Tuesday, December 31, 2024

Meditation verse - ஏசாயா 45: 2 / Isaiah 45:2

 வேதாகமத் தியானம் - எண்:- 1,425

'ஆதவன்' 💚ஜனவரி 02, 2025. 💚வியாழக்கிழமை


"நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்." (ஏசாயா 45: 2)

இந்தியாவில் நாம் அடிக்கடி பார்க்கக்கூடிய ஒரு காட்சி, ஆட்சியாளர்கள் வரும்போது  நடைபெறும்  அதிரடியான சாலைப் பராமரிப்பு. பல ஆண்டுகள் செப்பனிடப்படாமல் மக்களுக்கு இடையூறாக குண்டும் குழியுமாக இருக்கும் ன சாலைகள் முதல்வரோ பிரதமரோ வருகின்றார் என்றால் இரவுபகல் வேலை நடப்பித்து அவசரகதியில் செப்பனிடப்படும்.  தலைவர்கள் எந்தச் சிரமுமின்றி பயணிக்கவேண்டும் என்பதே இந்த அவசர சாலைப் பராமரிப்பின் நோக்கமாகும். 

நமது தேவன் நம் ஒவ்வொருவரையும் விலைமதிக்கமுடியாத தலைவர்களைப்போலவே பார்க்கின்றார். எனவேதான் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார், "நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்." என்று. நமது வாழ்க்கைப் பயணம் பல்வேறு சிக்கல்களையும் பிரச்சனைகளையும் கொண்டதாக இருந்தாலும் நமக்குமுன்னே அவர் செல்வேன் என்று கூறுகின்றார். 

அன்று மோசேக்கு "என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்" ( யாத்திராகமம் 33: 14) என்று வாக்களித்த கர்த்தர் வாக்கு மாறாதவராகவே இருக்கின்றார். கர்த்தரது சமுகம் நமக்கு முன்பாகச் செல்லும்போது கோணலானவைகள் நேரக்கப்படும் என்பது நாம் அறியாத ஒன்றல்ல.  ஆம் அன்பானவர்களே, தேவன் அன்று மோசேயை கானானுக்கு நேராக வழிநடத்தியது போலவே இன்று நம் ஒவ்வொருவரையும் பரம கானானை நோக்கி வழிநடத்தி வருகின்றார். எனவே  நமக்குமுன் கோணலாக இருப்பவைகளை நேராக்கி நடத்துகின்றார். 

கோணலானவைகளை நேராக்கிவிட்டு அவர் நம்மை விட்டுவிடுவதில்லை. அவர் நம்மோடு கூடவே இருக்கின்றார். மோசேயை அடுத்து மக்களை வழிநடத்திய யோசுவாவிடம் அவர் கூறினார், "பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்." ( யோசுவா 1: 9) என்று. நேர் வழியை உண்டாக்கிவிட்டு அவர் சென்று விடுவதில்லை. நம்மோடு கூடவே இருக்கின்றார். எனவே நமது வாழ்வின் இலக்கு உண்மையாகவே பரம கானானை நோக்கியதாக இருக்குமானால் நாம் பயப்படத் தேவையில்லை. 

நமது இலக்கு எப்போதுமே பரம கானானை நோக்கியதாக இருக்கவேண்டியது அவசியம். அப்படி இருக்குமானால், "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." (1 பேதுரு 2: 9) என அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோல இருப்போம். 

இதற்கு மாறாக நமது முழு விருப்பத்தையும் உலக ஆசீர்வாதங்களின்மேலும் உலக காரியங்களை அடைவதிலும் வைத்திருந்தோமானால் இன்றைய தியான வசனம் நமது வாழ்வில் செயல்பட முடியாது. ஆம் அன்பானவர்களே, இந்த தியானத்தின்  ஆரம்பத்தில் நாம் பார்த்ததுபோல தலைவர்கள் வரும்போது மட்டுமே அவர்களது பயணத்துக்கு  அவசரமான சாலைப் பராமரிப்புச் செய்யப்படுகின்றது. தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது மட்டுமே தேவன் நம்மைத் தலைவர்களைப்போல சிறப்பாக நடத்துவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

Bible Meditation - No. 1,425 

AATHAVAN 💚 January 2, 2025, 💚 Thursday 

"I will go before thee and make the crooked places straight." (Isaiah 45:2)

In India, a familiar scene is the sudden and vigorous road maintenance that happens when high-ranking officials visit. Roads, which have remained neglected for years, riddled with potholes and in a state of disrepair, are hurriedly fixed overnight if the Chief Minister or Prime Minister is expected to travel on them. The purpose is to ensure that the leaders face no difficulties during their journey.

Our God sees each of us as priceless leaders, deserving the same care and attention. That is why He declares in today’s meditation verse, "I will go before thee, and make the crooked places straight." No matter how complicated or challenging our life's journey may be, He promises to go ahead of us.

When Moses was burdened with leading the Israelites, the Lord assured him, "My presence shall go with thee, and I will give thee rest." (Exodus 33:14) The Lord who made this promise remains unchanging. His presence going before us ensures that crooked paths are made straight. Just as He led Moses towards the Promised Land, today, He leads each of us towards the ultimate Promised Land—heaven.

Moreover, He does not abandon us after straightening our paths. When Joshua succeeded Moses as leader, God encouraged him, "Be strong and of a good courage; be not afraid, neither be thou dismayed: for the Lord thy God is with thee whithersoever thou goest." (Joshua 1:9) God not only prepares a straight path but also walks with us, guiding and protecting us.

As long as our life’s ultimate goal is the heavenly Promised Land, there is no need to fear. "But ye are a chosen generation, a royal priesthood, an holy nation, a peculiar people; that ye should shew forth the praises of him who hath called you out of darkness into his marvellous light." (1 Peter 2:9)

If, instead, we place our full desires on worldly blessings and achievements, today’s meditation verse cannot operate in our lives. Dearly beloved, just as roads are hastily repaired only for the convenience of worldly leaders, God will honour and guide us as leaders only when we live a life pleasing to Him.

Let us strive to live lives worthy of God’s guidance so that He may straighten our paths and lead us to His eternal glory.

God's Message by Bro. M. Geo Prakash

Monday, December 30, 2024

Comforting New Year Message - ஏசாயா 43: 18, 19 / Isaiah 43:18-19

 வேதாகமத் தியானம் - எண்:- 1,424

'ஆதவன்' 💚ஜனவரி 01, 2025. 💚புதன்கிழமை


"முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்." ( ஏசாயா 43: 18, 19)

அனைவருக்கும் ஆதவனின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

புதிய ஆண்டுக்குள் நாம் நுழைந்துள்ளோம். இனி நமது சிந்தனைகளும் எண்ணங்களும் புதியனவாக இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகின்றார். 

முந்தின நாட்களில் நாம் செய்துவந்த பாவகரமான எண்ணங்களையும்  செயல்களையும் அகற்றி  புதியனவற்றை சிந்திப்பவர்களாகவும் செய்பவர்களாகவும் நாம் இருக்கவேண்டும். நமது சிந்தனைகளும் செயல்களும் புதிதாகும்போது கர்த்தர் நமது வாழ்வில் புதிய காரியங்களைச் செய்து நம்மை ஆசீர்வதிப்பார். 

மட்டுமல்ல, ஒருவேளை கடந்த ஆண்டில் நமது வாழ்வில் சில விரும்பத்தகாத காரியங்கள் நடந்திருக்கலாம். அவைகளை எண்ணி நாம் கலங்கிக்கொண்டிருக்க வேண்டாம். "இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

வேலையின்மை, அதன் தொடர்ச்சியான வறுமை, கடன் பிரச்சனைகள், தீராத நோய்கள் போன்றவை நமது வாழ்வை வனாந்தரமாக மாற்றியிருக்கலாம்.  வாழ்வை எப்படித் தொடர்வோம் என நாம் அங்கலாய்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் தேவன் கூறுகின்றார், "நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்." என்று. 

ஆம் அன்பானவர்களே, தேவனுடைய கைகள் குறுகியவையல்ல. ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேரை வயிறார உண்ணச்செய்தவர் அவர். தனது கைகளை நீட்டியும் தனது வாயின் வார்த்தைகளினாலும் பல்வேறு நோய்களைக் குணமாகியவர். 

நம்பமுடியாத சூழ்நிலையிலும் எந்த நம்பிக்கையுமற்ற வேளையிலும் தேவனது கரம் நமக்கு உதவிடமுடியும். அந்த உதவியும் நாம் எதிர்பார்த்திராத வகையில் நமக்கு வந்து சேரும். எலிசா மூலம் தேவன் கூறினார், "நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்." (2 இராஜாக்கள் 3: 17) அதுபோலவே செய்துமுடித்தார். 

மட்டுமல்ல, எலிசா யோசாபாத்திடம் கூறினார், "இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்; மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்." (2 இராஜாக்கள் 3: 18) என்று. அதுபோலவே மோவாபியர் யோசபாத்திடம் தோல்வியுற்றனர். ஆம் அன்பானவர்களே, மோவாபியரைப்போன்று நமக்கு எதிராக இருக்கும்  காரியங்கள் கர்த்தரின் அற்புதமான செயல்களினால் நமக்குச் சாதகமாக முடியும். 

எனவே இந்த ஆண்டினை நம்பிக்கையுடன் தொடங்குவோம். கர்த்தரின் வல்லமைமிக்க கரம் நம்மோடுகூட இருந்து நம்மை வழிநடத்தும். "இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்." என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்        

Scripture Meditation - No: 1,424

AATHAVAN 💚 January 01, 2025. 💚 Wednesday

"Remember ye not the former things, neither consider the things of old. Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert." (Isaiah 43:18-19, KJV)

Greetings to all from AATHAVAN for a blessed New Year!

As we step into the new year, God desires that our thoughts and intentions should also become new.

We must set aside sinful thoughts and actions of the past and strive to be people who think and act afresh. When our thoughts and deeds are renewed, the Lord will do new things in our lives and bless us abundantly.

Moreover, if the past year brought undesirable events into our lives, we should not dwell on them and be disheartened. The Lord declares, "Behold, I will do a new thing."

Perhaps unemployment, persistent poverty, debt issues, or chronic illnesses have turned our lives into a wilderness. We may feel hopeless about how to move forward. But God assures us: "I will even make a way in the wilderness, and rivers in the desert."

Yes, beloved, God's hands are not shortened. He is the one who fed five thousand people with five loaves and two fishes. He is the one who healed various diseases through His outstretched hands and the power of His spoken word.

Even in impossible situations and times of hopelessness, the hand of God can intervene to help us. His help often comes in ways we do not anticipate. As Elisha declared through the Lord, "Ye shall not see wind, neither shall ye see rain; yet that valley shall be filled with water, that ye may drink, both ye, and your cattle, and your beasts." (2 Kings 3:17, KJV). And it happened exactly as promised.

Furthermore, Elisha said to Jehoshaphat, "This is but a light thing in the sight of the LORD: he will deliver the Moabites also into your hand." (2 Kings 3:18, KJV). Accordingly, the Moabites were defeated before Jehoshaphat.

In the same way, situations or challenges that stand against us like the Moabites can be turned around by God's miraculous acts for our benefit.

Let us, therefore, begin this year with faith and hope. The mighty hand of the Lord will guide us and lead us. He says: "Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert."

Message by: Bro. M. Geo Prakash
                                      

வேதாகம முத்துக்கள் - டிசம்பர் 2024



தேவ செய்தி - சகோ. எம். ஜியோ பிரகாஷ்  


வேதாகமத் தியானம் - எண்:- 1,393
'ஆதவன்' 💚டிசம்பர் 01, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை                               

"மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்." ( கலாத்தியர் 4: 6)

பழைய ஏற்பாட்டு பக்தர்கள் கடவுளை பல்வேறு விதமாக அழைத்து வழிபட்டனர். அரண், கன்மலை, சர்வ வல்லவர், ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன் என்று பல்வேறு முறையில் தேவனை அழைத்தனர். அதுமட்டுமல்ல, தேவனை அவர்கள் பயப்படத்தக்கவராகவே பார்த்தனர். கடவுளிடம் ஒரு பயத்துடனே நெருங்கினர். ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு புதிய முறையில் தேவனை நமக்கு அறிமுகப்படுத்தினார். 

தேவன் பயப்படத்தக்கவரல்ல, மாறாக அவர் ஒரு தகப்பனைப் போன்றவர். எனவே அவரை அப்பா என்று அழைக்க நமக்குக் கற்பித்தார். "பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே" என்று கூறும்போது பிதாவோடு நமக்கு ஒரு நெருக்கம் உண்டாகின்றது. வேறு எந்த அடைமொழியையும்விட அப்பா என்று தேவனை நாம் அழைக்கும்போது அவரது பிள்ளைகளைப்போலாகின்றோம். 

நாம் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவனோடு ஒப்புரவாகும்போது அவரது பிள்ளைகளாகின்றோம். அப்படி "புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்." என்று கூறப்பட்டுள்ளது. குமாரனுடைய ஆவி என்பது இயேசு கிறிஸ்துவின் ஆவியைக்குறிக்கின்றது. இயேசு கிறிஸ்துவுக்கு அவர் பிதா என்றால் நமக்கும் பிதாதான்  என்பதுதான் இந்த வசனம் கூறுவது. 

"ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்." ( கலாத்தியர் 4: 7) அடிமைகள்தான் எஜமானனுக்குப் பயப்படுவார்கள். நாம் அடிமைகளல்ல; மாறாக கிறிஸ்துமூலமாய் தேவனுடைய உரிமைக்குரியவர்கள் ஆகின்றோம். 

இன்றைய தியான வசனம் மூலம் நாம் அறிவது, நமக்குள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆவி செயல்பட நாம் அனுமதிக்கவேண்டும். அப்போதுதான் அவர் பிதாவுக்கு உரிமையானவரும் பிதாவிடம் உரிமையோடு நெருங்கக்கூடியவருமாக இருந்ததுபோல நாமும் பிதாவை நெருங்கமுடியும். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "..........கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8: 9) என்று. 

முன்பு நாம் நியாயப்பிரமாணக்  கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து தேவனுக்குத் தூரமானவர்களாக வாழ்ந்தோம். "நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்" (கலாத்தியர் - 4: 4,5) என்று கூறப்பட்டுள்ளது. எனவே அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது நாமும் அவரது குமாரர்களும் குமாரத்திகளுமாகின்றோம். 

ஆம் அன்பானவர்களே, நாம் நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு பாவ மன்னிப்பு பெறும்போது அவரோடுகூட பிதாவை அப்பா என்று கூப்பிடும் உரிமையினைப் பெறுகின்றோம். அப்பா பிதாவே என்று நாம் ஜெபிப்பதில் அர்த்தம் இருக்கவேண்டுமானால்; அப்படிக் கூப்பிடுவதை அவர் அங்கீகரிக்கவேண்டுமானால் நாம் பாவ மன்னிப்பு பெறவேண்டியதுதான் முதல் தேவையாக இருக்கின்றது.  

வேதாகமத் தியானம் - எண்:- 1,394
'ஆதவன்' 💚டிசம்பர் 02, 2024. 💚திங்கள்கிழமை                               

"நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்" ( பிலிப்பியர் 4: 11, 12)

அப்போஸ்தலரான பவுல் எல்லா விதத்திலும் கிறிஸ்துவைப்போல வாழ்ந்தவர். பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்திருந்தும் கிறிஸ்துவுக்காக அனைத்தையும் குப்பையாக விட்டவர் அவர். "அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்." ( பிலிப்பியர் 3: 11) என்று பிலிப்பியருக்கு எழுதுகின்றார். மேலும், "....எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்." ( பிலிப்பியர் 4: 12) என்கின்றார். 
 
இந்த அனுபவத்தில்தான் இன்றைய தியான வசனத்தில் நமக்கு,  "நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்" என்று எழுதுகின்றார்.  கிறிஸ்து இப்படித்தான் வாழ்ந்தார். 

