Thursday, December 01, 2022

கிருபையினால் மீட்பு

 ஆதவன் 🖋️ 674 ⛪ டிசம்பர் 02,  2022 வெள்ளிக்கிழமை

"அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 : 15 )

கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொண்ட யூதர்களை வதைத்துத் துன்புறுத்தி  சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்த சவுலை தேவன் சந்தித்து பவுலாக மாற்றினார். சவுல் மனம்திரும்பிய செய்தி முதன்முதலில்  தமஸ்கு நகரைச் சார்ந்த அனனியா எனும் பெயருள்ள மனிதனுக்கு அறிவிக்கப்படுகின்றது. 

இயேசு கிறிஸ்து அளித்த தரிசனத்தால் கண்பார்வையை இழந்த சவுல் எனும் பவுலை நேரில் சென்று சந்தித்து அவர் பார்வை அடையும்படி வேண்டுதல்செய்ய தேவன் அனனியாவை அனுப்புகின்றார். அப்போது அனனியா சவுளிடம் செல்ல பயப்படுகின்றார். ஏனெனில் சவுல் கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொண்ட யூதர்களைத் துன்பப்படுத்துவதை அனனியா நன்கு அறிந்திருந்தார். அப்போது தேவன் அனனியாவிடம் சவுல் இப்போது பழைய சவுல் அல்ல; அவர் நான் தெரிந்துகொண்ட பாத்திரம் என்று சொல்லி அவரிடம் செல்லுமாறு அனுப்புகின்றார்.  

"அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்." என்று பவுலை தேவன் எதற்காகப் பயன்படுத்தப்போகின்றார் என்பதையும் தேவன் அனனியாவிடம் கூறுகின்றார். 

அன்பானவர்களே, இன்று நாமும் பவுலைப்போல கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்படுபவர்களாகவே பலவேளைகளில் இருக்கின்றோம். பவுல் கிறிஸ்தவர்களை உண்மையினை அறியாமல் துன்புறுத்தினார், நாம் அறிந்தே நமது தகாத பாவச் செயல்களால் கிறிஸ்துவைத் துன்புறுத்துகின்றோம். 

பவுல் தனது பாவங்களை முதலிலேயே கிறிஸ்துவிடம்  அறிக்கையிடவில்லை;  தான் செய்தது பாவம் என்று உணரவும் இல்லை. ஆனால் தேவன் அவரைச் சந்தித்தார்.  ஆம், பவுல் கிறிஸ்துவை அறிந்துகொண்டது கிருபையினால்தான். எனவேதான் அவர் மீட்பு அனுபவத்தைப் பற்றிக் கூறும்போது, "கிருபையினால் மீட்பு" என்று கூறுவார். "இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்." ( ரோமர் 3 : 24 ) எனப்  பவுல் கூறக்  காரணம் இதுதான். 

மேலும், பவுல் கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்பட்டாலும் அது அறியாமையினாலும், தேவன் அருளிய நியாயப்பிரமாணக் கட்டளைகளைமேல் கொண்ட நம்பிக்கையாலுமே  அப்படிச் செயல்பட்டார். அவருக்கு அவர் நம்பிய யூத மதபோதனையில் உறுதியான நம்பிக்கை இருந்தது. எனவே அதற்கு எதிரான செயல்களை கிறிஸ்தவர்கள் போதிக்கிறார்கள் என்று அவர்கள்மேல் கோபம்கொண்டதனால்தான் அவர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார். ஆனால் இன்று நமக்கு அத்தகையைச் சூழல் இல்லை. கிறிஸ்துவின் மீட்பு பற்றி அறிந்திட மேகம்போன்ற திரளான சாட்சிகள் நமக்கு உண்டு (எபிரெயர் 12:1) எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

நமது உள்ளான மன எண்ணங்கள், கடவுளை அறியவேண்டும் எனும் ஆர்வம், நீதியான வாழ்க்கை இவை நமக்கு இருக்குமானால் நாமும் கிறிஸ்துவுக்குத் தூரமானவர்கள் அல்ல. நிச்சயமாக அவர் நமக்குத் தன்னை வெளிப்படுத்துவார். மட்டுமல்ல,  புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், அவருடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நம்மையும் தனது பாத்திரமாகத் தெரிந்துகொள்வார். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Redemption by Grace

AATHAVAN 🖋️ 674 ⛪ December 02, 2022 Friday

"For he is a chosen vessel unto me, to bear my name before the Gentiles, and kings, and the children of Israel." ( Acts 9 : 15 )

God met Saul who was persecuting people who had faith on Christ and was ruining the church and turned him into Paul. The news of Saul's conversion is first reported to a man named Ananias from Damascus.

God sends Ananias to personally meet Saul, who lost his sight due to a vision given by Jesus Christ, and pray for him to regain his sight. Ananias is afraid to go to Saul because Ananias knew well that Saul was persecuting the Jews who had faith in Christ. Then God told Ananias that Saul was no longer the old Saul; He tells him that he is the character God know and sends him to go to him.

"He is a chosen vessel unto me, to bear my name before the Gentiles, and kings, and the children of Israel." Here God also tells Ananias why God is going to use Paul.

Beloved, like Paul, we are often working against Christ today. Paul persecuted Christians without knowing the truth, we knowingly persecute Christ with our unseemly sinful actions.

Paul did not confess his sins to Christ at first; He did not feel that what he had done was a sin. But God met him. Yes, Paul came to know Christ by grace. That's why when he talks about his redemption experience, he says "Being justified freely by his grace through the redemption that is in Christ Jesus" ( Romans 3 : 24 )

Also, even though Paul acted against Christ, he did so out of ignorance and faith in the commandments of the law given by God. He had a strong faith in his Jewish teachings. So he persecuted the Christians because he was angry with them for teaching the opposite. But today we don't have such situation. "We also are compassed about with so great a cloud of witnesses" to tell us about Christ's salvation (Hebrews 12:1) so we must be alert.

If we have our inner thoughts, the desire to know God, and a righteous life, we are not far from Christ. Surely He will reveal Himself to us. Not only that, but to the Gentiles and kings, he will make us his vessels to proclaim his name.

Message :- Bro. M. Geo Prakash, Contact- 96889 33712

Wednesday, November 30, 2022

கனியுள்ள வாழ்க்கை

 ஆதவன் 🖋️ 673 ⛪ டிசம்பர் 01,  2022 வியாழக்கிழமை

"ஆவியின் கனியோஅன்புசந்தோஷம்சமாதானம்நீடியபொறுமைதயவுநற்குணம்விசுவாசம்சாந்தம்இச்சையடக்கம்இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." (  கலாத்தியர் 5 : 22, 23 )

ஒருமுறை ஹோட்டல் ஒன்றில் மாலை உணவருந்த சென்றிருந்தபோதுஒரு கிறிஸ்தவ ஊழியரும் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். "பேமிலி ரூம்என தனியே குறிக்கப்பட்டிருந்த அந்த அறையினுள் பலர் குடும்பம் குடும்பமாக அமர்ந்திருந்தனர்ஊழியர் ஆர்டர் செய்த உணவுப் பொருட்கள் வந்ததும்  அவர் எல்லோரும் பார்த்திருக்க ஜெபம் செய்யத் துவங்கிவிட்டார்அதனை எல்லோரும் கவனித்தனர்உணவு பரிமாற அங்கு நின்று கொண்டிருந்த  ஹோட்டல் பணியாளர்களும் கவனித்துக் கொண்டிருந்தனர்

ஜெபம் முடிந்தபின் பின் சாப்பிட ஆரம்பித்தனர்நான் அந்த ஊழியரைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.  அந்த  ஊழியர்  உணவு பரிமாறக்கூடிய பணியாளர்களிடம் கடுகடுப்பாகவே பேசிக்கொண்டிருந்தார்நானும் இந்த ஊழியர் இப்படி சப்தம்போட்டுக் கொண்டிருக்கிறாரே எண்ணிக்கொண்டிருந்தேன்.

ஒருகட்டத்தில் திடீரென்று பெரிய சத்தம் கேட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த அனைவரும் திடுக்கிட்டோம்அந்த ஊழியர் தனது ஜிப்பாவின் கையைச் சுருட்டிவைத்துக்கொண்டு எழுந்துநின்று ஒரு ஹோட்டல் பணியாளரை அடிப்பதற்குப் பாய்வதுபோல நின்றுகொண்டு  இருந்தார்பெரிய சத்தத்தில் திட்டிக்கொண்டிருந்தார்காரணம்அந்தப் பணியாளர் சாம்பாரை ஊற்றியபோது கவனக்குறைவாக சிறிது சாம்பார் ஊழியரது ஆடையில் பட்டுவிட்டது.  பிறகு அங்கு பணியிலிருந்த மேலாளர் வந்து சமாதானப் படுத்தினார்.

