்கோபு 1 : 17, 18 ) 

யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லாமல்  அவர் சித்தங்கொண்டு நமக்கு நன்மைகளைத் தருவதுதான் தேவனது கிருபை. எனவேதான் நாம் அவரது கிருபையினைச் சார்ந்திருக்கவேண்டியது அவசியமாய் இருக்கிறது. அப்போது கர்த்தர் நமது ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவித்துக் காப்பார்.  அவரது கண்கள் நம்மேல் நோக்கமாயிருக்கும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

                    EYES OF THE LORD


'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,114 💚 February 27, 2024 💚 Tuesday 💚

"Behold, the eye of the LORD is upon them that fear him, upon them that hope in his mercy; to deliver their soul from death, and to keep them alive in famine." (Psalms 33:18, 19)

Today's verse explains what God will do in the lives of people who fear God and live in fear of God.

First, he protects the soul of a person who lives in fear of the Lord from death. That means not worldly death but spiritual death. Yes, they will not be caught by the second death, the fire of hell. And in times of drought and famine, they will be kept alive. The sufferings and troubles of this world will not carry them. Third, God's eyes are always on them.

Realising this, King David says, "The God of my mercy shall prevent me; God shall let me see my desire upon my enemies." (Psalms 59:10) Yes, even though King David sinned, he depended more on God's grace, and God saved him many times from the snares of death. He destroyed those who opposed him.

The Apostle Peter says, "For the eyes of the Lord are over the righteous, and his ears are open unto their prayers; but the face of the Lord is against them that do evil." (1 Peter 3:12) If we surrender ourselves to living a righteous life, we can receive the Lord's grace.

And as the apostle Peter says, his ears are attentive to their prayer. Beloved, we are not of our own strength; on the contrary, we stand by God's grace. Some people think that everything happened because they prayed and say, "I received God's grace and my petitions because I prayed." Beloved, prayer is important in our lives, but if we think that we have received something because of our prayer, then we are dishonouring God's grace.

"Every good gift and every perfect gift is from above and cometh down from the Father of Lights, with whom there is no variableness, no shadow of turning. Of his own will begat he us with the word of truth, that we should be a kind of firstfruits of his creatures." (James 1:17, 18)

God's grace is that He willingly gives us benefits without any change or shadow of difference. That is why it is necessary for us to depend on His grace. Then the Lord will deliver our souls away from death. His eyes will be focused on us.

God’s Message :- Bro. M. Geo Prakash

Friday, February 23, 2024

நமது சுய யோசனையில் சார்ந்து / RELYING ON OUR OWN IDEAS

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,113       💚 பிப்ரவரி 26, 2024 💚 திங்கள்கிழமை 💚  

"அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்." ( சங்கீதம் 106 : 43 )

நமது சுய யோசனையில் சார்ந்துகொண்டு தேவனுக்கு எதிராக நாம் செயல்பட்டு வாழ்வோமானால் தேவனது பார்வையில் அது அக்கிரமமாக இருக்கும். அத்தகைய அக்கிரமம் நம்மைச் சிறுமைப்படுத்திவிடும் என எச்சரிக்கின்றது இன்றைய தியான வசனம்.

இஸ்ரவேல் மக்களது வாழ்கையினைப் பார்த்தால்  அவர்கள் எப்போதும் தேவனுக்கு எதிராகச் செயல்படுபவர்களாகவே இருந்தனர்.  எகிப்திலிருந்து விடுதலையாகி கானான் தேசத்தை அவர்கள் சுதந்தரித்தபின் தேவன் அவர்களைப் பல்வேறு நியாயாதிபதிகள் மூலம் நடத்தினார். இறுதியில் அவர்கள் சாமுவேலிடம் தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்று முறையிட்டு  அவர் அவர்களுக்கு சவுலை ராஜாவாக ஏற்படுத்தினார். 

இஸ்ரவேல் மக்கள் தங்களை மீட்டு  இரட்சித்து வழிநடத்திய  தேவனைவிட்டு அவ்வப்போது விலகி அந்நிய தேவர்களை வழிபடத்துவங்கினர்.  எப்போதெல்லாம் அவர்கள் தடம் மாறினார்களோ அப்போதெல்லாம் தேவன் அவர்களை எதிரி ராஜாக்களுக்கு  அடிமைகளாக்கி அவர்களைச் சிறுமைப்படுத்தினார். பின்னர் தேவனிடம் மன்னிப்புக்  கேட்டு முறையிடும்போது விடுவித்தார். ஆனாலும் அவர்கள் சிறிதுகாலத்தில் மீண்டும் வழி தவறினர்.