இந்த உலகத்திலே வாழும் நம்மால்கூட முழுவதும் குடிகாரர்களும் கெட்டவார்த்தைகள் பேசும் துன்மார்க்க மக்களோடும்  சேர்ந்து வாழமுடிவதில்லையே அப்படி இருக்கும்போது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்தமான பரலோக மகிமையை விட்டுப் பாவிகளான  மனிதர்களோடு மனிதராக வாழ்ந்தாரென்றால் அது அவருக்கு எவ்வளவு கஷ்டமான காரியமாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.   ஆனால் அவர் உலகினில் மனமகிழ்ச்சியோடு இருந்தார். 

கிறிஸ்து பரலோக மகிமையைவிட்டு உலகினில் வந்து துன்பங்களை அனுபவித்ததுபோல அப்போஸ்தலரான பவுல் தனது செல்வத்தையும் இன்பமான வாழ்க்கையையும் கிறிஸ்துவுக்காக விட்டுவிட்டு பாடுகள் அனுபவித்தார். மட்டுமல்ல, "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்." (1 கொரிந்தியர் 11: 1) என்று நமக்கு ஆலோசனையும் கூறுகின்றார்.  

இந்த உலகத்தில் நம்மால் நமது சுய முயற்சியால் இப்படி வாழ முடியாதுதான். ஆனால் கிறிஸ்து நமக்குள் வரும்போது இப்படி வாழமுடியும் என்று நமக்குத் தனது அனுபவத்திலிருந்து எடுத்துக் கூறுகின்றார். ஆம், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." ( பிலிப்பியர் 4: 13) என்று இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அவர் கூறுகின்றார். 

அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல நாம்  எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொள்ள அழைக்கப்படுகின்றோம். நமது தாழ்விலும் வாழ்விலும் மனமகிழ்ச்சியாக நாம் இருக்கவேண்டுமானால் கிறிஸ்து நமக்குப் பெலன் அளிக்கவேண்டியது அவசியம். அத்தகைய பெலனை அவரிடம் வேண்டுவோம். அப்போது உலகத்தில் நமக்கு எந்தவித  ஏற்றத்தாழ்வுகள்  வந்தாலும் மனமகிழ்ச்சியாக இருக்க முடியும். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,395
'ஆதவன்' 💚டிசம்பர் 03, 2024. 💚செவ்வாய்க்கிழமை
                               
"அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?...................... வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்." ( யோவான் 7: 47 மற்றும்  49)

வேதாகமத்தைக் கற்று அறிவது என்பது வேறு,  தேவனைத் தனிப்பட்ட முறையில் அறிவது என்பது வேறு. வேதாகமத்தை ஒருவர் அறிந்திருப்பதால் மட்டும் நாம் அவரைத் தேவனை அறிந்தவர் என்று சொல்ல முடியாது. பலர் வேதாகமத்தை ஆய்வுசெய்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். ஆனால் அவர்களில் பலரும் தேவனைப்பற்றிய தனிப்பட்ட அறிவோ தேவனோடுள்ள உடனிருப்பையோ அறிந்தவர்களல்ல.

பரிசேயரும் பிரதான ஆசாரியரும் இயேசு கிறிஸ்துவைப் பிடித்துக்கொண்டு வருமாறு சேவகர்களை  அனுப்பிவைத்தனர்.  அந்தச் சேவகர்கள் கைதுசெய்ய சென்று இயேசு கிறிஸ்துவின் போதனைகளைக் கேட்டு அவரைக் கைதுசெய்யாமல் தங்களை அனுப்பிய பரிசேயரிடம் திரும்பிவந்து, "அந்த மனிதன் பேசுவதுபோல இதுவரை ஒருவனும் பேசியதில்லை" என்கின்றனர். அதாவது அவர்கள் இயேசுவின் போதனையால் மனதுக்குள் மாற்றமடைந்தனர். அப்போது பரிசேயர்கள் கோபத்துடன் அந்தச் சேவகர்களைப்பார்த்து, "நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?..................வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்." 

பிரதான ஆசாரியரும் பரிசேயர்களும் வேதத்தை நன்றாகக் கற்றவர்கள். அவர்களுக்குத் தங்களது வேத அறிவைக் குறித்தப்  பெருமை இருந்தது. ஆனால் அந்த வேத அறிவால் அவர்களால் கிறிஸ்துவை அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் பாமரமக்கள் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டனர். எனவே, வேதத்தைப்  படிக்காத மக்கள்தான் இயேசுவையும் அவரது போதனைகளையும் விசுவாசிப்பார்கள் என்று அவர்கள் கோபத்தில் கூறுகின்றனர். வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று சபிக்கின்றனர். 

ஆம் அன்பானவர்களே, பரிசேயர்களைப்போல நாம் வேதாகமத்தை வெறுமனே வாசிப்பது மட்டும் போதாது. அவரை அறிந்துகொள்ளவேண்டும் எனும் ஆர்வத்தில் ஆவியானவரின் துணையோடு வேதாகமத்தை நாம்  வாசிக்கவேண்டும்.  சாதாரண புத்தகத்தை வாசிப்பதுபோல வாசிப்போமானால் சுவிசேஷத்தின் ஒளி நமக்குள் பிரகாசிக்கமுடியாது. காரணம் இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் கிறிஸ்துவின் ஒளி நம்மில் பிரகாசிக்கமுடியாதபடி நமது மனக் கண்களைக் குருடாக்கிவிடுவான். 

இதனையே "தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." (2 கொரிந்தியர் 4: 4) என்று அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். 

வேதாகமக்  கல்வியறிவு  பெற்றவர்கள் எல்லாம் தேவனை அறிந்தவர்களுமல்ல; வேத அறிவு அதிகம் இல்லாதவர்கள் தேவனை அறியாதவர்களுமல்ல. மூளை அறிவினால் தேவனை அறியமுடியாது; தாழ்மையான மனமும் தேவனை அறியும் ஆர்வமுமே ஒருவரை தேவனை அறியச்செய்யும். தாழ்மையான உள்ளத்துடன் கிறிஸ்துவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வோம்; தேவனை அறியும் அறிவில் வளருவோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,396
'ஆதவன்' 💚டிசம்பர் 04, 2024. 💚புதன்கிழமை                               

"உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே." ( எபிரெயர் 6: 10)

தேவன் நமது பாவங்கள், துன்பங்கள், கண்ணீர்கள் அனைத்தையும் பார்க்கின்றார். நமது ஜெபங்களைக் கேட்கின்றார். ஆனால் அவற்றைமட்டுமல்ல, இன்றைய தியான வசனம் சொல்கின்றது, நாம் அவரது பரிசுத்த ஊழியர்களுக்குச் செய்யும் உதவிகள், தேவனது பெயரை உயர்த்துவதற்காக நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் அவர் பார்க்கின்றார்; அவற்றை மறந்துவிட அவர் அநீதியுள்ளவரல்ல.

இந்த உலகத்தில் சிலருக்கு நாம் உதவிகள் செய்யும்போது அவர்கள் சிலவேளைகளில் அவற்றை மறந்துவிடுவதுண்டு. சிலர் தங்களது வாழ்க்கைத் தகுதிநிலை  உயர்வடையும்போது தங்களுக்கு உதவியவர்களை மறந்துவிடுவதுண்டு. அப்படி உதவி பெற்றதை வெளியில் சொன்னால் தங்களுக்கு அது அவமானம் என்றும் எண்ணுகின்றனர். ஆனால் நமது உதவி தேவனுக்குத் தேவை இல்லையெனினும் நாம் அவருக்காக அன்புடன் செய்யும் செயல்களை அவர் மறந்துவிடுவதில்லை.  

தாங்கள் தேவனுக்கேற்ற செயல்கள் செய்ததை தங்கள் ஜெபத்தில் சொல்லி சிலர் ஜெபிப்பதை நாம் வேதத்தில் வாசிக்கின்றோம்.  நான் தேவனுக்காக செய்த வேலைகளில் எந்த அநியாய வருமானத்தையும் ஈட்டவில்லை என்று நெகேமியா ஜெபிப்பதைப் பார்க்கின்றோம். எனவே அவர் "என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்." ( நெகேமியா 5: 19) என ஜெபிக்கின்றார்.  

எசேக்கியா ராஜாவும் இப்படி விண்ணப்பம் செய்வதை நாம் பார்க்கின்றோம். "ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான்." (2 இராஜாக்கள் 20: 3) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, நமது செயல்கள் தேவனுக்கு ஏற்புடையவையாக இருக்குமானால் இந்தப் பரிசுத்தவான்களைப்போல நாமும் தைரியமாகத் தேவனிடம் அது குறித்துத் தனிப்பட்ட விதத்தில் நமது ஜெபங்களில் பேசலாம். தமது நாமத்திற்காக நாம் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல.

நமது தேவன் நினைவுகூருகின்ற தேவன். ஆபிரகாமை நினைவுகூர்ந்த தேவன் அவர் நிமித்தம் லோத்துவைக் காப்பாற்றினார் என்று கூறப்பட்டுள்ளது. நோவாவை நினைவுகூர்ந்து தண்ணீரை வற்றச்செய்தார். அன்னாளை நினைவுகூர்ந்து சாமுவேலை மகனாகக் கொடுத்தார். 

ஆனால் நாம் தேவனுக்காகச் செய்த செயல்களை எல்லா மக்களிடமும் சொல்லவேண்டியதில்லை. அப்படிச் சொல்வது  நமது  மனதின் பெருமையினையே காட்டும்.  பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கின்றார் என்று வேதம் கூறவில்லையா? நமது செயல்கள் அனைத்தையும் தேவன் ஏற்கெனவே அறிந்திருக்கின்றார். அவற்றை மற்றவர்கள் அறிந்து நம்மைப் புகழ வேண்டிய அவசியமில்லை. 

தேவனுக்காக நாம் செய்த நமது நல்ல செயல்களை நாம் எடுத்துக் கூறினாலும் கூறாவிட்டாலும் தேவன் அவற்றை மறந்துவிட அநீதியுள்ளவரல்ல. நமது செயல்களுக்கேற்ற பலனை நிச்சயம் தருவார். தேவனை மகிழ்ச்சிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோம். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,397
'ஆதவன்' 💚டிசம்பர் 05, 2024. 💚வியாழக்கிழமை                               

"சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு." ( செப்பனியா 3: 14) 

இன்றைய தியான வசனம் "சீயோன் குமாரத்தி", "இஸ்ரவேலர்" என்று கூறுவதால் பலரும் இது வேறு யாருக்கோ கூறப்பட்ட வார்த்தைகள் என்று எண்ணிக்கொள்ளலாம்.   ஆனால் கிறிஸ்துவால் மீட்கப்பட்ட நாமே சீயோன் குமாரத்திகளும் இஸ்ரவேலருமாய் இருக்கின்றோம். சீயோன் என்பது தேவனது பரலோக சந்நிதானத்தைக் குறிக்கின்றது. நாம் அதன் பிள்ளைகளாகின்றோம். ஆம் அன்பானவர்களே, "ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக." ( கலாத்தியர் 3: 7) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். அதாவது கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசம் கொண்டு வாழும் நாமே சீயோன் குமாரத்திகளும் ஆவிக்குரிய இஸ்ரவேலருமாய் இருக்கின்றோம். 

இன்றைய தியான வசனம் நமக்கு மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழ அறைகூவல்விடுக்கின்றது. பாடி ஆர்ப்பரித்து மகிழ்ந்து களிகூரும்படி இந்த வசனம் சொல்கின்றது. ஏன் கெம்பீரித்துப் பாடவேண்டும்? ஏன் ஆர்ப்பரிக்கவேண்டும்? மகிழ்ந்து களிகூரவேண்டும்?  இதற்கான விடையினை அடுத்த வசனம் கூறுகின்றது, "கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்." ( செப்பனியா 3: 15)

ஆவிக்குரியவர்களாக நாம் வாழும்போது கர்த்தர் நமது ஆக்கினைகளை  அகற்றி, நமது சத்துருக்களை நம்மைவிட்டு விலக்குவார். இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் நமது நடுவிலே இருப்பார்; நாம் இனித்தீங்கைக் காணாதிருப்போம்.  சத்துருக்கள் என்று கூறுவதால் நமக்கு எதிராக இருக்கும் மனிதர்களை மட்டுமல்ல, நம்மை சாத்தானுக்கு அடிமைகளாக்கும் பாவங்களையும் குறிக்கின்றது. சீயோன் குமாரத்திகளாக நாம் வாழும்போது பாவத்துக்கு நீங்கலாகிவிடுகின்றோம். எனவே மகிழ்ந்து களிகூரவேண்டும்.

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு மீட்கப்படும்போது நாம் அவரது ஆவியின் பிரமாணத்துக்குள் வந்துவிடுகின்றோம். அந்த ஆவியின் பிரமாணம் நம்மைப் பாவத்துக்கும் அதன் விளைவான நித்திய மரணத்துக்கும் நம்மை விடுதலையாக்குகின்றது. "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே" ( ரோமர் 8: 2) என்று வாசிக்கின்றோம். 

இப்படி நாம் விசுவாச மார்கத்துக்குள் வரும்போது நாமே சீயோன் குமாரத்திகளும் இஸ்ரவேலருமாகின்றோம். கர்த்தர் நமது ஆக்கினைகளை அகற்றி, நமது சத்துருக்களை நம்மைவிட்டு விலக்குவார் நாம் இனித்தீங்கைக் காணாதிருப்போம். எனவே கெம்பீரித்துப்பாடி ஆர்ப்பரியுங்கள் என்றும்  சீயோன் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு என்றும் இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

நாம் விசுவாசமார்க்கத்தார்கள் ஆகும்போது நமது இந்த மகிழ்ச்சி உன்னத சீயோனாகிய பரலோகத்திலும் எதிரொலிக்கும் என்று இயேசு கிறிஸ்து கூறினார். "மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 15: 7) சீயோன் குமாரத்திகளாக, ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாக மாறுவோம் நம்மிலும் நமதுமூலம் பரலோகத்திலும் மகிழ்ச்சி உண்டாகட்டும். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,398
'ஆதவன்' 💚டிசம்பர் 06, 2024. 💚வெள்ளிக்கிழமை                    

"பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்." ( யோவான் 3: 27)

இந்த உலக அரசாங்கங்கள் தங்களது நாட்டின் குடிமக்கள் குடியுரிமை, அரசாங்க உதவிகள், சலுகைகள், வேலைவாய்ப்புக்கள் இவைகளைப்பெற பல்வேறு நிபந்தனைகளை வைத்துள்ளன. மேலும் குறிப்பிட்ட நபர் தங்கள் நாட்டின் குடிமகன் / குடிமகள் தான் என்பதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களை  ஏற்பாடு செய்துள்ளன. நமது நாட்டில் முக்கியமாக ஆதார் அடையாள அட்டை இத்தகையதே. மேலும் சில அரசாங்க உதவிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டைகள் மேலும் பாஸ்போர்ட் இவை தேவையாக இருக்கின்றன. 

இதுபோலவே தேவனும் தனது பிள்ளைகளாக நம்மைக் கருதிடச் சில அடையாளங்களை எதிர்பார்க்கின்றார். அந்தத் தகுதி இருக்குமானால் நாம் அவரிடம் சிறப்பு கவனிப்பைப் பெறுவோம். உலக அரசாங்க அடையாள அட்டைகளைப்போல இந்த அடையாளங்கள் வெளியரங்கமாகத் தெரியாவிட்டாலும் குறிப்பிட்ட நபர்களுக்கும் தேவனுக்கும் அது தெரியும்.

ஆனால் தேவன் இந்த உலகத்திலுள்ள அனைத்து ஜாதி மத, இன மக்களையும் தனது  பிள்ளைகளாக நேசிக்கின்றார். எல்லோருக்கும் அவர் உதவுகின்றார். அவர் பேதுருவிடம் இதனை வெளிப்படுத்தினார் "எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 28 ) என்று கூறுகின்றார் பேதுரு. 

மேலும், "தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10: 34, 35) என்கின்றார் பேதுரு. அதாவது நீதியுள்ள வாழ்க்கை வாழ்வதை தேவன் மனிதர்களிடம் எதிர்பார்க்கின்றார். இப்படித் தேவன் பட்சபாதகம் இல்லாதவராக இருந்தாலும் சிலருக்குச் சில ஆசீர்வாதங்களை அவர் கிருபையாய் அளிக்கின்றார். 