பல மதங்களிலுள்ள மக்களும் அங்கு இருந்தோம்இந்த ஊழியர் முதலில் ஜெபிக்காமல் சாப்பிட்டிருந்தால்கூட யாருக்கும் இவரை யார் என்று தெரிந்திருக்காதுமுதலில் ஜெபித்துத் தன்னை ஒரு கிறிஸ்தவன் என்றுக் காண்பித்து தனது சாட்சியற்ற செயலால் மற்றவர்கள் முன் கிறிஸ்துவை அவமானப்படுத்திவிட்டார் இவர். !

ஒரு ஆவிக்குரிய மனிதன் என்பது நமது வெள்ளை ஆடையிலோஜிப்பாவிலோ அல்லநமது சாட்சியுள்ள செயல்களில் விளங்கவேண்டும்இந்த சாட்சியுள்ள குணங்களையே கனிகள் என்று  வேதம் கூறுகிறதுநல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும்கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்...கனிகளால் மரத்தை அறிவர் என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?.

உள்ளான மனிதனில் மாற்றம் வராமல்வெளி அலங்காரங்களும்ஆவிக்குரிய மனிதன் என நம்மைக் காண்பிக்க நாம் எடுக்கும் முயற்சிகளும் தோல்வியாகவே முடியும்நல்ல குணம் என்பது இயற்கையாக வெளிவரும்அதற்கு முயற்சிகள் தேவையில்லைநான் மேலே குறிப்பிட்ட ஊழியரைவிட அமைதியாக சாந்தமாக செயல்படும் கிறிஸ்துவை அறியாத மக்கள் பலரை நான்பார்த்திருக்கிறேன்.

அன்பானவர்களே ! நமது வாழ்க்கையே சுவிசேஷ அறிவிப்புபக்கம் பக்கமாக எழுதுவதாலேயோ,  நீண்ட சொற்பொழிவுகளை கவர்ச்சியான முறையில் செய்வதாலேயே கிறிஸ்துவை அறிவிக்க முடியாதுஇன்று கிறிஸ்தவ ஊழியர்களைவிட மக்களைக் கவரக்கூடிய முறையில் பேசக்கூடிய அரசியல்வாதிகள் பலர் நமது நாட்டில் உள்ளனர்.

ஆவிக்குரிய மனிதன் என்பது நமது செயல்களால் மக்களுக்குத் தெரிய  வேண்டும்.  உதாரணமாக 50 பேர் பணிபுரியும் இடத்தில இருக்கிறீர்களா ? நீங்கள் ஆவிக்குரிய மனிதனானால் உங்கள் குணம் அந்த 50 பேரிலிருந்து வேறுபட்டுத் தெரியவேண்டும். "ஆவியின் கனிசகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். (  எபேசியர் 5 : 9 )"

கனி நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ தேவனிடம் நம்மை ஒப்படைத்து ஜெபிப்போம்நமது கனிகளைக் கொண்டு பிறரை ஆதாயமாக்கிக் கொள்வோம் ! 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Fruitful Life

 AATHAVAN 🖋️ 673 ⛪ December 01, 2022 Thursday

"But the fruit of the Spirit is love, joy, peace, longsuffering, gentleness, goodness, faith, Meekness, temperance: against such there is no law." ( Galatians 5 : 22, 23 )

Once, while I was having my dinner in a hotel, a Christian pastor came there with his family. Many families were sitting in that room which was marked separately as "Family Room". When the food ordered by the pastor arrived, he began to pray for the food and everyone in that room noticed it. The waiters who were standing there also watched it.

After the prayer, they started eating. As his behaviour was different, I had an eye on the pastor while eating my food.  The pastor was speaking harshly to the waiter. 

At one point we suddenly heard a loud noise and everyone eating were startled. The pastor stood up with the sleeve of his jacket rolled up, as if he was about to strike a hotel waiter. He was cursing loudly. The reason is that when the waiter served,  some gravy inadvertently got on the pastor's clothes. Then the hotel manager came and calmed down.

People of many religions were there. If this pastor had his food without praying first, no one would have known who he was. He has dishonored Christ before others by his unwitnessed act of first praying and pretending to be a Christian. 

A spiritual man is not to be identified with his white cloths or pretended life, but in the witnessing actions. The scriptures say that these witness qualities are fruits. A good tree bears good fruit, a bad tree bears bad fruit...Didn't Jesus Christ say that you know a tree by its fruits?.

Without a change in the inner man, external decorations and our efforts to present ourselves as a spiritual man will fail. Good character comes naturally. It does not require efforts. I have seen many people who do not know Christ who act more quietly and meekly than the pastor I mentioned above.

Beloved! Our lives are evangelism. Christ cannot be preached by page after page of writing or long sermons in an attractive manner. There are more politicians in our country today who can speak in a more persuasive manner than Christian ministers.

A spiritual man should be known by his deeds. For example, are you in an office where 50 people work? If you are a spiritual person, your character should be different from those 50 people. "For the fruit of the Spirit is in all goodness and righteousness and truth" (Ephesians 5:9)"

Let us surrender ourselves to God and pray for a fruitful life. Let's benefit others with our fruits!

Message :- Bro. M. Geo Prakash, Contact- 96889 33712

Tuesday, November 29, 2022

காணிக்கையால் அல்ல..

 ஆதவன் 🖋️ 672 ⛪ நவம்பர் 30,  2022 புதன்கிழமை

"தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது." ( ரோமர் 11 : 35, 36 )

இந்த உலகத்தில் மனிதர்கள் தங்களுக்கு ஏதாவது உதவித் தேவையென்றால் எந்த வழியிலாவது அதனைப் பெற்றிடத் தயங்குவதில்லை. அரசாங்கத்தில் ஏதாவது சலுகையோ அல்லது சான்றிதழோ தேவையென்றால் கைக்கூலி கொடுத்து அதனைப் பெற்றிடவே முயலுகின்றனர். மனிதர்களது இந்த குறுகிய புத்தி அவர்களை தேவனிடம் நெருங்கும்போதும் தொடருகின்றது. இதற்கு மக்களை வழிகாட்டும் ஊழியர்களும் ஒரு காரணம். 

தேவனிடம் ஏதாவது ஆசீர்வாதம் பெறவேண்டுமானால் அவருக்கு ஏதாவது கொடுக்கவேண்டும் என்று போதித்து மக்களை அப்படியே வழிநடத்துகின்றனர். ஆயிரம் ரூபாய்  காணிக்கை கொடுத்தால் தேவன் அதனைப் பத்தாயிரமாகத் திருப்பித் தருவார்; இரண்டாயிரம் கொடுத்தால் இருபதாயிரமாக திருப்பித் தருவார்  என்றும்  தேவனுக்குக் காணிக்கை கொடுக்கும் அளவினைப் பொறுத்தே அவர் நம்மை ஆசீர்வதிப்பார் என்றும்  முட்டாள் போதனையை பிரபல ஊழியர்கள் வழங்கி மக்களை தேவ அன்பில்லாதவர்களாக மாற்றிவிட்டனர். 

அதிகமாக காணிக்கை அளித்த செல்வந்தர்களது காணிக்கையையல்ல, ஏழை விதவையின் இரண்டு காசு காணிக்கையினைத்தான்  இயேசு கிறிஸ்து மேன்மையாகக் கருதினார். அந்தக் காணிக்கைக் குறித்து  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியது நமக்கு எப்போதும் நினைவில் கொள்ளவேண்டிய ஒன்றாகும். "அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்." ( மாற்கு 12 : 44 ) என்றார் இயேசு. மேலும், அந்த விதவை தனக்கு இரட்டிப்பான ஆசீர்வாதம் வேண்டுமென்று காணிக்கை கொடுக்கவில்லை; கர்த்தருக்குக் கொடுக்கவேண்டும் எனும் ஆர்வத்தில் கொடுத்தாள்.  

