இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Sunday, November 19, 2023

உங்கள் பொக்கிஷம் எங்கே? / WHERE IS YOUR TREASURE?

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,027,              நவம்பர் 20, 2023 திங்கள்கிழமை

"உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்." ( லுூக்கா 12 : 34 )

இருதயத்தின் நிறைவினால் தான் மனிதன் நடத்தப்படுகின்றான். ஒரு மனிதனின் எண்ணங்களும் செயல்களும் அவனது இருதயத்தின் நிறைவைப்பொறுத்தே அமையும். இதனால்தான் இயேசு கிறிஸ்து கூறினார், "நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்." ( மத்தேயு 12 : 35 ) என்று.

பண ஆசை நிறைந்தவர்களது இருதயம் பணத்தைப்பற்றியும் அதனை எப்படிப் பெருக்குவது என்றுமே எண்ணிகொண்டிருக்கும். பதவி ஆசை கொண்டவன் இருதயம் எப்படித் தான் அடைய விரும்பும்  அந்தப் பதவியைப் பெறுவது என்பதிலேயே குறியாய் இருக்கும். ஆம், எதனை ஒரு மனிதன் தனது செல்வம் என்று எண்ணுகின்றானோ அதனைச் சுற்றயே அவனது இருதய எண்ணமும் இருக்கும். அதனை அடைந்திட மனிதன் எதனையும் செய்வான். இதனையே இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில்,  "உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்." என்று கூறுகின்றார்.

இன்று போலீசாரிடம் மாட்டிக்கொள்ளும் பல கிரிமினல்கள், "எப்படியாவது பெரிய பணக்காரன் ஆகவேண்டும் என்று எண்ணியே இப்படிச் செய்தேன்" என வாக்குமூலம் அளிப்பதுண்டு.  கொலை, களவு இவற்றுக்குப் பெரும்பாலும் பண ஆசையே காரணமாய் இருக்கின்றது. 

இதுபோலவே, தேவனை அறியவேண்டும் எனும் ஆர்வமும், நித்தியஜீவன்மேல் நம்பிக்கையும் கொண்டவர்கள் இருதயம் அதற்கேற்ப செயல்படும். இயேசு கிறிஸ்து பரலோக ராஜ்யத்தைக்குறித்துப் பல உவமைகளைக் கூறினார். அதில் ஒன்று, "பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக்கொள்ளுகிறான்." ( மத்தேயு 13 : 44 ) என்பது. அதாவது, பரலோக ராஜ்யத்துக்குரியவைகளைத் தேடுபவனுக்கு மற்றவையெல்லாம் அற்பமாகவே தெரியும். எனவே அவற்றை இழந்து பரலோக ராஜ்யத்தைப் பெற முயலுவான் என்கின்றார் இயேசு. 

அப்போஸ்தலரான பவுலின் இருதயம் கர்த்தராகிய இயேசுவை அறியும் ஆர்வத்தில் நிறைந்திருந்தது. எனவே அவர் மற்ற எல்லாவற்றையும் அற்பமாகவும் குப்பையாக எண்ணினேன் என்று கூறுகின்றார்.  "என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்." ( பிலிப்பியர் 3 : 8 )

ஆம் அன்பானவர்களே, நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்குப் பணம் மிக முக்கியமான தேவைதான். ஆனால் நமது இருதயம் அதன்மேலேயே இருக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று கூறிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை நாம் நம்பினால் நாம் உறுதியுடன், "அவர் எனக்குத் தேவையானவற்றைத் தருவார் எனும் நம்பிக்கையும் ஏற்படும். 

அப்போது நாம் ஆசீர்வாதங்களைத் தேடி ஓடாமல் ஆசீர்வாதங்களின் ஊற்றாகிய தேவனை நோக்கி நமது இருதயத்தைத் திருப்புகிறவர்களாக இருப்போம். "உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்." என்ற வார்த்தையின்படி நமது பொக்கிஷமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே கருதுவோம். அப்போது நமது உள்ளான மனநிலையில்  பெரிய மாற்றம் ஏற்படும்; தேவன் உலக ஆசீர்வாதங்களினாலும் நம்மை நிரப்புவார். 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்                          

       WHERE IS YOUR TREASURE?

'AATHAVAN' BIBLE MEDITATION - No:- 1,027,                       Monday, November 20, 2023

"For where your treasure is, there will your heart be also." (Luke 12: 34)

Man is driven by the desires of the heart. A man's thoughts and actions depend on the desires of his heart. This is why Jesus Christ said, "A good man out of the good treasure of the heart bringeth forth good things: and an evil man out of the evil treasure bringeth forth evil things." (Matthew 12: 35)

A greedy person's heart is all about money and how to increase it. An aspirant's heart is set on how to attain the position he desires. Yes, what a man considers to be his wealth, the thoughts of his heart revolve around that. Man will do anything to achieve it. This is what Jesus Christ said in today's meditation verse, "Where your treasure is, there your heart will be also."

Many criminals who get caught by the police today confess that "I did this because I wanted to get rich somehow". Most of the murders and thefts are motivated by the desire for money.

Similarly, those who have a desire to know God and have faith in eternal life, their hearts will act accordingly. Jesus Christ told many parables about the kingdom of heaven. One of them is, "Again, the kingdom of heaven is like unto treasure hid in a field; the which when a man hath found, he hideth, and for joy thereof goeth and selleth all that he hath, and buyeth that field." ( Matthew 13 : 44 )

That is, he who seeks the things of the kingdom of heaven will try to lose them and gain the kingdom of heaven.

Apostle Paul's heart was full of desire to know the Lord Jesus. So, he says that he considered everything else as loss and rubbish. "Yea doubtless, and I count all things but loss for the excellency of the knowledge of Christ Jesus my Lord: for whom I have suffered the loss of all things, and do count them but dung, that I may win Christ," (Philippians 3: 8)

Yes dears, money is the most important need for us to live in this world. But we must be careful not to set our heart on it. "But seek ye first the kingdom of God, and his righteousness; and all these things shall be added unto you." (Matthew 6: 33) If we believe in the words of Jesus Christ, we will have confidence that He will give us what we need.

Then we will turn our hearts towards God who is the source of blessings instead of running in search of blessings. "Where your treasure is, there your heart will be also." Let us consider the Lord Jesus Christ as our treasure according to the word. Then there will be a great change in our inner state; God will also fill us with worldly blessings.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

Saturday, November 18, 2023

ஜீவ புத்தகத்தில் நமது பெயர்/ OUR NAME IN THE BOOK OF LIFE

'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,026,              நவம்பர் 19, 2023 ஞாயிற்றுக்கிழமை

"தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும்  நடப்பிக்கிறதுமாகிய  ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை;  ஆட்டுக்குட்டியானவரின்ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள்  மாத்திரம் அதில்  பிரவேசிபபார்கள்." (  வெளிப்படுத்தின விசேஷம் 21 : 27 )

பரலோக ராஜ்யத்தில் நுழைவதற்குரிய முக்கியமான ஒரு தகுதியாக ஜீவபுத்தகத்தில் நமது பெயர் எழுதப்படுவதை வேதம் குறிப்பிடுகின்றது. ஒருவன் தேவனால் தனது பாவங்கள்   மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவத்திற்குள்   வரும்போது அவனது பெயரை  தேவன் ஜீவபுத்தகத்தில்   எழுதுகின்றார்இப்படித்  தங்கள்  பெயர்  ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்களே தேவனது   பரலோக  ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்இதனை வேதம்   தெளிவாக பல  டங்களில் குறிப்பிட்டுள்ளது

"ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்." (  வெளிப்படுத்தின விசேஷம் 20 : 15 )

