Thursday, January 16, 2025

Meditation Verse - 1 கொரிந்தியர் 4: 15 / 1 Corinthians 4:15

Bible Meditation - No. 1,442

AATHAVAN 💚 January 19, 2025. 💚 Sunday


"கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்." (1 கொரிந்தியர் 4: 15)

இந்த உலகத்தில் நமக்கு பல்வேறு ஆசிரியர்கள் இருக்கலாம். நாம் முதலாம் வகுப்பு படித்ததுமுதல் கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை சுமார் நூறுபேராவது நமக்கு ஆசிரியராக பல்வேறு பாடங்களை நடத்தியிருப்பார்கள். இதுதவிர நாம் பல்வேறு மறையுரைகளைக் கேட்டிருப்போம். அவர்களும் நமக்குக் கற்பித்த ஆசிரியர்களே. 

இப்படி நமக்குப் பல்வேறு ஆசிரியர்கள் நமது வாழ்வில் இருந்தாலும்  தகப்பன் என்பது நமக்கு ஒருவர் மட்டுமே இருக்க முடியும். நம்மைப் பெற்றவரை மட்டுமே நாம் அப்பா என்று கூறுவோம். இதனையே கொரிந்து சபை மக்களுக்கு அப்போஸ்தலரான பவுல் உவமையாகக் கூறுகின்றார். கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தியதால் ஆவிக்குரிய தகப்பனாக இங்கு அவர் தன்னைக் கூறிக்கொள்கின்றார். இதனையே, "கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்" என்கின்றார். 

ஒரு குழந்தைக்கு முன்மாதிரி அதன் பெற்றோரே. அதுபோல தான் ஆவிக்குரியத் தகப்பனாக இருப்பதால் கொரித்து சபை மக்கள் தகப்பனைப் பின்பற்றி நடக்கும் பிள்ளைகளைப்போலத்  தன்னைப் பின்பற்றவேண்டும் என்கின்றார். இந்த நாளுக்குரிய தியான வசனதைத்தொடர்ந்து இதனையே அவர் கூறுகின்றார்:- "ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்." (1 கொரிந்தியர் 4: 16) என்று. 

கொரிந்தியருக்கு பவுல் எழுதியுள்ளது நமக்கு எப்படிப் பொருந்தும் என்று சிலர் எண்ணலாம். ஆனால் பவுல் அப்போஸ்தலர் இந்த நிருபத்தை கொரிந்து மக்களுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்காகவுமே எழுதியுள்ளார். இதனை இந்த நிருபத்தின் ஆரம்பத்தில் அவர்:-  ".........பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது" (1 கொரிந்தியர் 1: 2) என்று கூறியுள்ளார். 

கிறிஸ்து இயேசு உலகில் நமக்கு முன்மாதிரியையான ஒரு வாழ்வை  வைத்துச் சென்றார்.  கிறிஸ்து தேவனது குமாரனாக இருந்ததால் அவர் தூய்மையாக  வாழ்ந்தார், நாம் சாதாரண மனிதர்கள் எனவே நாம் அவரைப்போல வாழமுடியாது என்று பலர் எண்ணலாம்.  ஆனால் ஆவியின் வல்லமை நமக்குள் செயல்பட இடம்கொடுப்போமானால் நாமும் கிறிஸ்துவைப்போல வாழ முடியும் என்பதற்கு அப்போஸ்த்தலரான பவுல் ஒரு உதாரணம். "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்." (1 கொரிந்தியர் 11: 1) என்று துணிந்து கூறுகின்றார் அவர். இந்த வார்த்தைகளை வேறு எவராலும் கூற முடியாது. ஆம், எனவே நமது இலக்கும் இதுவாக இருக்கவேண்டும். நமது இலக்கு எப்போதும் மிக உயர்ந்ததாக இருக்கவேண்டியது அவசியம். 

ஆயிரம் ஆசிரியர்கள் கற்பிக்க முடியாத காரியங்களை நாம் அப்போஸ்தலரான பவுலின் நிருபங்கள் மூலம் கற்றுக்கொள்ள முடியும். அதுபோல உலகத் தகப்பன்மார் வழிநடத்துவதைவிட மிகச் சிறப்பாக அவரது நிருபங்கள் நம்மை வழிநடத்த முடியும். அவரது 14 நிருபங்களையும்  (எபிரெயர் நிருபமும் அவர் எழுதியதே என்பது பல இறையியலாளர்களின்  கருத்து. மட்டுமல்ல, இதனை வாசிக்கும்போது நாம் அப்போஸ்தலராகிய பவுலின் இறையியலின் ஆழத்தை இதில் காண்கின்றோம்.  எனவேதான் 14 நிருபங்கள் என்று கூறுகின்றேன்) நாம் வாசித்து வாழ்வாக்கும்போது நமது இலக்கின் பாதியையாவது நாம் அடைவது உறுதி. அவரது நிருபங்களை ஜெபத்துடன் வாசிப்போம்; ஆவிக்குரிய வாழ்வில் அவரைப்பின்பற்றி அவரோடுகூட கிறிஸ்து காட்டிய வழியில் உறுதியாக நடப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                     


Bible Meditation - No. 1,442

AATHAVAN 💚 January 19, 2025. 💚 Sunday

"For though ye have ten thousand instructors in Christ, yet have ye not many fathers: for in Christ Jesus, I have begotten you through the gospel." (1 Corinthians 4:15)

In this world, we may have many teachers. From the time we begin first grade to when we complete college, we may have had around a hundred teachers teaching us various subjects. Beyond this, we might have listened to numerous sermons, and those who preached were also our teachers.