நாம் நமது சுய முயற்சியால் பல காரியங்களை செய்யலாம். ஆனால் அவை வெற்றிகரமாக முடியவேண்டுமானால் தேவனது கிருபை தேவையாக இருக்கின்றது. எதுவும் பரலோகத்திலிருந்து நமக்குக் கொடுக்கப்படவேண்டியுள்ளது. ஆனால் மனிதர்கள் பெரும்பாலும் தங்களது சுய முயற்சிதான் தங்களது வெற்றிக்குக்  காரணம் என்று எண்ணிக்கொள்கின்றனர். அன்பானவர்களே, முயற்சி செயலாகவேண்டுமானால் நமக்கு நல்ல உடல் நலமும் மனநலமும் இருக்கவேண்டும். அதனைத் தருபவர் தேவனே. 

எனவே நாம் பரலோக தேவனுக்கு அஞ்சி அவரது கிருபையை இறைஞ்சி வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. உலகினில் நமக்கு நல்லத் திறமை,  வேலை, பதவி உயர்வு, உடல்நலம், உறைவிடம், ஆடைகள், உணவு போன்ற எல்லாமே பரலோகத்திலிருந்து கிடைக்கும் உத்தரவுப்படியே நமக்குக் கிடைக்கின்றது. ஆம் பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, ஒருவனும் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். எனவே அவருக்கு பயந்து, அவர் கிருபையினைச் சார்ந்து அவருக்கு நன்றி செலுத்தி வாழ்வோம். 

"நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை." ( யாக்கோபு 1: 17)


வேதாகமத் தியானம் - எண்:- 1,399
'ஆதவன்' 💚டிசம்பர் 07, 2024. 💚சனிக்கிழமை    

"வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 3: 6)

இந்த உலகத்தில் பலர் ஏழைகளுக்கு அதிகம் பொருளுதவி செய்கின்றனர். ஆனால்  பலருக்கு அப்படி உதவிசெய்யவேண்டுமென்று ஆசை இருந்தாலும் உதவி செய்ய அவர்களது பொருளாதாரம் இடம்தருவதில்லை. அத்தகைய மக்களில் சிலர்  தாங்கள் மற்றவர்களைப்போல் அதிகம் கொடுக்காததால் தேவ ஆசீர்வாதத்தை இழந்து விடுவோம் என்று பயப்படுகின்றனர். ஆனால் தேவன் இப்படிக் கொடுப்பதைமட்டும் கணக்கில் கொள்வதில்லை. கொடுப்பவர்களது மனநிலைமையையும் அவர் பார்க்கின்றார். 

தேவன் இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஏதாவது ஒரு திறமையையோ மற்றவர்களுக்கு இல்லாத தனித்துவதையோ கொடுத்திருப்பார்.  பணத்தை மட்டுமல்ல, நமக்கு இருக்கும் தனித்த திறமைகளை நாம் தேவனுக்கு ஏற்புடைய விதத்தில் பயன்படுத்துவதை தேவன் விரும்புகின்றார். அப்போஸ்தலரான பேதுருவும் யோவானும் ஆலயத்துக்குச் செல்லும்போது அந்த முடவன் அவர்களிடம் பிச்சைகேட்டான். ஆனால் பேதுருவிடம் பணம் இல்லை. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவருக்குள் இருந்தார். எனவே அவர், "வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்." என்று கூறி தன்னிடமிருந்த இயேசு கிறிஸ்துவின்மூலம் அந்த முடவனைக் குணமாக்கினார். 

"ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்." (2 கொரிந்தியர் 8: 12) என அப்போஸ்தலரான பவுல் எழுதுகின்றார். ஆம் அன்பானவர்களே, மற்றவர்களுக்கு உதவி செய்திட நம்மிடம் பணமில்லாமல் இருந்தாலும் நம்மிடம் இருப்பதை பேதுரு கொடுத்ததுபோல நாம் கொடுக்கலாம். உதாரணமாக,  நம்மிடம் கணிதத்  திறமையோ ஆங்கிலப் புலமையோ இருக்குமானால் நாம் அதனை அருகிலிருக்கும் ஏழை மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து உதவலாம்.  இதுபோன்ற செயல்களும் தேவனுக்கு ஏற்புடையவையே. 

இப்படிப்பட்ட நன்மைகள் செய்யவும் நமக்கு இருக்கும் அளவுக்குத்தக்கதாக தான தர்மம் செய்வதும் தேவனுக்கு ஏற்ற பலிகளாக இருக்கின்றன. "அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்." ( எபிரெயர் 13: 16)

வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன் என்று பேதுரு கொடுத்ததுபோல நாமும் நம்மிடமுள்ளதை கொடுக்கப் பழகுவோம் "கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்." ( லுூக்கா 6: 38) என்றார் இயேசு கிறிஸ்து.  


வேதாகமத் தியானம் - எண்:- 1,400
'ஆதவன்' 💚டிசம்பர் 08, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை

"நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது." ( ஏசாயா 64: 6)

எல்லா மதங்களும் நீதியுள்ள வாழ்க்கையைத்தான் போதிக்கின்றன. அதுபோல பல்வேறு அறிஞர்கள் நீதிகளை போதித்துள்ளார். தமிழில் மற்ற மொழிகளைவிட நீதிநூல்கள் அதிகம் உள்ளன. ஆனால் இவையெல்லாம் மனித நீதிகள் அல்லது மனிதர்கள் போதித்த நீதிகள். இவை சிறப்பானவைகளாக இருந்தாலும் தேவனது பார்வையில் இவை அழுக்கான கந்தையைப்போல இருக்கின்றது என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

மேலும், இந்த மனித நீதிகளைப் பின்பற்றி வாழ்வதால் நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது இந்த மனித நீதிகளால்  நம்மை அக்கிரமங்களுக்கு முற்றிலும் நீங்கலாக்க முடியவில்லை. இவை நியாயப்பிரமாண கட்டளைகளைப்போல இருக்கின்றன. 

ஆனால் வேதாகமம் நமக்கு கிறிஸ்து இயேசுவின்மேல் கொள்ளும் விசுவாசத்தையே மேலானதாகக் கூறுகின்றது. அப்படி அவர்மேல்கொள்ளும் விசுவாசம் அவரை விசுவாசிப்பவர்கள் அனைவர்மேலும் பலிக்கும். "அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை." ( ரோமர் 3: 22)

மனிதர்கள் தங்கள் மனதும் அறிஞர்களும் கூறியுள்ள நீதிகளைப்  பற்றிக்கொண்டு தேவ நீதியை புறம்பே தள்ளிவிடுகின்றனர். எனவே அவர்கள் தேவ நீதிக்குக் கீழ்படியாமலிருக்கிறார்கள். "எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்." ( ரோமர் 10: 3) 

இன்று பெரும்பாலான நீதிமன்றங்கள் இத்தகைய சுய நீதியின் அடிப்படையிலேயே மக்களுக்குத் தீர்ப்பளிக்கின்றன. எனவேதான் ஒரு நீதிபதி கொடுக்கும் தண்டனையை மேல் நீதிமன்றத்தில் முறையிடும்போது அடுத்த நீதிபதி மாற்றித்  தீர்ப்பு எழுதுகின்றார்.  ஆம், மனித நீதி மனிதன், மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மனிதர்களது முகத்தையும் பணத்தையும் பார்த்து மாறுபடுகின்றது.  

இப்படி இருப்பதால், "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது." ஆனால் தேவனது நீதி எதார்த்தமானது அவர் கண் கண்டபடியும் காது கேட்டபடியும் தீர்ப்பிடமாட்டார். 

".................அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்." ( ஏசாயா 11: 3, 4)

கந்தையான மனித நீதிகளைவிட்டு கிறிஸ்துவின் மேல் கொள்ளும் விசுவாசத்துடன் ஏற்படும் தேவ நீதிக்கு நேராக நாம் திரும்பவேண்டியது அவசியம். தேவ நீதி எதார்த்தமானது. தேவ நீதிக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது நமது அக்கிரமங்கள் நம்மைக்  காற்றைப்போல் அடித்துக்கொண்டு போகாது.  


வேதாகமத் தியானம் - எண்:- 1,401
'ஆதவன்' 💚டிசம்பர் 09, 2024. 💚திங்கள்கிழமை

"அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." ( எபேசியர் 4: 30)

நாம் பாவத்திலிருந்து கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவி மீட்கப்படும்போது பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வருகின்றார். நாம் தேவனுக்குச் சொந்தமான மக்கள் எனும் முத்திரை நமக்குக் கிடைக்கின்றது. இந்த அனுபவத்தில் நாம் நாளும் வளரவேண்டியது அவசியம். ஆனால் இந்த ஆவியானவரின் முத்திரை நமது முதல் அடையாளம் மட்டுமே. ஆவிக்குரிய மேலான அபிஷேகமும் வரங்களும் உண்டு. அவைகளைப் பெறுவதில் நாம் ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். 

இன்றைய தியான வசனம், இப்படி நாம் முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தக்கூடாது என்று நமக்குக் கூறுகின்றது. மீட்பு அனுபவம் பெற்றபின்னரும் பழைய பாவத்தில் தொடர்ந்து வாழ்வது, தேவ ஐக்கியமில்லாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவது, வாழ்க்கையில் சாட்சியற்று, நம்மால் தேவனது பெயர் அவதூறு அடையும்படியான செயல்களைச்  செய்வது போன்ற செயல்கள் பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தும் செயல்பாடுகளே. 

மேலும், நாம் ஆவிக்குரிய வாழ்வில் நடக்கும்போது ஆவியானவர் நமக்குப்  பல வழிநடத்துதல்களைத் தருவார். உதாரணமாக, எதனைச் செய்யவேண்டும், ஒரு இடத்துக்குப் போகலாமா கூடாதா, ஒரு பொருளை வாங்கவேண்டுமா வேண்டாமா  போன்று நமக்குக் கூறுவார். இந்த வழி நடத்துதல் கனவுகள்மூலமோ, தரிசனங்கள் மூலமோ, வேதாகமத்தை வாசிக்கும்போதோ அல்லது மற்றவர்களது வாய்மொழியாகவோ இருக்கும். ஆனால் இது தேவனது வழிநடத்துதல்தான் என்று நமக்கு இருதயத்தில்  உணர்த்தப்படும். அப்போது நாம் அவற்றுக்குக் கீழ்படியாவிட்டால் ஆவியானவர் துக்கமடைவார். இப்படித் தொடர்ந்து அவரது குரலைப் புறக்கணிக்கும்போது இந்த அனுபவத்தை நாம் இழந்துவிடுவோம்.

ஆவியானவரைத் துக்கப்படுத்தும்படியான வாழ்க்கை வாழும்போது நாம் அவரை மறைமுகமாகத் தூஷிக்கின்றோம் என்று பொருள். இன்று ஆவிக்குரிய சபைகளில் மக்களுக்கிடையில் சில  காரியங்களில் கருத்து முரண்பாடுகள் ஏற்படும்போது மற்றவர்களை நோக்கி, "அவரிடம் இருப்பது பரிசுத்த ஆவியானவரல்ல; அசுத்தஆவி" என்று சிலர் கூறுவதைப்  பலவேளைகளில் கேட்கமுடியும்.  

நமக்கு எதுவும் உணர்த்தப்படாத நிலையில் மற்றவர்களை நாம் இப்படிக் குறைகூறுவதும் ஆவியானவரைத் துக்கப்படுத்தும் செயல்தான். எனவே நாம் மீட்கப்பட்ட  நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை நமது வாழ்வாலும் வார்த்தைகளாலும் துக்கப்படுத்தாதிருப்போம்.  "ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை." ( மத்தேயு 12: 31) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 


வேதாகமத் தியானம் - எண்:- 1,402
'ஆதவன்' 💚டிசம்பர் 10, 2024. 💚செவ்வாய்க்கிழமை

"நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்" ( மத்தேயு 4: 9)

இந்த உலகம் தேவனால் படைக்கப்பட்டது என்றாலும் அது அலகை அல்லது சாத்தானின் கைவசமும் அதன் அதிகாரத்தின்கீழும் உள்ளது. வேதாகமத்தில் சாத்தானுக்கு  "பொல்லாங்கன்" (மத்தேயு 13:19, எபேசியர் 6:16 மற்றும் 1 யோவான் 5:18, 1 யோவான் 5:19) என்றும் "உலகத்தின் அதிபதி" என்றும் (யோவான் 12:31, யோவான் 14:30, யோவான் 16:11 மற்றும் ) பெயர்கள்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

உலகம் சாத்தானின் கையில் இருப்பதை, "நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்." (1 யோவான்  5 : 19) என்றும் கூறப்பட்டுள்ளது. உலகம் அவனது கையில் இருப்பதால் அவன் இயேசு கிறிஸ்துவிடம் வந்து, "நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்"

சாத்தான் இயேசு கிறிஸ்துவிடம் நேரடியாகக் கூறிய வார்த்தைகளை இன்றும் அவன் விசுவாசிகள் ஒவ்வொருவரிடமும் பலவழிகளில் கூறிக்கொண்டிருக்கின்றான்.   உனக்குப் பதவி வேண்டுமா? அரசியல் செல்வாக்கு வேண்டுமா?, அதிக அளவு பணமும் சொத்து சுகங்களும் வேண்டுமா? என்னைப் பணிந்துகொள் என்கின்றான்.  சாத்தானைப் பணிந்துகொள்வது என்பது சாத்தான் விரும்பும் தவறான வழிகளில் இவைகளை அடைய முயல்வதைக் குறிக்கின்றது. விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் பலரும் சாத்தானின் தந்திரத்துக்குப் பலியாகிக்கொண்டிருக்கின்றனர். 

பலரும் கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளில் பங்கெடுக்கின்றனர், ஜெபக் கூட்டங்களில் பங்கெடுத்து ஆலயங்களுக்கு அதிக பொருளுதவிகள் செய்கின்றனர். ஆனால் உலக வாழ்க்கையிலோ சாத்தானுக்கு ஊழியம் செய்துகொண்டிருக்கின்றனர். இப்படிக்  குறுக்கு வழிகளில் அதிகம் சம்பாதித்துவிட்டு "கர்த்தர் என்னை ஆசீர்வதித்துள்ளார்" என்கின்றனர். 

அன்பானவர்களே, கிறிஸ்து காட்டிய வழிகளைவிட்டு நாம் பணத்துக்காகவும், பதவிக்காகவும்,  புகழுக்காகவும், சொத்துசுகங்கள் சேர்ப்பதற்காகவும் தவறான காரியங்களில் ஈடுபடும்போது நாம் சாத்தானை வழிபடுகின்றவர்கள் ஆகின்றோம். இப்படிச் சாத்தானை வழிபடும்போது "என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்" என்று அவன் இயேசு கிறிஸ்துவிடம் கூறியதுபோல அவனை வழிபடும் அனைவருக்கும் கொடுக்கின்றான். 

குறுக்கு வழி, தவறான வழி என்று தெரியும்போது யார் நம்மைத் தூண்டினாலும் நாமும் இயேசு கிறிஸ்து கூறியதுபோல, "அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே." ( மத்தேயு 4: 10) என்று கூறிக்கொண்டு விலகிவிடுவோமானால் தேவன் நம்மை வேறு விதங்களில் ஆசீர்வதிப்பார். "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." ( நீதிமொழிகள் 10 : 22 )

வேதனை இல்லாத ஆசீர்வாதம் பெற்று அனுபவிக்க கர்த்தரை மட்டுமே ஆராதிப்பவர்களாக வாழ்வோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,403

'ஆதவன்' 💚டிசம்பர் 11, 2024. 💚புதன்கிழமை

"என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்." ( எரேமியா 33: 3)

தேவனிடம் உலக ஆசீர்வாதங்களையே எதிர்பார்ப்பவர்களும், உலக ஆசீர்வாதங்களையே நற்செய்தியாகப் போதிப்பவர்களும் இன்றைய தியான வசனத்துக்கு உலக அர்த்தத்தையே கொடுப்பார்கள். அதாவது தேவனை நோக்கிக் கூப்பிடும்போது நமக்குத் தெரியாததும் புரியாததுமான அளவில் நம்மை அவர் உயர்த்தி  ஆசீர்வதிப்பார் என்று கூறுவார்கள். 

ஆனால் உண்மையில் இன்றைய தியான வசனம் ஆவிக்குரிய அர்த்தம் கொண்டது. தேவனிடம் நாம் கேட்கும்போது அவர் மேலான ஆவிக்குரிய அனுபவங்களை நமது வாழ்வில் தந்து நாம்  அறியாததும் நமக்கு எட்டாததுமான பெரிய ஆவிக்குரிய காரியங்களை நமக்கு அறிவிப்பார்.  ஆவிக்குரிய வாழ்க்கை என்பது சிலர் எண்ணுவதுபோல அல்லேலூயா என்று கூறுவதும் ஜெபிப்பதும்  மட்டுமல்ல; மேலான ஆவிக்குரிய அனுபவங்கள் உண்டு. அப்போஸ்தலரான பவுல், பேதுரு, யோவான்  போன்றோர் அனுபவித்ததுபோன்ற உன்னத அனுபவங்களையும், பழைய ஏற்பாட்டில் எலியா, எலிசா போன்றோர் அனுபவித்த அனுபவங்களையும் நாம் அறிவோம். அத்தகைய அனுபவங்களை நாம் அனுபவிக்கும் ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.   

பத்மு தீவில் இருந்த அப்போஸ்தலரான யோவானுக்குத் தேவன் ஆவியினால் உன்னதமானதும்  நமக்கு எட்டாததுமான காரியங்களை அறிவித்தார். இதனை அவர், "கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 1 : 10 ) என்று தொடர்ந்து எழுதுகின்றார். 

அப்போஸ்தலரான பவுலுக்கும்  தேவன் இப்படி நாம் அறியாததும் நமக்கு எட்டாததுமான பெரிய காரியங்களைக்  வெளிப்படுத்திக் கொடுத்தார். அவர் கூறுகின்றார்:- கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்." (2 கொரிந்தியர் 12: 2, 3)

ஆம் அன்பானவர்களே, பரிசுத்த ஆவியானவர் தரும் அனுபவங்கள் நாம் ஒவ்வொருவரும் பெற்று அனுபவிக்கவேண்டிய ஒன்றாகும். ஆனால் முதலில் நாம் அதற்கான தாகம் உள்ளவர்களாக வாழ வேண்டியது அவசியம்.  "தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்." ( ஏசாயா 44 : 3 ) என்கின்றார் கர்த்தர். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியை நாம் கேட்டுப் பெறவேண்டும் என்று கூறுகின்றார்.  "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா ?" ( லுூக்கா 11 : 13) என்று அவர் கூறுவதை நாம் பார்க்கலாம். "கேளுங்கள் தரப்படும்..." எனும் வசனத்தைத் தொடர்ந்து இயேசு இதனைக் கூறுகின்றார். ஆனால் கிறிஸ்தவர்களில் பலரும் இயேசு கூறிய வார்த்தைகளை கோர்வையாக வாசிக்காமல் வெறும்    உலக ஆசீர்வாதத்தைக் கேட்க இயேசு இதனைக் கூறுவதாக எண்ணிக்கொள்கின்றனர்.    

மேலான பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள அவரை நோக்கிக் கூப்பிடும்போது அவர் நமக்குப் பதில்  கொடுத்து, நாம்  அறியாததும் நமக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை ஆவியானவர் மூலம் அறிவிப்பார். ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வமுள்ளவர்களாக அதற்காக தேவனிடம் விண்ணப்பம் செய்வோம். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,404
'ஆதவன்' 💚டிசம்பர் 12, 2024. 💚வியாழக்கிழமை

"தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன." ( யாக்கோபு 2: 19)

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் நாம் விசுவாசம் கொண்டுள்ளோம். அப்படி விசுவாசிப்பதால்தான் நாம் கிறிஸ்தவர்கள் என்று நம்மைக் கூறிக்கொள்கின்றோம்.  ஆனால் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலராகிய யாக்கோபு அது போதாது என்று கூறுகின்றார். காரணம், பிசாசுகளும் தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கின்றன என்கிறார். எனவே,  நமது விசுவாசம் பிசாசுகளின் விசுவாசத்தைவிட மேலானதாக இருக்கவேண்டியது அவசியம் என்கின்றார் அவர். 

பிசாசுகள்  தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசித்தாலும் அவற்றின் செயல்பாடுகள் அவலட்சணமானவை. இயேசு யூதர்களிடம் பேசும்போது கூறினார், "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்." ( யோவான் 8: 44)

அதாவது பிசாசு மனுஷ கொலைபாதகன், பொய்யன் என்று கூறுகின்றார் இயேசு. ஆனால் இந்தப் பிசாசுகள் தேவன் ஒருவர் உண்டு என்பதை விசுவாசிக்கின்றன. இப்படி நாம் இருக்கக்கூடாது, கர்த்தர்மேல் நமக்குள்ள விசுவாசத்தை நாம் நமது செயல்களினால் உறுதிப்படுத்தவேண்டும் என்கின்றார். வெறுமனே நாம் தேவனை விசுவாசத்தால் மட்டும் போதாது நமது செயல்கள் அவரை நாம் விசுவாசிப்பதை உறுதிப்படுத்துவனவாக இருக்கவேண்டும். பிசாசின் செயல்பாடுகளாக இருக்கக்கூடாது.  எனவே,  "வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுடாமோ? நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?" ( யாக்கோபு 2: 20, 21) என்கின்றார். 

அதாவது ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார்  மட்டுமல்ல, தனது மகன் இறந்தாலும் அவனைத்  தான் விசுவாசிக்கும் தேவன் உயிரோடு எழுப்ப வல்லவர் என்று உறுதியாக நம்பினார்.  "ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாகுத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்தும் எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்." ( எபிரெயர் 11: 18, 19) என்று வாசிக்கின்றோம். 

ஆம், "விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே." ( யாக்கோபு 2: 22) இது நமக்கு உதாரணமாக வேதம் கூறியுள்ள சம்பவம். நாமும் தேவனை விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொண்டால் போதாது, நமது வாழ்வின் இக்கட்டான நிலைகளிலும் நமது உறுதியான செயல்பாடுகளால் நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தவேண்டும். 

பிரச்சனைகள், துன்பங்கள், வியாதிகள் நம்மைத் தொடரும்போது தேவன்மேல் நாம் கொண்டுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருப்போம். வெறுமனே தேவனை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டு இருப்பதைவிட அந்த விசுவாசத்தை உறுதிப்படுத்தும் செயல்களை செய்யும்போதுதான்  தேவன்மேல் நாம் கொண்டுள்ள நமது விசுவாசம் பிசாசுகளின் விசுவாசத்தைவிட மேலானதாக இருக்கும். 

 

வேதாகமத் தியானம் - எண்:- 1,405
'ஆதவன்' 💚டிசம்பர் 13, 2024. 💚வெள்ளிக்கிழமை

"என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்." ( சங்கீதம் 42: 11)

துன்பங்கள் சோதனைகள் வரும்போது நாமே நமக்கு தைரியமான வார்த்தைகளைக் கூறிக்கொள்ளவேண்டும். நமது ஆத்துமாவுக்கு அது பெலனைத் தருகின்றது. தாவீது ராஜா இந்த அனுபவத்தில் இருந்ததால் பல்வேறு இக்கட்டான வேளைகளில் நம்பிக்கை இழக்காமல் இருந்தார். இப்படித் தனது ஆத்துமாவுக்குத் தானே ஆறுதல் கூறுவதை அவர் சங்கீதமாக எழுதிவைத்தார்.  

ஆம் அன்பானவர்களே, நமது ஆத்துமாவில் சோர்வு ஏற்படும்போது நாமும் தாவீதைப்போல நமக்குள் பேசவேண்டும். என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன் என்று  கூறப் பழகவேண்டும். ஏனெனில்,  "சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்." என்று வேதம் கூறுகின்றது. ( ஏசாயா 40: 29)

தாவீது தனது ஆத்துமாவுக்குச் சொல்வதுபோலச் சொல்லி  நமக்கு கலக்கங்கள் ஏற்படும்போது நாம் தேவனை நோக்கி அமர்ந்திருந்து காத்திருக்கவேண்டியது அவசியம். காரணம் அவர்மேல் நாம் கொள்ளும் விசுவாசம் நம்மை வெட்கப்படுத்திடச் செய்யாது. "நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்." ( யூதா 1: 20, 21) என்று வாசிக்கின்றோம். 

தாவீதின் வாழ்க்கை போராட்டம் நிறைந்த வாழ்க்கையாக இருந்தாலும் அவர் தனது ஆத்துமாவோடு பேசித் தானே தன்னைத் தேவனுக்குள் திடப்படுத்திக்கொண்டார். எனவே மகிழ்ச்சியுடன்  "என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்". என்று கூறுகின்றார்,

இந்த உலகத்தில் நமக்கு பலர் ஆறுதல் சொல்ல இருந்தாலும் அவர்கள் எப்போதும் நம்மோடு இருப்பதில்லை. ஒரு சில மணி நேரங்கள் அல்லது ஒருசில நாட்கள் நம்மோடு இருந்து நமக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறலாம், உதவிகள் செய்யலாம். ஆனால் நமது ஆத்துமாவுக்கு நிரந்தரமாக ஆறுதல் தரக்கூடியவர் தேவன் ஒருவரே. எனவே இத்தகைய துன்பநேரங்களில் நாம் அவரை நோக்கிக் காத்திருந்து துதிக்கவேண்டியது  அவசியம். 

துன்பங்கள் பிரச்சனைகள் கலக்கங்கள் வரும்போது நாமும் நமது ஆத்துமாவுக்குக் கூறுவோம், "என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு" என்று. அவரே நமக்கு ஆறுதலும் தேறுதலும் தந்து உறுதிப்படுத்துவார். 



வேதாகமத் தியானம் - எண்:- 1,406
'ஆதவன்' 💚டிசம்பர் 14, 2024. 💚சனிக்கிழமை

"மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை." ( யோவான் 2: 25)

இந்த உலகத்தில் ஒருவரைக்குறித்து அறிய சாட்சிகள் தேவையாக இருக்கின்றன. எனவேதான் அரசாங்க வேலைகளில் சேருமுன்பு, அல்லது ஒரு நிதி நிறுவனத்தில் பணம் பெற அணுகும்போது அவர்கள் நம்மைக்குறித்து யாராவது சாட்சி கையொப்பம் அளிக்க வலியுறுத்துகின்றனர்.  வங்கியில் புதிதாக கணக்கு ஆரம்பிக்க வேண்டுமானால்கூட  ஏற்கனவே வங்கியில் கணக்கு வைத்துள்ள ஒருவர் சாட்சிக் கையொப்பம் அளிக்கவேண்டியுள்ளது. 

இதற்குக் காரணம் அவர்களுக்கு நம்மைக்குறித்து எதுவும் தெரியாது என்பதே. எனவே, நம்மைக்குறித்து தெரிந்தவர்கள் சாட்சியளிக்கவேண்டியுள்ளது. ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அனைத்தையும் அறிந்தவர். மனிதர்களது உள்ளத்து உணர்வுகள், நினைவுகள் அனைத்தும் அவருக்குத் தெரியும். இப்படி,  "மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை."

எனவே நாம் அவருக்கேற்ற சாட்சியுள்ள வாழ்க்கை வாழவேண்டியது அவசியமாயுள்ளது. பிதாவாகிய தேவனுக்குமுன் நாம் நிற்கும்போது நம்மைக்குறித்த சாட்சியை இயேசு கிறிஸ்து அளிக்கவேண்டியுள்ளது. அவர் நம்மைக்குறித்து, "இவன் / இவள் எனது அன்பு மகன் / மகள் என்று சாட்சி கூறவேண்டுமானால்  நாம் அதற்கேற்ற சாட்சியுள்ள வாழ்க்கை வாழவேண்டியது அவசியம். "மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்". ( மத்தேயு 10: 32, 33) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? 

ஆம் அன்பானவர்களே, நாம் நமது வாழ்க்கையால் கிறிஸ்துவை மனிதர்களுக்குமுன் அறிக்கையிடுபவர்களாக வாழவேண்டியது அவசியம். அப்படி வாழும்போதுதான் அவர் நம்மைக்குறித்து பிதாவின்முன்பு சாட்சிகூறுவார். 

வெறுமனே ஆலய வழிபாடுகளிலும் ஜெபக்கூட்டங்களிலும் கலந்துகொள்வதாலோ, ஆலயங்களுக்கு அதிக காணிக்கைகள் அளிப்பதாலோ நாம் தேவனுக்கேற்றவர்கள் ஆக முடியாது.  உள்ளத்தை ஊடுருவி பார்க்கும் அவர்முன் நாம் எதனையும் மறைக்க முடியாது. சர்வ வல்லவரான அவர் எங்கேயும் இருக்கின்றார். எனவேதான் சங்கீத ஆசிரியர் கூறுகின்றார்:- "உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்." ( சங்கீதம் 139: 8)

எங்கும் நிறைந்திருப்பவரும் மனுஷருள்ளத்திலிருப்பதை அறிந்திருப்பவருமான அவருக்கு வேறு யாரும் சாட்சி கொடுக்க அவசியமில்லாததால் நாமே அவருக்குச்  சாட்சியுள்ளவர்களாக வாழ வேண்டியது அவசியமாய் இருக்கின்றது.  

  

வேதாகமத் தியானம் - எண்:- 1,407
'ஆதவன்' 💚டிசம்பர் 15, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை

"மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்." (2 கொரிந்தியர் 10: 17, 18)

மேன்மைபாராட்டல் அல்லது பெருமை கொள்ளுதல் தேவனுக்குமுன் ஏற்புடைய செயலல்ல என்பதுபற்றி இன்றைய தியான வசனம் கூறுகின்றது. இந்த உலகினில் மனிதர்கள் தங்கள் பதவி, அழகு, செல்வாக்கு, அந்தஸ்து இவை குறித்து பெருமையுள்ளவர்களாக உள்ளனர். ஆனால் அப்போஸ்தலரான பவுல் இப்படி உலக செல்வங்களையும் அந்தஸ்துக்களையும் குறித்துப்  பெருமை கொள்பவன் நல்லவனாக இருக்கமுடியாது  என்று கூறுகின்றார். இதனையே அவர், "தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல" என்று கூறுகின்றார்.  

இந்த உலகத்தில் மிகவும் மதிப்புமிக்கது கர்த்தரை வாழ்க்கையில் நாம் தனிப்பட்ட விதத்தில் அறிந்து அனுபவிப்பது. அதற்கு இணையானது உலகினில் எதுவுமில்லை. பெரிய பெரிய இறையியல் படிப்பு படித்தவர்களும் வேதாகமதில் ஆராய்ச்சிசெய்து முனைவர் பட்டம் பெற்றவர்களும் அறிந்திராத இறை அனுபவங்களை சாதாரண கூலித்தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் அனுபவித்துக்  கூறுவதை நான் கேட்டுள்ளேன்.  இதுவே மேன்மையாகும். 

இதனையே எரேமியா "மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 9: 24) என்று கூறுகின்றார். 

எனவே, கர்த்தரை அறிகின்ற அறிவு நமக்கு வேண்டுமென்று நாம் விரும்புவதும் அதனை அடைய முயல்வதுமே நாம் செய்யவேண்டியது. கர்த்தரை அறியும்போது உலகம் தரக்கூடாத மகிழ்ச்சி நம்மை நிரப்புகின்றது. எனவேதான் தாவீது, "அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்." ( சங்கீதம் 4 : 7) என்று மகிழ்ச்சியுடன் கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, உலகத்தின் மேன்மை, பதவி, அழகு, செல்வாக்கு, அந்தஸ்து இவைகளால் கிடைக்காத மகிழ்ச்சி கர்த்தரை அறிகின்ற அறிவினால் கிடைக்கின்றது. எனவேதான் இன்றைய தியான  வசனம் "மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்." என்று கூறுகின்றது.   தேவனால் உத்தமன், சன்மார்க்கன் என்று அழைக்கப்பட்ட யோபு, இருதயத்துக்கு ஏற்றவன் என்று புகழப்பட்ட தாவீது, தேவனுடைய தாசன், என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன். ( எண்ணாகமம் 12: 7) என்று புகழ்ப்பெற்ற மோசே எனக் கர்த்தரால் புகழப்பட்ட பலர் வேதாகமத்தில் உண்டு. இப்படி கர்த்தரால் புகழப்படுவதே நாம் உத்தமர்கள் என்பதற்கு அடையாளம். 