மேலும்"மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும்  தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்அப்பொழுது புஸ்தகங்கள்திறக்கப்பட்டனஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும்  திறக்கப்பட்டதுஅப்பொழுது அந்தப் புஸ்தகங்களில்  எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள்  கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். (  வெளிப்படுத்தின விசேஷம் 20 : 12 )

பவுல் அடிகளும் இதனைக் குறிப்பிடும்போது,  "அன்றியும்என்  உத்தம கூட்டாளியேஅவர்களுக்கு உதவியாயிருக்கும்படி  உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்அவர்கள்  கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச்  சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும்  பிரயாசப்பட்டார்கள்அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. (  பிலிப்பியர் 4 : 3 ) என எழுதுகின்றார். 

பழைய ஏற்பாட்டு பக்தனான மோசேயும் இதனை அறிந்திருந்தாஇஸ்ரவேல் மக்கள் பொன் கன்றுகுட்டியை செய்து 'இதுவே  எங்களை எகிப்தியரிடமிருந்து விடுவித்த தேவன்என  வணங்கியதைக் கண்டு ஆவேசம் கொண்டார்அவர்களுக்காக தேவனிடம் மன்னிப்பு வேண்டினார்அப்போது, "ஆகிலும்தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய  புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்."(  யாத்திராகமம் 32 : 32 )

அதாவது தனது பெயர் ஜீவபுத்தகத்தில் எழுதப்படுவதைவிட  பாவம்செய்த இஸ்ரவேல் மக்கள் முதலில் மன்னிப்புப்  பெறவேண்டும் எனும் மேலான எண்ணமே மோசேயிடம் இருந்தது. "அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கிஎனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோஅவன் பேரை என் புஸ்தகத்திலிருந்துகிறுக்கிப்போடுவேன்." (  யாத்திராகமம் 32 : 33 ) என்றார்.

அன்பானவர்களே ! வேதாகம பக்தர்கள் பலரும் மீட்கப்பட்ட  மக்களது பெயரை தேவன் ஜீவபுத்தகத்தில் எழுதும் இந்த  உண்மையை நன்கு அறிந்திருந்தனர்

இன்று உலக அரசாங்கங்கள்கூட பல்வேறு பெயர் பதிவு  ஆதாரங்களை நடைமுறையில் கொண்டுள்ளன.  உதாரணமாக,  பிறப்பு சான்றிதழ்,  ஆதார் கார்டு போன்றவைஆதார்  அடையாளஅட்டை  இல்லாவிட்டால் நம்மை இந்தியக் குடிமகனாக  ஏற்றுக்கொள்ள முடியாது எனும் நிலையே உள்ளதுஅரசாங்கத்திடம் என்ன  காரியத்துக்கு விண்ணப்பித்தாலும்  ஆதார் பதிவு முக்கியமாக உள்ளது

எனவேதான் இன்று மக்கள் தங்களுக்குக் குழந்தை பிறந்த சில  மாதங்களிலேயே பிறப்பு சான்றிதழை பெற ஓடுகின்றனர்ஆதார்அட்டைப்பெற முயற்சி செய்கின்றனர்அன்பானவர்களேஇதுபோலவே தேவன் ஜீவ புத்தகத்தில் பெயர் பதிவு செய்வதை ஒரு  முறையாக வைத்துள்ளார்நமது பாவங்கள் மன்னிக்கப்பட்ட  நிச்சயம் நமக்கு உண்டுமானால் நமது பெயர் ஜீவபுத்தகத்தில்  எழுதப்பட்டுள்ளது நிச்சயம்இது ஒருவிதத்தில் தேவனது  ராஜ்யத்துக்கு நாம் நுழைவதற்குரிய   பாஸ்போர்ட்இந்திய  பாஸ்போர்ட் உள்ளவன் இந்திய குடிமகனாக உலக நாடுகளால்  என்றுகொள்ளப்படுவதுபோலத் தான் இதுவும்.