Even though we have many teachers in life, we can only have one father. We call only the one who begot us our "father." This is the analogy Apostle Paul uses to address the Corinthian church. He describes himself as a spiritual father because he introduced them to Christ. He says, "For in Christ Jesus I have begotten you through the gospel."

A child naturally looks to its parents as role models. Similarly, Paul, as their spiritual father, urges the Corinthian believers to follow his example just as children follow their father. He reinforces this idea in the following verse: "Wherefore I beseech you, be ye followers of me." (1 Corinthians 4:16)

Some might wonder how Paul's message to the Corinthians applies to us. However, Paul’s epistle was not only written to the Corinthian believers but to all of us. At the very beginning of this epistle, Paul clarifies: "Unto the church of God which is at Corinth, to them that are sanctified in Christ Jesus, called to be saints, with all that in every place call upon the name of Jesus Christ our Lord, both theirs and ours:" (1 Corinthians 1:2)

Jesus Christ lived as a perfect example for us in this world. Some may argue that Christ, being the Son of God, lived a holy life, but we, as ordinary humans, cannot live like Him. However, Apostle Paul stands as an example to prove that we, too, can live like Christ if we allow the power of the Spirit to work within us. Paul boldly says:

"Be ye followers of me, even as I also am of Christ." (1 Corinthians 11:1)

Such words can only come from someone deeply committed to their spiritual journey. This should inspire us to set a high goal for our lives. Our aim should always be lofty and rooted in Christ.

There are lessons we can learn from Paul’s epistles that no other teachers can impart. Just as spiritual guidance from earthly fathers cannot surpass the depth of Paul's writings, his teachings guide us to a higher calling. By reading and applying his 14 epistles (many theologians believe Paul also authored Hebrews, as it reflects the depth of his theological insights), we can move closer to reaching our spiritual goals.

Let us prayerfully study Paul’s writings, follow his example, and steadfastly walk the path Christ has shown us.

Message by: Bro. M. Geo Prakash

Meditation Verse - எபேசியர் 2:4,5 / Ephesians 2:4-5

 வேதாகமத் தியானம் - எண்:- 1,441

'ஆதவன்' 💚ஜனவரி 18, 2025. 💚சனிக்கிழமை


"தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்." ( எபேசியர் 2:4,5)

இன்று நாம் கிறிஸ்துவின் மீட்பு அனுபவத்தைப்பெற்று வாழ்கின்றோமென்றால் அதற்குக் காரணம் பிதாவாகிய தேவனது இரக்கமேயாகும். பல்வேறு அக்கிரம செயல்பாடுகளினாலும் பாவத்தின் பிடியிலும் சிக்கி பாவத்தினால் மரித்தவர்களாய் இருந்த நம்மை கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரைவிட நீதியுள்ள வாழ்க்கை வாழும் பலர் பிற மாதங்களில் உள்ளனர். ஆனால் எல்லா கிறிஸ்தவர்களும் நீதி வாழ்க்கை வாழும் பிற மதத்தினரும் இரட்சிப்பு அனுபவத்தைப் பெறவில்லை. நீதி வாழ்க்கை வாழ்ந்தாலும் அது மட்டும் இரட்சிப்பு அல்ல; அது மட்டும் ஒருவரை இரட்சிப்பு அனுபவம் பெறுவதற்கு உதவாது, மாறாக தேவனது கிருபையினால்தான் நாம் இரட்சிப்பு அனுபவத்தைப் பெறுகின்றோம். இதனால்தான்,  "நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்." (தீத்து 3:5) என்று அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். 

அப்படியானால்,  நாம் இரட்சிக்கப்பட்டுள்ளோம் என்பதை எப்படி அறிந்துகொள்வது? அதற்குப் பல காரணிகளை நாம் கூறலாம். நமது உள்ளான மானிதனில் இதுவரை நாம் வாழ்ந்து வந்த வாழ்க்கையிலிருந்து ஒரு மாறுதலை நாம் உணர்ந்து கொள்ளலாம்; நமது மனச்சாட்சி கூர்மையடைவதால்  இதுவரை பாவம் என்று நாம் உணராத பல காரியங்கள் பாவம் என்பதை நாம் உணர்ந்துகொள்வோம்; தேவன்மேல் அளப்பரிய பற்று ஏற்படுவதால் முன்பைவிட அவரை அதிகம் தேடுபவர்களாக, அவரது அன்பைத் தனிப்பட்ட முறையில் உணர்ந்துகொள்பவர்களாக இருப்போம்; எல்லாவற்றுக்கும் மேலாக நாம் அறிந்த தேவனை மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டுமென்ற ஆர்வம் நமக்குள் ஏற்படும்.  இவை சில உதாரணங்களே. 

மட்டுமல்ல, தேவனது கட்டளைகளை கடைபிடிப்பதிலும் அவற்றை அறிவதிலும் நமக்கு ஆர்வம்  மிகுதியாகும். நாம் அவரது கட்டளைகளைக் கைக்கொள்வதனால்  அவர் நம்மில் நிலைத்திருப்பதை நாம் உறுதியாக உணர்ந்துகொள்வோம்.  இதனையே அப்போஸ்தலரான யோவான்,  "அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்." (1 யோவான் 3:24) என்று கூறுகின்றார். 

நாம் அதிகமான பக்திகாரியங்களில் ஈடுபடுவதால் நம்மை நாமே நியாயப்டுத்திக்கொள்ள முடியாது. பக்திச் செயல்பாடுகள் என்று செய்யும் சில சம்பிரதாய செயல்பாடுகள் எல்லாம் தேவனுக்கு ஏற்புடையவையல்ல. தேவனைத்  தனிப்பட்ட முறையில் அறிந்து அவரை அன்பு செய்வதே மெய்யான மேலான பக்தி. அவரது கட்டளைகளை அறிந்து கீழ்படிவதே மேலான பக்தி. 

ஆம் அன்பானவர்களே, பிதாவாகிய தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் இப்படி கிறிஸ்துவுடனேகூட நம்மை உயிர்ப்பிக்கின்றார்.  இது நமது சொந்த முயற்சியினாலல்ல, மாறாக அவரது  கிருபையினாலே தான். எனவே நாம் அவரது கிருபையைப் பெறுவதற்கு வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம். "கர்த்தாவே பாவியான அடியான்மேல் கிருபையாயிரும்" என்று உள்ளான மனதிலிருந்து வேண்டுதல் செய்வோம். தேவன் தனது கிருபையினால் நம்மை இரட்சிப்பினால் திருப்தியாக்குவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்               


Scripture Meditation – No: 1,441

AATHAVAN 💚January 18, 2025. 💚Saturday

"But God, who is rich in mercy, for his great love wherewith he loved us, even when we were dead in sins, hath quickened us together with Christ, (by grace ye are saved;)" (Ephesians 2:4-5, KJV)

If today we live experiencing the salvation of Christ, it is solely because of the mercy of God the Father. Today's meditation verse reminds us that though we were dead in sins and entangled in various transgressions, God has quickened us together with Christ.

There are many in other faiths who live more righteous lives than those who call themselves Christians. However, living a righteous life alone does not bring salvation. Righteousness by itself cannot lead us to the experience of salvation. Instead, it is by the grace of God alone that we receive salvation. As Apostle Paul declares, "Not by works of righteousness which we have done, but according to his mercy he saved us, by the washing of regeneration, and renewing of the Holy Ghost;" (Titus 3:5, KJV)

How do we know that we are saved?

We can identify this through various indicators:

  1. We sense a transformation in our inner being, moving away from our old way of life.
  2. Our conscience becomes sharper, and we begin to recognize many things as sins that we had previously overlooked.
  3. A boundless reliance on God emerges within us, leading us to seek Him more and experience His love personally.
  4. Above all, we develop a strong desire to share the knowledge of God with others.

Additionally, we become more zealous about understanding and obeying God's commandments. Through obedience to His commands, we gain assurance that He abides in us. As Apostle John affirms, "And he that keepeth his commandments dwelleth in him, and he in him. And hereby we know that he abideth in us, by the Spirit which he hath given us." (1 John 3:24, KJV)

It is important to remember that we cannot justify ourselves by simply engaging in religious activities. Ritualistic practices, often mistaken as acts of devotion, are not necessarily pleasing to God. True devotion lies in knowing God personally and loving Him wholeheartedly. Obedience to His commandments is the highest form of devotion.

Yes, beloved, God, who is rich in mercy, has loved us with His great love and quickened us together with Christ while we were dead in our transgressions. This is not by our own efforts but by His grace alone. Therefore, let us earnestly pray to receive His grace. From the depths of our hearts, let us cry out, "God, be merciful to me a sinner." (Luke 18:13, KJV)

When we sincerely seek Him, God, in His abundant grace, will satisfy us with His salvation.

God’s Message by Bro. M. Geo Prakash

Wednesday, January 15, 2025

Meditation Verse - 2 தெசலோனிக்கேயர் 2: 11, 12 / 2 Thessalonians 2:11-12

 வேதாகமத் தியானம் - எண்:- 1,440

'ஆதவன்' 💚ஜனவரி 17, 2025. 💚வெள்ளிக்கிழமை


"ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும் படிக்கு,  அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்."  (2 தெசலோனிக்கேயர் 2: 11, 12) 

இந்த உலகத்தில் மக்கள் பல்வேறு வஞ்சக எண்ணங்களால் நிறைந்திருக்கக் காரணம் அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

உண்மையினை உலகம் எளிதில் ஏற்றுக்கொளவதில்லை ஆனால் பொய்யினை எளிதில் நம்பிவிடுகின்றது. இப்படி பொய்யை நம்புவதால்தான் பல்வேறு ஏமாற்று காரியங்கள் உலகத்தில் நடைபெறுகின்றன. உதாரணமாக, அரசாங்கம் நிர்ணயித்துள்ள வட்டி விகிதங்களைவிட அதிக வட்டி தருவதாகக் கூறுவதால் பல்வேறு ஏமாற்று நிறுவனங்களில் மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாறுகின்றனர். இதுபோல பல்வேறு சைபர் குற்றங்கள் நடைபெறக் காரணம் பொய்யை நம்புவதால்தான். 

உண்மையினை ஏற்றுக்கொள்ளாமல் அநீதியான காரியங்களில்  விருப்பம் காட்டுவதுதான் மனிதர்களின் இயல்பான குணமாக இருக்கின்றது. இயேசு கிறிஸ்து உலகத்தில் மனிதனாக வந்திருந்தபோதும் பலரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதனை இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார்:- "ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது." ( யோவான் 3: 19)

இன்றைய தியான வசனம் "சத்தியத்தை விசுவாசியாமல்" என்று கூறுகின்றது. அப்படியானால் எது சத்தியம் எனும் கேள்வி நமக்குள் எழுகின்றது. அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், தேவனது வசனமே சத்தியம் என்று.  "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்." ( யோவான் 17: 17) ஆம் அன்பானவர்களே, தேவனுடைய வசனமே சத்தியம்.  

இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்" என்று. அதாவது, அவர்கள் உண்மையான தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாததால் தொடர்ந்து பொய்யிலேயே கெட்டுபோக்கத்தக்கதாக தேவன் அவர்களை இருளிலே நடக்கப்பண்ணுவார். 

மேலும் இப்படி உண்மையினை விசுவாசியாமல் நாம் இருப்போமானால் அது தேவனுடைய கோபத்தை நம்மேல் வருவிபத்தாக  இருக்கும். இதனையே அப்போஸ்தலரான பவுல், "சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது." (ரோமர் 1:18) என்று கூறுகின்றார். அதாவது, உண்மையினை அறிய மனமில்லாமலும் உண்மையாக வாழ மனமில்லாமலும் தங்கள் அநியாயத்தினால் உண்மையினை அடக்கிவைக்கும் மனிதர்கள்மேல் தேவ கோபம் வெளிப்படும் என்கின்றார்.

ஆம்  அன்பானவர்களே, எனவே நாம் சத்தியமான தேவனுடைய வார்த்தைகளை அறிந்தவர்களாக, அவற்றை வாழ்வில்  கடைபிடிப்பவர்களாக  வாழவேண்டியது அவசியம். அப்படி வாழும்போது வாழ்வில் நமக்கு விடுதலையும் கிடைக்கும்.  "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்". (யோவான் 8:32) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Scripture Meditation - No. 1,440
AATHAVAN
💚 January 17, 2025 💚
Friday

"And for this cause God shall send them strong delusion, that they should believe a lie: That they all might be damned who believed not the truth but had pleasure in unrighteousness." (2 Thessalonians 2:11-12)

Today's meditation verse emphasizes that the reason many are filled with deceptive thoughts is their refusal to accept the truth.

The world often rejects truth but easily embraces lies, which leads to numerous deceptions. For instance, people fall prey to fraudulent schemes promising higher interest rates than those offered by the government. Similarly, cybercrimes occur because of people's tendency to believe falsehoods.

Rejecting the truth and indulging in unrighteousness is a natural inclination of humanity. Even when Jesus Christ came into the world as a man, many did not accept Him. Jesus Himself explained why: "And this is the condemnation, that light is come into the world, and men loved darkness rather than light, because their deeds were evil." (John 3:19)

The meditation verse says, "They believed not the truth." This raises the question:  What is truth? The apostle John declares that God's Word is truth: "Sanctify them through thy truth: thy word is truth." (John 17:17)

Yes, dear ones, God's Word is the truth.

The meditation verse further states, "God shall send them strong delusion, that they should believe a lie." This means that when people refuse to accept God's true Word, He allows them to remain in their deception and walk in darkness.

If we also fail to believe the truth, it will result in God's wrath upon us. The apostle Paul confirms this in his words: "For the wrath of God is revealed from heaven against all ungodliness and unrighteousness of men, who hold the truth in unrighteousness." (Romans 1:18)

In essence, those who suppress the truth through their unrighteousness and refuse to know or live by the truth will face God's wrath.

Therefore, dear ones, as those who know the truth in God's Word, it is essential for us to live by it. When we do, we will experience true freedom in our lives, as Jesus said: "And ye shall know the truth, and the truth shall make you free." (John 8:32)

God's Message by: -  Bro. M. Geo Prakash

Meditation Verse - 1 பேதுரு 1:17 / 1 Peter 1:17

 வேதாகமத் தியானம் - எண்:- 1,439

'ஆதவன்' 💚ஜனவரி 16, 2025. 💚வியாழக்கிழமை


"அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்." (1 பேதுரு 1:17)

தான் வசிக்கும் இடத்தின் சொந்தக்  குடியுரிமை இல்லாதவரைக் குறிக்கும் வார்த்தைதான் பரதேசி என்பது;  அல்லது இந்த வார்த்தை அந்நிய பூமியில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒருவரைக்  குறிக்கின்றது. வேதாகம அல்லது ஆன்மீக அடிப்படையில், இது ஒரு யாத்திரிகர் அல்லது உலகத்தில் அந்நியர் என்று ஒருவரைக் குறிக்கின்றது.  உலகத்தில் நாம் வசித்தாலும் இது நமது சொந்தக் குடியிருப்பு அல்ல. நமது குடியிருப்போ பரலோகத்தில் உள்ளது என்றே வேதம் குறிப்பிடுகின்றது. எனவே இந்த உலகத்தில் வாழும் நாம் அனைவருமே பரதேசிகள்தான்.

"நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்." ( பிலிப்பியர் 3: 20) என்று வாசிக்கின்றோம். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து வந்து இந்த பூமியில் பரதேசியாக வாழும்  நம்மைத் தன்னோடு சேர்த்துக்கொள்வார். 

அவர் நம்மைத் தன்னோடு  சேர்த்துக்கொள்ள வேண்டுமானால் நாம் அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ வேண்டியது அவசியம். அவர் நமது செயல்களின்படி நம்மை நியாயம்தீர்த்து நாம் அவருக்கு ஏற்புடையவர்கள் எனக் கண்டுகொண்டால் தன்னோடு சேர்த்துக்கொண்டு பரதேசிகளான நம்மை தனது பரலோக குடியிருப்பில் உரிமைக் குடிமகன்களாக / குடிமகள்களாக ஏற்றுக்கொள்வார். எனவே, இந்த உலகத்தில் பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகின்றது  இன்றைய தியான வசனம்.  