அரசியல்வாதிகள் தங்களைத் தாங்களே புகழ்ந்து போஸ்டர்கள் அச்சிட்டு தங்கள் சுய மகிமையை வெளிப்படுத்துவதுபோல கர்த்தருக்கு ஏற்புடையவர்கள் செய்யவேண்டியதில்லை. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது அவருக்கு ஏற்றவர்களாக வாழும் நமக்கு அவர் புகழ் உண்டாகச் செய்வார். "ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்." ( 1 கொரிந்தியர் 4 : 5 )

எனவே உலக ஆசீர்வாதங்களையோ மகிமையையோ, நமது பதவி, அந்தஸ்துகளையோ குறித்து மேன்மைபாராட்டாமல் நாம் கர்த்தரை அறிந்துள்ளோம் எனும் பெருமையே நமக்குப் போதும்.  நாம் கர்த்தரால் புகழப்படுவதே நமக்கு உத்தமம்.

  

வேதாகமத் தியானம் - எண்:- 1,408
'ஆதவன்' 💚டிசம்பர் 16, 2024. 💚திங்கள்கிழமை

"அப்பொழுது பதினெட்டுவருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்." ( லுூக்கா 13: 11)

பலவீனமான கூன் முதுகுகொண்ட ஒரு பெண்ணைக்குறித்து லூக்கா நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம். இந்தப் பெண்மணி பதினெட்டு ஆண்டுகள் இப்படிக் கூன் முதுகுடன் சிரமப்பட்டாள் என்பதைத் தவிர வேறு எந்தத் தகவலும் நமக்குக்  கொடுக்கப்படவில்லை. ஆனால் ஓய்வுநாளில் இயேசு கிறிஸ்து அவளுக்குச் சுகம் அளித்ததை ஜெப ஆலயத் தலைவன் விரும்பவில்லை. இயேசு கிறிஸ்துவிடம் எதுவும் சொல்லாமல் அவன் மக்களை அதட்டுகின்றான். ஓய்வுநாள் தவிர மற்ற நாட்களில் வந்து சுகம் பெற்றுக்கொள்ளுங்கள் என்கின்றான். 

மக்கள்மேல் உண்மையான அன்பு இல்லாத அவனை இயேசு "மாயக்காரனே" என்று அழைத்து  அவனுக்கு விளக்கமளிக்கின்றார். அப்போது அவர்  "இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்." ( லுூக்கா 13: 16)

இந்தச் சம்பவம் நமக்கு ஒரு உண்மையினை வெளிப்படுத்துகின்றது. அந்தக் கூனி பாவி என்று கூறப்படவில்லை மாறாக, ஆபிரகாமின் குமாரத்தி என்றுதான்  கூறப்பட்டுள்ளது. அதாவது அவள் தேவனுக்கேற்ற விசுவாசம்கொண்ட ஒரு நல்ல பெண்மணி. ஆனால் அவளைச் சாத்தான் ஒன்றல்ல இரண்டல்ல...பதினெட்டு ஆண்டுகள் கட்டி வைத்திருந்தான்.!

ஆம் அன்பானவர்களே, நாமும் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தாலும் சில பலவீனங்கள் நம்மை சில காலங்கள் தாக்கி அடிமைப்படுத்தி வைத்தியிருக்கக்கூடும். அது பொருளாதார பலவீனமாயிருக்கலாம், அல்லது உடல் வியாதிகளாய் இருக்கலாம், அல்லது நாமே வெறுத்தும் நம்மால் விடமுடியாதச்  சில பாவப்  பழக்கவழக்கங்களாக இருக்கலாம்.  இந்தக் கூன் முதுகு பெண் அவதிப்பட்டதுபோல நாமும் அவற்றால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கலாம். ஆனால் தேவன் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கின்றார். 

அந்தப்பெண் இயேசு கிறிஸ்துவிடம் சென்று எனக்குச் சுகம்  தாரும் என்று கேட்கவில்லை. ஆனால் அவளது தேவையினை இயேசு அறிந்திருந்தார். அவள் கேட்காமலேயே அவளுக்குத் தாமாகச் சென்று உதவினார். ஆம், நாமும் அவளைப்போல ஆபிரகாமின் குமாரத்திகளாக, குமாரர்களாக வாழ்வோமானால் நிச்சயமாக நமது எந்தக் குறைவினையும் அவர் நிறைவாக்கிட  வல்லவராகவே இருக்கின்றார். 

"அவர் சகலத்தையும் அதனதன் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்." ( பிரசங்கி 3: 11)

எத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் விசுவாசத்தோடு காத்திருப்போம். நமது தேவைகளை அவர் நிறைவாக்குவார். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,409
'ஆதவன்' 💚டிசம்பர் 17, 2024. 💚செவ்வாய்க்கிழமை

"துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." ( எசேக்கியேல் 18: 23)

தேவன் உலகத்திலுள்ள அனைவரையும் நேசிக்கிறார். நல்லவர்கள், கெட்டவர்கள், துன்மார்க்கர்கள் எல்லோரையும் நேசிக்கிறார். அதாவது அவர் பாவத்தை வெறுக்கிறார்; பாவிகளையோ நேசிக்கிறார். எனவே பாவத்தில் வாழும் மனிதர்கள் தங்களது பாவ வழிகளிலிருந்து மனம்திரும்ப அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறார். இன்றைய வசனத்துக்கு இணையாக, "நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்' ( எசேக்கியேல் 33: 11) என்றும் தேவன் கூறுவதையும்  நாம் வேதாகமத்தில் வாசிக்கலாம். 

இயேசு கிறிஸ்து பாவிகளை மன்னித்து ஏற்றுக்கொண்டதை நாம் புதிய ஏற்பாட்டு நூலில் அதிக இடங்களில் வாசிக்கின்றோம். பாவிகளை தேவன் மன்னிப்பது குறித்து அவர் கூறிய கெட்ட குமாரன் உவமை மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது. அந்த உவமையை கூறுமுன் அவர் கூறுகின்றார், "மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 15: 7)

பாவம் மனிதனைக் கொல்லுகின்றது. மனம் திரும்பும்போதோ மனிதன் உயிரடைகின்றான். இதனையே அவர் அந்த உவமையின் இறுதியில் கூறுகின்றார், "உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்." ( லுூக்கா 15: 32)

ஆம் அன்பானவர்களே, சிறிய பாவமோ பெரிய பாவமோ தேவனுக்கு எதிராக அது இருப்பதால் நம்மை அது தேவனைவிட்டுப் பிரிக்கின்றது. ஆனாலும் அவர் தனது கிருபையால் மனிதர்கள் மனம் திரும்பி தன்னிடம் வரவேண்டுமென்று விரும்புகின்றார். இன்று புனிதர்களாக போற்றப்படுபவர்கள் மனம் திரும்பிய பாவிகள்தான். நாம் யாருமே பரிசுத்தவான்களல்ல. பாவங்களை தேவன் மன்னிப்பதால்தான் நாம் அவர்முன் நிற்கமுடிகின்றது. ஆம், "அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்." ( சங்கீதம் 103: 10)

மேலும், "மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்." ( சங்கீதம் 103: 12) என்று நாம் வாசிக்கின்றோம். நம்மில் யாரும் கெட்டு அழிந்துபோவதை தேவன் விரும்பவில்லை.

இயேசு கிறிஸ்து பூமியில் வந்த நோக்கமே நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காகத்தான். எனவே அன்பானவர்களே, நமது பாவங்களை எண்ணிக் கலங்கி தேவனைவிட்டு நாம் தூரப்போய்விடவேண்டாம். நம் தேவனிடம் இரக்கங்கள் உண்டு. எந்தப் பாவம் நம்மிடம் இருந்தாலும் அவரிடம் அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் கழுவப்படும்படி மன்றாடுவோம். அவரே நம்மைக் கழுவி தந்து மகனாக மகளாக ஏற்றுக்கொள்வார். "...................அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." (1 யோவான்  1 : 7)



வேதாகமத் தியானம் - எண்:- 1,410
'ஆதவன்' 💚டிசம்பர் 18, 2024. 💚புதன்கிழமை

"இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்." (1 கொரிந்தியர் 12: 31)

ஆவிக்குரிய வாழ்க்கை என்பது வேதாகமத்தை வாசிப்பதிலும் ஜெபங்களைச்  செய்வதிலும் ஆவிக்குரிய கூட்டங்களில் கலந்துகொள்வதிலும் மட்டும் நின்றுவிடுவதல்ல, மாறாக தேவன் வழங்குகின்ற ஆவிக்குரிய வரங்களை வாழ்வில் பெற்று அதன்மூலம் மற்றவர்களை கிறிஸ்துவின் பாதைக்கு வழிநடத்துவதிலும் இருக்கின்றது. மட்டுமல்ல இதற்கு மேலும் சில காரியங்கள் உள்ளன. எனவேதான் அப்போஸ்தலரான பவுல் "இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்" என்று கூறுகின்றார். 

கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் அவர், ஞானத்தைப் போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், விசுவாசம், குணமாக்கும் வரங்கள், அற்புதங்களைச் செய்யும் சக்தி, தீர்க்கதரிசனம் உரைத்தல், ஆவிகளைப் பகுத்தறிதல், பற்பல பாஷைகளைப் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல் (1 கொரிந்தியர் 12: 8 -10) என ஆவிக்குரிய ஒன்பது வரங்களைக் குறிப்பிடுகின்றார்.  இவற்றில் முக்கியமான வரங்களை நாம் பெற ஆசைகொள்ளவேண்டும் என்கின்றார். 

கிறிஸ்தவர்களில் பலரும் இந்த வரங்கள் ஊழியர்களுக்கு மட்டுமே சொந்தமாகும் என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு வாழும் அனைத்து விசுவாசிகளும் இந்த வரங்களைப் பெறுவதற்கு ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டும். "கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான்" (லூக்கா 11:10) என்று  இயேசு கிறிஸ்துக்  கூறியுள்ளபடி நாம் இந்த வரங்களைக் கேட்டுப்  பெற்றுக்கொள்ளவேண்டும்; அந்தத் தாகம் உள்ளவர்களாக வாழவேண்டும். 

விசுவாசிகள் இந்த வரங்களைப் பெற்றவர்களாக இருப்பது மற்றவர்களை கிறிஸ்துவை நோக்கி நடத்த மிகவும் உபயோகமாக இருக்கும். கிறிஸ்துவை அறியாத மக்கள் மத்தியில் வாழ்த்த ஒரு பெண்ணுக்கு குணமாகும் வரம் மிகுதியாக இருந்தது. அந்தப்பெண்மணி அதனால் அப்பகுதியிலுள்ள மக்களில் பலரை நோய்களிலிருந்து குணமாக்கினார். இதனைக்கண்ட மக்களில் பலர் கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டார்கள். அந்தக் கிராமமே இன்று கிறிஸ்தவ கிராமமாக மாறியுள்ளது. 

முற்காலத்தில் இந்தியாவுக்கு  மிஷனரிகளாக வந்த ஊழியர்களிடம் இத்தகைய வரங்கள் இருந்ததால்தான் அவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டனர். இன்றும் வடமாநிலங்களில் நற்செய்தி அறிவிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள பலருக்கு தேவன் இந்த வரங்களைக் கொடுத்துள்ளதால்தான் பலர் கிறிஸ்துவண்டைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.   

அன்பானவர்களே, இதுவரை ஆவிக்குரிய வரங்களை பெறுவதில் ஆர்வமில்லாதவர்களாக, அது குறித்து எந்த முயற்சி எடுக்காமல் வாழ்ந்துகொண்டிருந்தால் இனியாவது தேவனிடம் இந்த வரங்களை நாட முயற்சியெடுப்போம். ஆவிக்குரிய வரங்களை தேவன் நமக்குத் தரும்போது அதோடுகூட நமது குடும்பத்தையும் நமது சந்ததிகளையும் ஆசீர்வதிப்பேன் என்று வாக்களித்துள்ளனர்.

"தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வளருவார்கள்." ( ஏசாயா 44: 3, 4) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,411
'ஆதவன்' 💚டிசம்பர் 19, 2024. 💚வியாழக்கிழமை

"அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்." ( யோவான் 3: 30)

மெய்யான ஆவிக்குரிய வாழ்வின் இலக்கணத்தை யோவான் ஸ்நானகன் ஒரே வரியில் கூறிவிட்டார். அதுவே இன்றைய தியான வசனம், "அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்" என்பது. 

ஆவிக்குரிய வாழ்வில் நாம் வளர்கின்றோம் என்பதனை உறுதிப்படுத்தும் அளவுகோல் இதுதான். நாளுக்குநாள் நம்மில் கிறிஸ்து பெருகவேண்டும். அதே வேளையில் "நான்" எனும் அகந்தை சிறுகவேண்டும். இன்று மெரும்பாலான மக்கள் பல்வேறு பக்தி முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தாலும் தேவனைத் தனிப்பட்ட முறையில் அறியாமலிருக்கக் காரணம் "நான்" எனும் அகந்தையே. 

அன்பானவர்களே, நம்மிடம் பணம், புகழ், அதிகாரம் இருக்கும்போதும் நாம் மற்றவர்களை மதித்து நடப்போமானால் நாம் சிறுக ஆரம்பித்துள்ளோம் என்று பொருள். அதாவது நமது ஆணவம் குறைந்துள்ளது என்று பொருள். அப்போஸ்தலரான பவுல் அதிகம் படித்தவர்தான் ஆனால் அவர் எல்லோரிடமும் ஒரேவிதமாகப் பழகினார், எல்லோரையும் அன்புச்செய்தார். "ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்." ( பிலிப்பியர் 3: 7, 8) என்று தனக்குரிய மேன்மைகளை நஷ்டமென்று கருதினார். 

அதாவது, கிறிஸ்துவை இன்னும் அறியவேண்டும் என்பதற்காக எனக்கு உள்ளவைகளை நஷ்டமென்று எண்ணுகின்றேன் என்கிறார் அவர். இங்கு யோவான் ஸ்நானகன் கூறிய கருத்தையே தனது வாழ்க்கை  அனுபவமாக்கிக் கூறுகின்றார். 

ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த மனநிலைக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ளத்  தயாராக இல்லை. ஒரு ஆலயத்தில் நான் செல்லும்போது அடிக்கடிக் காணக்கூடியது காட்சி அங்கிருந்த மின்விசிறியில் பதித்திருக்கும் பெயர்கள். நான்கு இறக்கைகளைக் கொண்ட அந்த மின்விசிறியில் அதனை அன்பளிப்பாக அளித்த குடும்பத்து உறுப்பினர்களது பெயர்கள் ஒவ்வொரு இறக்கையிலும் ஒரு பெயராகப் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது இது இன்றைய தியான வசனத்துக்கு நேர் மாறாக, "நான் பெருகவும் அவர் சிறுகவும் வேண்டும்" என உள்ளது. 

"அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது." ( யாக்கோபு 4: 6) என்கின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு. 

சாதாரண விசுவாசிமுதல் எவ்வளவு பெரிய ஊழியனாக இருந்தாலும், நான் எனும் ஆணவம் குறைந்துபோகும்போது மட்டுமே  கிறிஸ்து ஒருவரில் பெருக முடியும்; ஆவிக்குரிய மேலான நிலைமைக்கு வர முடியும்.  காரணம், அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் பெருமையுள்ளவர்களுக்கு அவர்  எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். எனவே நம்மில் அவர் பெருகவும் நாம் சிறுகவும் இடம்தரவேண்டியது அவசியம். தேவ கிருபை அப்போதுதான் நம்மை நிரப்ப முடியும்.  