இந்த உரிமையினை நாம் பெறவேண்டியது அவசியமல்லவாஅன்பானவர்களேதேவனிடம் நம்மைத் தாழ்த்தி  ஜெபித்து நமது மீட்புக்காக வேண்டுவோம்தேவன்தாமே நமது பெயரை  ஜீவபுத்தகத்தில் பதிவிடுவார்அந்த நிச்சயம் நம்மை  மகிழ்ச்சிப்படுத்தும்

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்                       

     OUR NAME IN THE BOOK OF LIFE

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,026,        Sunday, November 19, 2023

“And there shall in no wise enter into it anything that defileth, neither whatsoever worketh abomination, or maketh a lie: but they which are written in the Lamb's book of life.” ( Revelation 21 : 27 )

Scripture mentions that; having our name written in the Book of Life as an important qualification for entering the Kingdom of Heaven. When a person is forgiven of his sins by God and comes into the redemption experience, God writes his name in the book of life. Like this, Only those whose names are written in the book of life will enter God's heavenly kingdom. This has been mentioned in the Bible in many places.

“And whosoever was not found written in the book of life was cast into the lake of fire.” ( Revelation 20 : 15 )

“And, I saw the dead, small and great, stand before God; and the books were opened: and another book was opened, which is the book of life: and the dead were judged out of those things which were written in the books, according to their works.” ( Revelation 20 : 12 )

When Paul mentions this, he writes, “And I intreat thee also, true yokefellow, help those women which laboured with me in the gospel, with Clement also, and with other my fellow labourers, whose names are in the book of life.” ( Philippians 4 : 3 )

Even the Old Testament worshiper Moses knew this. He was enraged when he saw that the people of Israel made a golden calf and worshiped it saying 'This is the God who delivered us from the Egyptians'. He asked God for forgiveness for them. Then he said, “Yet now, if thou wilt forgive their sin--; and if not, blot me, I pray thee, out of thy book which thou hast written.” ( Exodus 32 : 32 )

That is, Moses had a higher idea that the people of Israel who had sinned should receive forgiveness first than his name being written in the book of life. “And the LORD said unto Moses, whosoever hath sinned against me, him will I blot out of my book.” ( Exodus 32 : 33 )

Beloved! Many Bible devotees were well aware of this fact that God writes the names of redeemed people in the Book of Life.

Even the governments of the world today have various sources of name registrations. For example, Birth Certificate, Aadhaar Card etc. If we do not have Aadhaar identity card, we cannot be accepted as Indian citizens. Aadhaar enrolment is important for any job you apply to the government.

That is why today people rush to get birth certificate within a few months of their child's birth. They are also trying to get Aadhaar card. Beloved, in the same way God has set the record of names in the Book of Life. If we have the certainty that our sins are forgiven, then our name is written in the book of life. It is in a way our passport to enter the kingdom of God. It is like a person holding an Indian passport is considered an Indian citizen by the world.

Shouldn't we get this right? Beloved, let us humble ourselves and pray to God for our salvation. God himself will write our name in the book of life. That will surely make us happy.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

Friday, November 17, 2023

யேகோவாயீரே / JEHOVAH -JIREH

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,025,             நவம்பர் 18, 2023 சனிக்கிழமை

"ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது." ( ஆதியாகமம் 22 : 14 )

ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிடத் துணிந்து மோரியா நாட்டிற்குச் சென்று தனக்குக் கர்த்தர் குறித்த  மலைமீது ஏறி ஈசாக்கைப் பலியிடத் தயாரானபோது கர்த்தரது தூதன் இறுதியில் அவரைத் தடுத்து நிறுத்தினார். ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்ப்படிபவர் என்றும் அவருக்காக எதனையும் செய்யத்துணிந்தவர் என்பதும் உறுதியானது. தேவன் ஏதாவது அதிசயம் செய்து தனது மகனைக் காப்பாற்றுவார் என்பது ஏற்கனவே ஆபிரகாமுக்குத் தெரிந்திருந்தது.  எனவேதான் ஈசாக்கு அவரிடம், "அப்பா, பலியிட விறகுகளும் நெருப்பும் இருக்கின்றன. பலியிட ஆட்டுக்குட்டி எங்கே?" என்று கேட்டபோது ஆபிரகாம், "என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார்." ( ஆதியாகமம் 22 : 8 ) என உறுதியாகக் கூறுகின்றார். 