ஆனால் நம்மில் பலரும் இதனை எண்ணிப்பார்ப்பதில்லை. இந்த உலகமே நமது நிரந்தர குடியிருப்பு என எண்ணி உலகச் செல்வங்களைச் சேர்ப்பதில்  ஆர்வம் காட்டுகின்றோம். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை." (மத்தேயு 6: 19, 20)

ஆம் அன்பானவர்களே, அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நாம்  பிதாவாகத் தொழுதுகொள்வது உண்மையானால் நாம் இந்த உணர்வுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம்.   இப்படிச் சொல்வதால் நாம் உலகச் செல்வங்களைச் சேர்ப்பது தவறு என்றோ பாவம் என்றோ கூறவில்லை. மாறாக, இவற்றைச் சேர்ப்பதில் நாம்  காட்டும் ஆர்வத்தைவிட தேவனுக்கு ஏற்ற காரியங்களில் நாம் முன்னுரிமை காட்டுபவர்களாக வாழவேண்டும்.  

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் பயத்துடனே செய்யப்படுவதாக  இருக்கவேண்டும். அதாவது, நாம் எந்தச் செயலைச் செய்யும்போதும் "நான் செய்யும் இந்தச் செயல் தேவனுக்கு ஏற்புடையதாக இருக்குமா? அவர் இதனை விரும்புவாரா?" எனும் எண்ணம் நமக்குள் எழவேண்டியது அவசியம். அப்படி நடப்பதுதான் பயத்துடன் நடந்துகொள்வது. ஆம், அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நாம் நமது பிதாவாகத் தொழுதுகொண்டு வருகிறபடியால், பூமியில் பரதேசிகளாய் வாழும் நாள்வரைக்கும் இந்தப் பயத்துடனே நடந்துகொள்வோம். அப்போது பரதேசிகளான நமக்கு மறுவுலக குடியுரிமை கிடைப்பது நிச்சயமாகும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                        

Scripture Meditation – No. 1,439

AATHAVAN, January 16, 2025, Thursday

"And if ye call on the Father, who without respect of persons judgeth according to every man's work, pass the time of your sojourning here in fear." (1 Peter 1:17)

The term "sojourner" refers to someone without permanent citizenship in their place of residence; it denotes a person journeying through a foreign land. Biblically or spiritually, it signifies a pilgrim or stranger in the world. Although we live in this world, it is not our permanent home; the Bible indicates that our true citizenship is in heaven. Therefore, all of us living in this world are indeed sojourners.

As stated in Philippians 3:20, "For our conversation is in heaven; from whence also we look for the Saviour, the Lord Jesus Christ."

Our Lord Jesus Christ will come from heaven to gather us, who live as sojourners on this earth, to be with Him.

To be gathered with Him, it is essential that we lead lives worthy of Him. If He judges us according to our deeds and finds us acceptable, He will take us to be with Him, accepting us—sojourners—as rightful citizens in His heavenly abode. Therefore, today's meditation verse advises us to "pass the time of your sojourning here in fear."

However, many of us do not contemplate this. We tend to consider this world as our permanent residence and show enthusiasm in accumulating earthly wealth. That is why Jesus Christ said:

"Lay not up for yourselves treasures upon earth, where moth and rust doth corrupt, and where thieves break through and steal: But lay up for yourselves treasures in heaven, where neither moth nor rust doth corrupt, and where thieves do not break through nor steal." (Matthew 6:19–20)

Dearly beloved, if we truly call upon the Father who judges impartially according to each one's work, it is imperative that we live with this awareness. This does not mean that accumulating earthly wealth is wrong or sinful; rather, we should prioritize deeds pleasing to God over our eagerness to gather worldly possessions.

Every action we take should be done with reverence, always considering, "Is this deed acceptable to God? Will He be pleased with it?" Acting with such mindfulness is what it means to "pass the time of your sojourning here in fear."

Yes, since we call upon the Father who judges each one's work impartially, let us live with this reverent fear throughout our sojourn on earth. Then, we sojourners will surely attain citizenship in the world to come.

Divine Message: Bro. M. Geo Prakash
                          

Monday, January 13, 2025

Meditation Verse - கலாத்தியர் 4: 10, 11 / Galatians 4:10-11

வேதாகமத் தியானம் - எண்:- 1,438

'ஆதவன்' 💚ஜனவரி 15, 2025. 💚புதன்கிழமை

"நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே. நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்." (கலாத்தியர் 4: 10,11) 

கிறிஸ்தவர்கள்  என்று நம்மைக் கூறிக்கொள்ளவேண்டுமானால் நாம் தேவன்மேல்  நூறுசதம் விசுவாசம் கொண்டவர்களாக வாழவேண்டியது அவசியம். அப்படி ஒரு விசுவாச வாழ்க்கை வாழும்போது நாம் அவரைத்தவிர  வேறு எதற்கும் முன்னுரிமை கொடுக்கமாட்டோம்  எதனையும் அவரைவிடப் பெரிதாக  எண்ண மாட்டோம். 

ஆனால் இன்று தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் பலரும்  புறமத கலாச்சாரங்களையும் அவர்களது நம்பிக்கைகளையும் முன்னிலைப்படுத்தி தேவனை அவமதிக்கின்றவர்களாக இருக்கின்றனர். அதனையே அப்போஸ்தலரான பவுல் இங்கு "நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே". என்று குறிப்பிடுகின்றார். பல கிறிஸ்தவ  குடும்பங்களில் நல்ல காரியங்கள் ஏற்பாடுசெய்யும்போது தேவ சித்தத்துக்கு முன்னுரிமை கொடுப்பதைவிட  நல்லநாள், நல்ல நேரம், நல்ல மாதம் இவற்றுக்கே முன்னுரிமை கொடுப்பது அவர்களது விசுவாசக் குறைவையும்  கிறிஸ்துவை அவமதிப்பதையுமே காட்டுகின்றது.. 

