DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Saturday, November 15, 2025

🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 3 : 5 / 2 Corinthians 3:5

 "விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1745                                   🔆 ஆதவன் 17.11.2025 திங்கள்   


"எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." ( 2 கொரிந்தியர் 3 : 5 )

இன்று உலகினில் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களும் பெரிய பெரிய தொழிச்சாலைகளும் உள்ளன. ஒவ்வொரு நிறுவனங்களிலும் பல ஆயிரம்பேர் பணிபுரிகின்றனர். இது தவிர, நாடுகளின் அரசாங்கமானது மிகப்பெரிய வேலைவாய்ப்பை மக்களுக்கு அளிக்கின்றது. கோடிக்கணக்கான மக்கள் அரசுத் துறைகளில் பணிபுரிகின்றனர். இவர்களில் எல்லோரும் தேவனால் தகுதிபெற்றவர்களா? பெரும்பாலானவர்கள் தேவனை அறியாதவர்கள் அல்லவா? ஆனாலும் அனைத்தும் சிறப்பானதாகத்தானே நடைபெறுகின்றது? அப்படியானால் "எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." இன்றைய தியான வசனம் சொல்வது பொய்யா?

அன்பானவர்களே, வேதாகம வார்த்தைகளுக்கு நாம் எப்போதுமே ஆவிக்குரிய பொருளையே காணவேண்டும். இன்றைய தியான வசனத்தை நாம் வெறுமனே உலகக் கண்ணோட்டத்தில் பார்ப்போமானால் நமக்கு இது வெற்று வார்த்தைகள் போலவே இருக்கும். இன்று பலரும் வேதாகம  வார்த்தைகளை மக்கள்  சரியாகப் புரிந்துகொள்ளாததற்கு இதுதான் காரணம். 

இன்றைய தியான வசனம் நூறு சதவிகிதம் ஆவிக்குரிய அர்த்தம் கொண்டது. நாம் தேவனுக்கு முற்றிலும் ஏற்புடையவர்களாக வாழவேண்டுமானால் அதுபற்றி யோசிக்கிறதற்கு நாம் தகுதியானவர்கள் அல்ல;  நமது சுய முயற்சிகள் மூலம் நாம் பரிசுத்தமாகி தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகமுடியாது என்று பொருள்; கிறிஸ்து நமக்குள் வராமல் ஆவிக்குரிய சிந்தனையும் செயல்பாடுகளும் நம்மில் உருவாகாது என்று பொருள். 

இதனையே இயேசு கிறிஸ்து, "நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல்  உங்களால்    ஒன்றும்   செய்யக்கூடாது." (யோவான் 15:5) என்று கூறினார். தண்டோடு இணைந்திருக்கும் திராட்சைக் கொடியானது அந்தத் தண்டுமூலம் செடியின் சாரதைப்பெற்று கனி கொடுப்பதுபோல கிறிஸ்துவோடு இணைந்து இருக்கும்போது மட்டுமே நம்மால் கனிகொடுக்கமுடியும். 

தண்டோடு இணைந்திருப்பதுதான் நமது தகுதி. அந்தத் தகுதியை இழந்துவிட்டோமானால் நம்மால் எதுவும் செய்யமுடியாது. "ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்." ( யோவான் 15 : 6 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வில் கிறிஸ்துவோடு இணைக்கப்படாவிட்டால் நம்மால்  ஏதாகிலும் ஆகும் என்பது சிந்திக்கக்கூட முடியாதது. அப்படி வாழ நாம்  தகுதியானவர்கள் அல்ல.  இதற்கு நம்மைத் தகுதிபடுத்துபவர் பிதாவாகிய தேவனே. எனவேதான், எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார். 

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை." (யோவான் 6:37) என்றார். நமது  சுய முயற்சிகளல்ல; தேவனது கரமே நம்மைப் பரிசுத்தமாக்கிட முடியும். அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                   

“Inside the Seeds” 🌳

📖 Scripture Meditation No. 1745
🔆 AATHAVAN – Monday, 17.11.2025

“Not that we are adequate in ourselves to consider anything as coming from ourselves, but our adequacy is from God.” — 2 Corinthians 3:5 (NASB)

Today, there are thousands of industries and large manufacturing units around the world. In each of these, thousands of people are employed. Beyond that, the governments of various nations provide enormous job opportunities; millions work in government sectors. Are all of these people “made adequate by God”? Are not most of them people who do not know God? Yet everything seems to function efficiently. If so, does today’s Scripture verse — “our adequacy is from God” — become untrue?

Beloved, whenever we read the Word of God, we must always look for its spiritual meaning. If we try to interpret today’s verse only from a worldly standpoint, it will appear meaningless. This is exactly why many people today fail to understand Scripture properly.

Today’s meditation verse carries 100% spiritual significance. If we desire to live in a way that is completely pleasing to God, we are not adequate in ourselves to even think about such things. No amount of our own effort can make us holy or acceptable before God. Unless Christ dwells in us, spiritual thoughts and spiritual actions cannot be birthed within us.

That is why Jesus Christ said:

“I am the vine, you are the branches; the one who remains in Me, and I in him, bears much fruit, for apart from Me you can do nothing.” — John 15:5 (NASB)

Just as a branch connected to the vine receives nourishment through the stem and bears fruit, only when we remain connected to Christ can we bear fruit.

Remaining connected to the Vine — that is our adequacy. If we lose that connection, we become capable of nothing. Did not Jesus warn:

“If anyone does not remain in Me, he is thrown away like a branch and dries up; and they gather them, and throw them into the fire, and they are burned.” — John 15:6 (NASB)

Yes, beloved, without being united with Christ in our spiritual life, we cannot even imagine becoming anything useful for God. We are not adequate in ourselves. It is God the Father who makes us adequate. That is why the Apostle Paul boldly says, “our adequacy is from God.”

Our Lord Jesus Christ also declared:

“Everything that the Father gives Me will come to Me, and the one who comes to Me I certainly will not cast out.” — John 6:37 (NASB)

It is not our own effort — it is the hand of God that sanctifies us. Let us surrender ourselves to Him.

God’s Message :- Bro. M. Geo Prakash
                              

Friday, November 14, 2025

🦋 Meditation verse - 2 கொரிந்தியர் 2 : 14 / 2 Corinthians 2:14

 "விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1744                                   🔆 ஆதவன் 16.11.2025 ஞாயிறு  


"கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." ( 2 கொரிந்தியர் 2 : 14 )

தேவனுக்குள் சிறப்பான ஆவிக்குரிய வாழ்க்கை நாம் வாழ்வோமானால் தேவன் நமக்கும் நம்மைக்கொண்டு பிறருக்கும்  செய்யும் காரியங்களை இன்றைய தியான வசனம் எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.

நாம் சிறப்பான ஆவிக்குரிய வாழ்வு வாழ்வோமானால் அது உலக காரியமாக இருந்தாலும், ஆவிக்குரிய காரியமாக இருந்தாலும் சரி, தேவனது கரம் எப்போதும் நம்மோடு இருக்கும் என்பதால் முதலாவது, நம்மை அவர் எப்பொழுதும் வெற்றிசிறக்கப்பண்ணுவார். 

இரண்டாவது, தேவ கரம் நம்மோடு இருப்பதால் நாம் ஒரு சாட்சியுள்ள வாழ்க்கை வாழமுடியும். அந்தச் சாட்சி வாழ்க்கையையே இன்றைய தியான வசனம் அவரை அறிகிற அறிவின் வாசனை என்று கூறுகின்றது. நாம் செல்லும் எல்லா இடங்களிலேயும் நம்மைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை அவர் மக்களுக்கு வெளிப்படுத்துவார். அதாவது நமது சாட்சியுள்ள வாழ்க்கைமூலம் கிறிஸ்து மகிமைப்படுவார். 

ஆனால், இந்தக் கிறிஸ்துவின் வாசனையை எல்லோரும் உணர முடியாது. ஆம் அன்பானவர்களே, இந்த உலகத்தில் கிறிஸ்து வாழ்ந்தபோதுகூட எல்லா மக்களும் அவரது வாசனையை உணரவில்லை. எனவேதான் அவரைக் கொலைசெய்தனர். கிறிஸ்துவின் வாசனை மனம்திரும்ப விருப்பமில்லாத மக்களுக்கு வாசனையாகத் தெரியாது. எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 2 : 16 ) என்று கூறுகின்றார். 

கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவருமே கிறிஸ்துவின் வாசனையை உலகிற்கு வெளிப்படுத்த அழைக்கப்படுகின்றோம். கிறிஸ்துவை அறியாத மக்கள் நம்மூலம் அவரை அறியும் அறிவின் வாசனையை அனுபவிக்கவேண்டும். 

எனவே, கிறிஸ்தவர்களாகிய நாம் வெறுமனே வழிபாடுகளில் கலந்துகொண்டு கலைந்து செல்வது போதாது. கிறிஸ்து நமது உள்ளே வந்து நம்மை உயிர்ப்பிக்க இடம்தரவேண்டியது அவசியம். எனவேதான் அப்போஸ்தலராகிய பவுல், "கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும்,  ஆவியானது  நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." (ரோமர் 8:10) என்று கூறுகின்றார். 

தனிப்பட்ட விதத்தில் கிறிஸ்துவோடுள்ள உறவில் வலுப்பெற்று வாழும்போது நமது ஆவியானது ஜீவனுள்ளதாக இருக்கும். நம்மிடம் அத்தகைய ஜீவன் இருந்தால் மட்டுமே நாம் மற்றவர்களுக்கு கிறிஸ்துவின் வாசனையை வெளிப்படுத்த முடியும். 

ஆராதனைக் கிறிஸ்தவர்களாக இல்லாமல் கிறிஸ்துவை நமக்குள் வரவேற்போம். அப்போது நாம் கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் வெற்றிசிறப்படைவோம்; நாம் செல்லும் எல்லா இடங்களிலேயும் அவரை அறிகிற அறிவின் வாசனையை நம்மூலம் தேவன் வெளிப்படுத்துவார்.  அவருக்கே துதியும் ஸ்தோத்திரமும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                  

“Inside the Seeds” 🌳

Bible Meditation No. 1744
AATHAVAN — 16.11.2025, Sunday

“But thanks be to God, who always leads us in triumph in Christ, and manifests through us the sweet aroma of the knowledge of Him in every place.” — 2 Corinthians 2:14, NASB

Today’s meditation verse explains what God does in us and through us for others when we live a spiritually enriched life in Him.

When we live a life that is excellent in the Spirit—whether it concerns worldly matters or spiritual ones—God’s hand will always be with us. Therefore:

1. He Always Leads Us in Triumph

When His hand is upon us, He causes us to triumph at all times.

2. He Makes Our Life a Testimony

Because God is with us, we can live a life filled with testimony. The Scripture calls this testimony “the sweet aroma of the knowledge of Him.”

Wherever we go, God will reveal this fragrance of Christ through us to others. In other words, Christ is glorified through our testimony-filled life.

But not everyone can perceive this fragrance of Christ. Yes, dearly beloved, even when Christ lived in this world, not everyone sensed His fragrance. That is why they crucified Him. The fragrance of Christ cannot be sensed by those who refuse to repent. Therefore, the Apostle Paul says:

“to the one an aroma from death to death, to the other an aroma from life to life.” — 2 Corinthians 2:16, NASB

As Christians, we are all called to reveal the aroma of Christ to the world. Those who do not know Christ should experience the fragrance of the knowledge of Him through us.

Therefore, it is not enough for Christians to merely attend worship services and leave. We must give Christ room to enter our lives and revive us. That is why the Apostle Paul says:

“If Christ is in you, though the body is dead because of sin, yet the spirit is alive because of righteousness.” — Romans 8:10, NASB

When we strengthen our personal relationship with Christ and live in Him, our spirit becomes alive. Only when we possess such life within us can we reveal the fragrance of Christ to others.

Let us not be mere “Sunday Christians.” Let us welcome Christ into our hearts.

Then we will always be led in triumph in Christ; and everywhere we go, God will make known through us the sweet aroma of the knowledge of Him.

To Him alone be praise and thanksgiving.


God’s Message: Bro. M. Geo Prakash
               

Thursday, November 13, 2025

🦋 Meditation verse - ஏசாயா 57 : 20-21 / Isaiah 57:20–21

 "விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1743                                   🔆 ஆதவன் 15.11.2025 சனி  


"துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதன் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. 
துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்." ( ஏசாயா 57 : 20-21 )

குளத்துக்கும் கடலுக்கும் உள்ள ஒரு முக்கிய வித்தியாசம் அந்தத் தண்ணீரின் குணம். குளமானது அமைதலாக இருக்கும். ஆனால் கடலோ அமைத்தலின்றி, இரவும் பகலும் எப்போதும் குமுறிக்கொண்டே இருக்கும்.   இதுபோலவே துன்மார்க்கரின் உள்ளமும் எப்போதும் குமுறிக்கொண்டே இருக்கும். துன்மார்க்க உள்ளத்துக்கு அமைதி என்பது கிடையாது. 

குளத்துக்குள் போடப்படும் பொருட்களை குளம் அமைதியாக உள்வாங்கிக்கொண்டு அமைதலாக இருக்கும். ஆனால் கடலோ, அமர்ந்திருக்கக் கூடாமல், அதன் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. இதுவும் துன்மார்க்கனுக்கும் மற்றவர்களுக்குமுள்ள ஒரு வித்தியாசமாகும்.

துன்மார்க்கர்கள் பணத்துக்காகவும் பொருள் சேர்க்கவேண்டும் எனும் ஆசையினாலும் எந்த பாதகச் செயலையும் செய்வதற்கும் தயாராகவே இருப்பார்கள். இப்படிப் பணத்தைச் சேர்த்துத் துன்மார்க்கன் பெருமைகொண்டு அலைகின்றான். ஆம், "துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமைபாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி,  கர்த்தரை   அசட்டைபண்ணுகிறான்.  (சங்கீதம் 10:3)

அன்பானவர்களே, இன்று அன்றாடம் செய்திகளை நாம் வாசிப்போமானால் நாட்டில் எத்தகைய அளவுக்குத் துன்மார்க்கர்களது பெருக்கம் உள்ளது என்பதனை நாம் அறிந்துகொள்ளலாம். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இன்று ஆண்களுக்கு ஈடாக துன்மார்க்கச் செயல்படுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை நாம் காண்கின்றோம்.  துன்மார்க்கர்கள் பெருகுவது கடைசி காலத்தின் அறிகுறிகளில் ஒன்று. இதனை, "கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே." (யூதா 1:18) என்று அப்போஸ்தலரான யூதா நமக்கு நினைவூட்டுகின்றார்.  

இன்று தற்கொலைகள் பெருகுவதற்கு மனிதர்களது துன்மார்க்க குணமே முக்கிய காரணமாக இருக்கின்றது.  சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்கும்  கொந்தளிக்கும் கடலைப்போல தங்கள் வாழ்க்கையில் அசுத்தத்தையே வெளிப்படுத்தும் துன்மார்க்கன் தற்கொலை செய்து சாகின்றான்; ஆம் அவர்களுக்குச் சமாதானம் இல்லை. ஆனால் தேவன் துன்மார்க்கனது துன்மார்க்க குணத்தை வெறுக்கின்றாரேத்தவிர துன்மார்க்கனை நேசிக்கின்றார். எனவேதான், "துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." (எசேக்கியேல் 18:23) என்கிறார் தேவன். 

சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்கும் கடல்போல துன்மார்க்கனது வாழ்க்கை இருந்தாலும்; அதனால் அவனுக்குச் சமாதானம் இல்லாமலிருந்தாலும் தேவன் அவனை மன்னித்து அணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கின்றார்; அவனுக்குச் சமாதானம் அளிக்க விரும்புகின்றார்.  "துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்." (ஏசாயா 55:7)

ஆம் அன்பானவர்களே, மிகப்பெரிய துன்மார்க்க வாழ்க்கை வாழ்பவனையே தேவன் மன்னிக்கத் தயாராக இருக்கின்றார். நம்மில் யாரும் இத்தகைய பெரிய துன்மார்க்கர்கள் அல்ல. எனவே, நாம் அஞ்சிடாமல் தேவனது சமூகத்தில் நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்; நம்மைச் சமாதானதால் நிரப்புவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                          

“Inside the Seeds” 🌳

📖 Bible Meditation No. 1743
🔆
AATHAVAN – Saturday, 15.11.2025

“But the wicked are like the tossing sea,
For it cannot be quiet,
And its waters toss up refuse and mud.
‘There is no peace,’ says my God, ‘for the wicked.’” 
(Isaiah 57:20–21, NASB)

One of the key differences between a pond and the sea lies in the nature of their waters. A pond remains calm and still. But the sea is never quiet—day and night it keeps roaring restlessly. In the same way, the heart of the wicked is always in turmoil. There is no peace in the heart of the wicked.

Whatever is thrown into the pond, it silently receives and remains still. But the sea, unable to rest, constantly throws refuse and dirt onto the shore. This is yet another distinction between the wicked and others.

The wicked are ever ready to engage in sinful acts for money or material gain. After accumulating wealth through unrighteous means, the wicked man walks proudly. Indeed, “For the wicked boasts of his soul’s desire, and the greedy person curses and shows disrespect to the LORD.” (Psalm 10:3, NASB)

Beloved, if we read the daily news today, we can clearly understand how greatly wickedness has increased in our nation. Not only men, but women too have begun to match men in acts of wickedness. The increase of wicked people is one of the signs of the last days. The Apostle Jude reminds us of this: “They were saying to you, ‘In the last time there will be mockers, following after their own ungodly lusts.” (Jude 1:18, NASB)

Today, one major reason for the rise in suicides is the wicked nature of people. Like the restless sea that casts mud and dirt on the shore, the wicked man, whose life reveals only impurity, ultimately ends his life. Yes, there is no peace for them. Yet God does not hate the wicked person—He hates the wickedness in him. That is why God says, “Do I take any pleasure in the death of the wicked,” declares the Lord GOD, “rather than that he would turn from his ways and live?” (Ezekiel 18:23, NASB)

Though the life of the wicked may be like the sea that casts refuse upon the shore… though he has no peace… God is still ready to forgive and embrace him. God desires to give him peace. “Let the wicked abandon his way, and the unrighteous person his thoughts; and let him return to the LORD, and He will have compassion on him, and to our God, for He will abundantly pardon.” (Isaiah 55:7, NASB)

Yes, beloved, God is willing to forgive even the one who has lived the most wicked life. None of us are such great offenders. Therefore, without fear, let us confess our sins before God and seek His forgiveness. His compassion to forgive is abundant, and He will fill us with His peace.

Message by: Bro. M. Geo Prakash                    

Wednesday, November 12, 2025

🦋 Meditation verse - உபாகமம் 23 : 14 / Deuteronomy 23:14

 "விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1742                                  🔆 ஆதவன் 14.11.2025 வெள்ளி      


"உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது." ( உபாகமம் 23 : 14 )

இஸ்ரவேலர் மோசேயால் எகிப்திலிருந்து கானானை நோக்கி வழிநடத்தப்பட்டபோது நாற்பது ஆண்டுகளாக பயணம் செய்தனர். கர்த்தரின் வார்த்தையின்படி பல நாட்கள் ஒரே இடத்தில் தங்கியிருப்பர். கர்த்தர் கட்டளையிடும்போது புறப்பட்டுத் தங்களது பயணத்தைக் தொடர்வர்.  தேவனே இந்த நாட்களில் அவர்களுக்குத் துணையாக இருந்து நடத்தினார். 

பாளையம் என்பது இஸ்ரவேலர் கூடாரமடித்துத் தங்கியிருக்கும் குடியிருப்புப் பகுதியாகும். தேவனாகிய கர்த்தர் இஸ்ரேலருக்குப் பாதுகாப்பாக அந்தக் குடியிருப்புப் பகுதியில் உலாவிக்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு இஸ்ரவேலரைவிட்டு அகன்றிடக்கூடாது என்பதில் மோசே உறுதியாக இருந்தார். தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர். எனவே பரிசுத்தக் குறைவு காணப்படுமேயானால் அவர் அகன்று போய்விடுவார்.  ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது என இஸ்ரவேலருக்கு அறிவுறுத்தினார்.  

ஆம் அன்பானவர்களே, இஸ்ரவேலருக்கு அன்று கிடைத்ததுபோன்ற பாதுகாப்பு ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நமக்கும் கிடைக்கவேண்டுமானால் நாமும் பரிசுத்தமாக இருக்கவேண்டியது அவசியம். ஆம், "நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக." ( லேவியராகமம் 11 : 45 ) எனும் வார்த்தைகள் இன்று நமக்கும் தேவனது வார்த்தையாக அறிவிக்கப்படுகின்றது. 

எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே." ( 1 பேதுரு 1 : 16 ) என்று நமக்கு நினைவூட்டுகின்றார். மேலும், எபிரெய நிருப ஆசிரியரும், "யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்;  பரிசுத்தமில்லாமல்  ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே." (எபிரெயர் 12:14) என்கின்றார்.

இன்றைய தியான வசனத்தில் தொடர்ந்து நாம் வாசிக்கின்றோம், "ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது" என்று. நமது உள்ளமாகிய தேவன் வசிக்கும் பாளையம் சுத்தமாக இருக்கவேண்டியது அவசியம். அதில் அசுத்தம் காணப்படுமேயானால் அவர் நம்மை விட்டு விலகிப் போய்விடுவார். நாம் தேவனை வாழ்வில் தரிசிக்கவும் அவரோடுள்ள உறவில் வளரவும் நமது இருதயம் சுத்தமானதாக இருக்கவேண்டியது அவசியம். 

எனவேதான், "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்". (மத்தேயு 5:8) என்றார் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. நமது இருதயத்தின் நினைவுகளே நமது வார்த்தைகள்மூலம் வெளிவருகின்றன. ஆம், "வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.  எப்படியெனில்,  இருதயத்திலிருந்து  பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும்            புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்". (மத்தேயு 15:18-20)

நம் தேவனாகிய கர்த்தர் நம்மை இரட்சிக்க நமது உள்ளமாகிய பாளயத்திற்குள்ளே வந்து உலாவ விரும்புகின்றார். ஆகையால், அவர் நம்மிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, நம்மை விட்டு விலகிப்  போகாதபடிக்கு, நமது உள்ளமாகிய பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                


Inside the Seeds 🌳

📖 Bible Meditation No. 1742
🔆
AATHAVAN — Friday, 14 November 2025

“Since the Lord your God walks in the midst of your camp to save you and to defeat your enemies before you, therefore your camp must be holy; and He must not see anything indecent among you or He will turn away from you.” — Deuteronomy 23:14 (NASB)

When the Israelites were led by Moses from Egypt toward Canaan, they journeyed for forty years. According to the Lord’s word, they stayed in one place for several days, and when He commanded, they set out again. During all those years, the Lord Himself walked with them, guiding and protecting them.

The camp referred to the area where the Israelites pitched their tents and lived. The Lord God moved among them within that camp as their divine protector. Moses firmly believed that God’s protection should never depart from Israel. Since the Lord is holy, any form of impurity or uncleanness would cause Him to withdraw His presence. Hence, God instructed Israel:

“Therefore, your camp must be holy; and He must not see anything indecent among you or He will turn away from you.”

Beloved, if we desire the same divine protection that the Israelites enjoyed, we too must live holy lives as spiritual Israelites. The Lord said,

“For I am the Lord who brought you up from the land of Egypt to be your God; thus you shall be holy, for I am holy.” — Leviticus 11:45 (NASB)

The Apostle Peter reminds us of this same truth: “You shall be holy, for I am holy.” — 1 Peter 1:16 (NASB)

And the author of Hebrews further exhorts us:

“Pursue peace with all people, and the holiness without which no one will see the Lord.” — Hebrews 12:14 (NASB)

In today’s meditation verse, we again read:

“Therefore, your camp must be holy; and He must not see anything indecent among you or He will turn away from you.”

Our heart — the dwelling place of God — is like that camp. It must remain pure and undefiled. If impurity is found within, the Lord will turn away. To behold God in our lives and to grow in our relationship with Him, our hearts must be kept clean and holy.

That is why our Lord Jesus Christ said: “Blessed are the pure in heart, for they shall see God.” — Matthew 5:8 (NASB)

The thoughts of our heart are revealed through our words. As Jesus also said,

“The things that come out of the mouth come from the heart, and those things defile the person. For out of the heart come evil thoughts, murders, acts of adultery, other immoral sexual acts, thefts, false testimonies, and slanderous statements. These are the things that defile the person.” — Matthew 15:18–20 (NASB)

Our Lord God desires to walk within the camp of our heart to save us. Therefore, our inner life must be kept holy, so that He may not see anything unclean among us and depart from us.

📖 Message by: Bro. M. Geo Prakash
                               

Tuesday, November 11, 2025

🦋 Meditation verse - ஏசாயா 45 : 24 / Isaiah 45:24

 "விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1741                                   🔆 ஆதவன் 13.11.2025 வியாழன்     


"கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல் கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்." ( ஏசாயா 45 : 24 )

இன்று பலரும் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றினாலும் பெரும்பாலானவர்கள் தங்களது சுய அறிவினாலும் சுய ஆத்தும அனுபவங்களினாலும் அப்படிக் குறிப்பிட்ட மதங்களைப் பின்பற்றுவதில்லை. மாறாக, தங்களது பெற்றோர் காட்டிய வழிமுறைகளின்படி கடவுளை நம்புகின்றனர்; வழிபடுகின்றனர். 

எனவே பெரும்பாலான மக்களிடம் எந்த ஆத்தும அனுபவங்களும் மெய்யான ஆன்மீக உணர்வுகளும் இருப்பதில்லை. வரட்டுப் பிடிவாதத்தினாலும் குழந்தையாக இருந்தபோது கற்பிக்கப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையிலும் பலரும் கடவுளை வழிபட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், இப்படி அல்லாமல் நாம் அவரை அறிந்து உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். தேவனை அறிந்துகொள்வதற்கான ஞானமுள்ளவர்களாக நாம் மாறவேண்டியது அவசியம். 

ஆனால் பலரும் அவரை ஏற்றுக்கொள்வதில்லை. கிறிஸ்துவை மெய்யான தேவனாக உணர்ந்துகொண்டவர்கள் அவரை ஏற்றுக்கொண்டு வைராக்கியமாகப் பின்பற்றுகின்றார்கள். 

தேவனை அறிந்து வழிபடுவதற்கும் அறியாமல் வழிபடுவதற்கும் வேறுபாடு உண்டு. இயேசு சந்தித்த சமாரிய பெண்மணி இப்படி அறியாமல் தேவனைத் தொழுதுகொண்டிருந்தவள்தான். எனவே அவளிடம் இயேசு கூறினார்,  "நீங்கள்   அறியாததைத்   தொழுது கொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுது கொள்ளுகிறோம்;      ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது". (யோவான் 4:22) என்று. 

இன்றைய தியான வசனம் மேலும் கூறுகின்றது, "அவருக்கு விரோதமாய் எரிச்சல் கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்" என்று. ஆம் அன்பானவர்களே, இன்றும் நாம் இதுகுறித்து பல்வேறு சாட்சிகளைக் கேட்கமுடிகின்றது. ஒருகாலத்தில் கிறிஸ்துவின்மேல் எரிச்சல்கொண்டு அவருக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருந்த பலர் கிறிஸ்துவால் தொடப்பட்டு கிறிஸ்துவிடம் வந்து இதனை சாட்சியாக அறிவிக்கின்றனர். "ஒருகாலத்தில் வேதாகமத்தைக் கண்டாலே எரிச்சல் ஏற்பட்டது; அதனை நான் நெருப்புவைத்து எரித்தேன்; அதற்காக வெட்கப்படுகிறேன் " என்று சாது சுந்தர்சிங் முதல் இன்றுவரை  பலர் சாட்சி கூறிக்கொண்டிருக்கின்றனர். 

மட்டுமல்ல, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் கிறிஸ்தவம் நுழைய முடியாத இரும்புக் கோட்டைகளாக இருந்தன. இன்று அவை வேதாகமத்தை தங்களது நாடுகளில் அனுமதிக்க ஆரம்பித்துள்ளன. மட்டுமல்ல, அரபு நாடுகளிலும் பலர் இன்று கிறிஸ்தவத்தைத் தழுவிக்கொண்டிருக்கின்றனர். அங்குள்ள பல இஸ்லாமியர்கள் தாங்கள் கனவுமூலம் உணர்த்தப்பட்டு கிறிஸ்தவத்துக்கு மாறியதாகக் கூறுகின்றனர். 

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் கூறுவதன்படி, கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று சொல்லி அவர்கள் கண்டுகொண்டுள்ளதாகக் கூறுகின்றனர். மட்டுமல்ல, இன்றைய தியான வசனம் கூறுகின்றது,  அவருக்கு விரோதமாய் எரிச்சல் கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள் என்று. காரணம், தேவன் ஒவ்வொருவரும் சத்தியத்தை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கின்றார். அதனை வைராக்கியம்கொண்டு மறுதலித்து வாழ்பவர்கள்  இறுதிநாளில் அவருக்குமுன் வெட்கமடைவார்கள். 

இன்று கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு நாம் பெயரளவு கிறிஸ்தவர்களாக வாழ்ந்தால் போதாது. கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையும் உண்டென்று உணர்ந்து அவரை அறிந்து வாழும்போது மட்டுமே நாம் இறுதிநாளில் வெட்கப்படாமல் இருக்கமுடியும்; அவரது தொழுவத்தின் ஆடுகளாக மாற முடியும். 

"இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்". (யோவான் 10:16) என்றார் இயேசு. அவரது நீதியையும் வல்லமையையும் உணராமல் வாழ்பவர்கள் அனைவரும் தொழுவத்தைச் சாராத ஆடுகள். ஆனால், அத்தகைய ஆடுகளும் அவரது சத்தத்துக்குச் செவிகொடுக்கும் என்கிறார் இயேசு கிறிஸ்து. 

இயேசுவின் வார்த்தையினையே இன்றைய தியான வசனமும், "கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்" என்று உறுதி செய்கின்றது. எனவே, நாம் எத்தகையவர்களாக இருக்கின்றோம் என்று நம்மை நாமே நிதானித்துப்பார்ப்போம். ஏனெனில், கர்த்தரைச் சேராமல்; அவரது தொழுவத்தில் வந்தடையாமல் இருப்போமானால் இறுதிநாளில் நாமும் வெட்கப்படுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                          


Inside the Seeds 🌳

📖 Bible Meditation No. 1741
🔆
AATHAVAN – Thursday, 13 November 2025

“They will say of Me, ‘Only in the Lord are righteousness and strength.’ People will come to Him, And all who were angry at Him will be put to shame.” — Isaiah 45:24 (NASB)

Today, although many people follow different religions, most of them do not do so through personal knowledge or spiritual experience. Instead, they believe in and worship God merely in the way their parents taught them.

As a result, many have no real spiritual experience or divine awareness. Out of rigid tradition and the faith instilled in childhood, people continue to worship without truly knowing God. But it is essential that we know and experience Him personally. We must grow in the wisdom that leads us to truly know God.

But many do not accept Him. Those who have realized Christ as the true God accept Him and follow Him with devotion.

There is a great difference between worshiping God with understanding and worshiping Him without it. The Samaritan woman whom Jesus met was one who worshiped without true understanding. Therefore, Jesus said to her,

“You worship what you do not know; we worship what we know, for salvation is from the Jews.” — John 4:22 (NASB)

Today’s verse further declares:

“All who were angry at Him will be put to shame.”

Yes, beloved, even today we hear many testimonies about this truth. Those who once burned Bible with anger against Christ and worked against Him have later been touched by His love and have come to Him, boldly testifying of their transformation. From Sadhu Sundar Singh to this day, many have said, “Once, I could not bear to see the Bible; I even burned it in anger — and now I am ashamed of what I did.”

In the past, nations like Russia and China were like iron fortresses where Christianity could not enter. Yet today, these same countries have begun to allow the Bible within their borders. Even in some Arab nations, many are embracing Christianity — with some Muslims testifying that Christ revealed Himself to them through dreams.

Indeed, beloved, as today’s verse declares, “Only in the Lord are righteousness and strength.” Those who once opposed Him have come to realize this truth. The verse also reminds us that “all who were angry at Him will be put to shame.” God gives every person an opportunity to know the truth. Those who reject it stubbornly will one day stand ashamed before Him.

It is not enough for us to merely bear the name “Christian.” Unless we truly know the Lord — recognizing that in Him alone are righteousness and strength — we too may stand ashamed on the final day. Only when we know Him and live in His truth will we be among the sheep of His fold.

Jesus said: “I have other sheep, which are not of this fold; I must bring them also, and they will listen to My voice; and they will become one flock with one shepherd.” — John 10:16 (NASB)

Those who live without recognizing His righteousness and power are the sheep outside the fold — yet even they, Jesus says, will one day hear His voice.

Today’s meditation verse confirms the same truth in Jesus’ words:

“They will say of Me, ‘Only in the Lord are righteousness and strength.’ People will come to Him.”

Let us therefore examine ourselves and see where we stand. For if we do not come to the Lord and belong to His fold, we too shall be put to shame on the final day.

📜 Message by: Bro. M. Geo Prakash