ஆவிக்குரிய துணுக்கு சிந்தனைகள்
எறும்பு ஒன்று இமய மலையைப் பார்க்கச் சென்றது. அடிவாரத்தில் மலையின் மேல் நின்றுகொண்டு தன்னால் முடிந்தமட்டும் பார்த்தது. ஆனால் அதன் சிறிய கண்ணுக்கு ஒரு அங்குல தூரம்தான் பார்க்க முடிந்தது. எறும்பு சொன்னது, "எல்லோரும் உலகிலேயே பெரிய மலை இமய மலை என்று சொல்லுகிறார்கள். ஆனால் அப்படி ஒரு மலையே இல்லை. நான் நன்றாகப் பார்த்துவிட்டேன்." இப்படித்தான் மனிதன் கடவுளை பார்ப்பதும் உள்ளது. தனது மட்டமான அறிவினைக் கொண்டு கடவுளைப் பார்க்க முயலுகிறான். ஆனால் அந்தக் கடவுள் தன்னிலும் தன்னைச் சுற்றிலும் இருப்பதை அவனால் காண முடிவதில்லை. மனிதன் தனது இயலாமையை தனது தகுதியின்மையை ஒப்புக்கொண்டு தன்னை அவருக்கு ஒப்புவித்தால் தேவன் அவனுக்கு வெளிப்படுவார்.
கிறிஸ்துவுக்குள் உண்மையாய் நடக்க முயன்றாலும் துன்பங்கள் ஏன் தொடர்கின்றன? எனப் பலரும் எண்ணி சோர்ந்து போவதுண்டு. சாது சுந்தர் சிங் அவர்களுக்கு கிறிஸ்து இதனைப் பின்வருமாறு வெளிப்படுத்திக் கொடுத்தார்.
கசப்பான கனிகளைத் தரும் மரம் நல்ல கனிகளைத் தரவேண்டுமானால் கசப்பான மரத்தின் கிளைகளை வெட்டிச் சரிப்படுத்தி இனிப்பான கனி தரும் மரத்தின் கிளைகளுடன் ஒட்டுப் போடவேண்டும். இப்படி ஒட்ட வைப்பதில் இரண்டு மரங்களும் வலியை அனுபவித்ததாக வேண்டும். மனிதனும் தன்னிலுள்ள கசப்பான கெட்டக் குணங்கள் மாறி ஆவிக்குரிய பரிசுத்த ஜீவனாகி கனிகளைத் தரவேண்டுமானால் கிறிஸ்து நமக்காகத் துன்பங்களை அனுபவித்ததுபோல கிறிஸ்து தரும் சிலுவையின் துன்பங்களை அனுபவிக்கவேண்டியது அவசியமாகிறது.
No comments:
Post a Comment