செல்வ ஆசீர்வாதங்கள் பெறவேண்டும் எனும் எண்ணத்தில் காணிக்கை கொடுக்கும் மனிதர்களைப் பார்த்துதான் அப்போஸ்தலரான பவுல், "தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது." என்று கூறுகின்றார். அதாவது நமக்கு தேவனது பதில் கிடைக்கும்படி அவருக்கு ஒன்றை நாம் கொடுக்கமுடியாது. ஏனெனில் இந்த உலகத்திலுள்ள அனைத்தும் அவராலும் அவர் மூலமாகவும் அவருக்காகவும் உண்டாகியுள்ளன.

நாம் ஒன்றை தேவனிடமிருந்து பெறுவது அவரது சுத்தக் கிருபையால்தானே தவிர அவருக்குக் காணிக்கைக் கொடுப்பதாலல்ல. இப்படிச் சொல்வதால் காணிக்கைக்  கொடுக்கவேண்டாம் என்று பொருளல்ல, காணிக்கையை நாம் மனப்பூர்வமாக, தேவனிடமுள்ள அன்பின் நிமித்தமாகக் கொடுக்கவேண்டுமே தவிர அவரிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் குறுகிய வியாபார நோக்கில் கொடுக்கக்கூடாது. ஏனெனில் அவர் நாம் கொடுத்து நிறைவடையும் நிலையில் உள்ள அற்பமானவரல்ல.  சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது.

அப்போஸ்தலரான யாக்கோபு கூறுகின்றார், "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை." ( யாக்கோபு 1 : 17 ) பிதாவாகிய தேவனிடமிருந்து தான் அனைத்து வரங்களும் இறங்கி வருகின்றன. அவரிடத்தில் அதிகம் காணிக்கைக்  கொடுத்தவன், குறைவாகக் கொடுத்தவன் என்ற வேற்றுமை இல்லை.  

தேவனது கிருபையினை வேண்டி மன்றாடவேண்டுமேதவிர, குருட்டு வழிகாட்டிகளான  போதகர்களது அறிவுரைக்கைக் கேட்டு  கிருபையினை இழந்து போய்விடக்கூடாது.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Not by Offering

AATHAVAN 🖋️ 672 ⛪ Wednesday, November 30, 2022

"Or who hath first given to him, and it shall be recompensed unto him again? For of him, and through him, and to him, are all things to whom be glory for ever. Amen." ( Romans 11 : 35,36 ) 

In this world, people do not hesitate to indulge in any crooked ways to get help to meet their needs. If they want any privilege or certificate from the Government departments, they try to get it by paying bribes. This narrow mindedness of men continues even with God. One reason for this is the preaching of Christian pastors and the so called evangelists of these days  who guide people.

They teach people that if they want to get some blessing from God, they have to give something to him. They preach, "If you give offering  of a thousand rupees, God will return it in ten thousand; if you give two thousand, you will get back twenty thousand".  Todays popular Christian ministers have made the love of God cease in people by their foolish teaching that, God will bless us depending on the amount we give.

Jesus Christ did not consider the offering of the rich who gave more, but the two pennies of the poor widow. What the Lord Jesus Christ said about that offering is something we should always remember. "For all they did cast in of their abundance; but she of her want did cast in all that she had, even all her living." ( Mark 12 : 44 ) Jesus said. Also, the widow did not give an offering because she wanted a double blessing; She gave it in love and with the desire to give to the Lord.

The apostle Paul looked at people who give offering with the intention of receiving rich blessings and says, "who hath first given to him, and it shall be recompensed unto him again? For of him, and through him, and to him, are all things..." That means we cannot get blessings from God by giving him money. For all things in this world were made by Him and through Him and for Him.

We receive something from God only by His sheer grace and not by giving Him an offering. By this you should not misunderstand that we should not give offerings, what I am saying is, we should give offerings consciously, out of love for God, but not with the worldly purpose of getting something from Him. Because He is not a beggar whose desires are to be fulfilled by us. All things in this world are by him and for him.

The apostle James says, "Every good gift and every perfect gift is from above, and cometh down from the Father of lights, with whom is no variableness, neither shadow of turning." ( James 1 : 17 ). All blessings come from God the Father. With Him there is no difference between those who give more and those who give less.

We should not lose grace by heeding to the advice of blind guides but should plead for God's grace. 

Message :- Bro. M. Geo Prakash, Contact- 96889 33712

Monday, November 28, 2022

கிறிஸ்துவைப்போல

 ஆதவன் 🖋️ 671 ⛪ நவம்பர் 29,  2022 செவ்வாய்க்கிழமை

"நீர்மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 : 29 )

ரோமாபுரியில் நியாய விசாரணைக்குட்பட்டிருந்த அப்போஸ்தலரான பவுல் தனதுபக்க நியாயத்தை எடுத்துரைக்கும்போதும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்தார். அவரது பேச்சு அகிரிப்பா ராஜாவையே கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்கும்படி தூண்டக்கூடியதாக இருந்தது.  "அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்."( அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 : 28 )

அவனுக்குப் பதில் மொழியாகத்தான் அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தைக் கூறுகின்றார். அதாவது தனது சுவிசேஷத்தைக் கேட்கும் எல்லோரும் தன்னைப்போல கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொண்டவர்களாக மாறவேண்டும் என்று பவுல் விரும்பினார். 

இதுவரை உலகினில் பிறந்த எவரும் கூறத்துணியாத; கூறமுடியாத வார்த்தைகளை அபோஸ்தலரான பவுல் கூறினார். ஆம், "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்." ( 1 கொரிந்தியர் 11 : 1 ) என்றார்.

அன்பானவர்களே, இன்று நாம் இதுபோலக் கூற முடியாதுதான்.  ஆனால் அவர் கிறிஸ்துவின்மேல் எவ்வளவு வைராக்கியமாக அன்பு கொண்டிருந்தார் என்பது அவரது வாழ்கையினைப் பார்த்தால் புரியும். அந்த அன்பு, அவரை கிறிஸ்துவுக்காக வாழவும், அவரைப் பிரதிபலிக்கவும் அவருக்காக மரிக்கவும் தூண்டியது. 

இன்று அப்போஸ்தலரான பவுல் அடிகளின் வாழ்க்கை நமக்கு முன்னுதாரணமாக உள்ளது. கிறிஸ்துவின் வாழ்க்கையைப்பற்றிக் கூறும்போது சிலர் அவரது மனிதத் தன்மையைப் புரிந்துகொள்ளாமல், "அவர் தேவ குமாரன், அவரைப்போல நாம் வாழ முடியாது என்று சாக்குப்போக்குக் கூறுவதுண்டு. அவர்களுக்குப்  பதில் அப்போஸ்தலரான பவுலடிகளின் வாழ்க்கையும் அவரது பேச்சும். 

கிறிஸ்து தேவ குமாரன் எனவே அவரைப்போல வாழ முடியாது என்பவர்கள்,  "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்." எனும் பவுல் அடிகளின் வார்த்தைகளைக் கேட்டு அவரைப் பின்பற்றலாமல்லவா?

பல புனிதர்களும் மனிதர்களாக இந்த பூமியில் வாழ்ந்தவர்கள்தான். ஆனால் பரிசுத்த வாழ்க்கை வாழத் தங்களை அர்ப்பணித்தவர்கள். சாதாரண உலக மனிதர்கள்கூட, எப்போதுமே "நமது இலக்கு மேலானதாக இருக்கவேண்டும்" என பிறருக்கு அறிவுரை கூறுவார்கள். அப்படியிருக்க,   ஆவிக்குரிய நமக்கோ அந்த இலக்கு எல்லாவற்றையும்விட மேலானதாக இருக்கவேண்டியது எவ்வளவு முக்கியம்!!!

நமது பந்தயப் பொருளான கிறிஸ்துவைநோக்கி நாம் ஓடவேண்டியது அவசியம்.  அப்படி ஓடிட பரிசுத்த ஆவியானவரின் துணையும் வழிகாட்டுதலும் நமக்கு அவசியம். நமது இலக்கு கிறிஸ்துவைப்போலவும் குறைந்தபட்சம் அப்போஸ்தலரான பவுல் அடிகளைப்போலவும் மாறுவதாக  இருக்கட்டும். அப்படி நம்மை மாற்றி வாழ்ந்திட முயலுவோம்; ஜெபிப்போம். கர்த்தர்தாமே நமது ஆசை நிறைவேறிட உதவிடுவார்.  

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ஓசியா 6 : 1 / Hosea 6:1

" ஆதவன் " தியானம் - 1978 ஜூலை 08, புதன் 2026       "கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் ...