காரணம், ஈசாக்கு தேவனால் வாக்களிக்கப்பட்ட மகன். தான் அவனைப் பலியிட்டாலும் தேவன் மீண்டும் அவனை உயிரோடு எழுப்புவார் என்று ஆபிராகாம் நம்பினார். இதனை, "ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாகுத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்." ( எபிரெயர் 11 : 19 ) என்று வாசிக்கின்றோம்.

எனவே, அவர் விசுவாசத்தால் கூறிய வார்த்தைகளை தேவன் அங்கீகரித்தார். "ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்." ( ஆதியாகமம் 22 : 13 ) ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டார்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று பெயர் உண்டானது. 

அன்பானவர்களே, புதிய ஏற்பாட்டுக்கால மக்களாகிய நமக்கு கொல்கொதா மலை ஒரு யேகோவாயீரே. ஈசாக்குக்காக பலியான ஆடுபோல நமக்காக பலியான ஆடுதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆம்,  இதனையே யோவான் ஸ்நானன் மக்களுக்குச் சுட்டிக்காட்டினார். "இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.' ( யோவான் 1 : 29 ) என்று வாசிக்கின்றோம்.
 
அன்று ஆபிரகாமிடம் பிதாவாகிய தேவன் அமைதியாக இருந்திருந்தால் ஈசாக்கு பலியாகியிருப்பான். அதுபோல,  கிறிஸ்துவாகிய தேவ ஆட்டுக்குட்டியை  பிதாவாகிய தேவ கொடுக்காமல் அமைதியாக இருந்திருந்தால் நாமெல்லோரும் அழிந்துபோயிருப்போம். நமக்காக கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்பட்டதால் நாம் உன்னதங்களில் அவரோடுகூட அமரக்கூடிய வாய்ப்பினைப் பெற்றுள்ளோம்

இந்த உறுதியில்தான் அப்போஸ்தலரான பவுல், "தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" ( ரோமர் 8 : 32 ) என்று கூறுகின்றார். தனது சொந்த மகனையே நமக்காகத் தந்தவர் அவரோடுகூட மற்ற எல்லாவற்றையும் எப்படி நமக்குத் தராமல் இருப்பார்?

தேவன் மேலுள்ள நமது விசுவாசம் உறுதியாகும்போது அவரே நமது யேகோவாயீரே யாக இருப்பார். அன்று மோரியா மலையில் ஆபிரகாமுக்குப் பார்த்துக்கொண்டதுபோல நாம் கல்வாரியை நோக்கிப் பார்க்கும்போது நமக்கும் எல்லாம் பார்த்துக்கொள்ளப்படும். கிறிஸ்துவைவிட்டு விலகாத விசுவாசத்தோடு அவரையே பற்றிக்கொள்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்          

                  JEHOVAH-JIREH

‘AATHAVAN' BIBLE MEDITAION - No: - 1,025,                         Saturday, November 18, 2023

"And Abraham called the name of that place Jehovah-jireh: as it is said to this day, In the mount of the LORD it shall be seen." (Genesis 22: 14)

When Abraham dared to sacrifice Isaac, went to the land of Moriah and climbed the mountain the Lord had told him to sacrifice Isaac. But, the angel of the Lord stopped him at the end. It is certain that Abraham obeyed God and was willing to do anything for Him. Abraham already knew that God would do something miraculous to save his son. So, when Isaac said to him, "Father, here is wood and fire, where is the lamb for the sacrifice?" Abraham said, "God will provide himself a lamb for a burnt offering:" (Genesis 22: 8) says with certainty.

The reason is that Isaac was the promised son of God. Abraham believed that even if he sacrificed him, God would raise him back to life. This we read, Of whom it was said, "That in Isaac shall thy seed be called: Accounting that God was able to raise him up, even from the dead; from whence also he received him in a figure.” (Hebrews 11: 18,19)

Therefore, God approved the words he spoke by faith. "And Abraham lifted up his eyes, and looked, and behold behind him a ram caught in a thicket by his horns: and Abraham went and took the ram, and offered him up for a burnt offering in the stead of his son." (Genesis 22: 13) Abraham called the name of the place Jehovahjireh: as it is said to this day, In the mount of the LORD it shall be seen.

Beloved, for us New Testament people, Golgotha is Jehovah-jireh. The Lord Jesus Christ is the sacrificial goat for us like the sacrificial goat for Isaac. Yes, this is what John the Baptist pointed out to the people. "Behold the Lamb of God, which taketh away the sin of the world." (John 1: 29)

If God the Father had been silent to Abraham that day, Isaac would have been sacrificed. Similarly, if God the Father had not given Christ the Lamb of God, we would all have perished. Having been taken care of for us on the mountain of the Lord, we have the opportunity to sit with Him on high.

It is in this assurance that the apostle Paul said, 'He that spared not his own Son, but delivered him up for us all, how shall he not with him also freely give us all things?' (Romans 8: 32) How can he who gave his own Son for us not also give us everything else?

When our faith in God is firm, He will be our Lord. All things will be taken care of for us when we look toward Calvary, just as Abraham was taken care of on Mount Moriah. Let's cling to Christ with unwavering faith.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash                    

Thursday, November 16, 2023

உலக ஆசீர்வாதங்களுக்காக மட்டும் / ONLY FOR WORLDLY BLESSINGS

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,024,              நவம்பர் 17, 2023 வெள்ளிக்கிழமை

"அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சைரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்." ( ஓசியா 7 : 14 )

மெய்யான மனம் திரும்புதலின்றி தங்களுக்கு ஏதாவது துன்பமோ பிரச்சனைகளோ ஏற்படும்போது மட்டும் தேவனை நோக்கி ஜெபிக்கும் மக்களைக் குறித்து  இன்றைய தியான வசனம்  கூறுகின்றது. 

இத்தகைய மனிதர்கள் துன்பங்களோ  வியாதிகளோ நெருக்கும்போது தேவனுக்கு ஏற்புடையதுபோன்ற காரியங்களில் அதிகமாக ஈடுபடுவார்கள். ஜெபம், தவம், காணிக்கைகள், ஆலயங்களுக்குச் செல்லுதல் எனத் தங்கள் வாழ்க்கை முறைகளில் சில மாறுதல்களைச்  செய்வார்கள். ஆனால், பொதுவாக இத்தகைய மனிதர்கள் தன்னைத் தேடவில்லை என்று வருத்தத்துடன் கூறுகின்றார் தேவன். 

இதனையே, "தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சைரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்." என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது, தேவனை வாழ்வில் அறியவேண்டும் எனும் எண்ணத்தில் தேவனிடம் வராமல் தங்கள் உலகத் தேவைகள் சந்திக்கப்படவேண்டும் என்பதற்காக இப்படி பக்திகாரியங்களில் ஈடுபடுகின்றார்கள் என்கின்றார் தேவன்.  

இதனையே தொடர்ந்து ஓசேயா மூலம் தேவன் கூறுகின்றார், "திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமானவரிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போலிருக்கிறார்கள்; " ( ஓசியா 7 : 16 ) அதாவது இத்தனைக் காலமும் வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மாற்றி தேவனிடம் திரும்பியதுபோல ஒரு தோற்றம் இருக்கின்றதே தவிர உன்னத தேவனிடம் உண்மையாகத் திரும்பவில்லை என்கின்றார். இதனையே, "திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமானவரிடத்திற்கு  அல்ல" என்று கூறப்பட்டுள்ளது. 