எவ்வளவோ மேலான விசுவாச சாட்சிகள் வேதத்தில் உண்டு. நமது வாழ்க்கையிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்த மகத்தான காரியங்கள் பல உண்டு.  ஆனால் வாழ்வில் அப்படி கிறிஸ்துமூலம் நன்மைகளைப் பெற்றுக்கொண்டதாக  அவற்றிக்குறித்து சாட்சிகூறும் பல கிறிஸ்தவர்களும்கூட நல்ல நேரம், மாதம், காலம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.   இதனையே அப்போஸ்தலரான பவுல்  இன்றைய தியான வசனத்தில்  "நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன்." என்று குறிப்பிடுகின்றார். ஆம் இப்படி நாள் நட்சத்திரம் பார்ப்பது நமக்குரிய கிறிஸ்தவ விசுவாசத்தை வீணாக்கிவிட்டோம் என்பதனையே காட்டுகின்றது. 

மட்டுமல்ல, இப்படி நல்லநாள், நல்ல நேரம் பார்த்துத் திருமணம் செய்த பலரது திருமணங்கள் விவாகரத்தில் முடிவதை நாம் பலவேளைகளில் பார்க்கமுடிகிறது. இதுவே இவை தேவையற்ற மூடநம்பிக்கைகள் என்பதற்கு அத்தாட்சி. 

ஆம் அன்பானவர்களே, காலங்களையும் நேரங்களையும் பார்ப்பதைவிட காலத்தையும் நேரத்தையும்  கையில்கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுள்ளவரையே நாம் நோக்கிப்பார்க்கவேண்டியது அவசியம். இதனை உணர்ந்திருந்த சங்கீத ஆசிரியர், "என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்." ( சங்கீதம் 31 : 15 ) என்கின்றார். நமது காலங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் உள்ளன. அவரே நம்மைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் பிரச்சனைகளுக்கும் தப்புவிக்க வல்லவர். 

நாம் தேவனை அறிந்தவர்களாக வாழ்வோமானால் அவரது காலங்களையும், நியமங்களையும் அவர் நமக்கு வெளிப்படுத்தித் தருவார். காலங்களை அவர் அறியாதவரல்ல; அவரை வாழ்வில் அறிந்தவர்கள் அவர் நியமித்துள்ள நாட்களையும் அறிந்துகொள்வார்கள்.  "சர்வவல்லவருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?" ( யோபு 24 : 1 ) என்று  வேதம் கூறுகின்றது. நேரங்களையும் நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறதை விட்டு அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுள்ளவரையே நோக்கிப்பார்ப்போம். தேவன்  மேலுள்ள நமது விசுவாசம் அவமாகிப் போய்விடாமல் காத்துக்கொள்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

Bible Meditation - No. 1,438
'Aathavan'
💚 January 15, 2025. 💚
Wednesday

"Ye observe days, and months, and times, and years. I am afraid of you, lest I have bestowed upon you labour in vain." (Galatians 4:10-11)

If we claim to be Christians, it is essential that we live a life of complete trust in God. Such a faith-filled life means prioritizing God above all else and valuing nothing more than Him.

However, today, even among those who identify as Christians, many prioritize cultural traditions and superstitions over God, thereby dishonouring Him. The apostle Paul refers to this behaviour in the verse, "Ye observe days, and months, and times, and years." In many Christian families, while planning significant events, they prioritize “auspicious” days, times, and months over seeking God's will. This reveals a lack of faith and disrespects Christ.

The Bible is filled with examples of great testimonies of faith. In our lives, too, the Lord Jesus Christ has performed marvellous deeds. Yet, many Christians, despite experiencing God's blessings, continue to rely on astrology and superstitions. Paul’s words in today’s verse, "I am afraid of you, lest I have bestowed upon you labour in vain," express the futility of such practices. Observing favourable times and days undermines our Christian faith.

Moreover, we often see marriages arranged based on auspicious timings ending in divorce. This is evidence that these superstitions are unnecessary and baseless.

Dearly beloved, instead of focusing on times and seasons, we must fix our eyes on the One who holds all times and seasons in His hands. The Psalmist realized this truth and declared, "My times are in thy hand: deliver me from the hand of mine enemies, and from them that persecute me." (Psalm 31:15). Our times are in the hands of the Lord Jesus Christ, who alone can deliver us from our troubles and adversaries.

If we live as those who truly know God, He will reveal His appointed times and purposes to us. God is never ignorant of time; those who know Him will also understand His appointed days. As the Scripture says, "Why, seeing times are not hidden from the Almighty, do they that know him not see his days?" (Job 24:1).

Let us stop observing days, months, and times, and instead look to the One who controls them all. Let us guard our faith in God so that it may not be in vain.

Message by: Bro. M. Geo Prakash

Sunday, January 12, 2025

Meditation Verse - யோபு 38: 41 / Job 38:41

 வேதாகமத் தியானம் - எண்:- 1,437

'ஆதவன்' ஜனவரி 14, 2025. 💚செவ்வாய்க்கிழமை


"காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?" ( யோபு 38: 41)

இந்த உலகத்தில் தேவன் படைத்த அனைத்து உயிரினங்களுக்கும் அவரே உணவூட்டி அவற்றைப் பராமரிக்கின்றார்.  பறவைகளில் நாம் காக்கையை பெரிதாகக் கருதுவதில்லை. பல்வேறு அழகிய பறவைகள் உலகினில் உண்டு. ஆனால் காகம் அழகும் கவர்ச்சியும் இல்லாத ஒரு பறவை. அசுத்தத்தை உண்டு வாழும் பறவை. ஆனால் அந்த உணவும் அவைகளுக்கு இல்லாமல் போகும்போது அவைகளின் குரலுக்கும் தேவன் செவிகொடுத்து அவற்றுக்கு உணவூட்டுகின்றார் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  

இதே கருத்தை நாம் சங்கீத நூலிலும், "அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.' ( சங்கீதம் 147: 9) என்று வாசிக்கின்றோம். வேதாகமத்தில் இந்த வசனங்கள் நமது விசுவாசத்தை வளர்த்துவதற்காக பதிவுசெய்யப்பட்டுள்ளன. அற்பமான காக்கை குஞ்சுகளுக்கே உணவளிக்கும் தேவன் தனது சாயலில் ரூபத்திலும் அவர் உண்டாக்கிய மனிதனுக்கு அவனது தேவைகளைச் சந்திக்க உதவாமலிருப்பாரா? 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது மலைப் பிரசங்கத்தில், "ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?" ( மத்தேயு 6: 26) என்று கூறினார். 

அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை என்று இயேசு கூறியதை சிலர் தவறுதலாகப் புரிந்துகொண்டு, அப்படியானால் நாம் இந்த உலகத்தில் உழைக்காமல்  இருந்தாலும் தேவன் உணவூட்டுவாரா? எனக் கேட்பதுண்டு.   உழைக்காதவன் உண்பதற்குத் தகுதியற்றவன் என்றுதான் வேதம் கூறுகின்றது. "ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே." (2 தெசலோனிக்கேயர் 3: 10) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். எனவே இயேசு கிறிஸ்து நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தக் கூறும் வார்த்தைகளே இவை.  விதைக்காமல், அறுக்காமல், சேமித்து வைக்காமல் வாழும் பறவைகளுக்கே தேவன் உணவளிக்கும்போது  உழைக்கும் நமது தேவைகளைச் சந்திக்காமல் இருப்பாரா? 

ஆனால், ஐந்தறிவு காக்கைகளே தேவனை நோக்கிக் கூப்பிடுவதுபோல நாமும் நமது தேவைகளுக்காக தேவனை நோக்கிப் பார்க்கவேண்டியது அவசியம்.  நமது உழைப்பு தேவையாக இருந்தாலும் உழைப்புக்கேற்ற பலனை நாம் அடையச் செய்வது தேவனே. 

நமது தேவைகள், இக்கட்டுகளின்போது இந்த வசனங்களால் நம்மைத் திடப்படுத்திக் கொள்வோம். ஆம், கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறவர், தேவச் சாயலாகப் படைக்கப்பட்ட நமது தேவைகளைச் சந்திக்காமல் இருக்கமாட்டார்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்          


Scripture Meditation - No. 1,437
AATHAVAN
💚 January 14, 2025 💚
Tuesday

"Who provideth for the raven his food? when his young ones cry unto God, they wander for lack of meat." (Job 38:41)

In this world, God is the provider and sustainer of all living creatures He has created. Among the many birds, the raven is not one we often hold in high regard. There are numerous beautiful and colourful birds, but the raven, lacking charm and beauty, survives by feeding on what others consider unclean. Yet, as today's meditation verse reminds us, even when their food becomes scarce, God hears their cries and provides for them.

This truth is echoed in the Psalms: "He giveth to the beast his food, and to the young ravens which cry." (Psalm 147:9). These verses are recorded in the Bible to strengthen our faith. If God listens to the cries of young ravens and feeds them, will He not meet the needs of mankind, whom He created in His own image?

Our Lord Jesus Christ emphasized this in His Sermon on the Mount: "Behold the fowls of the air: for they sow not, neither do they reap, nor gather into barns; yet your heavenly Father feedeth them. Are ye not much better than they?" (Matthew 6:26).

Some may misinterpret Jesus' words, thinking that if the birds neither sow nor reap, then humans need not labour either, as God will provide. However, Scripture teaches that "if any would not work, neither should he eat." (2 Thessalonians 3:10). The Apostle Paul clearly reinforces the importance of work. Jesus' words are meant to affirm our faith, assuring us that if God provides for birds who neither sow, reap, nor store up, He will certainly meet the needs of those who labour faithfully.

Yet, just as the instinct-driven ravens cry out to God, it is essential for us to look to Him for our needs. While our efforts are necessary, it is God who blesses our labour with its fruits.

Let us take refuge in these verses during times of need and challenges. Yes, the God who feeds the young ravens that cry will not fail to meet the needs of His children, created in His image.

Devotional Message by: Bro. M. Geo Prakash
                                         

Saturday, January 11, 2025

Meditation Verse - மத்தேயு 28: 20 / Matthew 28:20

 வேதாகமத் தியானம் - எண்:- 1,436

'ஆதவன்' 💚ஜனவரி 13, 2025. 💚திங்கள்கிழமை


"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்." ( மத்தேயு 28: 20)

நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்து உலகத்தைவிட்டுச் செல்லுமுன் தனது சீடர்களிடம் கூறிய வார்த்தைகளே இன்றைய தியான வசனம். மட்டுமல்ல, மத்தேயு நற்செய்தியின் இறுதி வசனம் இதுதான். இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்து தனது சீடர்களிடம், அவர் கட்டளையிட்ட அனைத்தையும் மக்கள் கைக்கொள்ளும்படி உபதேசிக்கக் கூறுகின்றார். இப்படி கிறிஸ்துவின் போதனைகளை மற்றவர்களுக்கு அறிவிப்பதுதான் நற்செய்தி அறிவிப்பு. 

இன்றைய தியான வசனம் தொடர்ந்து கூறுகின்றது, "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்." என்று. இதன் பொருள் என்னவென்றால், அவரது கட்டளைகளின்படி வாழும்போது அவர் என்றும் நம்மோடு இருப்பார் என்பதுதான். அது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமல்ல, மாறாக உலகம் முடியும் நாள்வரை இந்த வசனம் பலிக்கும்; அவரும் அப்படி அவர் கட்டளைகளின்படி வாழும் மக்களோடு இருப்பார். 

இன்று நாம் இந்த வாசனத்தை வாழ்வாக்கவேண்டியது அவசியம். தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு அவர் நம்மோடு இருக்கிறார் என்று நாம் கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அதுபோல, "அவர் எங்கே நம்மோடு இருக்கிறார்?" என்று சந்தேகத்தோடு கேட்டுக்கொண்டிருப்பதிலும் அர்த்தமில்லை.  இன்று பலரும் தேவனைத் தங்களது  வாழ்வில் தனிப்பட்ட விதத்தில் அறியாமலும் அனுபவிக்காமலும்  இருப்பதால் அவர்கள் இந்த வசனத்தின் ஆழத்தினை உணர்வதில்லை. அவர் கூறியபடி நம்மோடு இருப்பதை அனுபவிப்பதுமில்லை. 

மட்டுமல்ல, இந்த வசனம் கூறுவதுபோல கிறிஸ்து நம்மோடு இருப்பதை  நாம் அனுபவிக்கும்போதுதான் நாம் பாவத்தை மேற்கொண்டவர்களாக வாழ முடியும். வெற்றிகரமான ஆவிக்குரிய வாழ்க்கையினை வாழமுடியும். "அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை." (1 யோவான்  3 : 6) என்று வேத வசனம் கூறுவது பொய்யல்ல. அதாவது அவரில் நாம் நிலைத்திருந்தால் பாவம் செய்யமாட்டோம்; பாவம் செய்துகொண்டே இருப்போமானால் அவரை வாழ்வில் காணவுமாட்டோம். 

இன்று கிறிஸ்துவைத் தனிப்பட்ட விதத்தில் வாழ்வில் அனுபவிக்காததால் பல்வேறு தாறுமாறான உபதேசங்கள் கிறிஸ்தவ உலகில் பரவிக் கிடக்கின்றது. கிறிஸ்துவை தனிப்பட்ட விதத்தில் அனுபவிக்காத போதகர்கள் எப்படி கிறிஸ்துவை மற்றவர்களுக்கு எடுத்துக்கூறமுடியும்? 

எனவே, அன்பானவர்களே, அவர் கட்டளையிட்ட யாவையும் நாம்  கைக்கொள்ளும்படி கவனமாக இருக்கவேண்டியது அவசியம். மட்டுமல்ல, இதனை நாம் மற்றவர்களுக்கும் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இதனையே இயேசு கிறிஸ்து, "அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்" என்று கட்டளையாகக் கூறினார்.  அப்படி வசனத்துக்குக் கீழ்ப்படிந்து வாழும்போது அவர் சகல நாட்களிலும் நம்முடனே கூட இருப்பதை வாழ்வில் நாம் அனுபவிக்கமுடியும். அப்போது மற்றவர்களும் நம்மூலம் அவரை அறிந்துகொள்வார்கள். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

 Scripture Meditation - No. 1,436                            AATHAVAN 💚 January 13, 2025 💚 Monday

"Teaching them to observe all things whatsoever I have commanded you: and, lo, I am with you always, even unto the end of the world. Amen." (Matthew 28:20)

Today's meditation verse contains the words spoken by our Lord Jesus Christ to His disciples before He ascended to heaven after His resurrection. This is not only a pivotal command but also the concluding verse of the Gospel of Matthew. In this verse, Jesus commands His disciples to teach people to observe all the instructions He has given. Sharing Christ's teachings with others is the essence of spreading the Gospel.

The verse also assures us, "lo, I am with you always, even unto the end of the world." This means that as long as we live according to His commandments, He will remain with us—not for a limited period, but until the very end of the world. This promise is eternal, and it applies to those who live by His instructions.

Today, it is essential that we bring this verse to life. Merely claiming that "He is with us" while living a disorderly life is meaningless. Similarly, doubting His presence by asking, "Where is He with us?" reflects a lack of understanding of His promise. Many fail to experience His presence and understand the depth of this verse because they do not know Him personally in their lives.

Furthermore, as the verse assures, experiencing Christ's presence empowers us to live a victorious spiritual life free from sin. The Scripture declares, "Whosoever abideth in him sinneth not: whosoever sinneth hath not seen him, neither known him." (1 John 3:6) This is not a lie. When we abide in Him, we do not continue in sin. However, if we persist in sin, we fail to truly see or know Him in our lives.

Today, the lack of a personal experience of Christ is the reason for the spread of false teachings in the Christian world. How can preachers who have not personally experienced Christ convey Him to others?

Therefore, beloved, it is vital for us to observe all that He has commanded. Moreover, we are obligated to teach others to do the same. Jesus Christ specifically commanded, "Teach them to observe all things whatsoever I have commanded you." When we live in obedience to this verse, we will always experience His presence with us. As a result, others will come to know Him through us.

God’s Message by Bro. M. Geo Prakash

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

Meditation Verse - 1 கொரிந்தியர் 4: 15 / 1 Corinthians 4:15

Bible Meditation - No. 1,442 AATHAVAN 💚 January 19, 2025. 💚 Sunday "கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்த...