இப்படி, "அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்." 

அன்பானவர்களே, இன்று நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்தவர்களாக இருக்கலாம். ஆவிக்குரிய வாழ்வில் தேறியவர்களாக இருக்கலாம். ஆனால் நமது வாழ்வு சிறுமைப்படுத்தப்பட்ட வாழ்வாக இருக்குமானால் நாம் நம்மையே சோதித்துப் பார்க்கவேண்டியது அவசியம். அநேகந்தரம் தேவன் நமது பாவங்களையும் தவறுகளையும் மன்னித்து விடுவித்தும் நாம் நமது சுய யோசனையினால் அவருக்கு விரோதமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருக்கலாம். நம்மை ஆய்வுசெய்து பார்ப்போம்.

இன்றும் நமக்கு ஏற்படும் பல்வேறு துன்பங்கள் பிரச்சனைகளுக்கு நாம் நமது சுய யோசனையினால் அவருக்கு விரோதமாய்ச் செயல்படுவது காரணமாக இருக்கலாம்.  எனவே "என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே." ( எபிரெயர் 12 : 5 ) என்று அறிவுறுத்துகின்றது வேதம். மட்டுமல்ல இப்படி தேவன் நம்மைக் கடிந்துகொள்ளும்போது நாம் உணர்வடைந்து மனம் திரும்பவேண்டியது அவசியம்.

தேவன் இஸ்ரவேலர் தன்னைவிட்டு விலகி பாவம் செய்தபோது அவர்களை விடுவித்தாலும்  எல்லோரும் அந்த விடுதலையின் பலனை அனுபவிக்கவில்லை. பலர் அழிக்கப்பட்டனர். எனவே நாம் எச்சரிக்கையாக இருந்து தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். இஸ்ரவேலரைப்போல வணங்கா கழுத்துள்ளவர்களாக வாழ்வோமானால் எப்போதும் தேவ துணை நமக்குக் கிடைக்காது. 

எனவேதான் நீதிமொழிகள் நம்மை எச்சரிக்கின்றது, "அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்." ( நீதிமொழிகள் 29 : 1 )


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

          RELYING ON OUR OWN IDEAS

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,113 💚 February 26, 2024 💚 Monday 💚

"Many times did he deliver them, but they provoked him with their counsel and were brought low for their iniquity." (Psalms 106:43)

If we act and live against God, relying on our own ideas, it will be iniquity in God's eyes. Today's meditation verse warns us that such iniquity will make us low.

If you look at the lives of the people of Israel, they were always working against God. After their liberation from Egypt and their possession of the land of Canaan, God guided them through various judges. Eventually they appealed to Samuel to make them kings, and he made Saul their king.

The people of Israel often turned away from the God who saved them and led them and worshipped other gods. Whenever they deviated, God made them slaves to enemy kings and humiliated them. When they appealed to God for forgiveness, He liberated them. But they soon lost their way again.

Thus, “Many times did he deliver them, but they provoked him with their counsel and were brought low for their iniquity."

Beloved, today we may know the Lord Jesus Christ. May be well versed in spiritual life. But if our lives are belittled, we need to examine ourselves. Often, God forgives our sins and mistakes, but we may be working against Him because of our own thinking. Let us examine ourselves.

The various sufferings and problems we face today may be due to our self-conceived actions against Him. So "My son, despise not thou the chastening of the Lord, nor faint when thou art rebuked of him" (Hebrews 12:5), the scriptures advise. Not only that, when God reprimands us like this, it is necessary that we realise and repent.

God freed the Israelites when they turned away from Him and sinned, but not everyone enjoyed the fruits of that deliverance. Many were destroyed. So, it is necessary that we be careful and commit ourselves to living a life that is suitable for God. If we live like the Israelites, we will not always get God's help.

This is why Proverbs warns us: "He, that being often reproved hardeneth his neck, shall suddenly be destroyed, and that without remedy." (Proverbs 29:1)

God’s Message: - Bro. M. Geo Prakash

கடவுள் உண்டுமா கிடையாதா எனும் சர்ச்சை/ CONTROVERSY OVER WHETHER GOD EXISTS

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,112       💚 பிப்ரவரி 25, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚  


"............... காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள்உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலேஉலகமுண்டானது முதற்கொண்டுதெளிவாய்க் காணப்படும்ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. (  ரோமர் 1 : 20 )

கடவுள் உண்டுமா கிடையாதா எனும் சர்ச்சை ஆதிமுதல் தொடர்ந்து இருந்து  கொண்டுதான் இருக்கிறது.  இல்லை என்பவர்களும் உண்டு என்பவர்களும் பல்வேறு ஆதாரங்களைக் கூறிக்கொண்டிருக்கின்றனர்பவுல் அப்போஸ்தலர் இங்கு அதனைத் தெளிவுபடுத்துகின்றார்அதாவது உலகினில் நாம் காணும் படைப்புகளே கடவுள் உண்டு என்பதற்கும் அவரது வல்லமை,  தேவத்துவம் இவற்றிற்கும்  சான்று என்கின்றார்.  உண்டாக்கப்பட்ட பொருட்களில் அவை தெளிவாய்க் காணப்படும் என்கின்றார்.

மனிதனது உடலே ஒரு அதிசயம்மனித உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் எவ்வளவு நேர்த்தியாய் அமைக்கப்பட்டுள்ளன என்று பாருங்கள்மனித மூளைக்கு இணையான கம்ப்யூட்டர் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லைமனித கண்களுக்கு இணையான காமெரா இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை. மனித உடலை ஆய்வு செய்த கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு விஞ்ஞானி மனிதனது நரம்பு மண்டலம் அமைக்கப்பட்டுள்ள வித்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்மனிதனது நரம்பு மண்டலத்தைப் பார்த்துவிட்டு அவர் பின்வருமாறு கூறுகின்றார்:- 

"மனித உடலில் இரத்த நாளங்களும் நரம்புகளும் அமைக்கப்பட்டுள்ள விதம் என்னை ஆச்சரியப்படச் செய்ததுஇரண்டு இரத்த நாளங்கள் இணையும் இடம்பிரியும் இடம் இவை உலகில் உள்ள ஒரு பிளம்பர் குடிநீர் குழாயில் இணைப்புக்கு கொடுப்பதுபோலவும் ஒரு எலெக்ட்ரிஷியன் மின்சார உபகரணங்களுக்கு இணைப்புக்கு கொடுப்பதுபோலவும் மிக நேர்த்தியாக திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளனநிச்சயமாக இவைகள் தானாக உருவாகச்  சாத்தியமே இல்லை. இதனைத் தாவீது ராஜாவும் ஆவியில் கண்டு களிகூர்ந்து பின்வருமாறு கூறுகின்றார், "நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்உமது கிரியைகள் அதிசயமானவைகள்அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்." (  சங்கீதம் 139 : 14 )

மேலும், விண்வெளிக் கோள்களின் அமைப்பைப்  பல விஞ்ஞானிகள் கண்டு பிரமித்துள்ளனர்நிலவுக்கு ஆம்ஸ்ட்ராங்குடன் சென்று திரும்பிய ஆல்ட்ரின் விண்ணிலிருந்து பூமியைப் பார்க்கும்போது வேதம் தெளிவாகக்  குறிப்பிட்டுள்ள பல வேத வசனங்கள் தனக்கு விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்ஒருவர் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்தாலே தேவனைப் பற்றியும் அவரது மகத்துவங்களைப் பற்றியும்  வியந்து அறிக்கையிடுவார்  என்று அவர் குறிப்பிடுகின்றார்இவர் தனது வாழ்வின் பிற்பகுதியில் கர்த்தரது ஊழியக்காரனாக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . 

இதுவரை உலகம் கண்ட விஞ்ஞானிகளில் மிகப்பெரியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின்.  இவரது கோட்பாடுகளின் அடிப்படையிலேயே விண்வெளிக்கு ராக்கெட்களை  அனுப்புகின்றனர். அவர் கடவுளை ஏற்றுக்கொள்ளவில்லையெனினும் விண்வெளியின் கோள்கள் அனைத்தையும்  ஒரு மிகப்பெரிய மூளை சிந்தித்து ஞானமாய் வடிவமைத்துள்ளது என்கின்றார். ஆனால் அந்த மிகப்பெரிய மூளைதான் தேவன் என்பதை இந்த மேதை இறுதிவரைக் கண்டுகொள்ளவில்லை. 