வேதாகமத் தியானம் - எண்:- 1,412
'ஆதவன்' 💚டிசம்பர் 20, 2024. 💚வெள்ளிக்கிழமை

"கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; " ( கொலோசெயர் 3: 16)

இன்றைய தியான வசனம் நாம் கிறிஸ்துவின் வசனத்தில் தேறினவர்களாக இருக்கவேண்டியதன் அவசியத்தை விளக்குகின்றது. இன்றைய தியான வசனம் வெறுமனே, "கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே வாசமாயிருப்பதாக" என்று கூறாமல், "சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக" என்று கூறுகின்றது. 

நாம் வேதாகமம் மூலம் வேத வசனங்களை வாசிப்பது மட்டும்போதாது அந்த வசனங்களை அவை கூறும் சரியான பொருள் உணர்ந்து பூரணமாக நாம் அறிந்தவர்களாகவும் அதன்படி வாழ்பவர்களாகவும்  இருக்கவேண்டும். அதாவது அவரது வசனம் நமக்குள் நிலைத்திருக்கவேண்டும். "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." ( யோவான் 15: 7) என்று கூறவில்லையா? 

மேலும், நாம் தேவனுடைய வசனத்தில் தேறினவர்களாக இருந்தால் மட்டுமே மற்றவர்களுக்கு தேவனைப்பற்றி தெளிவாக அறிவிக்கவும் நம்மிடம் விளக்கங்களைக் கேட்பவர்களுக்கு ஏற்ற பதிலையும் கொடுக்க முடியும். எனவேதான் அப்போஸ்தலராகிய பவுல்,  "அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக." ( கொலோசெயர் 4: 6) என்று நமக்கு அறிவுறுத்துகின்றார்.

தேவனுடைய வசனங்களுக்குச் சரியான விளக்கங்கள் நமக்குக் கிடைக்கவேண்டுமானால் நாம் பரிசுத்த ஆவியானவரின் விளக்கத்தைப் பெறுவதற்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும். காரணம், வேத வசனங்கள் ஆவியானவரால் அருளப்பட்டவை. அவரே அவற்றுக்கான சரியான பொருளை நமக்குக் கொடுக்க முடியும். இப்படி ஆவியானவரின் துணையோடு வேத வசனங்களை நாம் அறியும்போதுதான்  அது நமக்குள்ளே  சகல ஞானத்தோடும் பரிபூரணமாகவும் செயல்படும்.   

ஒரே தேவ வார்த்தை பல்வேறு சமயங்களில் பல்வேறு வித உணர்த்துதல்களை நமக்குத் தருவதற்கு வல்லமையுள்ளது. எனவேதான் வேத வார்த்தைகள் உயிருள்ளவையாக இருக்கின்றன. சுமார் நாலாயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த பரிசுத்தவான்களுக்குக் கூறப்பட்ட வார்த்தைகள் இன்றும் நமக்கு  வழிகாட்டுவனவாக; நமக்கு இக்கட்டான நேரங்களில் ஆறுதல் கூறுவனவாக உள்ளதை நாம் பலவேளைகளில் உணரலாம். அந்த ஜீவனுள்ள  வார்த்தைகளே நமது ஆத்துமாவை உயிர்ப்பிக்கின்றது.  "உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்." ( சங்கீதம் 119: 92, 93)

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் வசனம் நமக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக இருக்குமானால் எந்த எதிர்மறையான சூழலும் நம்மைப் பாதிக்காது.  நாமும் சங்கீத ஆசிரியர் கூறுவதுபோல "நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்." என அறிக்கையிட்டு வாழ்பவர்களாக இருப்போம்.   


வேதாகமத் தியானம் - எண்:- 1,413
'ஆதவன்' 💚டிசம்பர் 21, 2024. 💚சனிக்கிழமை

"ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். (1 பேதுரு 5: 6)

பலரது வாழ்வில் தேவனுடைய ஆசீர்வாதத்தினை அவர்கள்  பெறுவதற்குத் தடையாக இருப்பது அவர்களது அவசர புத்தியும் அவசர எண்ணங்களும்தான். பொதுவாகவே மனிதர்கள் நாம் நமது செயல்களுக்கு உடனடியாக தேவனிடமிருந்து ஏற்ற பிரதிபலன் வரவேண்டுமென்று எண்ணுகின்றோம். "நான் தேவனுக்காக எவ்வளவோ செயல்கள் செய்கின்றேன் ஆனால் எனக்கு அவர் ஏற்ற பதிலைத் தரவில்லை; கைமாறு செய்யவில்லை" என்று எண்ணுகின்றோம். ஆனால் அப்படி எண்ணுவது தவறு. தேவனுக்கு ஏற்ற காலம் ஒன்று உண்டு. அந்தக்காலம் வரும்வரை நாம் காத்திருக்கவேண்டியது அவசியம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

தேவனுடைய கை வல்லமை மிக்கது. எனவே  அவருடைய பலத்த கைகளுக்குள் நாம் பொறுமையோடு அடங்கி இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பலரும் தேவனிடம் ஆசீர்வாதங்களுக்காக ஜெபிக்கின்றனர்; ஆனால் தேவ ஆசீர்வாதங்களைப் பெறுவதற்குப் பொறுமையாகக் காத்திருக்காமல் சுயமாகச்  சில குறுக்கு வழிகளைக் கையாண்டு வெற்றிபெற முயலுகின்றனர். எனவே பலவேளைகளில் மேலான தேவ ஆசீர்வாதங்களைப் பெறமுடியாமல் போய்விடுகின்றனர். 

தேவ கரங்களுக்குள் அடங்கி இருப்பதை நாம் முட்டைக்குள் அடங்கி இருக்கும் கோழிக்குஞ்சுக்கு ஒப்பிடலாம். தாய்க்கோழியின் உடல் வெப்பத்தைப் பெற்று அது முழு வளர்ச்சியைப் பெற அடங்கி 21 நாட்கள்  காத்திருக்கவேண்டும். அதுபோலவே நாமும் நம்மை தேவ கரத்துக்குள் ஒப்புக்கொடுத்து அடங்கி இருந்து அனலடைந்து வளர்ச்சிபெறவேண்டியது அவசியம். இதுபோலவே வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கையும் இருக்கின்றது.  அது புழுவாக இருந்து, கூட்டுப் புழுவாக மாறி அந்தக் கூட்டுக்குள் அடங்கி இருந்தால்தான் அழகிய பட்டாம்பூச்சியாக மாறி வானில் சிறகடித்துப் பறக்க முடியும். 

நமது உலக வாழ்க்கையிலும்கூட  நாம் ஒரு மருத்துவராகவோ பொறியாளராகவோ மாறவேண்டுமானால் எத்தனை ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருந்து படிக்கின்றோம்?. ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை என்று வரும்போது நாம் தேவனிடம் அவசரப்படுகின்றோம். ஆம் அன்பானவர்களே, ஏற்றகாலத்திலே தேவன் நம்மை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் நாம் பொறுமையாக அடங்கியிருக்கவேண்டியது அவசியம்.

பன்னிரண்டு வயதிலேயே இயேசு ஞானத்தில் தேறினவராக இருந்தாலும் அவர் பிதாவாகிய தேவன் தனக்குக் குறித்த காலம் வரும்வரை நாசரேத்தூரில் சென்று தாய்தந்தையருக்கு கீழ்ப்படிந்து பொறுமையாகக் காத்திருந்தார். "பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்." ( லுூக்கா 2: 51) என்று வாசிக்கின்றோம். மட்டுமல்ல, சிலுவை மரணம்வரை அவர் பிதாவுக்கு கீழ்ப்படிந்து அடங்கியிருந்தார். "அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." ( பிலிப்பியர் 2: 8)

இப்படி அவர் தன்னைத் தாழ்த்தி அடங்கி இருந்ததால் பிதாவாகிய தேவன் அவரை எல்லாருக்குமேலாக உயர்த்தி, அனைவரது கால்களையும் அவருக்குமுன் முடங்கும்படியான மாட்சியை அவருக்குக் கொடுத்தார் என்று கூறப்பட்டுள்ளது. எனவே நாமே நம்மை உயர்த்தாமல் தேவன் நம்மை உயர்த்தும் காலம் வரும்வரை பொறுமையாக அவரது பலத்தக் கைகளுக்குள் அடங்கியிருப்போம். அடங்கி இருப்பது அவமானமல்ல; அது வெற்றிக்காக தேவன் குறித்துள்ள ஒரு மேலான யுக்தி.



வேதாகமத் தியானம் - எண்:- 1,414
'ஆதவன்' 💚டிசம்பர் 22, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை

"மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா?" ( மத்தேயு 7: 10)

தன்னிடம் கேட்பவர்களுக்கு நன்மையானவற்றையே கொடுப்பது தேவனது குணமாகும். எந்த ஒரு தகப்பனும் தாயும் எப்படி தனது பிள்ளைகளுக்குக்  கேடானவற்றைக் கொடுப்பதில்லையோ அதுபோலவே தேவனும் எந்த நிலையிலும் நமக்குக் கேடுண்டாக்கும் எதனையும் கொடுப்பதில்லை.  இதனையே இயேசு கிறிஸ்து, "ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" ( மத்தேயு 7: 11) என்று கூறினார். 

மீனையும் பாம்பையும் அவர் இன்றைய தியான வசனத்தில் உவமையாகக் கூறுகின்றார். காரணம், மீன் ஆசீர்வாதத்தின் அடையாளம். ஐந்துமீனை அவர் ஐயாயிரம் மக்களுக்கு உணவாகக் கொடுத்தாரே. ஆனால் பாம்பு சாபத்தின் அடையாளம். அது ஆதியில் ஏதேன் தோட்டத்தில் தேவனால் சபிக்கப்பட்ட ஒரு உயிரினம்.  எனவே தேவன் தன்னிடம் கேட்பவர்களுக்கு ஆசீர்வாதத்தினைக் கொடுப்பாரேத் தவிர சாபத்தைக் கொடுக்கமாட்டார்.  

ஆனால் இன்று மனிதர்கள் நாம் நமது பிள்ளைகளுக்கு நன்மையானவற்றைக் கொடுக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு சில வேளைகளில்  தீமையானவற்றைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். சிலவேளைகளில்  பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகள் ஆசையுடன் கேட்பதால் செல்போனைக்  கொடுத்து விளையாடவைக்கின்றனர். குழந்தைகளுக்கு உடலிலும் மனதிலும் இது ஏற்படுத்தும் பல்வேறு பாதிப்புகளை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. இப்படிச் செய்வது மீனுக்குப்பதில் பாம்பைக் கொடுப்பது போன்ற செயலாகும்.  

இதுபோலவே நாம் தேவனிடம் கேட்கும் பல காரியங்கள் நமக்குத் தீமை வருவிப்பவனவாக இருக்கக்கூடும். எனவே தேவன் அவற்றை நமக்குத் தராமல் இருக்கலாம். அல்லது இப்போதைக்கு இது தேவையில்லை என்று கருதி அதனைக் கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் ஏற்ற காலத்தில் நாம் விரும்பியதைக் கொடுப்பதே தேவனின் செயலாக இருக்கின்றது. 

நாம் மேலே பார்த்த செல்போன் உதாரணத்தை வைத்தே இதனை விளக்கலாம். ஒரு ஐந்து அல்லது ஆறு வயது குழந்தைக்கு செல்போன் தேவையில்லாதது. அந்த வயதில் அக்குழந்தை கேட்டாலும் நாம் வாங்கிக் கொடுப்பதில்லை.  ஆனால் இன்றைய காலச் சூழ்நிலையில் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு அது தேவையாக இருக்கின்றது. அப்போது நாம் நமது பிள்ளைகளுக்கு அதனை வாங்கிக் கொடுக்கின்றோம். இதுபோலவே தேவன் காலம், நேரம்,  சூழ்நிலை கருதி நமது விண்ணப்பத்துக்குப் பதிலளிக்கின்றார். 

அன்பானவர்களே, நாம் தேவனிடம் எதனையாவது கேட்கும்போது நாமே நம்மை நிதானித்துப் பார்ப்போமானால் நமது விண்ணப்பங்கள் தேவனால் கேட்கப்படாமல் இருக்கும்போது மனமடியமாட்டோம்.  நமது தேவன் மீனைக் கேட்டால் அதற்குப் பதிலாக பாம்பைக் கொடுக்கும் கொடூர குணமுள்ளவரல்ல. ஏற்ற காலத்தில் ஏற்றவைகளைக்கொடுத்து நம்மை அவர் ஆசீர்வதிப்பார். எனவே தேவனுக்கு ஏற்றகாலம் வரும்வரைப் பொறுமையாக நமது விண்ணப்பங்கள் நிறைவேறக் காத்திருப்போம். 

"கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." ( நீதிமொழிகள் 10: 22)



வேதாகமத் தியானம் - எண்:- 1,415
'ஆதவன்' 💚டிசம்பர் 23, 2024. 💚திங்கள்கிழமை
  
"......உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3: 1)

சர்தை சபையின் தூதனுக்கு கூறும்படி சொல்லப்பட்ட வார்த்தைகளே இன்றைய தியான வசனம். ஆவிக்குரிய வாழ்வில் நான் சிறப்பாக இருக்கிறேன் என்று கூறிக்கொள்ளும் பலரது வாழ்க்கை தேவனுக்குமுன் சிறப்பானதாக இருப்பதில்லை. அவர்கள் தங்களை உயிருள்ளவர்கள் என்று கூறிக்கொண்டாலும் தேவனது பார்வையில் உயிரில்லாதவர்களே என்று இந்த வசனம் கூறுகின்றது. 

இதற்கான காரணத்தை அடுத்த வசனம் கூறுகின்றது, "நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை." ( வெளிப்படுத்தின விசேஷம் 3: 2) அதாவது உனது செயல்பாடுகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாகக் காணப்படவில்லை, எனவே முதலில் அவற்றைச் சீர்படுத்து  என்று கூறப்பட்டுள்ளது. 

கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்படும்போது மட்டுமே நாம் ஆவிக்குரிய மேலான நிலைக்கு வரமுடியும். காரணம், அப்படி நமது பாவங்கள் கழுவப்படும்போது நமது மனக்கண்கள் திறக்கப்பட்டு அதுவரை நாம் பாவம் என்று எண்ணாத பல காரியங்களை பாவம் என்று ஆவியானவர் நமக்கு உணர்த்தித்தருவார். ஆம், இதனையே நாம் எபிரெயர் நிருபத்தில், "நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!" ( எபிரெயர் 9: 14) என்று வாசிக்கின்றோம். 

கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு நமது மனச்சாட்சியைச் செத்த கிரியைகள் நீங்கச்   சுத்திகரிக்கின்றது என்று மேற்படி வசனம் கூறுகின்றது. அதாவது கிறிஸ்துவின் இரத்தம் நம்மைக் கழுவும்போது அதுவரை நாம் நம்மைக் கிறிஸ்தவர்கள்; கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்று கூறிக்கொண்டாலும்  நாம் கடைபிடித்துவந்த செயல்பாடுகளில்  செத்த செயல்பாடுகள் என்னென்ன என்பதை நமது மனச்சாட்சி நமக்கு படம்பிடித்துக் காட்டிவிடும். அவற்றை கழுவி நம்மைச் சுத்திகரிக்கும். 

