Sunday, October 31, 2021

உன்னைக்குறித்தும் உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு..

                 - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

சுமார் இருபத்தியாறு ஆண்டுகளுக்குமுன் நான்            ஞாயிறுதோறும்    கன்னியாகுமரி   அருகிலுள்ள   கொட்டாரம்    எனும்   ஊரிலிருக்கும்   .பி .சி . சர்ச்    ஆராதனையில்    கலந்து  கொள்வேன்அங்கு பாஸ்டராக ஜான்சன் டேவிட் எனும் மூத்த போதகர் ஐயா இருந்தார்கள் (இப்போது இறந்துவிட்டார்). மிகப் பெரிய தேவ மனிதனாகவும் தீர்க்கதரிசியாகவும் இருந்தார் அவர்ஒரு  மறைவானஆரவாரமில்லாத வாழ்க்கை வாழ்ந்தவர்.

அவர் ஒருமுறை என்னிடம் பேசும்போது அவருக்கு  ஆண்டவர் அளித்த தரிசனத்தைக் குறித்து               விளக்கினார்.     ஒருமுறை   அவர்  ஆலயத்தில்                            பிரசங்கித்துக் கொண்டிருக்கும்போது அவரது                                                                     பிரசங்கம்   அனைத்தும்    ஒரு  பெரிய டேப்ரிக்கார்டரில்                         பதிவு          செய்யப்பட்டுக்        கொண்டடிருந்ததாம்இதனை    அவர் பிரசங்கம்                செய்யும்          அதே நேரத்தில் ஆண்டவர் அவருக்குக்  காண்பித்தாராம்அப்போது ஆண்டவர் அவருக்கு,  "நீ போதிப்பதில்  கவனமாக இருஎன்றாராம். பின்,  "உன்னைக்குறித்தும்  உன்  உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிருஇவைகளில் நிலைகொண்டிருஇப்படிச் செய்வாயானால்உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்."                                 ( 1 தீமோத்தேயு 4 : 16 ) எனும் வசனத்தை அவருக்கு உணர்த்தினாராம். ஆம், நாம் பேசும் ஒவ்வொரு பேச்சும் நியாயத் தீர்ப்பு நாளில்                ஆண்டவரால் நினைவுகூரப்படும் என்பதற்கு இது ஒரு அடையாளம்.

அப்போது நான் ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்பகட்டத்தில் இருந்தேன். அப்போது பாஸ்டர் ஜான்சன் டேவிட் ஐயா என்னிடம், "தம்பி பிற்காலத்தில் நீ ஊழியம் செய்யும்போது இதை மறந்திடாதே " என்று அறிவுரை கூறினார். அப்போது அப்படி நான் போதிக்கும் நிலை வரும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் இன்று ஒவ்வொரு வேதாகம செய்தி எழுதும்போதும் இந்த வார்த்தைகள் என்னை அச்சுறுத்துவனவாகவே உள்ளன.

அன்பானவர்களே, இது எனக்கு மட்டுமல்ல, நாம் அனைவருக்குமே பொருந்தும். கிறிஸ்தவர்கள் நாம் அனைவருமே கிறிஸ்துவை போதிக்கக் கடமைப்பட்டவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கிறிஸ்துவை அறிவிக்கின்றோம். அதனால் போதனை  மட்டுமல்ல, நமது செயல்பாடுகள் பிறருக்குச் சாட்சியளிக்கும் விதத்தில் இருக்கவேண்டும்.

அந்தியோகியாவில் கிறிஸ்துவைப்போல வாழ்ந்த அவரது சீடர்களைப் பார்த்துதான் மற்றவர்கள் அவர்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்தனர் (அப்போஸ்தலர் பணி 11:26). 

ஆனால் இன்று பலரும் இயேசு கிறிஸ்து அரசியல் கட்சி துவங்குவதுபோல கிறிஸ்தவ மதத்தைத் தோற்றுவித்தார் எனது தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றோம். மேற்படி வசனத்தின்படி சீடர்கள் தங்கள் போதகத்தின்படியே வாழ்ந்ததால் அவர்களது உபதேசத்தைக் கேட்டவர்களையும் அவர்கள் இரட்சிப்பு அனுபவத்தினுள் நடத்தினார்கள். அப்படி அந்த மீட்பு அனுபவத்தைப் பெற்றவர்களே கிறிஸ்தவர்கள்.

கிறிஸ்தவத்தின் ஏதோ ஒரு பிரிவு சபையில் உறுப்பினராக இருப்பவர்கள் கிறிஸ்தவர்களல்ல, கிறிஸ்துவின் போதனைகளின்படி ஒரு சீடத்துவ வாழ்வு வாழ்பவர்களே கிறிஸ்தவர்கள். 

நான் கிறிஸ்துவை அறிவதற்குமுன் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஈடுபாடுகொண்டு வாழ்ந்தேன். கடவுள் நம்பிக்கை அப்போது எனக்கு இருக்கவில்லை. ஆனால் நான் வாழ்வில் கண்ட கிறிஸ்தவ ஊழியர்கள் பெரும்பாலும் கிறிஸ்துவைப் பிரதிபலிக்கவில்லை. மேலும் குடி, பெண்வெறி கொண்டவர்களாக இருந்தனர். கடவுள் என ஒருவர் இருப்பாரானால் ஏன் இவர்களை விட்டுவைத்திருக்கின்றார்? என்று அப்போது நான் எண்ணுவேன். ஆனால் நான் இருந்த கம்யூனிஸ்ட் இயக்க நண்பர்கள் பெரும்பாலும் நல்லவர்களாக இருந்தனர். எனவே அதுவே உண்மை எனும் உறுதியை எனக்குத் தந்தது. 

கிறிஸ்துவைப் போதிப்பவன் தன்னைக் குறித்து, தனது வாழ்கையினைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.  அல்லது தனது போதக பணியை விட்டுவிடுவது நல்லது. 

இன்று இதனைப் படிக்கும் நீங்கள் ஒருவேளை ஏதோ ஒரு வழியில் கிறிஸ்துவை அறிவிக்கிறவர்களாக இருந்தால் இதனை நினைவில்கொள்ளவேண்டியது அவசியம். நமது பேச்சு செயல் இவற்றில் எச்சரிக்கையாய் இருப்போம். நமது ஒவ்வொரு பேச்சும் செயலும் தேவனால் கவனிக்கப்படுகின்றன, அவையே நியாயத் தீர்ப்பு நாளில் நமக்கு எதிராகவோ ஆதரவாகவோ சாட்சி சொல்லும் எனும் அச்ச உணர்வு இருந்தால் மட்டுமே நாம் ஒரு உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ முடியும்; கிறிஸ்துவை அறிவித்து ஆத்தும ஆதாயம் செய்ய முடியும்.

ஆம், "உன்னைக்குறித்தும்  உன்   உபதேசத்தைக்குறித்தும்  எச்சரிக்கையாயிருஇவைகளில் நிலைகொண்டிருஇப்படிச்                      செய்வாயானால்உன்னையும் உன் உபதேசத்தைக்                      கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்."  

No comments: