Thursday, August 17, 2017

தேவ ஊழியன்


தேவ ஊழியன் 

     - எம். ஜியோ பிரகாஷ் 

தேவ ஊழியனுக்குரிய தகுதிகளாக வேதத்தில் நாம் காண்பவை:-  

1.ஜெபத்தில் நிலைத்திருப்பவன், விழித்திருப்பவன் (கொலோ 4:2, 1 தெச - 5:17)

2. வேத அறிவு மிக்கவன்  (கொலோ 4:6)

3. தேவனோடு நடப்பவன் (1.கொரி -11:1)

4. பேச்சும் பிரசாங்கமும் ஆவியின் பெலத்தினால் உறுதிப்படுத்தப்பட்டவன்  (1.கொரி -2:5)

5. தேவனின் உடன் ஆளாகப் பணி  செய்பவன் (1.கொரி -3:9)

6. தன் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறவன் (1.கொரி -9:27)

7. சுவிசேஷ அறிவிப்புப் பணியை பெருமைக்காகச் செய்யாமல் கடமை எனக் கருதிச்  செய்பவன்  (1.கொரி -9:16)

8. எல்லாருக்கும் எல்லாமாக இருக்க முயல்பவன்  (1.கொரி -9:22)

9. கிறிஸ்துவைப் பின்பற்றுபவன் (1.கொரி -11:1)

10. தேவ வசனத்தை தேவன் அருளியபடியே பிரசங்கிப்பவன் (2.கொரி -2:17, 1 பேதுரு 4:11)

11. பிறருக்கு இடறல் செய்யாமலிருப்பவன் (1.கொரி -6:3)

12. மாம்ச இச்சைகளை (உடல் ஆசைகளை) சிலுவையில் அறைந்தவன் (கலா 5:24)

13.  மனுஷருக்கென்று ஊழியம் செய்யாமல் கர்த்தருக்கென்றே ஊழியம் செய்பவன் (எபே  6:8)

14. மனுஷருக்குப் பிரியமாயிருக்க  விரும்பி பார்வைக்கு ஊழியம் செய்யாமல் கர்த்தருக்கென்று மனப்பூர்வமாய் ஊழியம் செய்பவன் (எபே  6:6)

15. கிறிஸ்துவின் குரலைத் தன்னுள் கேட்கும் அனுபவம் உள்ளவன் (2.கொரி -13:3)

16. குற்றம்சாட்டப்படாதவன் (தீத்து 17:9)

17. தன் சுய விருப்பத்தின்படி எதுவும் செய்யாதவன் (தீத்து 17:9)

18. முன்கோபமில்லாதவன் (தீத்து 17:9)

19. மதுபான பிரிய மில்லாதவன் (1.திமோ 3:3)

20. இழிவான ஆதாயத்தைத் தேடாதவன் (1.திமோ 3:3)

21. களவு செய்யாதவன் ( ரோமர் 2:21)

22. விபச்சாரம் செய்யாதவன் ( ரோமர் 2:22)

23. தேவனால் அழைப்பு பெற்றவன் (எபி 5:4)

No comments:

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

சங்கீதம் 44: 6 / Psalm 44:6

  வேதாகமத் தியானம் - எண்:- 1,434 'ஆதவன்' 💚ஜனவரி 11 , 2025. 💚சனிக்கிழமை "என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பத...