சங்கீத புத்தகத்திலும்  "வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றனஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறதுஇரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறதுஅவைகளுக்குப் பேச்சுமில்லைவார்த்தையுமில்லைஅவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லைஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும்அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; ......" (  சங்கீதம் 19 : 1- 4 ) என்று படிக்கின்றோம்.

எனவேதான் அப்போஸ்தலரான பவுல்தேவனது வல்லமையும் மகத்துவமும் உலகப் படைப்புகளில் தெளிவாகத்  தெரிவதால் "அவர்கள் (கடவுள் இல்லை என்று வாதிடுபவர்கள்) சாக்குபோக்குச் சொல்ல இடமில்லைஎன்று குறிப்பிடுகின்றார்அதாவது அவர்கள் நியாயத் தீர்ப்புநாளில் இதனைக் காரணமாகச் சொல்லித்  தப்பித்துக்கொள்ளமுடியாது என்கின்றார். 

தேவனை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டு அவருக்கு ஏற்பில்லாத பாவ வாழ்க்கை வாழ்வதும் கடவுள் இல்லை என்று கூறுவதற்கு ஒப்பானதுதான். ஆம் அன்பானவர்களே, தேவனுக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழ்வோம்.  "தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்; .." (  சங்கீதம் 53 : 1 )


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

       CONTROVERSY OVER WHETHER 
                        GOD EXISTS 

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,112 💚 February 24, 2024 💚 Sunday💚

“For the invisible things of him from the creation of the world are clearly seen, being understood by the things that are made, even his eternal power and Godhead, so that they are without excuse." (Romans 1:20)

The controversy over whether God exists or not has been going on since the beginning of time. Those who say no and those who say yes are citing different sources. The apostle Paul makes it clear here. That is, the creations that we see in the world are proof that God exists and His power and divinity. He says that they are clearly seen in the things that were created.

The human body is a miracle. Look at how finely arranged each part of the human body is. A computer equivalent to the human brain has yet to be invented. A camera equivalent to the human eye has not yet been invented. An atheist scientist who studied the human body was surprised by the way the human nervous system is structured. After looking at the human nervous system, he says:

"The way the blood vessels and nerves are arranged in the human body made me wonder. The place where two blood vessels join and divide is as finely planned as a plumber in the world connecting a water pipe and an electrician connecting an electrical appliance. Yes, these cannot be formed naturally. David understood these things in spirit and rejoiced in spirit, and says, “I will praise thee; for I am fearfully and wonderfully made; marvellous are thy works; and that my soul knoweth right well.” (Psalms 139:14)

Also, many scientists are amazed by the structure of space planets. Aldrin, who accompanied Armstrong to the moon and returned, stated that he understood many truths clearly mentioned in the scriptures when looking at the earth from space. He mentions that if one goes to space and comes back, he will be in awe of God and His greatness. It is noteworthy that he became a servant of God in the later part of his life.

Albert Einstein is the greatest scientist the world has ever seen. Rockets are sent into space based on his theories. Though he does not accept God, he says, “All the planets in space are thought out and wisely designed by a great brain.” But this genius didn't realize till the end that God is that big brain.

And in the book of Psalms, we read, “The heavens declare the glory of God, and the firmament sheweth his handywork. Day unto day uttereth speech, and night unto night sheweth knowledge. There is neither speech nor language, and their voice is not heard. Their line has gone out through all the earth, and their words have gone to the end of the world.” (Psalms 19:1–4)

This is why the apostle Paul states that "they (the agnostic) have no excuse" because God's power and majesty are clearly seen in the creation of the world. In other words, they cannot get away with this on the Day of Judgement.

Claiming to believe in God and living a sinful life that is not acceptable to Him is equal to saying that God does not exist. Yes, beloved, let's live a God-fearing life. “The fool hath said in his heart, There is no God”( Psalms 53:1).

God’s Message :- Bro. M. Geo Prakash