அன்பானவர்களே, பலவேளைகளில் தேவன் நமக்குப்  பதிலளிக்காமல் இருக்கக் காரணம் இதுதான். அதாவது அந்த நேரத்திற்கான ஒரு விடுதலையினை மனிதர்கள் எதிர்பார்க்கின்றார்களேத்  தவிர நிரந்தரமான ஒரு விடுதலையினை அடையவேண்டும் என்று விரும்பவில்லை. தேவனை வாழ்வில் அறியவேண்டும் எனும் எண்ணமும் அவர்களுக்கு இல்லை.

ஆனாலும், தேவன் மனிதர்கள்மீது தான் கொண்டுள்ள அன்பினால் பலவேளைகளில் தனது ஊழியர்கள் ஜெபிக்கும்போது இத்தகைய மனிதர்களுக்குத் தற்காலிக விடுதலையினைக் கொடுக்கின்றார்.  ஆனால் அது போதாது. ஒவ்வொரு நேரத்துக்கும் ஊழியர்களைத்தேடி சுகம் பெற முடியாது. தொடர்ந்து மனம்திரும்பாத நிலையில் ஒரு மனிதன் இருப்பானேயானால் தேவன் விடுதலையளிக்காமல் அப்படியே விட்டுவிடலாம். மேலும் சரீர சுகம் பெறுவது நமது இலக்கல்ல; மாறாக நாம் தேவனை அறிந்து நித்திய ஜீவனுக்குத்  தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டும். 

தானியத்துக்காகவும் திராட்சைரசத்துக்காகவும் கூடி தேவனைவிட்டு விலகிப்போகும் மனிதர்களைப்போல நாம் இருக்கக் கூடாது. அவரை வாழ்வில் அறியவேண்டும் எனும் ஆர்வமுடன் அவரைத் தேடி தேவ அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும். நம்மைக்குறித்த தேவனது எதிர்பார்ப்பு இதுதான். அவரது மன விருப்பத்துக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம்.   

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்             

     ONLY FOR WORLDLY BLESSINGS 

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,024,                            Friday, November 17, 2023

"And they have not cried unto me with their heart, when they howled upon their beds: they assemble themselves for corn and wine, and they rebel against me." (Hosea 7: 14)

Today's meditation verse talks about people who pray to God only when they have some suffering or problems without true repentance.

Such people seems to be more involved in things that are acceptable to God when suffering or illness is close. They will make some changes in their lifestyle like prayer, penance, offerings, visiting temples. But God says with sadness that usually such people do not seek Him.

That is, "they have not cried unto me with their heart, when they howled upon their beds: they assemble themselves for corn and wine." In other words, God says that they engage in such pious activities to meet their worldly needs without coming to God with the intention of knowing God in life.

Following this, God says through Hosea, "They return, but not to the most High: they are like a deceitful bow:" (Hosea 7: 16). Which means that they have changed their lifestyles and returned to God, but they have not truly returned to the Most High God. This is what is said, "They return, but not to the Most High."

Beloved, this is the reason why God often does not answer us. That is, people expect a liberation for that time but do not want to achieve a permanent liberation. They have no idea to know God in their life.

However, God, out of His love for people, sometimes gives temporary relief to such people when His servants pray. But that is not enough. It is not always possible to find pastors to pray for us. If a person is persistently unrepentant, God may leave him without deliverance. Further, physical deliverance is not our goal; Rather, we must know God and become worthy of eternal life.

We must not be like men who gather for grain and wine and turn away from God. We should seek Him with the desire to know Him in life and gain the experience of God. This is God's expectation of us. Let us commit ourselves to living a life according to His will.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash