"விதைகளின் உள்ளே" 🌳
📖 வேதாகமத் தியானம் எண் - 1778 🔆 ஆதவன் 20.12.2025 சனி
"நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்." ( எசேக்கியேல் 3: 11)
இந்த உலகம் பொல்லாங்கனாகிய பிசாசின் பிடியினில் இருக்கின்றது. எனவே பலவீனமான மனிதர்களை அவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றான். அதாவது அவர்கள் பிசாசிடம் சிறைப்பட்டவர்களாக உள்ளனர். ஆனால், நாம் கிறிஸ்துவால் மீட்கப்படும்போது அவரது பிள்ளைகளாக மாறுகின்றோம். இதனையே அப்போஸ்தலரான யோவான், "நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்." (1 யோவான் 5:19) என்று கூறுகின்றார்.
இன்றைய தியான வசனம், கிறிஸ்துவால் மீட்கப்பட்ட நீ போய், பிசாசுக்கு அடிமையாகி பாவத்தினால் சிறைப்பட்ட ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்று கூறுகின்றது.
பொதுவாக கிறிஸ்துவின் நற்செய்தியைப் பலரும் விரும்பிக் கேட்பதில்லை. அதுபற்றி நாம் கவலைப்படாமல் அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களுக்கு கிறிஸ்துவை அறிவிக்கவேண்டியது அவசியம். கிறிஸ்துவை அறிவிக்க பெரிய பேச்சாற்றலும், எழுத்தாற்றலும், உடல் வலிமையும் தேவையில்லை. காரணம், கிறிஸ்துவை நாம் நமது வாழ்வால் மற்றவர்களுக்கு அறிவிக்க முடியும். மட்டுமல்ல, சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாம் நமது வாழ்வில் சந்திக்கும் கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு கிறிஸ்துவைப்பற்றி அறிவிக்கும்போது அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள்.
இப்படி நற்செய்தியை அறிவிப்பது நமது கடமை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துத் தான் பரலோகம் செல்லுமுன் சீடர்களிடம் கூறினார், "நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்." ( மாற்கு 16: 15,16) என்று.
எனவேதான் அப்போஸ்தலராகிய பவுலும், "சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ." (1 கொரிந்தியர் 9:16) என்று கூறுகின்றார்.
கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாகும் பாவ மன்னிப்பு, இரட்சிப்பு, நித்திய ஜீவன் போன்றவற்றையே நாம் அறிவிக்கவேண்டும். இதனையே, "கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. இவையே கர்த்தராகிய ஏசு கிறிஸ்து அறிவிக்கச்சொன்னச் செய்தி. இந்தச் சத்தியங்களை நாம் கூறும்போது மற்றவர்கள் அதனை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதனை நாம் அறிவிக்கவேண்டியது அவசியம்.
இப்படிக் கூறுவதால், பைத்தியக்காரன் கூறிக்கொண்டு இருப்பதுபோல நாம் கூறவேண்டும் என்று பொருளல்ல. இந்தச் சத்தியங்களை இடம், காலம், நேரம் அறிந்து ஞானத்தோடு நாம் அறிவிக்கவேண்டும். இன்று இந்த ஞானமும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலும் இல்லாமல் சில ஊழியர்கள் செயல்படுவதால் பிறரால் தாக்கப்படுகின்றனர்; அவமதிக்கப்படுகின்றனர். ஒரு இடத்தில் நம்மை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வலுக்கட்டாயமாக அங்கு நாம் நுழைந்து கிறிஸ்துவை அறிவிக்க அவர் சொல்லவில்லை; அவரும் அப்படிச் செய்யவில்லை.
ஆம், "எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 10: 14, 15) என்றுதான் அவர் கூறியிருக்கிறார்.
எனவே, சிறைப்பட்ட மக்களிடம் சென்று அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்போம். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும் என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Within the Seeds” 🌳
📖 Bible
Meditation No. 1778
🔆 AATHAVAN –
Saturday, 20.12.2025
“Go to the exiles, to the
sons of your people, and speak to them and tell them, whether they listen or
not, ‘Thus says the Lord GOD.’” (Ezekiel 3:11)
This world lies in the power
of the evil one. Therefore, Satan takes advantage of weak human beings and uses
them for his own purposes. In other words, they live as captives under his
control. But when we are redeemed by Christ, we become children of God. The
apostle John affirms this truth, saying:
“We know that we are of God,
and that the whole world lies in the power of the evil one.” (1 John 5:19)
Today’s meditation verse
calls you, who have been redeemed by Christ, to go to the sons of the people
who are enslaved by sin and held captive by Satan, and to speak to them—whether
they listen or not—declaring to them, “Thus says the Lord GOD.”
Generally, many people are
not eager to listen to the good news of Christ. Yet, without being discouraged
by this, it is essential that we proclaim Christ to them, whether they listen
or refuse. To proclaim Christ, one does not need great oratory skills, literary
ability, or physical strength. The reason is that we can reveal Christ to
others through our very lives. Moreover, when we live a life of testimony and
share about Christ with those who do not know Him—Christ whom we personally
encounter in our daily lives—they are more likely to receive that message.
Proclaiming the gospel in
this manner is our responsibility. Before ascending into heaven, the Lord Jesus
Christ said to His disciples:
“Go into all the world and
preach the gospel to all creation. He who has believed and has been baptized
shall be saved; but he who has disbelieved shall be condemned.” (Mark
16:15–16)
That is why the apostle Paul also declared:
“For if I preach the gospel,
I have nothing to boast of, for I am under compulsion; for woe is me if I do
not preach the gospel.” (1 Corinthians 9:16)
What we are called to
proclaim is the forgiveness of sins, salvation, and eternal life that come
through the blood of Christ. This is precisely what today’s meditation verse
emphasizes when it says, “Tell them, ‘Thus says the Lord GOD.’” These are the
very truths that the Lord Jesus Christ commanded us to proclaim. Whether others
accept these truths or reject them, it remains our duty to declare them.
However, this does not mean
that we should speak thoughtlessly, as though repeating words without wisdom.
These truths must be proclaimed with discernment—knowing the right place, time,
and occasion. Today, because some ministers act without such wisdom and without
the guidance of the Holy Spirit, they face opposition and humiliation. The Lord
never instructed us to force ourselves into places where we are not welcomed in
order to proclaim Christ; nor did He act in that manner Himself.
Yes, He clearly said:
“Whoever does not receive
you, nor heed your words, as you go out of that house or that city, shake the
dust off your feet. Truly I say to you, it will be more tolerable for the land
of Sodom and Gomorrah in the day of judgment than for that city.” (Matthew
10:14–15)
Therefore, let us go to
those who are in captivity and proclaim the gospel of Christ to them, whether
they listen or not, declaring, “Thus says the Lord GOD.” The Lord Jesus Christ
says, “He who has ears to hear, let him hear.”
God’s Message: Bro. M. Geo Prakash