ஆம் அன்பானவர்களே, நமது செயல்பாடுகளில் தேவனுக்கு ஏற்புடையவைகள் எவையெவை என்பதனை அறிய நாம் நமது பாவங்கள் கழுவப்பட்டு ஒப்புரவாகவேண்டியது அவசியம். அப்படி கழுவப்படவில்லையானால் நாம் நமது பாவங்களை உணராமல் இருப்போம். நமது பல பாவங்களை உணரமாட்டோம். அப்படி வாழ்வது நம்மை நாமே வஞ்சிப்பதாகும்.  "நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம், சத்தியம் நமக்குள் இராது." (1 யோவான் 1:8) 

நாம் உயிருள்ளவர்கள் என்று கூறிக்கொண்டால் போதாது உண்மையிலேயே உயிருள்ளவர்களாக இருக்கவேண்டும். அதற்கு முதல்படியாக நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் கழுவப்படும் அனுபவத்தைப் பெறவேண்டும். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." (1 யோவான் 1:9)

உண்மையான மனதுடன் மேலான இந்த அனுபவத்தைப் பெற தேவனிடம் வேண்டுவோம். "அன்பான இயேசுவே எனது பாவங்கள், மீறுதல்களை நான் உணர்ந்திருக்கிறேன். உமக்கு பிரியமில்லாத பல பாவ காரியங்களில் ஈடுபட்டு வாழ்ந்துள்ளேன் குறிப்பாக (குறிப்பிட்ட பாவங்களை இங்கு அறிக்கையிடவும்) என்னை உமது பரிசுத்த இரத்தத்தால் கழுவி சுத்திகரியும். உமது மீட்பை நான் காணவும் மறுபடி பிறக்கும் மேலான அனுபவத்தை நான் அனுபவித்து மகிழவும் கிருபை செய்யும்.  என்னைத் தாழ்த்தி உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.  இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்".


வேதாகமத் தியானம் - எண்:- 1,416
'ஆதவன்' 💚டிசம்பர் 24, 2024. 💚செவ்வாய்க்கிழமை

"ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்." (1 யோவான்  1 : 1)

இயேசு கிறிஸ்து வெறும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு மனிதனல்ல.  உலகங்கள் தோன்றுவதற்குமுன்னே அவர் பிதாவோடு இருந்தவர். அவர்மூலமாகவே அனைத்தும் படைக்கப்பட்டன. "அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை." ( யோவான் 1: 2, 3) என்று அவரைக்குறித்து கூறப்பட்டுள்ளது. 

ஆதிமுதல் இருந்ததும், கேட்டதும், பலர் கண்களினாலே கண்டதும், நோக்கிப்பார்த்ததும், கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையாம் கிறிஸ்து  மனிதனாக உலகினில் வந்ததாக குறிக்கும் ஒரு   நாளையே நாம் கிறிஸ்து பிறப்பு விழாவாகக் கொண்டாடுகின்றோம். கிறிஸ்து பிறப்பு சாதாரண ஒரு உலக மகான் பிறந்ததுபோன்ற பிறப்பல்ல. அது ஏற்கெனவே பிதாவாகிய தேவனால் திட்டமிடப்பட்டதும் பல தீர்க்கதரிசிகளால் முன்குறிக்கப்பட்டதுமான பிறப்பு.  

அவர் ஒரு உன்னதமான நோக்கத்தோடு உலகினில் பிறந்தார். ஆம், பிதாவிடத்திலிருந்து புறப்பட்டு பூமிக்கு அவர் வந்த நோக்கம் நமக்கு பாவத்திலிருந்து விடுதலையளித்து நித்தியஜீவனை அளிக்கவே. இதனை யோசேப்புக்கு தேவதூதன் அறிவித்தச் செய்தியில் கூறுகின்றான்:-  "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்." ( மத்தேயு 1: 21) ஆம், இயேசு எனும் பெயருக்குப் பொருள் "இரட்சகர்" என்பதே. 

வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள்  வாசித்து ஏற்றுக்கொள்ளவேண்டிய வார்த்தைகள் மட்டுமல்ல அனுபவத்தில் நாம் உணர்ந்து அனுபவிக்கவேண்டிய வார்த்தைகள். இந்த வார்த்தைகளின்படி நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது அவர் தனிப்பட்ட முறையில் நமக்கு வெளிப்படுவார். அப்படித் தங்களுக்கு அவர்  வெளிப்பட்ட அனுபவத்தில் அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார்,  "அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்." (1 யோவான்  1 : 2)

பிதாவினிடத்திலிருந்ததும், நமக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனுள்ள கிறிஸ்துவை நாம் நமது வாழ்வில் கண்டுணர்ந்து அவரைக்குறித்து சாட்சிகொடுத்து வாழவேண்டும். அப்போதுதான் நாம் கொண்டாடும் கிறிஸ்துபிறப்பு விழா அர்த்தமுள்ளதாக இருக்கும். இல்லையானால் உலக மக்கள் கொண்டாடும் சாதாரண ஒரு விழாவாகவே அது இருக்கும்.   

புத்தாடைகள்  அணிந்து, கிறிஸ்துமஸ் கேக் மற்றும் இனிப்புகளை மற்றவர்களுக்கு  வழங்கி,  அசைவ உணவுகளை உண்டு மகிழ்வதல்ல மெய்யான கிறிஸ்து பிறப்பு. அவர் நமது உள்ளத்தில் பிறப்பதே கிறிஸ்துமஸ்.   அது ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடும் பண்டிகையல்ல, நாம் நம்மை அவருக்கு எப்போது ஒப்புக்கொடுக்கின்றோமோ அன்றே நமது உள்ளத்தில் அவர் பிறக்கும் அனுபவம். அதற்கு டிசம்பர் 25 ஆம் தேதிவரை காத்திருக்கவேண்டிய அவசியமில்லை.  நாம் உண்மையான மனம்திரும்புதலுக்கு வரும்போது அவர் நமக்குள் பிறக்கின்றார். அப்படி அவர் நம்மோடு என்றும் இருப்பதை நாம் வாழ்வில் அனுதினமும் அனுபவிப்பதே மெய்யான கிறிஸ்து பிறப்பு. 

                                                                                          

வேதாகமத் தியானம் - எண்:- 1,417
'ஆதவன்' 💚டிசம்பர் 25, 2024. 💚புதன்கிழமை

"அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை." ( யோவான் 1: 11)

இந்த உலகத்தைப் படைத்து அதிலுள்ள உயிரினங்களையும்  படைத்து ஆளும் தேவாதி தேவன் மனிதனாக உலகத்தில் வந்தார். இந்த உலகமும் இதிலுள்ள மக்களும் அவருக்குச் சொந்தமானவர்கள்தான். ஆனால் அவர் உலகத்தில் வந்தபோது அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் பிறப்பதற்கு சத்திரத்தில்கூட அவருக்கு இடமில்லை (லூக்கா 2:7);  வாழ்ந்தபோது தலை சாய்க்க இடமில்லை (மத்தேயு 8:20); அவர் மரித்தபோது அவரை அடக்கம்செய்ய சொந்த கல்லறையில்லை (மத்தேயு 27: 59, 60)

அவர் யூதர்களுக்காக அன்று உலகத்தில் வந்திருந்தாலும் யூதர்கள் அனைவரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களே அவரைக் கொலையும் செய்தனர். அவரை ஏற்றுக்கொள்வது என்பது அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொள்வது. அதன்படி வாழ்வது. "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12: 48) என்று அவர் கூறவில்லையா? எனவே அவரை ஏற்றுக்கொள்வது என்பது அவரது வார்த்தையை ஏற்றுக்கொள்வது; அதனை வாழ்வாக்குவது. 

அவர் பல்வேறு அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்திருந்தாலும் யூதர்களில் பலரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.  "அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது." ( யோவான் 12: 37, 38) என்று வாசிக்கின்றோம். 

இன்று நாமும்கூட கிறிஸ்துவால் பல்வேறு நலன்களை பெற்றிருக்கலாம். அவரால் பல்வேறு அற்புதங்களை அனுபவித்திருக்கலாம். ஆனால் அது மட்டும் போதாது. அவரை தனிப்பட்ட முறையில் தகப்பனாக அறியவேண்டியது அவசியம். கிறிஸ்தவர்கள் என்று நம்மை நாம் கூறிக்கொண்டாலும் அவரை அறிந்தால் மட்டுமே உண்மையான கிறிஸ்தவர்கள். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்கு உட்பட்டவர்களாய் இருப்பீர்கள்.  கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 )

ஆம் அன்பானவர்களே, இன்று நாம் அவரை உள்ளத்தில் ஏற்றுக்கொள்வோமானால் நாமே அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக இருப்போம். அவரது பிள்ளைகளாக இருப்போம். "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்." ( யோவான் 1: 12) என்று கூறப்பட்டுள்ளது. நாம் பிள்ளைகளானால் அவரை ஏற்றுக்கொண்டுள்ளோம் என்று பொருள். அவரது பிள்ளைகளாகும் அனுபவமே மறுபடி பிறத்தல். 

இந்த ஆவிக்குரிய அனுபவம் பெற்று வாழும்போதுதான் நாம் அவரை ஏற்றுக்கொண்டுள்ளோம் என்பதனை உறுதியாகக் கூறமுடியும். இல்லையானால் வெறுமனே கிறிஸ்து பிறப்பை சாதாரண ஒரு மனிதனின் பிறப்பைப்போல கொண்டாடுகிறவர்களாகவே நாமும் இருப்போம். அவர் தமக்குச் சொந்தமான நம்மிடத்தில் வந்தார், அவருக்குச் சொந்தமான நாமோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் பொருள்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   📞 Contact: 96889 33712
🌐 Website: aathavanmonthly.blogspot.com      


வேதாகமத் தியானம் - எண்:- 1,418
'ஆதவன்' 💚டிசம்பர் 26, 2024. 💚வியாழக்கிழமை

"உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்."( மத்தேயு 6: 21)

நாம் எதனை அதிகம் விரும்புகின்றோமோ அதனையே எண்ணிக்கொண்டிருப்போம். அதுவே நமது முழுநேர எண்ணமாக இருக்கும். அரசியலில் ஈடுபட்டு பதவிக்காக உழைப்பவர்கள் அதனையே தங்கள் இறுதி இலக்காக எண்ணிச் செயல்படுவார்கள். அவர்கள் பேச்சு, செயல்பாடுகள் முழுவதும் அதுபற்றியே இருக்கும். ஒரு பெண்ணைக் காதலிப்பவன் இரவும் பகலும் அவளது நினைவாகவே இருப்பான். அவளே அவனுக்கு எல்லாமாக இருக்கும். பணத்துக்காக அலைபவன் இரவுபகல் உறக்கமின்றி குடும்பத்தைக்கூட கவனிக்காமல் பணத்துக்காக அலைந்துகொண்டிருப்பான். 

இதுபோலவே, நாம் உண்மையாக தேவனிடம் அன்பு கொள்பவர்களாக இருப்போமானால் அவரைப்பற்றிய எண்ணமே நம்மில் மேலோங்கி அவர் விரும்புவதைச் செய்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவோம். 

"என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்." ( சங்கீதம் 63: 6) என்று தனது அனுபவத்தைக் கூறுகின்றார் தாவீது. அவர் யூதாவின் வனாந்தரத்தில் இருந்தபோது எழுதிய வார்த்தைகள் இவை என்று கூறப்பட்டுள்ளது. வனாந்தரம் என்பது காட்டுப்பகுதி. அங்கு சுகமாக வாழ்வதற்கோ, படுத்து இளைப்பாறுவதற்கோ வசதிகள் கிடையாது.  ஆனால் அந்தச் சூழ்நிலையிலும் அவர் தேவனைத் தியானிக்கின்றார் என்றால் அவரது மனம் தேவனால் நிரம்பியிருந்தது என்று பொருள். 

எப்போதும் நாம் தேவனையே நினைத்துக் கொண்டிருந்தால் நமது சொந்த வேலைகளைக் கவனிப்பது எப்போது என்று சிலர் எண்ணலாம். ஆனால் அப்படி வேதத்தில்  கூறப்படவில்லை. நாம் என்ன உலக வேலை செய்தாலும் முன்னுரிமையினை தேவனுக்குக் கொடுக்கவேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. நமது இருதயம் நாம் செய்யும் வேலையை முன்னிலைப்படுத்தாமல் தேவனை முன்னிலைப்படுத்தவேண்டும். அப்படி நாம் வாழும்போது நமது உலகக் காரியங்களை அவர் வாய்க்கச்செய்வார். 

வேலை மட்டுமல்ல நமது எல்லா தேவைகளையும், பிரச்சனைகளையும் நாம் அணுகும்போதும் இப்படியே இருக்கவேண்டும். அதாவது, தேவைகள் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தாமல் தேவனை நாம் முன்னிலைப் படுத்துபவர்களாக வாழவேண்டும். 

இதனையே இயேசு கிறிஸ்து, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6: 33) என்று கூறினார். அவரை நாம் மெய்யாக அன்பு செய்வோமானால் அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளுகிறவர்களாக இருப்போம். அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும்போது நம்மில் உறுதியான விசுவாசம் ஏற்படும். தேவன் என்னைக் கைவிடமாட்டார் என்று அவரை நம்பி, அவருக்கு முன்னுரிமை கொடுத்து உறுதியுடன் வாழ்வோம். 

அன்பானவர்களே, நமது பொக்கிஷம் எங்கேயிருக்கின்றது என்று நிதானித்துப் பார்ப்போம்.  நமது பிள்ளைகள், வேலை, தொழில் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தையும்விட நமது இருதயம் தேவனைச் சார்ந்து இருக்கவேண்டியது அவசியம். இதனையே உவமையாக இயேசு கிறிஸ்து,  "அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக்கொள்ளுகிறான்." ( மத்தேயு 13: 44) என்று கூறினார். 

பரலோக பொக்கிஷத்தின்மேல் நாம் மெய்யான அன்புகொள்வோமானால் தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை உரிமையாக்கிய  மனிதனைப்போல நமக்கு உரியவற்றுக்கு இரண்டாமிடம் கொடுப்பவர்களாக இருப்போம். ஆம், நமது பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே நமது  இருதயமும் இருக்கும்


வேதாகமத் தியானம் - எண்:- 1,419
'ஆதவன்' 💚டிசம்பர் 27, 2024. 💚வெள்ளிக்கிழமை

"உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்." ( யோவான் 14: 1)

இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறுகின்றார். ஒருவேளை நாம் இன்று பல்வேறுவித எண்ணங்களால் கலங்கிக்கொண்டிருக்கலாம். நமது பிரச்சனைகள், நோய்கள், கடன் பாரங்கள் நம்மை அழுத்தி என்ன செய்வோம் என ஏங்கிக்கொண்டிருக்கலாம். ஆனால் ஆண்டவராகிய இயேசு நம்மைப் பார்த்துக் கூறுகின்றார், "உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக."

தொடர்ந்து இந்த வசனத்தில் அவர் கூறுகின்றார், "தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்." என்று. அதாவது பிதாவிலும் என்னிலும் உங்கள் உள்ளமானது விசுவாசம் கொள்ளட்டும் என்கின்றார். நமது உள்ளமானது கலக்கமடைய முக்கிய காரணம் பயம். நாம் பிரச்சனைகளையும் சூழ்நிலைகளையும் கண்டு பயந்து பயத்துக்குள்ளாகி கலங்கி நிற்கின்றோம். 

அப்போஸ்தலரான யோவான் எழுதுகின்றார், "அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல." (1 யோவான்  4 : 18) என்று. ஆம், சூழ்நிலைகளைப் பார்த்து பயந்து கொண்டிருக்கின்றோமென்றால் இன்னும் நாம் தேவன்மேலுள்ள அன்பில் பூரணப்படவில்லையென்று அர்த்தம். அவர்மேல் பூரண அன்பு கொள்ளும்போது எப்படியும் தேவன் என்னை இந்த இக்கட்டான நிலையிலிருந்து விடுவிப்பார் எனும் உறுதி நமக்குள் ஏற்படுவதால் கலக்கங்கள் நம்மைவிட்டு அகன்றுவிடும். 

தனது பெண்பிள்ளையின் திருமணச் செலவுக்காக ஒருதாய் ஒருவரிடம் பணஉதவி கேட்டிருப்பாரானால் அந்த நபர் தருகிறேன் என்று கூறியிருந்தாலும் அவர் கூறியபடி அந்தப் பணம் கைக்கு வரும்வரை அந்தத் தாயின் மனமானது கலங்கிக்கொண்டிருக்கும். காரணம் பயம். ஒருவேளை அந்த நபர் தான் கூறியபடி பணத்தைத் தரவில்லையானால் என்னச்செய்வோம் என்று எண்ணிக் கலங்கிநிற்கின்றாள் அவள். ஆனால் பணத்தை வாக்களித்து கொண்டுவருவேன் என்றவர் வெளிநாட்டில் பணிபுரியம் அந்தப் பெண்ணின் கணவனோ தகப்பனோ என்றால் அவள் வீணாகக் கலங்கமாட்டாள். காரணம் தகப்பன் எப்படியும் கைவிடமாட்டார் என்று நம்புவதுதான் காரணம். 

இதுபோலவே நாம் தேவனை அன்பான தகப்பனாக எண்ணி அவரோடு தொடர்பில் இருப்போமானால் எந்தச் சூழ்நிலையும் நம்மைக் கலக்கமடையச் செய்யாது. காரணம், அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். எனவே அன்பானவர்களே, தேவனோடுள்ள நமது ஐக்கியத்தை உறுதிப்படுத்தும்போது நமது விசுவாசம் உறுதிப்படும். தேவ ஐக்கியத்தில் நாம் வளரவேண்டியதன் அவசியம் இதுதான். தேவ ஐக்கியம் நமது பயத்தைத் தள்ளி விசுவாசத்தை வலுப்படுத்தும். நமது உள்ளம் கலங்காதிருக்க  நமது சொந்த தகப்பனாக தாயாக தேவனோடு உறவுகொண்டு வாழும் ஆவிக்குரிய நிலையை அடைந்திட முயற்சிப்போம்.  அதற்கு நமது ஜெபங்களில் உலகப் பொருள் ஆசீர்வாதங்களை முன்னிலைப்படுத்தாமல் அவரை அடைந்துகொள்வதையே   முன்னிலைப்படுத்துவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   📞 Contact: 96889 33712
🌐 Website: aathavanmonthly.blogspot.com      

வேதாகமத் தியானம் - எண்:- 1,420
'ஆதவன்' 💚டிசம்பர் 28, 2024. 💚சனிக்கிழமை

"இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்." ( ரோமர் 13: 12)

மனிதர்களது வாழ்க்கை இருள் பகல் என்று இரண்டு பிரிவுகளுக்குள் இருப்பதனை அப்போஸ்தலரான பவுல் இங்கு கூறுகின்றார். கிறிஸ்துவை அறியாமல் நாம் வாழ்ந்த வாழ்க்கை இருளின் வாழ்க்கை. அப்போது நாம் இருளின் பாவச் செயல்பாடுகளைக் கொண்டவர்களாக வாழ்ந்து வந்தோம். ஆனால் இப்போது நாம் கிறிஸ்துவை அறிந்துகொண்டோம். உலகத்தின் ஒளியாகிய அவர் சமீபத்தில் வந்துவிட்டார். அவரது இரண்டாம் வருகை எப்போது நிகழும் என்று நமக்குத் தெரியாது. ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம் என்கின்றார். 

பொதுவாகவே உலகத்தில் நாம் பார்க்கும் உயிரினங்களில் இருளின் உயிரினங்கள் அவலட்சணமானவை. அவைகளின் குணங்களும் மோசமானவை. ஆந்தை, கூகை, நரி ஓநாய், போன்ற உயிரினங்களும் தேள், கரப்பான், பாம்பு போன்ற கொடிய ஜந்துகளும் இருளைத்தான் விரும்புகின்றன. ஒளியைக் கண்டால் அவை பதுங்கி ஒளிந்துகொள்கின்றன. இதுபோலவே இருளின் குணங்களுள்ள மனிதர்களும் இருக்கின்றனர். 

இருளின் அவலட்சணமான குணங்களான, "களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்." ( ரோமர் 13: 13) என்று அவர் நமக்கு அறிவுறுத்துகின்றார்.  மட்டுமல்ல,  "துர் இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்." ( ரோமர் 13: 14) என்கிறார். ஒளியான கிறிஸ்துவை நாம் அணிந்துகொள்ளும்போது இருளான குணங்கள் நம்மிலிருந்து அகன்று விடுகின்றன. 

மட்டுமல்ல, இன்றைய தியான வசனம் நமக்கு "ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்" என்றும்  அறிவுறுத்துகின்றது. ஒளியின் ஆயுதங்களை அப்போஸ்தலரான பவுல் எபேசியருக்கு எழுதிய நிரூபத்தில் பட்டியலிட்டு பின்வருமாறு கூறியுள்ளார்:- 

"சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 6: 14 - 17)

ஆம் அன்பானவர்களே, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாள் சமீபித்துவிட்டது. தனது வருகைக்காக அவர் முன்குறித்த அடையாளங்கள் பலவும் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. ஆம், இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.  "தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்பட மாட்டோம்". (2 கொரிந்தியர் 5: 3) 
 
      
வேதாகமத் தியானம் - எண்:- 1,421
'ஆதவன்' 💚டிசம்பர் 29, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை

"அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்." ( யோபு 2: 9)

ஒருவர் வசதியோடு, அதிகாரத்தோடு வாழும்போது அவருக்கு அனைவரும் மதிப்பளித்து அவரை உயர்வாக எண்ணுவார்கள். ஆனால் அதே நபர் வசதியையும் வாய்ப்புகளையும் இழந்துவிட்டார் என்றால் சொந்த மனைவி, பிள்ளைகள்கூட அவரை மதிக்கமாட்டார்கள். இந்த எதார்த்தத்தை இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. 

"என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன். நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று. என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது;" ( யோபு 19: 15 - 17) என அங்கலாய்க்கின்றார் யோபு. 

வேலைக்காரர்கள் அவரை மதிக்கவில்லை, செழிப்போடு வாழ்ந்தபோது அவரோடு அன்பாக வாழ்ந்த மனைவி, இப்போது அவர் அனைத்துச் செல்வங்களையும் உடல் நலத்தையும் இழந்துவிட்டபோது, "இன்னும் நீர் ஏன் உத்தமத்தோடு உண்மையோடு வாழவேண்டும்? செத்துத் தொலையும்" என்கிறாள். இதுபோலவே நமது வாழ்க்கையிலும் நிகழலாம். நம்மோடு இருந்தவர்கள், நாம் சம்பாதித்த சொத்து சுகங்களை அனுபவித்தவர்கள் இவற்றை நாம் இழக்கும்போது இப்படி நமக்கு எதிராகப் பேசலாம். 

பத்திரிகைகளில் நாம் இதைப்போன்ற செய்திகளை இன்று அதிகம் வாசிக்கின்றோம். தனது பிள்ளைகளை நம்பி அவர்கள்  பெயரில் சொத்துக்களை எழுதிக்கொடுத்துவிட்டு முதிர்வயதில் அந்தப் பிள்ளைகள் அவர்களை  வீட்டைவிட்டுத் துரத்தியதால் தான் முன்பு எழுதிக்கொடுத்த பத்திரம் செல்லாது என அறிவிக்கவேண்டும் என்று பதிவுத்துறை அலுவலகத்திலும் தாசில்தார் அலுவலகத்திலும் பலர் மனுகொடுத்து அலைந்து கொண்டிருப்பதைப்  பார்க்கின்றோம். 

ஆனால் யோபு அப்படியில்லாமல் தேவனையே சார்ந்துகொண்டார். "நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை." ( யோபு 2: 10) என்று கூறப்பட்டுள்ளது. 

யோபு, இவைகள் எல்லாவற்றிலும்  தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவர் தனது இன்றைய நிலைக்காக தேவனைக் குற்றப்படுத்தவில்லை.  "நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்."  ( யோபு 1 : 21 ) என்று அமைதியாக இருந்தார்.

இதனை வாசிக்கும் அன்பு சகோதரரே சகோதரிகளே, இதுபோன்ற நிலையில் ஒருவேளை நீங்கள் இருப்பீர்களென்றால் முறுமுறுக்காமல் அனைத்துக் காரியங்களையும் தேவ சமூகத்தில் ஒப்புக்கொடுத்து அமைதியாக இருங்கள். அமைதியாக தன்னை நம்பி வாழ்ந்த யோபுவைக் கைவிடாமல் இரண்டுமடங்காய் ஆசீர்வதித்த  தேவன் உங்களையும் ஆசீர்வதிப்பார்; நிலைமையை உங்களுக்குத் சாதகமாக மாற்றுவார். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,422
'ஆதவன்' 💚டிசம்பர் 30, 2024. 💚திங்கள்கிழமை

"தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்." ( கொலோசெயர் 3: 15)

இன்றைய தியான வசனம் இரண்டு காரியங்களை வலியுறுத்துகின்றது. ஒன்று தேவ சமாதானம்; இன்னொன்று நன்றியறிதல்.   இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை என்பதால் இவை இணைத்துக் கூறப்பட்டுள்ளன. 

ஒருவருக்கொருவர் சமாதானம் இல்லாமல் இருப்பது பல்வேறு தீய செயல்களுக்குக் காரணமாயிருக்கின்றது. குற்றங்கள் நாட்டில் பெருகிட சாமாதானக் குறைவே காரணம். மட்டுமல்ல,  மனிதர்களது பல்வேறு நோய்களுக்கு இருதய சமாதானம் இல்லாமல் இருப்பதே காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சமாதானக் குறைவே தற்கொலைகளுக்கும் காரணமாக இருக்கின்றது. 

இன்றைய தியான வசனம் வெறுமனே சமாதானம் என்று கூறாமல், "தேவ சமாதானம்" என்று கூறுகின்றது. உலக சமாதானம் என்பது வேறு; தேவ சமாதானம் என்பது வேறு. உலகம் கொடுக்கும் சமாதானம் உலக பொருள்களால் கிடைக்கும். மட்டுமல்ல, போதை வஸ்துக்கள், திரைப்படங்கள் இவைகளும் சமாதானத்தை அளிக்கும். ஆனால் இத்தகைய சமாதானம் நிரந்தரமல்ல; மாறாக தேவ சமாதானமோ கிறிஸ்து இயேசு நமது இருதயத்தை நிரப்புவதால் கிடைக்கின்றது. எனவேதான் இயேசு கிறிஸ்து, "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக." ( யோவான் 14: 27) என்று கூறினார். 

கிறிஸ்து இயேசுவின் சமாதானம் மனிதர்களிடையே பெருகும்போது ஒற்றுமையும் ஐக்கியமும் அதிகரிக்கும். எனவேதான் இன்றைய தியான வசனம் "தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்" என்று கூறுகின்றது. இயேசு கிறிஸ்து தனது சீடர்களிடம் "ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்." ( லுூக்கா 10: 5) என்று கூறினார். 

இன்றைய தியான வசனம் மேலும் கூறுகின்றது,  "நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்"  என்று.  பலரும் தாங்கள்  பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு தேவனுக்கு நன்றி கூறுகின்றார்கள். ஆனால் தங்களுக்கு பிறர்  செய்த நன்மைகளுக்கு பெரும்பாலும் நன்றியறிதல் உள்ளவர்களாக இருப்பதில்லை. ஒருவர் தனது முயற்சியால் சிரமப்பட்டு முன்னுக்கு வந்திருந்தாலும் அவர்களது முன்னேற்றத்துக்கு தூண்டுகோலாய் யாராவது இருந்திருப்பார்கள். அவர்களுக்கு நன்றியறிதலுள்ளவர்களாய் இருக்கவேண்டியது அவசியம். 

தேவ சமாதானம், நன்றியறிதல் இரண்டும் வெல்வேறு காரியங்கள்தான். ஆனால் இரண்டும் இங்கு ஒரே வசனத்தில் சேர்த்துக்  கூறப்பட்டுள்ளன. காரணம், நன்றியறிதல் என்ற உன்னத குணம் உள்ளவர்களிடம்தான் தேவ சமாதானம் நிலைத்திருக்க முடியும். நன்றியறிதல் இல்லாதவன் பொறாமை குணம் உள்ளவனாக மாறிவிடுவதால் அவனிடம் தேவ சமாதானம் குடிகொள்ள முடிவதில்லை. எனவே நன்றியறிதலுள்ளவர்களாக வாழ்வோம். தேவ சமாதானத்தையும் பெற்று மன ஆறுதலும் தேறுதலும் பெறுவோம். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,423
'ஆதவன்' 💚டிசம்பர் 31, 2024. 💚செவ்வாய்க்கிழமை

"எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது." (1 தெசலோனிக்கேயர் 5: 18)

2024 ஆம் ஆண்டின் இறுதி நாளில் வந்துள்ளோம். இந்த ஆண்டு நமது வாழ்வில் பல்வேறு நல்ல காரியங்கள் நடந்திருக்கலாம். சில கவலையளிக்கும் காரியங்களும் நடந்திருக்கலாம். வாழ்வில் மறக்கமுடியாத இழப்புகள் சிலரது வாழ்வில் நிகழ்ந்திருக்கலாம்.  ஆனால் இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது."

அனைத்து விசுவாசிகளைக்குறித்த பொதுவான தேவ சித்தம் உண்டு. அதுபோல தேவன் நாம் ஒவ்வொருவரைக்குறித்தும் ஒரு தனிப்பட்டச் சித்தம் ஒன்றும் வைத்துள்ளார். அதனை நாம் தேவனோடு நெருங்கிய உறவிலிருந்தால் புரிந்துகொள்ள முடியும். விசுவாசிகள் அனைவரைக்குறித்தும் பொதுவான  சித்தம்தான் இன்றைய தியான வசனம் கூறுவது. அதாவது எல்லாவற்றிலும் நாம் தேவனை ஸ்தோத்திரபலியினால் மகிமைப்படுத்தவேண்டும் என்பதே அது. 

தேவனது சித்தமில்லாமல் நமது வாழ்வில் எதுவும் நடப்பதில்லை. நாம் ஸ்தோத்திரம் செய்யும்போது தேவ சித்தத்துக்கு நம்மை ஒப்புக்கொடுத்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம். தேவன் முறுமுறுப்பதை விரும்புவதில்லை. இஸ்ரவேல் மக்களை அவர் கானானுக்கு வழிநடத்தியபோது வழியில் கண்ட துன்பமான சூழ்நிலைகளைக்கண்டு பலர் முறுமுறுத்தனர். ஆனால் தேவன் அப்படி முறுமுறுத்தவர்களை அழித்து ஒழித்தார்.   

"அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள். இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது." (1 கொரிந்தியர் 10: 10, 11) என்று வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, உலகத்தின் இறுதிநாட்களில் நிற்க்கும் நமக்கு எச்சரிக்கைக்காக இவை வேதத்தில் எழுதப்பட்டுள்ளன. 

எனவே இந்த ஆண்டில் நமக்கு இழப்புகளோ துன்பங்களோ ஏற்பட்டிருக்குமானால் நாம் முறுமுறுக்காமல் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தவேண்டும். பக்தனான யோபு இதுபோல பல்வேறு இழப்புக்களை வாழ்வில் சந்தித்தபோதும்  தேவனை ஸ்தோத்தரிப்பவராகவே வாழ்ந்தார்.  தேவன் அவரைக் கைவிடவில்லை. 

அதுபோல நமது வாழ்க்கையில் இந்த ஆண்டில் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கக்கூடும். நமது குடும்பத்திலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நாம் பல நன்மைகளை அனுபவித்திருப்போம். அவைகளுக்காகவும் நாம் தேவனை மகிமைப்படுத்தவேண்டும். "ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்." ( சங்கீதம் 50: 23) எனும் வசனம் ஸ்தோத்திரம் செலுத்துகிறவன் தனது வழியைச் செம்மைப்படுத்துகின்றான் என்று கூறுகின்றது. இப்படிச் செம்மைப்படுத்துபவனுக்கு இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்கிறார் தேவன். 

ஆம் அன்பானவர்களே, இந்த ஆண்டில் நமது வாழ்வில் என்ன நடந்திருந்தாலும் அவற்றுக்காக தேவனுக்கு நன்று செலுத்தி ஸ்தோத்திரம் செய்வோம். அவரது ஆசீர்வாதம் நமக்கு வரும் நாட்களில் நிச்சயம் உண்டு. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   📞 Contact: 96889 33712
🌐 Website: aathavanmonthly.blogspot.com      

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

Meditation Verse - வெளி. விசேஷம் 22: 14 / Revelation 22:14

  வேதாகமத் தியானம் - எண்:- 1,432 'ஆதவன்' 💚ஜனவரி 09 , 2025. 💚வியாழக்கிழமை "ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாச...